Sunday, 3 August 2014

ஓவியக் கவி

ஓவியக் கவி

தமிழின் உச்சம்

டபடபடபடபடபடபடபடபடபடபடபடபடபடப

கவிதை என்பதுவரிவடித்தில்தான் உலகம் முழுவதும் படைக்கப்பபடுகிறது; ஆனால், ஒரு கவிதையை ஓவிய வடிவில் தருவது தமிழில் மட்டுமே உள்ளது.

மேலேயுள்ள படத்தில் உள்ள பாடலை வரிவரியாகப் படித்தாலும் சரி சுழல் சுழலாகப் படித்தாலும் சரி ஒரே மாதிரிதான் இருக்கும்;
நேராக வரிவடிவிலும், சுழியாக ஓவிய வடிவிலும் அமைந்துள்ளது.
இதை சுழிகுளம் என்பர்.

கவிமுதி யார் பாவே
விலையரு மாநற்பா
முயல்வ துறுநர்
திருவழிந்து மாயா

பொருள் :
வயது முதிர்ந்த கவிஞர்களால் பாடப்படும் பாடல்கள்
விலைமதிப்பிட முடியாத அளவிற்குப்
பெருமையுடையனவாகும்.
அப்பாடலைப் பெற விடாது முயற்சி செய்ய வேண்டும்.
அப்படி
முயற்சி செய்து ஒருவர் பெற்ற பாடல் அழியாத
செல்வமாகும்....
( http://www.devasundaram.com/2013/06/blog-post_19.html?m=1  )

இத்தகைய பாடல்கள் கவியெழுதவே பிறந்த பிறவிக் கவிஞருக்கும் கடினமானது;
(கவிதைக்கான நோபல் பரிசு பெற்ற எஸ்ரா பெü ண்ட்
ஆங்கிலத்திலும், இந்தியாவில் தாகூர் வங்க மொழியிலும் ஓவியக் கவிதைகளை எழுதியுள்ளனர்; சிறிய ஓடை ஓடுவது போன்ற வடிவில் ரஷிய மொழியில் மாயகாவ்ஸ்கியும் , பிரெஞ்சு மொழியில் ஃபார்க், சீன மொழியில் லூசூன் போன்றோர் சித்திரக்கவி எனப்படும் ஓவியக் கவிதைகளை எழுதியுள்ளனர்;
ஆனால், பல நூறாண்டுகள் முன்பே ஓவிய வடிவிலான செய்யுள்கள் தமிழில் உள்ளன)

கீழே விதவிதமான வடிவங்களில் பாடல்கள் வரையப்பட்டுள்ளதைக் காணுங்கள்

ஒரு பாம்பு
https://m.facebook.com/photo.php?fbid=515128225181459&id=453108694716746&set=a.453184938042455.116738.453108694716746&relevant_count=1&refid=21&m_sess=soBxITiX-DDsgRayu&_ft_=qid.5798271391724928424%3Amf_story_key.574692501394141798&_rdr
இரண்டு பாம்புகள்
http://thogai.blogspot.com/2008/03/blog-post.html?m=1
நான்கு பாம்புகள் (பாவலர்.க.பழனிவேலன்)
http://www.thamizham.net/pezhi/rare/rare15-u8.htm
எட்டு பாம்புகள் (அஷ்டநாக பந்தம்)
http://ta.m.wikipedia.org/wiki/சித்திரக்_கவி
தேர் வடிவம் (ரத பந்தம்)
http://thiruppugazhamirutham.blogspot.com/2012/09/113.html?m=1
http://www.itsjg.com/விமான-ரதம்/
http://konguvenadar.org/konguvenadar/radha-bhandhana-nerisa-venba-p-105.html
சக்கரம்
http://sangappalagai.blogspot.com/2012/08/163-12.html?m=1
மயில் வடிவம் (மயூர பந்தம்)
http://2009may18.blogspot.com/2012/07/blog-post_22.html?m=1
தேனி வடிவம்
http://ramilhan.blogspot.com/2012/10/Thenee.html?m=1
மாலை வடிவம்
http://www.yarl.com/forum3/index.php?showtopic=130090
மாணிக்க மாலை
http://natarajadeekshidhar.blogspot.com/2010/04/blog-post.html?m=1
குத்துவிளக்கு (தற்காலத்தில் இயற்றப்பட்டது)
http://vallalarr.blogspot.com/2013/11/blog-post_25.html?m=1
முரசு
http://www.thamizham.net/pezhi/rare/rare16-u8.htm
http://www.tamilvu.org/library/l3H00/html/l3H00p01.htm

முரசு,வேல்,பாம்பு வடிவக் கவிதைகள்
http://paddathumsuddathum.blogspot.com/2013/01/blog-post_13.html?m=1
மயில்,தேர்,தாமரை,இரட்டைப் பாம்பு,வேல்,சதுரங்கம் அமைப்பில் உள்ள பாடல்கள்
http://copiedpost.blogspot.com/2012/06/blog-post_11.html?m=1

மேலும் சில,
திரு எழு கூற்று இருக்கை
http://www.dinamani.com/tamilnadu/article631953.ece
சங்குப் புலவர்
http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/article1035383.ece
பாம்பன் சுவாமிகள்
http://ta.m.wikipedia.org/wiki/பாம்பன்_குமரகுருதாச_சுவாமிகள்

இவர்கள் மட்டுமல்லை; ஹலரத் செய்கு இஸ்மாயீல் வலியுல்லா என்ற புலவரும் 'இரத பந்தம்(தேர்)' 'அட்டநாக பந்தம்(எட்டு பாம்பு)' 'இரட்டை நாக
பந்தம்(இரண்டு பாம்புகள்)' 'கமல பந்தம்(தாமரை)' ஆகிய 'சித்திரக் (ஓவியக்)கவிகள்' பாடியுள்ளார்.
இவர் மட்டுமின்றி 'சித்திரக்கவிமாலை' (நூல் தரவிறக்க http://
www.tamilheritage.org/old/text/ebook/
pa.pdf ) என்ற நூலைப் படைத்த புலவர்
பி.வி.அப்துல் கபூர் சாஹீப் சாகிபூ என்பவரும் ஏறக்குறைய 5000 சித்திரக்கவிகளை இயற்றியுள்ளார்.
https://groups.google.com/forum/m/#!topic/mintamil/VX4oYaMFqWk

தற்காலத்திலும் சிலர் ஓவியக்கவிதைகளைப் படைத்துவருகின்றனர்;
ராம்கிஷோர் என்பவருடையது
http://ramilhan.blogspot.com/2012/11/Vendumvendaam.html?m=1
ஆதித்ய இளம்பிறையன் என்பவருடையது
http://thalaivanankatamilan.blogspot.com/2013/08/blog-post_21.html?m=1

ஓவியக் கவிதையின் வகைகள் பற்றி தண்டியலங்காரம் (காலம் கிபி 12ம் நூற்றாண்டு) பின்வருமாறு கூறுகிறது;

கோமூத் திரியே, கூட சதுக்கம்,
மாலை மாற்றே, எழுத்து வருத்தனம்,
நாக பந்தம், வினாவுத் தரமே,
காதை கரப்பே, கரந்துறைச் செய்யுள்,
சக்கரம், சுழிகுளம், சருப்பதோ பத்திரம்,
அக்கரச் சுதகமும் அவற்றின் பால
(தண்டியலங்காரம்-97)

(மேற்கண்ட ஓவியக் கவிகள் தமிழ்மண்ணில் சமசுக்கிருதம் புகுந்த பிறகு தோன்றியவை போலத் தெரிகின்றன;
முற்காலத்தில் தூயத் தமிழில் இயற்றப்பட்டவை இன்று கிடைக்கவில்லை;ஆர்வமுள்ளோர் இப்பதிவிலிருந்து படங்களையும் விளக்கங்களையும் எடுத்து ஒரே பதிவாக இணையத்தில் ஏற்றுமாறு கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்; 'தமிழன் கண்ட சித்திரக் கவிகள்' என்ற ஒரு தொடர் இரு பாகங்கள் வந்துள்ளது;
ஆனால் இணையத்தில் பதியப்பட்டுள்ள எந்த தரவுமே தரமான வகையில் இல்லை; அங்கொன்றும் இங்கொன்றுமாக தனிநபர் இணையங்களில் சிதறிக்கிடக்கின்றன;  அதனால்தான் கூறுகிறேன்; இந்த கவிதைகளை ஆவணப்படுத்தி பாதுகாப்பது நமது கடமையாகும்)

மேலும் ஒரு வியப்பான வகைக் கவிதையையும் இங்கே கூறுகிறேன்; ஒரே ஒரு எழுத்தை மட்டுமே பயன்படுத்தி எழுதப்படும் பாடல்கள்

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
http://www.nalan.me/nalan.me.drupal/node/75

கொக்கொக் கிகைக்கா காக் ககக்கை
காக்காகா காக்கைக் கொக் கீகைக்
கை கோக்  கை
http://rajarajan-c.blogspot.com/2013_01_01_archive.html?m=1

"காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குகூ காக்கைக்குக் கொக்கொக்க
கைக்குக்குக்
     காக்கைக்குக் கைக்கைக்கா கா"
http://www.tamilvu.org/slet/l0B34/l0B34ari.jsp?pageno=376&ref=5

.
( https://m.facebook.com/photo.php?fbid=473214182782240&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739)
எதிலுமே உச்சம்
தமிழன்

Friday, 1 August 2014

தமிழச்சி

தமிழச்சி ரிசானா தலையை சீவிய சரியத் சட்டம்

//முதலாளியாக
இருந்தால் அவன் ரிசானா போன்று வேலைக்கு வந்த
ஒருவரை கொலை செய்தால் அவன்
வீட்டிற்கு வேலைக்கு வந்துள்ள
இன்னொரு பெண்ணை கொலை செய்துக்கொள்ளச்
சொல்லுகிறது. எஜமானர்களுக்கு சேவை செய்யும்
சட்டம். இது ஒரு சீரிய சட்டம் என்றும்,
காலத்திற்கும்
பொருத்தமான சட்டம் என்றும் உதார் விடுகிறார்கள்//
// ரிசானாவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்ட
தினத்தன்று சந்தித்த மௌலவி ஏ.ஜே.எம்.மக்கதூம்
ரிசானாவின் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில்
சிலவரிகள் பின்வருமாறு:
'இறுதி ஆசை மற்றும் மரணசாசனம் ஏதும்
உண்டா என்று கேட்டேன். அதற்கு அவர் "ஊருக்கு நான்
எப்பொழுது செல்வது" என்று கேட்டார்' என்றும்,
"என்னை மன்னித்து விட்டுவிடச் சொல்லுங்கள் நானா"
என்று கெஞ்சிய குரலில் அவர்
கூறியது எனது உள்ளத்தை உருக்கிவிட்டது"
என்றும் எழுதியுள்ளார். இந்த
இரண்டு வரிகளை என்னால் தட்டச்சு செய்ய முடியாமல்
பல மணிநேரம் கழிந்தது
போதுமான
மொழிபெயர்ப்பு வசதியைக்கூட இந்த மிருகங்கள்
ஏற்படுத்தித் தராததால், கடைசி நிமிடங்கள்
வரை தான் குற்றம் செய்யவில்லை என்பதால்
மன்னிப்பு கிடைத்துவிடும் என்று அல்லாவின்
கருணைமீது நம்பிக்கையுடன் 7 வருட
காலங்களை சிறையில் கழித்திருக்கிறாள் இந்தச்
சிறுமி. ஒவ்வொருநாளும் எப்படி கழிந்திருக்கும்
என்று சிந்தித்துப் பாருங்கள. இந்த 7 வருட
சிறைதண்டனையே இதற்கு அதிகம். ஆனால் மரணதண்டனை
…….
எனது காதில் "ஊருக்கு நான்
எப்பொழுது செல்வது" என்ற ரிசானா நபீக்கின் குரல்
மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
உங்கள் காதுகளில் அது கேட்கிறதா? கேட்டால் இந்த
காட்டுமிராண்டிகால சரியத் சட்டத்தையும்,
மதத்தையும் தூக்கி எரியுங்கள். மனிதர்களாக
வாழுங்கள்//
நன்றி: இசுலாம் மதத்தை சான்றுகளுடன்
விமர்சித்துவரும் திரு.தஜ்ஜால் அவர்களின்
'இறையில்லா இஸ்லாம்' வலைப்பக்கம்.
முழுவதும் படிக்க: http://iraiyillaislam.b
logspot.in/2013/02/blog-post.html?m=1
( https://m.facebook.com/photo.php?fbid=416993871737605&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739 )

குஜராத் கலவரம்

//பயங்கரமும் படுகொலையும் தாண்டவமாடிய
குஜராத்திலிருந்து வருகிறேன். வெறுப்பாலும்
அச்சத்தாலும் நான் மரத்துப் போய்விட்டேன்.
என் இதயம்
நோயுற்று ஆன்மா நைந்து விட்டது.
குற்றவுணர்வையும் அவமானத்தையும்
சுமக்கும் வலிமையின்றி என் தோள்கள்
வலிக்கின்றன.
அகமாதபாத் கலவரத்தில் தப்பிப் பிழைத்த
அகதிகள் சுமார் 53,000 பேர். சாக்குக்
கூரைகளின் கீழே ஒண்டிக்கொண்டிருக்கும்
ஆண்கள், பெண்கள், குழந்தைகள்….
அவர்களது முகத்தில் ததும்பும் துயரம்…
இப்படியொரு துக்கத்தை நான்
இதுவரை கண்டதில்லை.//
// பெண்களின் மீதான பாலியல்
வன்முறை வேறு எந்தக் கலவரத்தின் போதும்
இவ்வளவு கொடூரமாக நடந்ததில்லை.
குடும்ப உறுப்பினர்கள், சிறுவர் சிறுமிகளின்
கண் முன்னே பெண்களைக் கும்பல் கும்பலாகக்
கற்பழித்திருக்கிறார்கள்.
கற்பழிப்பு முடிந்தவுடன் அந்தப்
பெண்களை எரித்துக் கொன்றிருக்கிறார்கள்;
சுத்தியலால் மண்டையில்
அடித்தே கொன்றிருக்கிறார்கள்; ஒரு இடத்தில்
ஸ்குரூ டிரைவரால்
குத்தியே கொன்றிருக்கிறார்கள்.
அமன் சௌக் முகாமிலிருந்த பெண்கள்
கூறியவற்றைக்
கேட்கவே குலை நடுங்குகிறது. திடீரென
வீடு புகுந்த கும்பல், பெண்களின்
முன்னே தங்கள் ஆடைகளை ஒவ்வொன்றாய்க்
களைந்து விட்டு கையில் பயங்கரமான
ஆயுதங்களுடன் அம்மணமாக
நின்று பெண்களை நடுங்கச்
செய்து பணியவைத்திருக்கிறது.
அகமதாபாத்தில் நான் சந்தித்த
பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், உயிர்
பிழைத்த மக்கள் ஆகிய அனைவரும்
கூறுவது இதுதான். ”குஜராத்தில்
நடந்தது கலவரமல்ல; ஒரு பயங்கரவாதத்
தாக்குதல், திட்டமிட்ட இனப் படுகொலை”.
ஒரு இராணுவத் தாக்குதலைப் போல
எல்லாமே திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது//
// கைகளில் முசுலீம்
குடும்பங்களின் பெயர்கள், சொத்து விவரம்
அடங்கிய கம்ப்யூட்டர் காகிதங்களை அவர்கள்
வைத்திருந்தார்கள்… இந்து – முசுலீம்
கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் யார்,
அவர்களில் யாரைத் தாக்க வேண்டும்
என்பது வரை துல்லியமான விவரங்கள்
அவர்கள் கையில் இருந்தன//
நன்றி: http://www.vinavu.com/2013/03/14/
gujarat-genocide-harsh-mander/
( https://m.facebook.com/photo.php?fbid=416998918403767&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739 )

பெரும்பாகன் கதை

பெரும்பாகன் கதை

ஓர் ஊரில் பெரும்பாகன் என்றொரு பெரியவர் இருந்தார்;
அந்த ஊரிலேயே சுற்றிவாழ்ந்த எவரையும் விட
தாராளமனம் படைத்தவராக இருந்தார்;
அவருக்கு மாறப்பன், தமிழ்க்கோ, திருவல்லன்
என்று மூன்று பிள்ளைகள் இருந்தனர்;
அவருக்கு பக்கத்து வீட்டில் ஜக்கம்மா,
கோண்டய்யா பெற்றோருக்கு ராஜூ என்ற மகன் இருந்தான்;
ஒரு நாள் விபத்தில் ராஜூ வின் பெற்றோர்
தவறிவிட்டனர்; மற்ற சொந்தக்காரர்கள் கண்டுகொள்ளமல்
விட்டுவிட பெரும்பாகன் ராஜூவை கவனிக்கலானார்;
கல்வி, பணம், இருப்பிடம் உட்பட அத்தனையும்
பெறச்செய்தார்; பெரும்பாகன் வயது முதிர்ந்த
நிலையில்
தமது சொத்துக்களை பங்கு வைக்கும்போது ராஜூ அதில்
பங்கு கேட்டான்; பெரும்பாகன்
அவனுக்கு புரியவைக்கமுயன்றார்; ஆனால் அவனோ "ஐயா,
நானும் உங்கள் பிள்ளை மாதிரிதான்; பெரிய
மனது படைத்த நீங்களே பிறப்பால்
ஏற்றத்தாழ்வு பார்க்கலாமா? உங்கள் மகன்களுக்கும்
எனக்கும் என்ன வேறுபாடு?" என்று கேட்டான்;
பெரும்பாகனின் மகன்கள்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்; ராஜூ தான் செய்த
சின்னசின்ன உதவிகளையெல்லாம் சொல்லிக்காட்டினான்;
கடைசியில் ராஜூமேல் இரக்கம்கொண்டு ஒரு வீடும்
சிறிய காணிநிலமும் மட்டும் கொடுத்தனர்;
அது போதாது என்றான் ராஜூ; ஊர்மக்கள்
பெரும்பாகனுக்கே ஆதரவாக இருந்ததால்
வேறுவழியின்றி ஒத்துக்கொண்டான்;
தற்போது பெரும்பாகனின் சொத்துக்கள்
எல்லாமே ராஜூவின் வாரிசுகள் கையில் வந்துவிட்டது;
பெரும்பாகன் வாரிசுகள் கூலிகளாக அவர்களிடம்
வேலை செய்கின்றனர்; சிலர் ராஜூதான் பெரும்பாகனின்
மூத்தமகன் என்கின்றனர்; சிலர் ராஜூவும்
பெரும்பாகனும் ஒருதாய்ப் பிள்ளைகள் என்கின்றனர்;
ராஜூவின் வாரிசுகளோ பெரும்பாகனை ராஜூதான்
ஆதரவு காட்டி வளர்த்ததாகச் சொல்கின்றனர்;
பெரும்பாகன் வாரிசுகளோ எங்கள் சகோதரர்களிடம்தான்
வேலைசெய்கிறோம்; நாங்கள் ஒரே குடும்பம் என்கின்றனர்;
ஒரே குடும்பம் என்றால் அவர்கள் ஆண்டானாகவும் நீங்கள்
அடிமையாகவும் ஏன் இருக்கிறீர்கள் ? அவர்களிடம்
மாடமாளிகையும் கூடகோபுரமும்
இருக்கும்போது உங்களிடம் கோவணம் மட்டும்
எஞ்சியிருக்கிறதே என்று கேட்டேன்; அவர்கள்
சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.
https://m.facebook.com/photo.php?fbid=417503455019980&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

என் தாய் எனக்கு வேண்டும்

என் தாய் எனக்கு வேண்டும்
_____ ______ ______ ______ ______
எல்லாவற்றையும் மக்கச்செய்யும் மண் விதையை மட்டும்
முளைக்கச்செய்வதே இயற்கையின்
அறிவுக்கு எடுத்துக்காட்டு
இது யாரோ எழுதியது; நீங்கள் மறுத்தாலும் சரி நான்
கூறுவதுதான் உண்மை; மாந்தர் அனைவரும்
இயற்கையை நேசிக்கின்றனர்; அதனோடேயே கழித்துவிடத்
துடிக்கின்றன; எனக்கு மட்டும்தான் இந்த உணர்வா?! நான்
எங்கேயோ பணத்துக்காக ஊழியம் செய்பவன்; நான் பிறந்த
மண்ணுக்கு வந்திருக்கிறேன்; நான் பிறந்த மண்; என்
சொந்த மண்; என் தாய் நிலம்; இந்த மண் சுரந்த நீர்தான் என்
உடலில் ஓடும் குருதி; இந்த மண் விளைவித்த
பயிர்களும் விலங்குகளும்தான் என் உடலில் இருக்கும்
தசை; இந்த மண் தந்த மரங்கள் கொடுத்ததுதான் என்
நுரையீரல் உள்ளிழுத்த மூச்சு வேறு எந்த மண் தந்த
நீரும், பயிறும், விலங்கும் என்
உடலோடு ஒட்டுவதில்லை; இந்த
மண்ணிலிருந்து வந்தவர்கள்தான் என் தாய் தந்தையர்; இந்த
மண்ணோடு கலந்துவிட்டவர்தான் என் மூதாதையர்; இந்த
மண்ணில் கையூன்றிதான் நான் நடைபழகினேன்; இந்த
நிலம்தான் ஆறுகளையும் அருவிகளையும்
உற்பத்தி செய்து என் உடலைத் தூய்மையாக்கியது;
என்னை சூலுற்று, பெற்றெடுத்து, பால் கொடுத்து,
உடல்வளர்த்து, கழிவு நீக்கி, அறிவு புகட்டி,
கலவி தந்து, வாரிசு தந்து, முதுமை தந்து, மரணம்
தந்து மீண்டும் தனக்குள் உள்வாங்கிக்கொள்வதும் இந்த
மண்தான்; மாந்தன்
இயற்கையோடு இருக்கவே விரும்புகிறான்; நான்என்
தாயோடு அணைய விரும்புகிறேன் இதில் என்ன தவறு?! ;
வெயில்காலத்தில் ஒரு வேப்பமர நிழல் தரும்
இன்பத்தை மாளிகைக்குள்ளே விலையுயர்ந்த
குளிரூட்டியால் தரமுடியுமா? அதோ பாருங்கள்;
குருவிகளும், கிளிகளும் பாட்டுப்
பாடிக்கொண்டே குடியிருக்கும், காற்றில்
அசைந்தாடும், இலைகளையும் பூக்களையும் பழங்களையும்
உங்கள் உச்சந்தலையில் போட்டு வரவேற்கும் இந்த
நெடிதுயர்ந்த மரங்களைப் பாருங்கள்;
கட்டிக்கொண்டு தலைசாய்க்க உங்கள் மனம் வரவில்லையா?!
காற்றில் கலையும் தலைமுடியைப் பற்றி கவலைப்படாமல்
குழந்தைப்பருவ
நண்பனோடு பேசியபடி ஆற்றுக்கு செல்லும் சாலையில்
வண்டியிருந்தாலும் இறங்கி மெல்ல காலார
நடந்துசென்றது கிடையாதா?;
செருப்பை உதறி எறிந்துவிட்டு புல்தரையில்
வெறும்பாதத்துடன் நடந்து கால்வலித்ததும்
பொத்தென்று மல்லாக்க விழுந்தது உண்டா? புல்மேயும்
ஆடுகளும், ஈரவயல்களில் வாத்துக்களும், ஆற்றங்கரையில்
கொக்குகளும், மரப்பொந்துகளில் அணில்களும், தெளிவான
நீரில் மூழ்கியபடி ஊர்ந்து செல்லும் தண்ணீர்பாம்புகள
ும், குயில்களும், மைனாக்களும், மரங்கொத்திப்
பறவைகளும், சிட்டுக்குருவிகளும் தமது அன்றாட
நடவடிக்கைகளாலேயே உங்களுக்கு மட்டற்ற
உவகையை அளிப்பதில்லையா?! என் தாய் மண் இதில் என்
முகமும் மரபணுவும் ஒத்துப்போகும் என் மூதாதையர்
எத்தனை சரியாக பயன்படுத்தி வழிவழியாக
கைமாற்றி இன்று என்கையில் கொடுத்துவிட்டுச்
சென்றுள்ளனர்; ஆற்றோர இடுகாட்டில் ஏதோவொரு சாதிக்
கொட்டகையில் எரியூட்டப்பட்டு ஆற்றோடு போடப்பட்ட என்
மூதாதையரின் எலும்புத் துண்டுகள்
மூழ்கி நீந்தும்போது என் காலில் இடறி சொல்லவரும்
செய்தி என்ன?!
என் குலக்கொழந்தே!
நாங்கள் பெற்ற கோமானே! நம் தாய் மண்ணடா இது!
இதில்தான் நாங்கள் இருக்கிறோம்!
இதை பத்திரமாக காக்கவேண்டியது உன் பொறுப்படா என்
செல்வமே!
ஆம்; என் மூதாதையர் செய்தி யார்காதிலும்
விழவில்லை; எல்லோரும் மாற்றானுடன் சேர்ந்து என்
தாயை அடிக்கின்றனர்;
இப்போது குளிக்கும்போது காலில் இடறுவது உடைந்த
சாராய புட்டிதான்; மாற்றான் கையில் என் தாய்மண்
சிக்கிக்கொண்டது; ஆற்றுமண்ணையெல்லாம்
அள்ளுகின்றனர்; ,தொழிற்சாலைக் கழிவையெல்லாம்
கொட்டுகிறார்கள்; மதத்தின் பெயரால் அசுத்தம்
செய்கின்றனர்; மக்காத பொருட்கள் மண்டிப்போய்
கிடக்கின்றன; சந்தன மரங்களையும் தேக்குமரங்களையும்
வெட்டிவிட்டு தீவைத்து காட்டுத்தீயில்
கருகிவிட்டதாகக் கணக்கெழுதுகின்றன; காட்டுப்
புலியின் காலுக்கு கண்ணிவைத்து வாய்க்குள்
கத்தி பாய்ச்சிக்
கொலைசெய்து தோலை சேதமின்றி உரித்து விற்கிறார்கள்;
காட்டுக்குள் சிறுஅருவிகளை 'முக்கிய நபர்
அருவி'யாக்கினார்கள்; யோகாசனம் செய்பவனெல்லாம்
காட்டுக்குள்ளே மண்ணுக்கு மொட்டையடித்து அந்த
மொட்டைத்தலையில் கட்டடம் எழுப்பி வெளிநாட்டுப்
பெண்களோடு யோகாசனம் செய்கிறான்; காலம் காலமாக
காட்டுக்குள்ளேயே இயற்கையோடு இயற்கையாக
முழுமையான வாழ்க்கை வாழும் என்
சொந்தங்களை ஒழித்துகட்டத் தொடங்கிவிட்டனர்;
மண்ணுரிமைக்காகவும் நீர்உரிமைக்காகப் போராடும் என்
மக்கள் அடிக்கப்படுவதும், சுடப்படவதும்,
குண்டு எறிந்து கொல்லப்படுவதும், கலவரத்துக்கும்,
இனப்படுகொலைக்கும் ஆளாவதும் தொடர்கதையாகிவிட
்டது; காற்றில் கரியமில வாயுவை உயரமான
புகைபோக்கிகள் மூலமும், கலப்பட எரிபொருளைச்
செறித்துக் கக்கும் வாகனங்கள் மூலமும், வேதியியல்
பொருட்கள் மூலமும் கலந்துவிடுகின்றனர்;
பணவெறி முற்றி மண்ணையும் பாறைகளையும்
குடைந்து தாது எடுக்கின்றனர்; வயல்வெளிகளில்
நச்சு உரத்தைத் தெளித்து மண்புழுவையும் மனித
உயிர்களையும் கொல்கின்றனர்; மரபணு மாற்றப்பட்ட
காய்கறிகளை விதைத்து கொள்ளை பலன் அடைய
நினைக்கின்றனர்; பயிர்விளைந்த இடங்களில் வீடுகள்
முளைத்துவிட்டன; கதிரியக்க ஆலையைக் குளிர்விக்க
குடிநீரைச் செலுத்தி அதை சூட்டோடு கடலில்
விட்டு மீன்களையும் கொல்கின்றனர்; என் சொந்தங்களுக்கெல
்லாம் புற்றுநோய்; என் உறவினருக்கெல்லாம் வறுமை; என்
நண்பருக்கெல்லாம் வெளியூரில்தான் வேலை; என்
உடன்பிறந்தவனெல்லாம் குடிகாரன்; என்
பிள்ளைகளெல்லாம் திரைப்படப் பைத்தியம்;
என்னை ஈன்றெடுத்த என் தாய்மண்ணே என் உயிர் சமைத்த
அன்னை நிலமே உன்னைக் காக்கமுடியாது போனேனே;
எத்தனை எத்தனை தலைமுறைகளை நீ சுமந்தாய்
உன்னை தாங்க இன்று நாதியில்லையே; மாற்றான்
படுக்கையில் உன்னைப்போட்டு மதுவில் மூழ்கிக்
கிடந்தேனோ?! கலைந்த பின்னே ஏங்குகிறேன்
இது கனவாயிருத்திடக்கூடாதோ?!
சீராட்டி என்னை வளர்த்தாயே,அம்மா உன்னை சீரழிக்க நான்
விட்டேனோ?!
கண்ணீரைத் துடைத்துவிடுகிறேன் அது பயனற்றது;
விழிகளில் சிவப்பைப் படரவிடுகிறேன்
இதுவே விடிவுதரும்;
என் தாய் எனக்கு வேண்டும்;
என் மண் எனக்கு வேண்டும்;
நான் அவளை மீட்கப்போகிறேன்; இனியும் பொறுப்பதற்கில்ல
ை; நஞ்சுக்கொடி அறுந்ததும் பிஞ்சுக்குழந்தைபோல் என்
தாய்மண்ணின் மார்பில் சேரத்தான் போகிறேன்; என்
மண்ணுக்கும் எனக்கும் தொப்புள்கொடி இன்னும்
அறுபடவில்லை; என் தாயை எவனும் பெண்டாள
விடமாட்டேன்; உலகமே குருதியில் நனைந்தாலும் என்
முடிவு மாறாது; ஒரு பிடியளவேனும் என் மண்ணை நான்
மீட்கத்தான் போகிறேன்; என் உயிர் போனால் போகட்டும் என்
உடல் அதன் தாயிடம் போய்ச்சேர்ந்தால் போதும்; நீங்கள்
யாரும் வரவிட்டாலும் சரி; நான் மீண்டும் மீண்டும்
பிறப்பெடுப்பேன்; கிருமியாக ,புழுவாக,
பூச்சியாக, பூரானாக, புலியாக என்
தாய்மண்ணிலிருந்து வெளிவந்து என் குடிகெடுத்த
கொடியவர்களைப் பழிவாங்காமல் விடமாட்டேன்;
என் தாய்மண் தன்னை மீட்க அழைக்கிறதே அது என்
காதுகளில் கேட்டுக்கொண்டேயிருக்கிறது.
என் மகனே என்னை அழைத்துச்செல்லடா!
இந்த நாசக்காரர்களுக்கு நீ யாரென்று காட்டடா!
நான் ஊட்டிய முலைப்பால் உன் உடலில் தீர்ந்துபோனதா?!
நீயும் என்னைக் கைவிட்டுவிட்டாயா?!
என்னை வேசியாக்கி வேடிக்கை பார்க்கலாமா
நான் உன் தாயடா தாய்,
வெறும் மண்ணல்ல....
https://m.facebook.com/photo.php?fbid=417624481674544&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

தூக்கிலிடுக

ஏழபேரைத் தூக்கிலிடுங்கள்
என்னைக் கேட்டால் ஏழுபேரையும் தூக்கிலிடவேண்டும்
என்னைக் கேட்டால் முல்லைப்
பெரியாறு அணை உடையவேண்டும்
என்னைக் கேட்டால் நாள்தோறும் தமிழக மீனவனைச் சிங்களப்
படை சுடவேண்டும்
என்னைக் கேட்டால் கன்னடன் தமிழனுக்கு ஒரு சொட்டுத்
தண்ணீர் தரக்கூடாது
என்னைக் கேட்டால் தமிழக முதல்வர் வேற்றினத்திலிரு
ந்தே வரவேண்டும்
என்னைக் கேட்டால் தமிழனுக்கு ஆங்கிலமும் இந்தியும்
மட்டுமே கற்றுக்கொடுக்கப்படவேண்டும்
என்னைக் கேட்டால் தமிழகத்திலும்
ஒரு இனப்படுகொலை நடக்கவேண்டும்
என்னைக் கேட்டால் தலைவர் இறந்ததாக உறுதிசெய்யப்படவ
ேண்டும்
என்னைக் கேட்டால் அத்தனைத் தமிழச்சியும்
வல்லுறவுக்கு உட்படவேண்டும்
இது அத்தனையும் நடக்கவேண்டும்
அப்போதுதான் இந்த சூடு சுரணையில்லாத இனம்
விடுதலைக்கான போரில் இறங்கும்
அப்போதுதான் முற்றுமுழுதாக அழிந்துவிடாமல்
பத்தில் ஒரு தமிழனாவது எஞ்சுவான்
அப்போதுதான் ஒரு துண்டுநிலமாவது தமிழன் கையில்
இருக்கும்
அப்போதுதான் தமிழினம் உலகையாளும்
திறம்பெற்று திகழும்.
(21-2-14)
https://m.facebook.com/photo.php?fbid=418418414928484&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739