Showing posts with label தீட்ஷிதர். Show all posts
Showing posts with label தீட்ஷிதர். Show all posts

Thursday, 13 July 2017

பார்ப்பனீயம் - பிராமணீயம் வேறுபாடு

பார்ப்பனீயம் - பிராமணீயம் வேறுபாடு

முதலில் மிகவும் பிற்காலத்தில் தோன்றி நீண்டகாலம் நீடிக்காமல் என்றோ ஒழிந்துபோன ஆரியரை
பழம்பெருமை உடைய தமிழருக்கு எதிரியாகக் காட்டி
அவர்களை நாகரீகத்திலும் பழமையிலும் தமிழருக்கு சமமாக ஆக்குவதை நிறுத்துங்கள்.

பூணூல் என்பது தமிழர் பயன்படுத்தியதே!

ஆரியர் பூணூல் அணிந்திருந்ததாக எந்த சான்றும் இல்லை.

சொல்லப்போனால் பூணூல் ஒரு நாகரீக வளர்ச்சியின் அடையாளம்

அதாவது பருத்தி விவசாயம் செய்து அதிலிருந்து நூலெடுத்து தறி இயந்திரம் மூலம் ஆடை நெய்த குடி நாம் என்பதன் அடையாளம்.

காட்டுமிராண்டி ஆரியரால் இத்தனை நவீனமாக செயல்பட்டிருக்க முடியுமா?

தனது மேன்மையையும் அதிகாரத்தையும் காட்ட கேவலம் ஒரு நூல்தான் அணியவேண்டுமா?

(மேற்கண்ட சிந்தனையை
முன்வைத்தவர் ம.பொன்ராஜ் காலாடி அவர்கள்)

இது புரியாமல் எதற்கெடுத்தாலும் பூணூல் பூணூல் என்று கத்துவானேன்?

பூணின் நூல் என்பது வில்லின் நாண் எனவும் அது அளவைக்கு பயன்பட்டதையும்
முப்புரிநூல் பூணூல் கிடையாது எனவும் ஏற்கனவே சான்றுகளுடன் போட்டாயிற்று.

(தேடுக:- பூணூல் வில்லின் நாண் வேட்டொலி
தேடுக:- தொல்காப்பியம் முப்புரிநூல் பூணூலா வேட்டொலி)

இறந்துபோன ஆரியத்திற்கு பூணூலை மாட்டி அதை அறுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று இனப்பகை திராவிடம் சொல்கிறது.
உண்மையான பகைவரிடம் இருந்து நம்மை திசைதிருப்புகிறது.

மூளையுள்ள தமிழினம் யோசிக்கவேண்டுமா? இல்லையா?

சங்ககாலத்தில் நான்கு வகை குடிகளும் அதில் ஏற்றத்தாழ்வும் இருந்தனதான்.
ஆனால் ஏற்றத்தாழ்வு மிகமெல்லிய அளவே இருந்தது.

முதலில் குடியானது பிறப்பால் அமையாமல் செய்யும் தொழிலால் அமைந்தது.
அதாவது ஒரு விவசாயி மகன் கற்கவேண்டியதை கற்று பார்ப்பனராக முடியும்.
பிறகு ஒரே தொழில் புரிந்தோர் தமக்குள் திருமணம் செய்துகொண்டனர்.
தமது அடுத்த தலைமுறைக்கு அந்த தொழிலைக் கற்றுக்கொடுத்தனர்.
இது குடி அடையாளம் பிறப்புவழியாக அமையக் காரணமானது

குடியானது பிறப்பு அடையாளமாக மாறிய பிறகும் பார்ப்பனர் பிற சாதிகளை விட கொஞ்சமே கொஞ்சம் அதிக ஆதிக்கம் பெற்றவர்களாக இருந்தனர்.
இதைப் பார்ப்பனீயம் எனலாம்.
பார்ப்பனீயம் பிற சாதிகளை ஒடுக்கியதில்லை.
(தேடுக:- இழிசினர் வேட்டொலி)

ஆனால் இந்த பார்ப்பனீயத்தை விட 100 மடங்கு கொடியது பிராமணீயமும் அதன் நால்வர்ண கொள்கையும்.

கி.பி.850 க்கு பிறகு தமிழக நதிக்கரை ஓரங்களில் கற்களால் பெருங்கோயில்கள் சோழர்களால் கட்டப்படுகின்றன.
  வேலைவாய்ப்பு கிடைப்பதால் சோழ நாட்டு பார்ப்பனர்கள் தமிழகம் முழுவதும் பரவுகின்றனர்.
(இதுவே பார்ப்பனர் பேசும் தமிழ் அவர்களின் வட்டார வழக்குடன் அதாவது சோழநாட்டு காவிரிக்கரை பாணியில் உள்ளது)

இதே வேலைவாய்ப்புக்காக தமிழகத்திற்கு வடக்கே இருந்த பிறமொழி பிராமணரும் தமிழகத்திற்கு வருகின்றனர்.
அவர்களுக்குத் வடமொழியில் பூசை செய்கிறார்கள்.
பிறகு கோயில்கள் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் பல தெய்வங்களுடன் பெரிதாகவும் முழுநேரமும் இயங்குமாறும் ஆக்கப்படுகின்றன.

பூசாரிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது.
அப்போது முதலில் பல்லவர்களும் பிறகு சோழர்களும் கங்கைக் கரையிலிருந்தும் நர்மதைக் கரையிலிருந்து பிறமொழிப் பிராமணர்களை அழைத்துவந்து குடியேற்றுகிறார்கள்.
இவர்கள் வடமா என்று அழைக்கப்படுகின்றனர்.

இவர்களுடன் உள்ளே நுழைந்த வைதீக முறையையும் பிராமணீயத்தையும் பார்ப்பனர்கள் ஆகமம் என்ற முறையை உருவாக்கி தடுக்கிறார்கள்.
தமிழ் அரசர்கள் ஆண்டவரை ஆகம முறையே கோவில்களில் நடைமுறையில் இருந்தது.
இதன்படி யாரும் பூசாரி ஆகலாம்.
கடவுளின் பெயரால் யாரையும் தாழ்த்தமுடியாது.
(தேடுக: தமிழர் படைத்த ஆகமம் கேடயம் வேட்டொலி)

கருவறையில் பூசாரி மட்டுமே நுழையமுடியும் என்ற விதி கிடையாது.
தஞ்சை பெரியகோவில் லிங்கத்தை இறுத்தியவர் கருவூர்த் தேவர் என்பவர் ஆவார்.

வந்தேறி பிராமணர் யாரும் பூர்விக தமிழ்ப் பார்ப்பனருடன் ஒட்டிவோ கலக்கவோ இல்லை.
ஆனால் தமிழ்ப் பார்ப்பனர் பயன்படுத்தும் பட்டங்களை இவர்களும் பயன்படுத்துவதால் குழப்பம் நிலவுகிறது.

தமிழராட்சி நடந்தவரை கோயில்கள் பார்ப்பனர் நிர்வாகத்தில் இருந்ததில்லை
இராசராசன் காலத்தில் தஞ்சை பெரியகோவில் தலைமை பார்ப்பனரல்லாத பவணபிடாரர் என்பவரிடம் இருந்தது.
கடைசிப் பாண்டியன் காலத்தில் மதுரை மீனாட்சி கோவில் தலைமை அபிசேகப் பண்டாரம் என்பவரிடம் இருந்தது.

தமிழராட்சி வீழ்ந்து வேற்றின விஜயநகர ஆட்சி பரவிய பிறகுதான் பிராமணீயம் தமிழகத்தில் தலைதூக்குகிறது.
சாதிய ஏற்றத்தாழ்வு உச்சத்தை அடைந்து தீண்டாமை நடைமுறைக்கு வருகிறது.
(சோழர் காலத்து தீண்டாச்சேரி நோயாளிகள் பராமரிப்புப் பகுதி.
சேரி என்பது குடியிருப்பு என்றே பொருள்படும்.
பார்ப்பன சேரி கூட உண்டு)

கோவில்களில் இருந்து பார்ப்பனர், பறையர், பண்டாரம், பிடாரர், ஓதுவார் ஆகியோர் வெளியேற்றப்பட்டு பிராமணர்கள் நிரப்பப்பட்டு தமிழுக்கு பதிலாக சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது.
(தேடுக:- பார்ப்பனர் தமிழில் ஏன் ஓதுவதில்லை வேட்டொலி
தேடுக:- தீட்சிதர்கள் தமிழை நீசபாசை என்றார்களா?)

சமஸ்கிருதம் படித்து வைதீக பூசைமுறையை ஏற்று நாயக்கர் ஆட்சியில் சமரசம் செய்துகொண்ட பார்ப்பனர் தவிர பெரும்பான்மையான பார்ப்பனர்கள் வீழ்ந்துவிட்டனர்.
சமரசம் செய்துகொண்ட பார்ப்பனர்கூட தமிழைக் கைவிடவில்லை.
அவர்கள் தமது வட்டார வழக்கைக்கூட கைவிடவில்லை.
பார்ப்பனர் பேசும் தமிழ் தூய தமிழுக்கு நெருக்கமானது.
(தேடுக: பாலக்காட்டில் பேசப்படுவது தமிழே வேட்டொலி
தேடுக: வெதுப்பகம் வேட்டொலி)

ஆக அவாளும் நம்மவாளே!
அவிய்ங்களும் நம்மவிய்ங்களே!
அவியளும் நம்மவியளே!
அவுகளும் நம்மவுகளே!

நாயக்கர் ஆட்சியில் அனைத்து பதவிகளிலும் உயர்சாதியினரும் பிராமணரும் அமர்த்தப்படுகின்றனர்.
(தமிழராட்சியில் அவ்வாறு இல்லை.
தேடுக: கோவிலுக்கு நிலமும் தானமும் வழங்கிய பறையர் வேட்டொலி
தேடுக: பறையருக்கு இறையிலி நிலங்கள் வழங்கிய இராசராசன்)

இதோடு நில்லாது நாயக்கர் ஆட்சியில் நிலவுடைமைச் சமூகம் உருவாக்கப்பட்டு உழைக்கும் மக்கள் (அதிலும் குறிப்பாக பள்ளர்கள்) அளவுக்கதிகமாகச் சுரண்டப்பட்டனர்.
பஞ்சமும் பட்டினியும் ஏற்பட்டன.
(தேடுக:- தெலுங்கர் ஆட்சியில் தமிழர் நிலை வேட்டொலி)

நாயக்கர்கள் தமிழை வெறுத்தனர்.
தமிழ்ப் புலவர்கள் ஆசிரியர்கள் மிகவும் வறிய நிலையை அடைந்தனர்.
அவர்களது தெலுங்கு கன்னட மொழி அப்போதுதான் உருவாகி ஆரம்பநிலையில் இருந்தது.
அதனால் தமிழை ஒழிக்கமுடியவில்லை.
(தேடுக: நாயக்கர் காலத்தில் தமிழ்)

தமிழ் இசை திருடப்பட்டு கர்நாடக சங்கீதம் ஆனது.
தமிழ்ப் பாடகர்கள் நடனமாடுவோர் என அத்தனை பேரும் வேலையிழந்தனர்.
(தேடுக: கர்நாடக சங்கீதம் தமிழிசையே வேட்டொலி)

ஆனால் இது அத்தனையையும் ஈடுகட்டியோர் பார்ப்பனரே !

ஆக 500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நுழைந்த பிராமணீயத்தை 3500 ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஆரியருடன் தொடர்புபடுத்துவது நகைப்பிற்குரியது.

பார்ப்பனர் நிறமாக இருப்பதை வைத்து ஆரியருடன் தொடர்புபடுத்துவோர் அது அவர்கள் தொழிலின் காரணமாக ஏற்பட்டது என்பதை புரிந்துகொள்ள மறுக்கின்றனர்.
ஆரியரின் தோற்றமும் பார்ப்பனரின் தோற்றமும் முற்றிலும் வேறுபட்டவை.
( தேடுக: மஞ்சள் முடி ஆரியர் வேட்டொலி)

சங்ககால அந்தணர் வேறு பார்ப்பனர் வேறு என்றும் சிலர் கூறுகின்றனர்.

ஈப் பாய் அடு நறாக் கொண்டது இவ் யாறு எனப்
" பார்ப்பார் " ஒழிந்தார் படிவு
மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று என்று
" அந்தணர் " தோயலர் ஆறு
வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென
" ஐயர் " வாய்பூசுறார் ஆறு
(பாரிபாடல்-திரட்டு 2:50-63)

இப்பாடலில் பார்ப்பார், அந்தணர், ஐயர் ஆகிய மூவரும் ஒரே மாதிரியாக குறிப்பிடப்படுவதை உற்றுநோக்குக.

பார்ப்பனர்கள் தமது தாய்மொழியான தமிழுக்கு தொடர்ந்து தொண்டு செய்தே வந்துள்ளனர்.
தமிழரில் 1% மட்டுமே இருக்கும் (2% பிற பிராமணர்) பார்ப்பனர் அளவுக்கு தமிழுக்கு தொண்டு செய்த வேறொரு சமூகத்தைக் காட்டமுடியாது.

வைணவத்தில் சாதீயத்தை பிராமணர் புகுத்தியபோது அதை எதிர்த்து அவர்களை வடகலை என்று ஒதுக்கி  தென்கலை என்ற (பெரும்பான்மை) பிரிவைத் தக்கவைத்தோர் பார்ப்பனர்கள் !
இருவருக்கும் இடையேயான மோதல் 1880 களில் பல வழக்குகள் நடந்து மேல்முறையீடு லண்டன் வரை சென்றது
ஆனாலும் தென்கலையே சரி என்று தீர்ப்பு வந்தது.

(தேடுக: தென்கலை ஐயங்கார் சாதி எதிர்ப்பு கொள்கை fbtamildata)
 
சக்கிலியரான பொம்மக்கா திம்மக்காவை காதலித்து மணந்த முத்துப்பட்டர் வரலாற்றில் உண்டு!

தாழ்த்தப்பட்டோருக்கு பூணூல் போட்ட பாரதியும் உண்டு!

மீனாட்சி கோவிலில் ஆலயநுழைவு நடத்திய வைத்தியநாத ஐயரும் வரலாற்றில் உண்டு!

மலையகத்தில் உழைக்கும் மக்களுக்காக தன் ஊரையும் தொழிலையும் விட்டுவிட்டு இலங்கையின் முதல் தமிழ் பத்திரிக்கை தொடங்கி தமிழ்த் தோட்டத் தொழிலாளருக்காகப் போராடிய கோதண்டராம நடேசையர் வரலாற்றில் உண்டு.

பிராமணரையும் பார்ப்பனரையும் குழப்பவேண்டாம்
திராவிட விசத்தை தலைக்கு ஏற்றிக்கொண்டு திரியவேண்டாம்.

ஆங்கிலேயர் காலத்தில் படித்து பதவிகளுக்கு வந்த தமிழ்ப் பார்ப்பனரை கீழே இறக்க வந்தேறிகள் உருவாக்கியதே திராவிடம்.

  நம்மை பிரித்தாள ஆங்கிலேயர் உருவாக்கி தமது நிழலில் வைத்திருந்ததே திராவிடம்!

தமிழகத்தின் முக்கால்வாசி நிலவுடைமையை கையில் வைத்திருக்கும் வந்தேறிகளின் அமோக ஆதரவுடன் வளர்ந்ததே திராவிடம்!

வந்தேறி உயர்சாதி வெறியர்களின் கூடாரமே திராவிடம்!

திராவிடம் எதிர்த்தது பார்ப்பனரையே! பிராமணரை அல்ல!
(தேடுக: திராவிடலு தொடர் வேட்டொலி)

முன்னேறிய சமூகமான பார்ப்பனர் மீதான பிற தமிழரின் பொறாமையே திராவிடத்தின் ஆணிவேர்.

கைவிடுவோம் அந்த பொறாமையை!
பிடுங்கி எறிவோம் திராவிட ஆணிவேரை!

பிராமணர் பார்ப்பனர் வேறுபாடு அறிந்து கொள்வோம்!

உரக்கச் சொல்வோம் பார்ப்பனர் தமிழரே!

படம்: 1890 களில் எடுக்கப்பட்ட தில்லை அந்தணர் படம்

Monday, 24 April 2017

பார்ப்பனர் - பிராமணர் வேறுபாடு

பார்ப்பனர் - பிராமணர் வேறுபாடு

ௐ ௐ ௐ ௐ ௐ ௐ ௐ ௐ ௐ ௐ ௐ ௐ ௐ

பெரும்பாலான சோழியப் பார்ப்பனர் (முன்குடுமி) தமிழரே

இவர்களே சங்ககாலப் பார்ப்பனர் (அதாவது ஆதித்தமிழர்)
சோழியப் பார்ப்பனர் முக்கிய 5 பிரிவுகள் கீழ்வருமாறு,

1) தீட்சிதர் [சிதம்பரம் கோயிலைச் சுற்றி]

2) நம்பியார் [ஆவுடையார் கோவிலைச் சுற்றி]

3) பட்டர் [மதுரை மீனாட்சி கோவிலைச் சுற்றி]

4) ஆனைக்கா அந்தணர் (அய்யா நம்பி, திருண பட்டன், பட்டர்)

5) வீழி அந்தணர் [திருவீழிமிழலை கோயிலைச் சுற்றி]

இவர்கள் போக,

தென்கலை வைணவர் (நம்பி)
நயினார் [திருவாரூர்]

திருசுதந்திரர் [திருச்செந்தூர்]

சிவாச்சாரியார் [தமிழகம், ஈழம்]

குருக்கள் (ஐயர்) [மதுரை]

சோழியர் (ஐயர், ஐயங்கார்)

முக்கானி (ஐயர்) [திருச்செந்தூர்]

ஆகியோரும் தமிழினப் பார்ப்பனரே!
______________________

பிற வடமா பிராமணர் (பின்குடுமி) பெரும்பாலும் தமிழரல்லாதார்

பிரகச்சரணம் (ஐயர்)
வாத்திமா (ஐயர்)
அஷ்டசகஸ்ரம் (ஐயர்)
கேசியர்
வடகலை வைணவர்
மத்தியானப் பறையர்
பட்டஸ்ய
வடமா (ஐயர்)
வடமா தீட்சிதர்
நம்பூதிரி

இவர்களில் வடகலை ஐயங்கார், பிரகச்சரணம், வாத்திமா, வடமா, அஸ்ட சகஸ்ரம் ஆகியவற்றில் சில தமிழ்ப் பிரிவுகள் உள்ளன.

அதாவது பிராமணரிலும் பார்ப்பனரிலும் பல உட்பிரிவுகள் இருந்தாலும் அவை ஒன்றோடொன்று கலப்பதில்லை.

(அதாவது உட்பிரிவுகளே உண்மையான சாதி.
உட்பிரிவில் கோத்திரம் என்பது திருமணம் செய்ய மட்டும்.
சிறுபான்மையான சாதி என்பதால் நெருக்கமான உறவுகள் திருமணம் செய்வதைத் தடுக்க இந்த முறை)

ஆனால் பல உட்பிரிவுகள் அவர்களின் கொள்கைகளைப் பொறுத்து ஒரு முக்கியப் பிரிவுக்குள் வருகின்றன.

மேற்கண்டவை அத்தகைய முக்கியப் பிரிவுகளே.

அதேபோல ஒரே பட்டத்தை வெவ்வேறு பிரிவினர் பயன்படுத்துகின்றனர்.

சுருக்கமாகக் கூறினால்
நம்பியார், பட்டர், குருக்கள் போன்ற பட்டங்கள் தமிழரைக் குறிக்கும்.

ஐயர், ஐயங்கார், தீட்சிதர், ஆச்சாரி, சாஸ்திரி போன்ற பட்டங்கள் பார்ப்பனரும் பிராமணரும் பயன்படுத்துகின்றனர்.
இவர்களில் யார் வடமா அல்லது வடகலை பிரிவோ அவர்கள் தமிழரல்லாதார்.

ஐயங்காரிலும் சாஸ்திரியிலும் பெரும்பாலும் பிராமணர்.

தீட்சிதரிலும் ஐயரிலும் பெரும்பாலும் பார்ப்பனர்.

தமிழக பூசாரி சாதிகளில் 65% பிராமணர்.
35% மட்டுமே பார்ப்பனர்.

(இது ஆரம்பகட்ட ஆய்வுதான்.
பார்ப்பனர்களிலும் பிராமணர்களிலும் பல உட்பிரிவுகள் உள்ளன.
ஒரே உட்பிரிவினர் ஒரு இடத்தில் பார்ப்பனராகவும்
வேறு இடத்தில் பிராமணராகவும் உள்ளனர்.

ஆக உட்பிரிவு தெரிந்தாலும் வாழ்விடத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இதுபற்றி மேலும் தெரிந்தோர் கருத்துகளில் இடலாம்)

Wednesday, 5 October 2016

தீட்சிதர்கள் தமிழை நீசபாசை என்றார்களா?

தீட்சிதர்கள் தமிழை நீசபாசை என்றார்களா?

தில்லை அதாவது சிதம்பரம் சைவர்களின் இதயம்.
சிவனிய மதத்தின் தலைமை பீடம்.

மாலை ஆறுமணி.

கோவிலின் இரண்டு காண்டா மணிகள் கணீரென்று ஓசைகள் எழுப்பி சுற்றுப்புறத்தை ஒரு மைல் தூரம் அதிரவைக்கின்றன.

கோயிலை நெருங்கினால் காண்டா மணிகளின் ஓசையுடன் சிறுசிறு மணிகள் சேர்ந்துகொண்டு கிலுகிலுவென்று தம் பங்குக்கு ஒலியெழுப்புவதையும் கேட்க முடிகிறது.

இன்னும் நெருங்கினால் வேத முழக்கம் செய்யும் பார்ப்பனரின் குரலும் அந்தப் பேரோசையில் கலந்திருப்பது புலனாகிறது.

திடீரென்று அனைத்து ஓசைகளும் நின்றுவிடுகின்றன.
ஒரு பேரமைதி சூழ்கிறது.

ஒரு குரல் ஒலிக்கிறது.
பல ஆண்டுகள் பயிற்சி பெற்ற செம்மையான நடையில் பதிகங்களைப் பாடுகிறது.

என்ன மொழியில்?

ஆம், அது தமிழ்.

கோவிலின் உள்ளே நுழைகிறோம்.

பார்த்தால் தமிழில் பாடும் அந்த செம்மையான குரல் ஒரு பார்ப்பனப் பூசாரிகளில் ஒருவரின் குரல்.

ஆம். இப்பார்ப்பனர்கள்தாம் புகழ்பெற்ற தமிழ்ப் பார்ப்பனர்களான 'தில்லைவாழ் அந்தணர்கள்'.
அதாவது சோழியப் பார்ப்பனர்கள்.
தற்போது தீட்சிதர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
மொத்தமே 360 குடும்பம்தான் இருக்கும்.
அனைவரும் தில்லை கோவிலைச் சுற்றிய தேரடி வீதிகளிலேயே வாழ்கிறார்கள்.

சிறிது நேரத்தில் அப்பார்ப்பனரான் தமிழ் வேதமுழக்கத்துடன் மீண்டும் சிறுசிறு மணிகளும் காண்டா மணிகளும் மங்கள இசைக்கருவிகளும் சேர்ந்துகொள்கின்றன.

நாத்திகருக்கும் பரவசமூட்டும் அந்த இசை வழிபாடு உச்சகதிக்கு போய் அரைமணிநேரத்தில் முடிவடைகிறது.

தில்லை நடராசர் கோவிலுக்கு போனால் நாள்தோறும் மாலை ஆறுமணிக்கு, ஆதிசங்கரர் தந்ததாக நம்பப்படும் ஸ்படிக லிங்கத்துக்கும் நடராஜருக்கும் இந்த பூசை நடக்கும்.

இதிலே பாடப்படும் தமிழ் மந்திரம் மற்ற எல்லா மனிதர்கள் காதிலும் விழும்.
ஆனால் 'பார்ப்பன வெறுப்பு' விசம் ஊட்டப்பட்ட அதிமுற்போக்கு மனிதர்களின் காதில் மட்டும் இது கேட்கவே கேட்காது.
பார்ப்பனர் தமிழ் ஓதினால் போதும் அதிமுற்போக்குவாதியின் காதுகள் சட்டென்று செவிடாகிவிடும்.

இவர்கள் காதுகள் வேறு எப்போதெல்லாம் செவிடாகும் தெரியுமா?

இரவு ஒன்பது மணிவாக்கில் நடக்கும் அர்த்த ஜாம பூஜையின் போது நடராஜரின் பாதுகைகளை பள்ளியறைக்கு ஊர்வலமாக எடுத்து செல்லும்போதும் தீட்சிதர்கள் தமிழ் பதிகங்கள் பாடுவார்கள்.
அப்போது செவிடாகிவிடும்.

தேர் தரிசன உற்சவத்தின் போது பத்து நாட்களும் மாணிக்கவாசகர் சிலை கொண்டுவரப்பட்டு அனைத்து சாதி பக்தர்களும் ஓதுவாருடன் சேர்ந்து திருவெம்பாவை பதிகங்களை சத்தமாக பாடுவார்கள்.
திருவெம்பாவை தமிழ்தான்.
அப்போதும் அதிமுற்போக்காளர் செவிடாகிவிடுவார்.

தேர் திருவிழாவின் போது தேர் நிலைக்கு வந்ததும் நடராஜரை கோவிலுக்குள் கொண்டு செல்வதற்கு முன் தமிழ் பதிகங்களை பாடித்தான் தீப ஆராதனை நடக்கும்.
இது சிதம்பர ரகசியம் அல்ல. வெளிப்படையாக நடக்கும் நிகழ்வு.
சிதம்பரத்தில் வாழும் யாரையும் கேட்டுப்பாருங்கள்.

ஆனால் அதிமுற்போக்காளரை அங்கே கொண்டு நிறுத்தி கேட்டாலும் அவர் மட்டும் மறுப்பார்.
ஏனென்றால் அவர் காதுதான் அப்போது அவிந்துபோய்விடுமே!

என்றால் சிதம்பரம் தீட்சிதர்கள், ஆறுமுகசாமி என்ற ஓதுவாரை தமிழில் பாட விடாமல் தடுத்தார்கள் என்று செய்தி வந்ததே?!

தமிழ் நீஷபாஷை என்று தீட்சிதர்கள் கூறியதாக கேள்விப்பட்டோமே?!

ஆம். அப்படியெல்லாம் பரப்புரை செய்பவர்கள் 'பார்ப்பன எதிர்ப்பு' விசத்தை வியாபரம் செய்பவர்கள்.

ஆறுமுகசாமியை தீட்சிதர்கள் தடுத்ததற்குக் காரணம் அவர் கருவறை இருக்கும் மேடையான திருச்சிற்றம்பலத்தில் நின்று பாடுவேன் என்று அடம்பிடித்ததுதான்.

தீட்சிதர்கள் கருவறை இருக்கும் மண்டபத்தில் ஏறி பாட தடை எதுவும் கூறவில்லை.
அவர்கள் கூறுவது கருவறை மேடைக்கு வரக்கூடாது என்பதுதான்.

ஆக இங்கே பிரச்சனை தமிழ் இல்லை.
திருச்சிற்றம்பலத்தில் ஏறி நாள்தோறும் மாலை தமிழில்தான் தீட்சிதர் பாடுகிறார்.

இதை தமிழுக்கு ஏற்பட்ட இழிவாக ஏன் திரிக்கிறார்கள்?
அந்த திரிப்பு எப்படி எடுபடுகிறது?

திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியான பொய்ப் பிரச்சாரம் இது எடுபட வழிசெய்துள்ளது.

சாதிப் பெயர்கள் வைத்து எத்தனையோ கடைகள் உள்ளன.
ஆனால் 'ஐயர் கபே' என்று கடை வைத்தால் அந்த கடை முன்னே சென்று படுத்து உருண்டு பெயரை மாற்றச்செய்வார்கள்.

அரசியலுக்காக இதைச் செய்கிறார்கள்.

வாஞ்சிநாதன் ஆஷ்துரையைச் சுட்டுக்கொன்றபின் அவர் பையில் வைத்திருந்த சீட்டில் பிரிட்டிஷ் பேரரசர் ஐந்தாம் ஜார்ஜை பஞ்சமன் என்று வடமொழி வடிவத்தில் எழுதிவிட்டார் (பஞ்ச்சம் = ஐந்தாவது) உடனே பார்ப்பான் வெள்ளைக்காரனைக் கூட கீழ்சாதியாகப் பார்க்கிறான் என்று ஆங்கில அடிவருடி கொள்கையையுடைய திராவிடவாதிகள் பரப்புரை செய்தனர்.

மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ஒன்றைக் கூறுகிறேன்.

இராஜாஜி தன் ஆட்சிக்காலத்தில் ஆசிரியர் பற்றாக்குறையால் ஆசிரியரின் பணிநேரத்தை பல வகுப்பு மாணவர்களுக்கு பகிர்ந்தளித்தார்.
ஆசிரியர் இல்லாத நேரத்தில் என்ன செய்யலாம் என்று பேட்டியில் கேட்டதற்கு "வீட்டிற்குச் சென்று பெற்றோருக்கு உதவிகள் செய்யலாம்" என்றார்.

அவ்வளவுதான்.
"பார்ப்பான் மனுதர்மப்படி குலத்தொழிலை செய்யச் சொல்லிவிட்டான்" என்று பொய்பிரச்சாரம் செய்து செய்தே அவரை பதிவியிலிருந்து இறங்கினார் அண்ணாதுரை.

இன்று அத்திட்டத்தின் பெயரே 'குலக்கல்வித் திட்டம்' என்றாகிவிட்டது.
ஆனால் அந்த திட்டம் இராசாசி போட்ட திட்டம் கிடையாது.
குலம் பற்றி அதில் எதுவுமே கூறப்படவில்லை.

இதுபோல பார்ப்பனர் மீது வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் உடைக்கமுடியும்.

ஆனால் பார்ப்பனர் தமிழர் என்று கூறினாலே காரணமே இல்லாமல் பல நல்லவர்களுக்கும் கூட கண் அவிந்து காது திருகி மூளை மழுங்கி போய்விடுகிறது.

ஆகவே தமிழரே, பார்ப்பனர் தமிழனத்தின் ஒரு குலத்தினரே.

தமிழ்ப் பார்ப்பனர்களை பிறமொழிப் பிராமணருடன் குழப்பவேண்டாம்.

தமிழ் ஓலைச்சுவடிகளை பாதுகாத்தோர் இந்த தில்லை சோழியப் பார்ப்பனர்கள்தான்.
இராசராசன் அவற்றை மீட்ட கதை தெரியும்தானே?

அந்நிய படையெடுப்பின்போது நடராசர் சிலையை பல இடங்களுக்கும் எடுத்துச் சென்று மறைத்து வைத்து பாதுகாத்ததும் இதே தில்லைவாழ் சோழியப் பார்ப்பனர்கள்தான்.
எத்தனையோ கொடுமைகளையும் கொலைகளையும் சந்தித்த பிறகும் அவர்கள் சிலைகளை மறைத்துவைத்த இடத்தைக் காட்டிக்கொடுக்கவில்லலை.

சிதம்பரம் கோயிலுக்குள்ளேயே எட்டு சிலைகள் இவ்வாறு மறைத்துவைக்கப்பட்டிருந்ததைப் பின்னர் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர் (ஜோப் தாமஸ், ‘திருவெண்காடு ப்ரோன்ஸ்’ (Tiruvengadu Bronzes), க்ரியா, 1986).

மாலிக் கபூர் படையெடுப்பை ஒட்டிய குழப்பமான காலகட்டத்தில் உமாபதி சிவாச்சாரியர் என்பவர் சாதி எல்லைகளைக் கடந்து அனைவருக்கும் ‘பேதமற தீக்கை’ (பேதமற்ற தீட்சை) தந்து தீட்சிதர் ஆக்கினார்.
முதலில் அவரை எதிர்த்த தீட்சிதர் பிறகு மனம் மாறி உமாபதி சிவாச்சாரியாரை மீண்டும் திருக்கோயில் பூசனைகளுக்கு அழைத்தனர்.

விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் (1400 - 1700) சிவன் கோயில்கள் புறக்கணிக்கப்பட்டன.
பல சைவ கோவில்கள் அரசு ஆதரவின்றி அழிந்துபோயின.
அப்போது தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோயிலை தாமே பொறுப்பெடுத்துக் கவனித்துக்கொள்ளத் தொடங்கினர்.

கிறித்துவ மிஷனரிகளின் சூழ்ச்சியால் நாடார்கள் கோவிலுக்குள் நுழைய தடை விதிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நாடார்களுக்கு ஆதரவாக தீட்சிதர்கள் சாட்சி கூறியதும் அதனால் (மிஷனரிக்கு ஆதரவான) பிரிட்டிஷ் நீதிபதிகளால் கடுமையான அவமதிப்புக்கும் ஆளானார்கள்.
(தோள்சீலைக் கலகம், ‘சிஷ்ரி’ (SISHRI), 2010)
நாடார்கள் லண்டன் வரை மேல்முறையீடு செய்தும் அநியாயமான தீர்ப்பே வந்தது.

எனவே தீட்சிதர்கள் எந்த அரசாங்கத்தையும் நம்புவதில்லை.
அதனால்தான் கோவிலை அறநிலையப் பொறுப்பில் ஒப்படைக்க மறுக்கிறார்கள்.

அதற்காக தீட்சிதர்கள் செய்வதெல்லாம் சரியென்று கூறமுடியாது.

தீட்சிதர்கள் மீது இன்னும் எவ்வளவோ விமர்சனங்கள் உண்டு.

அவர்கள் சைவ ஆகமத்தை பின்பற்றாது பதஞ்சலி முனிவர் வகுத்த முறையை பின்பற்றுகின்றனர்.

கோவில் நகைகள் காணாமல் போனது.

காசு கொடுத்தால் சிறப்பு பூசை.

மாத சந்தா கொடுத்துவிட்டால் கோவிலுக்கு வராமலே அர்ச்சனை செய்து பிரசாதம் பெறும் வசதி செய்து தருவது.

ஆண்களை சட்டையைக் கழற்றச் சொல்வது.

பிறமதத்தாரை உள்ளே விடாதது.

திருமணம் ஆனால்தான் தீட்சை பெற்று தீட்சிதர் ஆகும் தகுதி கிடைக்கும் என்பதால் இளவயது திருமணம் செய்வது.

என்று ஏகப்பட்ட விமர்சனங்கள் உள்ளன.

அதைப் பற்றி நான் இங்கே கூறவரவில்லை.

நான் கூறவருவது தீட்சிதர்கள் தமிழுக்கு எதிரானோர் இல்லை என்பதைத்தான்.

ஆகவே தமிழர்களே!
திராவிடத்தை எதிர்க்கும் அதே நேரத்தில் தமிழரல்லாத அந்த திராவிட வந்தேறிகள் ஊட்டிய பார்ப்பனருக்கு எதிரான சாதிவெறிக்கு நீங்கள் இரையாகி உள்ளீர்கள்.

இனியாவது அந்த விசத்தைக் கக்குங்கள்.

பார்ப்பனர் தரப்பு நியாயத்தை சிந்தியுங்கள்.

பார்ப்பனரை ஏறெடுத்துப் பாருங்கள்.

தகவல்களுக்கு நன்றி
mugamoodi. blogspot. in/2006/07/vs. html