முப்பாட்டனின் படைமுகாமில்
நம் முப்பாட்டன் முருகன் படையோடு சென்று முகாமிட்டு கடல்வழி வந்த படையெடுப்பை முறியடித்த இடமே செந்தூர் ஆகும்.
யார் இந்த முருகன்?
முருகன் என்பவரின் இயற்பெயர் குமரவேல் பாண்டியன்.
இவர் தமிழ் அரசன்.
அழகாக இருந்ததால் முருகன் என்ற பெயர் பெற்றார்.
இவர் திருப்பதி முதல் கதிர்காமம் வரை படை முகாம் அமைத்து தமிழகத்தை பல்வேறு படையெடுப்புகளில் இருந்து காப்பாற்றினார்.
அந்த முகாம் இடங்கள்தான் இன்று படைவீடுகள் என்று அழைக்கப்படுகின்றன.
உயரமான இடத்திலிருந்து போரிடுவதுதான் எளிது.
சன் சூ எழுதிய போர்க்கலை உயரமான இடத்தை முதலில் கைப்பற்று என்கிறது.
ஆகவே தமிழ் பேசும் மண் முழுவதுமே குன்றுகளில் முருகனின் படைமுகாம்கள் இருந்தன.
அவை கோவில்களாக மாறி இன்று குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கிறார்.
இவர் இன்றும் போர்க்கடவுளாக வணங்கப்படுகிறார்.
இவர் அறிமுகப்படுத்திய வேல் என்ற ஆயுதம் புதுமையாகவும் எளிதாகவும் இருந்தது.
பல வெற்றிகளை ஈட்டித்தந்தது.
அதன்பிறகு வெற்றிவேல் வீரவேல் என்ற முழக்கம் போர்முழக்கம் ஆனது.
அலகு குத்துதல், காவடி தூக்குதல், மலையேறுதல், தேரிழுத்தல், உண்ணாமல் நோன்பிருத்தல் போன்றவை போர்பயிற்சி வடிவங்கள் (தீ மிதித்தலும் கூட).
குற்றால மலை குறவர்களிடம் பெண் எடுத்து திருமணம் செய்தவர்.
மயில் என்றால் மிகவும் பிடிக்கும்.
அதனால் எப்போதும் மயிலொன்றைகூடவே வைத்திருப்பார்.
இவருக்கும் ஹிந்து மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
5000 ஆண்டுகள் முன்பு இவர் உயிருடன் வாழ்ந்த மனிதர்.
சிவனும் இவரைப்போல உயிருடன் வாழ்ந்த மனிதர்தான்.
அவரது இயற்பெயர் ஆதிநாதன்.
சிவன் புலித்தோல் கட்டியவர்.
அதனால் அவர் நாகரீகம் தோன்றிய ஆரம்ப காலத்தைச் சேர்ந்தவர்.
முருகன் கோவணம் கட்டுபவர்.
அதனால் நூல் மூலம் ஆடை செய்ய ஆரம்பித்த நாகரீக காலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிகிறது.
இறந்தபிறகு தமிழ் மக்கள் வணங்கத் தொடங்கிவிட்டார்கள்.
பக்தி என்ற உணர்ச்சி பின்னர் இதில் கலந்துவிட்டது.
தகவல்கள்: Tamil chinthanaiyalar peravai (யூட்யூப்)
முருகன் தமிழ்க் கடவுள்
பொங்கல் தமிழர் பண்டிகை அதை அனைத்து தமிழரும் கொண்டாடுவது போல முருகனையும் அனைத்து தமிழரும் தமது மூதாதையராக ஏற்றுக்கொள்ளவேண்டும்.
Monday 29 August 2016
முப்பாட்டனின் படைமுகாமில்
Subscribe to:
Post Comments (Atom)
சிறந்த ஆய்வுத்தகவல்களை தந்தமைக்கு நன்றி. முயற்சிகள் தொடர வாழ்த்துகள்.
ReplyDelete