Monday, 30 September 2024

வரலாற்றை நிறுத்திய வந்தேறிகள்

வரலாற்றை நிறுத்திய வந்தேறிகள்!

 வரலாறு ஒரு சக்கரம் போன்றது. 
 தமிழர் வரலாறு ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறை (இமயம் வரை) ஆதிக்கம் செலுத்துவதாக சுழலும் (அப்படியே ஜெர்மனி போல).
 கரிகாலன் இமயத்தைக் குடைந்த ஆயிரம் ஆண்டு கழித்து ராஜேந்திரன் இமயம் வரை ஆண்டான். அதிலிருந்து ஆயிரம் ஆண்டு ஆகி தற்காலம் தமிழர்கள் அந்த எழுச்சிக்கு தயாராக இருந்தோம்.

 இதற்கு ஆரம்ப அடிப்படை  தேவையான கருத்தியல் சிந்தனைகள் தோன்றியிருந்தன.
 தனிநாடு, அகன்ற தமிழர்நாடு, குமரிக் கண்டம் போன்ற நிலம் சார்ந்த சிந்தனையும் நம்மிடம் வந்துவிட்டது. 

மாநில அதிகாரம், இந்திய அரசியலில் ஆதிக்கம், ஈழம், புலிகள், வீரப்பன், ஆயுதக் குழுக்கள், மும்பை முதல் மலேசியா வரை நிழலுலக ஆதிக்கம், உலகளாவிய குடியேற்றம், பொருளாதார பெருக்கம்,  மொழி வளர்ச்சி என நாம் 1980 - 2000 காலவாக்கில் ஏறத்தாழ பாதி வெற்றி அடைந்திருந்தோம்.

 நியாயப்படி நாம் 2009 இல் ஈழம் அடைந்து அவ்வழியே தமிழகத்தை ஆயுதப் புரட்சி மூலம் விடுதலை செய்து எல்லைகளை விரிவாக்கி சிங்களத்திற்கு பதிலடி கொடுத்து இந்நேரம் நம் தாய்நிலத்தில் ராணுவ பலத்துடன் தன்னாட்சியுடன் இருந்திருக்க வேண்டும்.
 இதன் விளைவாக தேசிய இனங்கள் எழுச்சி பெற்று அடுத்த கால் நூற்றாண்டில் (சோவியத் போல) இந்தியா உடைந்து தென்னிந்திய இனங்களின் நாடுகள் கூட்டாட்சி உருவாகி அதன் ஆதிக்கம் இமயம் வரை பாகிஸ்தான் வரை பரவியிருக்கும் (ஐரோப்பிய யூனியன், நேட்டோ போல).
 அடுத்த கால் நூற்றாண்டில் (அன்று கம்யூனிசம் போல) உலகின் மூலை முடுக்கெல்லாம் தேசிய இனங்களின் எழுச்சியும் பெரிய நாடுகள் உடைந்து புதிய நாடுகள் தோன்றுவதும் நடந்து உலகையே வழிநடத்தும் சக்தியாக நம் தமிழர்நாடு இருந்திருக்கும்!

 ஆனால் இது எல்லாமே மண் கோட்டை போல இடிந்துவிழுந்தது!
காரணம் வடுக சதி, அதன் நீட்சியான வந்தேறிகள், அதன் மையமான கருணாநிதி குடும்பம்!
 கருணாநிதி என்கிற கொடூர நரி வரலாற்று சுழற்சியையே நிறுத்தி விட்டான் என்றால் அது மிகையில்லை. 
 தமிழக முதலமைச்சர் பதவியை கைப்பற்றாமல் விட்டதன் விளைவு இன்று எல்லாவற்றையும் இழந்து ஈழம் அழிந்து, மக்கட்தொகை குறைந்து, தொடர்ந்து சுரண்டப்பட்டு, மண்வளங்கள் கொள்ளை போய், வாழ வக்கில்லாமல்,  தண்ணீருக்கு பிச்சை எடுத்து கண்டவனிடம் உதை வாங்கும் நிலையில் நிற்கிறோம்.

 ஆயுதம் ஏந்திய அத்தனை பேரும் கொல்லப்பட்டு தமிழுக்காக தமிழருக்காக உழைத்தவர்கள் நாதியில்லாமல் நல்ல சாவு கூட வாய்க்காமல் அழிந்து அடையாளமின்றி போய்விட்டார்கள்.

 கால சுழற்சி படி நாம் வல்லரசாக இருந்து கடலில் இறங்கி குமரிக் கண்டத்தை மீட்டு உலக கடற்கரை நகரங்கள் நமதே என்று நிறுவி இருந்திருக்க வேண்டும்.

 எதுவுமே நடக்காமல் போய்விட்டது!
இன்று தமிழினம் மிகவும் பரிதாப நிலையில் தற்கொலை செய்யப்போகும் ஒருவன் போல சோர்ந்து நிற்கிறது.

 அருண் மொழி ராஜராஜ சோழனும் சடையவர்மன் சுந்தர பாண்டியனும் அமர்ந்த அரியணையில் இன்று அவர்களின் கால்தூசு தேறாத அந்நியரெல்லாம் அமர்ந்துள்ளது மிகவும் வேதனை!

 இந்த இனத்தைப் பார்க்கையில் விரக்தியாகவும் இதன் வரலாற்றைப் படிக்கும் போது நம்பிக்கையும் ஏற்படுகிறது!
 இன்று தமிழர்களாக இருப்போர் அன்றைய மானத் தமிழர்களை சத்தமில்லாமல் இரவோடு இரவாக கொன்று புதைத்துவிட்டு அவர்களைப் போல வேடமிட்டு தமிழர்களாகிவிட்ட வந்தேறிகளோ என்று ஐயம் கூட வருகிறது.

 இருந்தாலும் எனக்கு நூறாண்டுகள் கழித்து ஒரு தகப்பன் தன் மகனுக்கு நம் இனம் இவ்வளவு இழிநிலையில் இருந்தோம் என்று கூறினால் அவன் அதை நம்பாமல் நகைப்பான் என்று ஏன் தோன்றுகிறது?!

06.10.2023 அன்றைய பதிவு மெருகேற்றி 

Sunday, 29 September 2024

மைன்ட் வாய்ஸ் 2

மைன்ட் வாய்ஸ்

"டேய் பஞ்சப் பரதேசி நாய்களா?! 
உங்களால எங்கள என்னடா பண்ண முடியும்?
மிஞ்சி போனா 2026ல ஓட்டு போட மாட்டீங்க! 
அவ்ளதானே?! 
மூணு தலமுறையா கொள்ளயடிச்சு நூறு தலமுறைக்கு சொத்துபத்து சேத்துட்டோம்! 
மாவட்டம், வட்டம் னு நிர்வாகிகள் புள்ளைக கூட அமெரிக்கா, ஐரோப்பானு செட்டில் ஆயிட்டானுக!
 எங்க கட்சி அடிமைகள் கூட இப்ப மணல், புகையிலை கடத்தி கோடீஸ்வரன் ஆயிட்டானுக!
கவுன்சிலர்கள் கார் வாங்கிட்டானுக!
 இந்த 4 வருசத்துல ல மாநில அரசு 7லட்சங்கோடி கடன்!
வீட்டுக்கு ஒரு லட்சம் புடுங்கிருக்கோம்!
 எல்லா பணமும் எங்க கிட்டதான் பத்திரமா இருக்கு!
 ஒரு கோடி திமுகக்காரன்னா அவனவன் பங்கு எல்லாரும் சரியா பங்கு போய்டுது!
 அங்க நிக்கிது திமுக!
இல்லனா இவ்வளவு கெட்ட பேரு வாங்கியும் தொடர்ந்து ஜெயிக்க முடியுமா?!
 திமுக ஜெயிக்க உருப்படியா ஒரு காரணம் சொல்லுங்க பாப்போம்!
அது என்னனு நா சொல்லவா கட்டிங் விசயத்துல கரெக்டா இருக்கும்!
தெருவுக்கு ஒருத்தன் எங்க ஆளு!
 உலகத்துலயே பெரிய மாபியாடா நாங்க!
 மிஞ்சி போனா என்னடா ஆகும்?!
 அடுத்த தேர்தல்ல ஆட்சி இருக்காது அவ்ளதானே?!பரவால்லடா பத்து வருசம் ரெஸ்ட் எடுத்துட்டு தெம்பா வருவோம்!
 அப்ப பிச்ச காச விட்டெறிஞ்சா நாய் மாதிரி வந்து ஓட்டு போடப் போறீங்க! 
இதுதானே வழக்கமா நடக்கும்! 
 எங்களுக்காக ஒழைச்சு சாவுறதுதான் பொதுமக்களுக்கு தலையெழுத்து!
 அதுக்கு தானடா உங்க ஆத்தா ஒங்கள பெத்து போட்ருக்கா!
என்னடா ரோசம் வருதா?!
 வரட்டும்! 
இப்படித்தான் எல்லாத்தயும் உருவுன பிறகு எங்க தாத்தன பாத்து உங்க தாத்தன் கோப பட்டான்! 
எங்க அப்பன பாத்து உங்க அப்பன் கோவப் பட்டான்!
 என்னத்த கிழிச்சிட்டீங்க?!
 இனிமே நீங்க ஓட்டுப் போடலன்னாலும் போங்கடா!
மயிர் போச்சுனு போய்ட்டே இருப்போம்!
 எங்கள எவனும் ஒண்ணும் புடுங்க முடியாது!
 இந்த ஆட்சில பத்து மடங்கு டார்கெட் வச்சு முக்கால்வாசி முடிச்சிட்டோம்! 
 தேர்தலுக்குள்ள உங்க கோமணத்த கூட உறுவீருவோம்! 
அப்பறம் தலைமை, மாவட்டம், வட்டம் வர வெளிநாட்டுல செட்டில் ஆகிடுவோம் சோமாலியா தலைவர்கள் மாதிரி!
 நீங்க சோமாலியா மக்கள் மாதிரி கைல நோஞ்சான் குழந்தைய வச்சிகிட்டு பிச்ச எடுக்கத்தான் போறீங்க!
 என் மகன் மட்டுமில்ல அவனோட கொள்ளுப் பேரன் அவனோட எள்ளுப் பேரன் வரைக்கும் பைவ் ஸ்டார் ஓட்டல்ல கண்ணாடி கிளாஸ்ல சரக்கோட பாரின் பிகர குனியவச்சுகிட்டு போட்டோ போடுவான்!
 வாய்ல வயித்துல அடிச்சிகிட்டு மீம்ஸ் போட்டு கமென்ட்ல கலாய்ச்சுட்டு கம்முனு படுங்கடா!
ஓவர் கோவம் ஒடம்புக்கு ஆகாது எளிய மக்களே! 
விடிஞ்சா பொழப்ப பாக்க போகணும்ல?! 
பசிக்கும்ல?! புள்ள குட்டியோட கஞ்சிக்கில்லாம சாவ போறீங்களா?!
இளைஞர்களே!  வேணாம்டா! திமுகவை பகைக்காதீங்கடா!
 காலைல 10 மணி ஆனா கை நடுங்கும்ல?!
நாங்க இல்லனா சரக்கு கிடைக்காது பாத்துக்கோங்க!
என்ன பெருசா பண்ணிட்டோம்?!
 வீட்டுக்கு ஒரு குடிகாரன உருவாக்கி வச்சிருக்கோம் னு தானே குதிக்கிறீங்க?!
 அவன்லாம் அந்த குடும்ப ஒட்ட உறிஞ்ச நாங்க போட்டுவச்சிருக்குற ஸ்ட்ரா!
 பேசாம பல்ல கடிச்சிக்கிட்டு சகிச்சுகிட்டு இருக்கணும்!
ஒங்க அக்கா, தங்கச்சி மானத்துல கைவைக்காம இருக்கோமே அதுவர சந்தோசப்படுங்கடா!
நாங்க நெனைச்சா தெருவுல ஒருத்தி மானத்தோட நடமாட முடியாது!
இங்க எங்கள அடக்குற அளவு எந்த இயக்கமும், கட்சியும், அமைப்பும் கிடையாது!
நாங்கள்லாம் மலைய முழுங்குற ராட்சசங்கடா! 
எங்களுக்கு பணத்தை தவிர இனம், மதம், மொழி, பாலினம், ஊர், அடையாளம் எதுவும் கிடையாது!
 கொள்ளையடிக்கிறத தவிர அன்பு, பாசம், மனிதநேயம்னு எந்த உணர்ச்சியும் கிடையாது!
நீங்க நினைக்குற மாதிரி திமுக சாதாரண கட்சி இல்ல திமுக ன்றது ஒரு சிஸ்டம்!
கார்ப்பரேட் கம்பனிகள விட படுபயங்கரமான சிஸ்டம்!
ஆக்டோபஸ் மாதிரி ஆயிரம் விஷக் கைகளோட அசைஞ்சிட்டே இருக்கும்!
வெட்ட வெட்ட முளைக்கும்!
ஒழுங்கா பணிஞ்சி போங்க மக்களே!?
எங்கள நிம்மதியா கொள்ளையடிக்க விடுங்க!
இல்ல எங்களோட சேந்து நல்லா பொழைக்கப் பாருங்க!
உங்களுக்கு வேற வழியே இல்ல! 
எங்களோட மோதி உங்களால ஜெயிக்க முடியுமா?!
ரொம்ப கத்துனீங்கனா நெத்தில  பொட்டு வச்சிருவோம்!
 தோட்டாப் பொட்டு!
பொட்டலமா வீட்டுக்கு போக ஆசைப் படாதீங்கடா!
இன்னும் உங்கட்ட கரக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு!
(09.12.2013 அன்றைய பதிவு மெருகேற்றி)

Saturday, 28 September 2024

மூவேந்தர் மற்றும் பாரி மோதல் பற்றி

 மூவேந்தர் மற்றும் பாரி மோதல் பற்றி

 மூவேந்தர் தமக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டு தண்ணீரை எல்லையாகக் கொண்ட தமிழகத்தை ஆண்டதை "வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு"  என்கிறது தொல்காப்பியம்.
 இது இலங்கை சேர்ந்த, மூன்று பக்கம் கடல் மற்றும் வடக்கே கரும்பெண்ணாறு (கிருஷ்ணா நதி) கொண்ட நிலமாக இருக்கலாம்.

 உலகிலேயே முதலில் மொழியின் பெயரால் இனத்தையும் நாட்டையும் குறித்தவர் தமிழரே! முதன்முதலாக மொழியின் பெயரால் அரசியல் கூட்டணி அமைத்தவரும் தமிழரே! 
 வரலாற்றுப்படி 1900 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது  கிபி ஒன்றாம் நூற்றாண்டில் இந்திய துணைக்கண்டமே மௌரிய பேரரசின் கீழ் வருகிறது. தமிழகம் மட்டுமே எஞ்சி நிற்கிறது. 
அப்போது கரிகாலனின் தந்தை இளஞ்சேட்சென்னி தலைமையில் மூவேந்தர் கூட்டணி இருக்கிறது.
 இதன் பெயர் "தமிழ் கூட்டணி" இதையே '1300 ஆண்டுகள் தொடர்ந்த தமிழர் கூட்டணி (தமிர் சங்காந்த்)' என்று காரவேலன் கல்வெட்டு கூறுகிறது. 
 முழு பலத்துடன் தமிழகத்தைத் தாக்கிய (அன்றைய இந்தியாவான) மௌரியப் பேரரசை தோற்கடித்து தமிழகத்தைக் காக்கிறது இக்கூட்டணிப் படை.
 இதில் மௌரியர் (மோரியர்) சார்பாக முதலில் வந்தது வடுகர் படை. முதல் போர் மோகூர் போர். இதில் மூவேந்தர் சார்பாக கோசர் படை வடுகரை தோற்கடித்து (அகநானூறு 251) மோகூரை மீட்கிறது.
 (அதாவது கோசரை வடுகர் என்பதும் தவறான கருத்து).

 அதாவது anglo saxon, wales, irish, scotish என நான்கு இனத்தார் சேர்ந்து உருவாக்கிய இந்த உலகையே ஆண்ட பிரிட்டிஷ் கூட்டணி போன்றது இது.
 அதன் union jack கொடி போல வில், புலி, மீன் பொறித்த கொடியும் இந்த கூட்டணிக்கு உண்டு.

இந்த மூவேந்தர் கொடியை முத்திரையாக இராஜேந்திர சோழனும் பிறகு சுந்தர பாண்டியனும் பயன்படுத்தி யுள்ளனர்.

 இந்த கூட்டணி தற்போதைய பித்துண்டா அதாவது பாதி ஆந்திரா தாண்டி ஆண்டது.
 இதுவே மாமூலனார் கூறும் 'தமிழ்கெழு மூவர் காக்கும் மொழிபெயர் தேயம்' ஆகும்.

 அவ்வப்போது தமிழகத்தில் இருந்த சில சிற்றரசர்கள் இந்த கூட்டணிக்கு ஒத்துழைக்க மறுத்து கிளர்ச்சி செய்துள்ளனர். 
 ஒப்பந்தப்படி தமிழ்மண்ணில் உள்ள சிற்றரசர்கள் இந்த கூட்டணிக்கு பணிந்து நடக்காத பட்சத்தில் கூட்டணி அவர்கள் மீது படையெடுத்துள்ளது.

 இதில் பாரி கொஞ்சம் பெரிய சிற்றரசர்.
 கரிகாலன் காலத்திற்கு சற்று பிந்தையவர்.
 இவர் அக்கூட்டணிக்கு பணிந்து பின்னர் ஏதோ காரணத்தினால் கிளர்ச்சி செய்ய முடிவெடுத்து அதனால் மூவேந்தர் கூட்டணிப் படை அவர் மீது படையெடுத்து வெல்கிறது. அவருக்கு ஆண் வாரிசு இல்லாததாலும் அவரது மகள்கள் மூவேந்தரை மணமுடிக்க விரும்பாததாலும் அவரது அரசு நிலைக்கவில்லை.

 பதிற்றுப் பத்து (6.1 பலாஅம் பழுத்த..) இல் பாரி இறப்பிற்கு பின் சேரனைக் காணச் சென்ற கபிலர் அவனையும் பாரியையும் ஒப்பிட்டு ஒரு பாடல் பாடியுள்ளார். இதில் சேரனை அவர் குற்றம் சாட்டவில்லை.
 பாரி மகளிரை மணக்க சிற்றரசர்களான விச்சிக்கோன், இருங்கோவேள் ஆகியோரும் மறுத்துவிட்டனர். 
இது மூவேந்தர் மீதான பயத்தால் அல்ல. 
அது எப்படி என்று பார்ப்போமேயானால்,
 பாரிமகளிரை இறுதியில் மலையன் எனும் குறுநில மன்னன் மணந்துகொண்டான். 
 ஆனால் மலையன் மீது மூவேந்தர் படையெடுக்கவில்லை.
 மாறாக,  பாரி மகளிரை மணக்க மறுத்த விச்சிக்கோ மூவேந்தரோடு மோதியிருக்கிறான் (குறுந்தொகை 328) இருங்கோவேளும் சோழனுடன் மோதி தோற்றான் (பட்டினப்பாலை 282).
 இன்னொரு வியப்பு இந்த பாரி மகளிரை மணந்த மலையமான்கள் வழிவந்த தாய்க்குப் பிறந்தவனே இராசராசன். இதற்கு பத்தாம் நூற்றாண்டு கபிலர் குன்று கல்வெட்டு சான்றும் திருக்கோவிலூர் வீரட்டானேசுவரர் கோயில் கல்வெட்டு சான்றும் உள்ளன.

 ஆக மூவேந்தர் பாரி மீது படையெடுத்தது தமிழகத்தை ஒற்றையாட்சியில் வைத்திருக்க வேண்டும் என்கிற அரசியல் நிலைப்பாடு காரணமாகத்தானே அன்றி வேறு தனிப்பட்ட விரோதம் அல்ல. 
 மூவேந்தர்கள் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டாலும் வெளியிலிருந்து தமிழகத்திற்கு ஆபத்து வந்தால் அப்போது தமிழர்களாக ஒன்றுபட ஏற்படுத்தியதே 'தமிழ்க் கூட்டணி' என்று கருதலாம்.
 இதில் ஆங்காங்கே சிற்றரசர்கள் தனியரசு செலுத்திக் கொண்டிருந்தால் தமிழகத்தின் பாதுகாப்பு பாதிக்கும் என்பதாக அந்த கூட்டணி இத்தகைய படையெடுப்புகளை செய்திருக்கும் என்றும் கூறலாம். 

 வேள்பாரி நாவல் எழுதிய சு.வெங்கடேசன் நாயுடு மீதான விமர்சனப் பதிவின் ஒரு பகுதி... மெருகேற்றபட்டு மீண்டும்.

Thursday, 19 September 2024

வெட்டி முண்டம்

வெட்டி முண்டம்

 இது மதுவிலக்கு பற்றிய சிறுகதை! 
குடிகார கபோதிகள் கட்டாயம் படிக்கவும்!
 இதோ நல்ல வெயில் காலத்தில் திங்கட்கிழமை மதியம் வயிறு முட்ட தின்றுவிட்டு நடு வீட்டில் செங்கல் தரையில்  தலையணை வைத்துக்கொண்டு  காற்றாடியை முழு வேகத்தில் வைத்துக் கொண்டு இடுப்பில் இருந்த லுங்கிக் கட்டை அவிழ்த்து மார்பு வரை மூடி  இணையத்தில் தரவிறக்கம் செய்த புதிய ஒரு திரைப்படத்தை அதை சுவற்றில் மாட்டி இருக்கும் டிவியில் போட்டு ஜன்னல்களையும் கதவுகளையும் அடைத்து விட்டு அந்த படத்தைப் பார்த்துக்கொண்டிக்கும் போதே தூங்கி கிடக்கும் இவர்தான் இந்த கதையின் நாயகர். 
 இவர் என்றா சொன்னேன் மன்னிக்கவும் இவன்.
 இவன் ஒரு வெட்டி முண்டம்.
 இவனுடைய அன்றாட வேலை காலையில் 9 மணிக்கு மிக நிதானமாக எழுந்து நிதானமாக காலை கடன்களை முடித்துவிட்டு நல்ல உடைகளை உடுத்திக் கொள்வான். குழந்தைக்கும் இவனுக்கும்  அவனது மனைவி எதாவது ஒரு பழத்தை மிக்சியில் நாட்டு சக்கரையுடன் அரைத்து கூழ் போல கொடுப்பாள். அதைக் குடித்துவிட்டு பனிரெண்டாயிரம் ரூபாய் செல்போன் (அதில் 5ஜி இன்டர்நெட்) பணம் நிரம்பி வழியும் பர்ஸ், ஆயிரம் ரூபாய் ப்ளூடூத் நெக் பேன்ட், கர்சீப் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு எப்போதுமே முழு டேங்க் பெட்ரோல் இருக்கும் பைக்கை வெளியே இறக்கி குழந்தையை ஏற்றிக்கொண்டு பள்ளியில் கொண்டு விட செல்வான். சாலை வழியே போகாமல் தெரு வழியே சுற்றி போவான். அப்போது குழந்தையுடன் பேசிக்கொண்டே போவான்.
குழந்தையை பள்ளியில் இறக்கி டாட்டா காட்டிவிட்டு நல்ல தேநீர் கடைக்குப் போய் ஒரு தேநீரை வாங்கி அமர்ந்துகொண்டு நிதானமாக ரொம்ப நிதானமாக குடிப்பான். வாட்சப்பில் பத்து  ஸ்டேடஸ் போடுவான். ஒரு பருப்பு வடை அல்லது பஜ்ஜி வாங்கிக்கொள்வான்.
 அருகிலிருக்கும் பெட்டிக் கடையில் வேர்க்கடலையோ, பிஸ்கட்டோ வாங்கிக்கொள்வான்! வெயில் காலம் என்றால் குளிர்பானம் ஒன்று வாங்குவான். வீட்டிற்கு வந்து பழைய சோற்றை மோரில் பிசைந்து இரண்டு வகை ஊறுகாய் வைத்து வீட்டில் செய்த வத்தல் மற்றும் வாங்கிவந்த வடையுடன் மிக நிதானமாக டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடுவான். இப்போது நேரம் பதினோரு மணி ஆயிருக்கும். பிறகு கடையில் போய் அமர்வான்.
இவன் வீட்டிற்கு முன்பக்கமே கடை வைத்திருக்கிறார்கள். இவனுடைய அம்மாவும் மனைவியும் கடையை நடத்தி வந்தார்கள். அந்த கடைக்கு பொருட்கள் வாங்கி வருவது அந்த இருவரும் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் நேரத்தில் கடையில் போய் அமர்வதை தவிர இவனுக்கு வேறு எந்த வேலையும் இல்லை. இதுவும் இவன் மாமனார் புண்ணியம். ஓரளவு வசதியான சமூகத்தில் ஆனால் தின்றுகெட்ட குடும்பத்தில் பிறந்தவன் இவன்!
  இவன் இருக்கும் நேரத்தில் வெயில் ஏறியிருக்கும் கடைக்கு ஆட்கள் வருவதும் குறைவாக இருக்கும்!
செல்போனை நோண்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பான். சமூக வலைகளில் புரட்சிகரமாக எதையாவது எழுதி பத்து லைக் வாங்க முயற்சி செய்வான். அது எப்போதும் நடந்ததில்லை.
 சிறிது நேரம் கழித்து தேநீர் போடச் சொல்லி அதையும் வாங்கி குடிப்பான்.
வெயில் நன்றாக உச்சிக்கு வந்து இறங்கும்போது 3 மணிக்கு மதிய சாப்பாடு சாப்பிடுவான். நல்ல அரிசிச் சோறு, வீட்டில் அரைத்த மசாலாவில் குழம்பு அதில் நிறைய காய்கறிகள், கடலை எண்ணெயில் கூட்டு, ஆம்லேட், கட்டி மோர், வீட்டு வத்தல், இரண்டு சுவையில் குரு ஊறுகாய், சின்ன அப்பளம் இரண்டு என்று அரைமணி நேரம் நிதானமாக சாப்பிடுவான். வடக்கே நல்ல வேலை கிடைத்து அங்கே போய் கைநிறைய சம்பாதித்து பை நிறைய பணத்துடன் அரிசிச் சோற்றுக்கு சிங்கி அடித்த  அனுபவம் உள்ளதால் சோற்றின் அருமை அதுவும் வீட்டுச் சமையலின் அருமை அவனுக்குத் தெரியும். "சாப்பாட்டுக்கு செலவு பண்ணலைனா நோய்க்கு செலவு பண்ண வேண்டி இருக்கும்" என்பது இவன் அப்பாவின் வேதவாக்கு.
 இவன் அப்பாவை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
இவன் ஒட்டுண்ணி என்றால் இவன் அப்பன் ஒரு பொணந்தின்னி. அதாவது தட்டில் ஒரு உயிரினம் செத்துகிடக்காவிட்டால் அவனுக்கு தொண்டையில் கடப்பாரை வைத்து இடித்தாலும் சோறு இறங்காது.
எதுவும் இல்லையென்றாலும் பத்துரூபாய் பாக்கெட் கருவாடை வாங்கி தோசைக்கல்லில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி பொறித்து கொடுக்கவேண்டும் அல்லது ஐந்து ரூபாய் முட்டையையாவது ஆப்பாயில் போட்டு வைக்கவேண்டும். தட்டு சுத்த சைவமாக இருந்தால் அவனுக்கு அவனுடைய  நாயைப் போலவே கோபம் வந்துவிடும். உடனே அந்த நாயைப்போலவே தட்டை தள்ளிவிட்டு நடுவீதியில் நின்று கத்துவான். குடிகாரனாக இருந்தாலும் கட்டிய மனைவி அவனை சகித்துக் கொண்டாள். காரணம் அவன் அப்பன் கடைசி வரை வேறு எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்ததில்லை. இல்லையென்றால் என்றோ பாயாசத்தைப் போட்டிருப்பபாள். சரி! அவனது அப்பன் தின்று கெட்ட கதையை பிறகு பேசுவோம்! இப்போது கதையை விட்ட இடத்திற்கு வருவோம்! 
 நம் வெட்டி முண்டம் சாப்பிட்டுவிட்டு குழந்தையை அழைத்துவர போவான். மீண்டும் தெருவழியே சுற்றிக்கொண்டு குழந்தையுடன் பேசிக்கொண்டே வரும் வழியில் பேக்கரியில் நிறுத்தி சாக்லேட்டோ அல்லது சிறிய விளையாட்டு பொருட்களோ வாங்கிக்கொடுப்பான்.
அப்படியே அவனும் தேநீர் குடிப்பான் அல்லது குளிர்பானம் குடிப்பான்.
 வீட்டிற்கு வந்ததும் கை கால் கழுவி லுங்கியை மாற்றிக்கொண்டு மெத்தையில் பல தலையணைகளை அடுக்கி ஒரு டேபிள் பேன், ஒரு சீலிங் பேன், ஒரு கூலர் என்று காற்றோட்டமாக  குழந்தையுடன் ஆனந்தமாக தூங்குவான்.
 அல்லது குழந்தைகளுக்கான படங்களை இணையத்தில் எடுத்து டிவியில் ஓடவிட்டு குழந்தை பார்க்க அவன் அருகிலேயே படுத்து தூங்கிவிடுவான்.
 மாலை 6 மணிக்கு தேநீர் போட்டுவிட்டு அவன் மனைவி எழுப்புவாள். எழுந்து கை,கால், முகத்தைக் கழுவிக்கொண்டு சூடான தேநீருக்குள் முறுக்கை உடைத்துப் போட்டு ஸ்பூனால் எடுத்து தின்றுகொண்டே மூவரும் குடிப்பார்கள். முறுக்கு தீர்ந்துவிட்டால் பிஸ்கெட் அல்லது குக்கரில் சூடான பாப்கான் செய்துகொள்வார்கள்.
 பிறகு வண்டியை எடுத்துக்கொண்டு இவனது நண்பனின் மெடிக்கல்  கடைக்கு போவான். இவன் ஒரு வெட்டி முண்டம் என்றால் இவனது நண்பன் ஒரு வீணாப்போன தெண்டம். இருவரும் அங்கே அமர்ந்து இந்த உலகத்தை எப்படி திருத்துவது என்று விவாதிப்பார்கள். அப்படியே அங்கே அருகில் ஒரு கடை இருக்கிறது. இங்கே வாழைத்தண்டு சூப், முருங்கை கீரை  சூப், உளுந்தங்கஞ்சி, பருத்திப்பால், சுண்டல், களி என்று இயற்கையாக எதையாவது உள்ளே தள்ளிக்கொண்டே பேசுவார்கள். நீள்வட்டத்தின் இரு மையங்கள் போன்ற இவர்களைச் சுற்றி ஒரு நட்பு வட்டம் இருந்தது.
 அவர்கள் ஒன்றிணைந்து தள்ளுவண்டியில் சூடாக தோலுடன் வேர்க்கடலை வாங்கி தின்பார்கள். இப்போது அங்கே உலக பிரச்சனைகளுக்கு நூறு சதவீதம் சரியான தீர்வுகள் காணப்படும். 
 கொஞ்சம் இருட்டிய பிறகு தேநீர் கடை சென்று சூடான பக்கோடா தின்றுகொண்டு தேநீர் குடிப்பார்கள். இது எல்லாவற்றுக்கும் இவன்தான் செலவு செய்வான். பிறகு ஏடிஎம் இல் பணம் எடுத்துக்கொண்டு பெரிய கடைகளில் கடைக்கு தேவையான பொருட்களை வாங்கிகொண்டு பண்ணையில் பால் வாங்கிக்கொண்டு தின்ன இரண்டொரு பழங்கள் வாங்கிக்கொண்டு 8மணி வாக்கில் வீட்டுக்கு வருவான்.
 குழம்பை சுட வைத்து தோசை சுட்டு சட்னியும் வைத்து சாப்பிடுவான். அப்படியே ஒரு ஆப்பாயிலும் உள்ளே தள்ளுவான். பிறகு டிவியைப் போட்டுக்கொண்டு விளம்பர இடைவெளிகளில் செல்போனை நோண்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பான். 
 பத்து மணிக்கு மேல் வண்டியை உள்ளே எடுத்துவிட்டு கதவைப் பூட்டுவான். அனைவரும் படுக்கையில் படுப்பார்கள். மனைவியும் குழத்தையும் தூங்குவார்கள் இவன் படுத்துக்கொண்டே செல்லை நோண்டிக்கொண்டு இருப்பான். பனிரெண்டு மணிக்கு மேல் பாலை குடித்துவிட்டு பழம் சாப்பிடுவான். பிறகு மெல்ல தூங்கிவிடுவான். தூக்கம் வராவிட்டால் மனைவியை எழுப்புவான். அவள் வெளியே எங்கேயாவது கூட்டிப்போ என்பதைத் தவிர வேறு எதுவும் கேட்பதில்லை. 
 இப்படியாக சுகபோகமாக வாழ்ந்துவந்த அவனது வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம் வந்தது. அவனது பெண் குழந்தை ஆளாகிவிட்டது. அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆனால் குடும்ப பெரியவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார்கள். மாமனாரும் மச்சான்களும் எல்லாவற்றையும் சிறப்பாக செய்தார்கள். அவன் மீது அனைவரும் கொஞ்சம் மரியாதை வைத்திருப்பது அவனுக்கு அப்போது தெரிந்தது.
ஒப்புக்கு சப்பாணியாக சுற்றிக்கொண்டு இருந்தான்.   பெரிய திருப்பம் என்று நினைத்தது சிறிய திருப்பம் ஆகிவிட்டதால் அவன் பழையபடி வெட்டி முண்டமாகவே வாழ்க்கையைத் தொடர முடிவெடுத்தான்.  அன்று இரவு அவனது மாமியாரும் மனைவியும் பேசிக்கொண்டனர். அவனது மாமியார் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறவே இல்லை என்று அங்கலாய்த்துக் கொண்டார். தன் கணவனைக் குறைகூறியதும் பொறுக்க முடியாத அவன் மனைவி "என் புருசன் குடிப்பதில்லை! ஒழுங்கா இருக்காரு! இதுக்கு மேல என்ன வேணும்?!" என்று சினந்தாள்.
ஆக இதுதான் அந்த மதுவிலக்கு சிறுகதை! 

Monday, 9 September 2024

தமிழ்நாடு பல்கலைக்கழகம் அமைப்போம்

தமிழ்நாடு பல்கலைக்கழகம் 

13.07.2015 அன்றைய பதிவு

1926ல் 'ஆந்திரப் பல்கலைக்கழகம்' தெலுங்கர்களால் வெற்றிகரமாக அமைக்கப்பட்டது.

தெலுங்கு மாணவர்கள் தமக்கென்று தனியாக 'ஆந்திரப் பல்கலைக் கழகம்' அமைந்துவிட்டபோதும் சென்னை பல்கலையிலும் இடம்பிடிப்பது தொடர்கிறது.

இதன்பிறகு மலையாளிகள் திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தை 'கேரளா பல்கலைக் கழகம்' ஆக்கிக்கொண்டனர்.

கன்னடர்களும் தார்வார் பல்கலைக் கழகத்தை 'கர்நாடகப் பல்கலைக்கழகம்' ஆக்கிக்கொண்டனர்.

இவர்களைப் போலவே குஜராத், மகாராஷ்ட்டிரா,ஒரிசா, காஷ்மீர், பீகார், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய இனவாரி-மாநில-தலைமை பல்கலைக் கழகங்கள் தோன்றின.

இவைகளில் அம்மாநில மொழிக்கும் அம்மாநிலத்து மாணவருக்குமே முதல் உரிமை.

தமிழகம் மட்டும் 'தமிழ்நாடு பல்கலைக்கழகம்' இன்றுவரை அமைக்கவில்லை.

தமிழரான சுப்பராயன் ஆட்சியில் 1929ல் தமிழகத்திற்கு தனியாக ஒரு பல்கலைக்கழகம் அமைக்க குழு ஒன்று அமைக்கப்பட்டபோது 'அண்ணாமலைப் பல்கலைக்கழகம்' நிறுவினால் போதும் என்று அக்குழு பரிந்துரைத்தது. அக்குழுவினர் ஜஸ்டிஸ் கட்சி உறுப்பினர்கள்.

(இதுவரை ம.பொ.சி அவர்களது நூலில் உள்ள தகவல்கள்)

 இன்றுவரை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஒரு பொதுசத்திரம் போன்றது. அங்கே தமிழுக்கு முதலிடம் கிடையாது.

இதேபோலத்தான் தந்தை செல்வா 1956ல் 'திரிகோணமலைப் பல்கலைக்கழகம்' கேட்டார். இன்றுவரை அது கிடைக்கவில்லை.

சிறிலங்காவின் மொத்தம் 15 பல்கலைக்கழகங்களில் சிங்கள மாநிலங்களின் பெயர்தாங்கிய பல்கலைக்கழகங்களே அதிகம். ஆனால் மட்டக்களப்பு பல்கலையின் பெயர் 'கிழக்குப் பல்கலைக் கழகம்' அதன் ஒரு வளாகம் திரிகோணமலையில் இயங்குகிறது.
தமிழர்களுக்கு அங்கே இருப்பது 'யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்' மட்டும்தான்.
அதாவது அங்கேயும் ஒரு 'தமிழ்ப் பல்கலைக் கழகத்தை' நம்மால் நிறுவமுடியவில்லை.

தமிழர்களுக்கென்று ஒரு நாடு!
கல்விக்குத் தலைமையிடமாக ஒரு பல்கலைக்கழகம்!
அதில் உலகின் அத்தனை துறைகளையும் தாய்மொழியில் கற்கும் வசதி!
இதை நாம் சாதிக்கவேண்டும்!

---------------------------

மேலும் சில தகவல்கள்,

(பிரிட்டிஷ் ஆண்ட) இந்தியாவின் முதல் பட்டதாரி, சென்னை பல்கலைக்கழகத்தில் 1857ல் இளங்கலை (B.A) பட்டம் பெற்ற சி.வை.தாமோரம் பிள்ளை ஆவார்.

இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஈழத்தமிழர். தமிழ்த் தாத்தாவுடன் துணைநின்று தமிழ்த்தொண்டு ஆற்றியவர்.

1905ல் சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து தமிழை நீக்க வந்தேறிகள் செய்த சதியை பாண்டித்துரைத் தேவர், பூரணலிங்கம் பிள்ளை ஆகியோரின் உதவியுடன் பெருமுயற்சி செய்து தடுத்து நிறுத்தியவர் பார்ப்பனரான சூரியநாராயண சாஸ்திரி அதாவது திரு.பரிதிமாற்கலைஞர்.

Friday, 6 September 2024

பிள்ளையார் தத்துவம்

பிள்ளையார் தத்துவம் 

 இயற்கையின் எல்லா அம்சங்களும் சேர்ந்தது சதுர்த்தி பிள்ளையார்.
 களிமண் மற்றும் நீர் சேர்த்த உருவம் மண்ணும் நீரும் வந்துவிட்டன.
 அதில் அருகம்புல் மாலையிட்டு அரச மரத்தின் அடியில் வைக்கவேண்டும் இங்கே சிறிய பெரிய தாவரங்கள் வந்துவிட்டன.
அரிசி மாவு கோலமிட்டு சாணி பிடித்து அதில் அரளி பூ வைக்கவேண்டும் இங்கே உரமும் பூவும் வந்துவிட்டன.
 மனித உடல் யானைத் தலை எலி வாகனம் என சிறிய நடுத்தர பெரிய உயிர்கள் வந்துவிட்டன (பிள்ளையார் எறும்பு கூட உண்டு).
உடைந்த தந்தம் எழுத்தாணி ஆகி கல்வியின் முக்கியத்துவம் குறிக்கப்பட்டு விட்டது. அதனாலேயே பிள்ளையார் சுழியிட்டு எழுதத் தொடங்குகிறோம்.
 கையில் அரிசி மாவு பருப்பு வெள்ளம் சேர்ந்த கொழுக்கட்டை இதில் உணவும் சுவையும் வந்துவிட்டன 
இந்த உருவத்தை ஆற்றில் கரைக்கிறோம் இது எல்லாமே நீரில் இருந்து பிறந்து நீரிலேயே கரைந்து விட்டன எனவே நீர்நிலை தான் உயிர்நாடி எனும் தத்துவமும் இங்கே உணர்த்தப்பட்டு விட்டது.
 ஏற்கனவே நான் கூறியபடி யானைகளை போரில் பயன்படுத்தி அவை பல ஆயிரக் கணக்கில் இறந்தபோது அதைத் தடுக்க "யானை வாழ்ந்தால் தான் எலி வாழும்" சான்றோர் உருவாக்கிய தத்துவம் நாளடைவில் இப்படி வெறும் வழிபாடு ஆகி நிற்கிறது. 
 காடுகளையும் யானைகளையும் அழிக்கிறோம்!நீர்நிலைகளில் பிள்ளையாருடன் சேர்த்து கழிவுகளையும் கரைக்கிறோம்!
 அப்படியே தலைகீழாக மாற்றிவிட்டோம்! 

Sunday, 1 September 2024

வந்தேறிகள் வெளியேற்றம்

வந்தேறிகள் வெளியேற்றம்

19.04.2017 அன்றைய பதிவு
--------------------------
 சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சி பல தலைமுறைகளாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் வம்சாவளியினரை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்தியது. 
 அதில் பெரும்பான்மையான தமிழர்கள் தங்கள் மொழியை சற்று மறந்துவிட்டாலும் இன அடையாளத்துடனும் சமய மெய்யியல் அடையாளத்துடன் வாழ்வது புரிந்தது.

 எங்கு சென்றாலும் தமிழர் தமிழராகவே இருக்கிறார். அவ்வப்பகுதி பூர்வ குடிகள் தமிழர்களுக்கு பெரிய வாய்ப்புகளை வழங்கியதாகவும் தெரியவில்லை.

 தமிழகத்தில் இந்நிலை தலைகீழாக உள்ளது.
தமிழகத்தில் வந்தேறிகள் தமிழர் போல நடித்து தமிழர்களும் அவர்களுக்கு பெரும் வாய்ப்பு வழங்கி ஆதிக்கத்தின் உச்சத்தில் வந்தேறிகள் இருக்கின்றனர்.

 உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் தாய்நிலம் திரும்ப இந்த வந்தேறிகளை வெளியேற்றுவதும் அவசியம்.

 இந்த சக்தி நமக்கு தனிநாடானால் மட்டுமே வரும்!
 இது பற்றி ஏற்கனவே எழுதிய பதிவு இது!
சிறிய திருத்தங்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.
-------------------------
வந்தேறிகள் வெளியேற்றம் 
19.04.2017 அன்றைய பதிவு

 தமிழர்நாட்டில் பிற இனத்தார் குடியேற்றத்தை சமாளிப்பது எப்படி?
 தமிழர்நாடு அமைந்ததும் (அதாவது தமிழர்நாடு முழுவதும் தமிழரின் இராணுவக்கட்டுப்பாட்டிற்கு வந்த தமிழினத்தலைவர் 'விடுதலைப் பிரகடனம்' செய்ததும்) தமிழரல்லாதாரை முடிந்த அளவு வெளியேற்ற வேண்டும்.

 அவர்கள் எத்தனை நூறாண்டுகள் இங்கு வாழ்ந்திருந்தாலும் சரி.
 அவர்களுக்கு அடிப்படை சாமான்களும் சிறிதளவு பண உதவியும் கொடுத்து அனுப்பிவைக்கவேண்டும்.

அவர்களின் சொத்துகள் அனைத்தும் தமிழர்நாட்டுக்கே சொந்தம்.
 பிறகு உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் வம்சாவழிகளை மீண்டும் அழைத்து வந்து குடியேற்றவேண்டும்.

 அவர்கள் தமிழரா என ஆராய்ந்து அவர்களில் தமிழர்களை மீண்டும் தமிழ் மயமாக்கவேண்டும்.
 நாட்டில் இருக்கும் அனைவரையும் ஆராய்ந்து இவர் இன்ன இனம் என்று சான்றிதழ் கொடுக்கவேண்டும்.

 சாதி, மதம் போன்றவை அந்த சான்றிதழில் குறிப்பிட வேண்டாம்.

 இந்த ஒரு இனச்சான்றே முதன்மை ஆவணம்.

 குடியுரிமையும் அனைவருக்கும் கொடுக்கவேண்டும்.

(இதற்கு பத்தாண்டுகள் வரை எடுத்துக்கொள்ளலாம்)
சிறிய அளவில் வேற்றினத்தாரும் இருக்க வாய்ப்புண்டு.

 அதாவது தமிழர்நாடு அமைய தமிழரோடு போராடிய வேற்றினத்தார் இருந்தால் அவர்களை வெளியேற்ற வேண்டாம்.

 அதாவது நம் போராட்டம் தொடங்கிய காலத்தில் நமக்காகப் போராடியோர் (நாம் வெல்லும் நிலைக்கு வந்ததும் கடைசிநேரத்தில் வந்து ஒட்டிக்கொண்டவர்களாக இருக்ககூடாது) அவர்களைத் தமிழராக ஏற்கமுடியாவிட்டாலும் குடியுரிமை கொடுத்து தமிழர்நாட்டுக் குடிமக்களாக ஏற்கலாம். (ஆனால் இவர்கள் தமிழில் பேசக்கூடாது. தாய்மொழி என்னவோ அதை கற்க வேண்டும். இவர்கள் பிறகு வேறு நாட்டுக்குக் குடிபெயர்ந்தால் வாரிசுகளுக்கு தமிழர்நாட்டு குடியுரிமை கிடைக்காது).
 இனச்சான்று வழங்கப்பட்டதும் தமிழரல்லாதார் தமிழ் பேச தடைவிதிக்க வேண்டும். தமிழ் மொழி தமிழரின் தனிச் சொத்து என்று விதிக்க வேண்டும்.

 தமிழர்கள் தமக்குள் முடிந்த அளவு தூய தமிழிலும் பிறருடன் ஆங்கிலத்திலும் பேசவேண்டும்.
 தமிழர்நாடு அமைந்து 50 ஆண்டுகளுக்குள் உலகத்தமிழர் தமிழரனைவரும் தாய்நிலம் திரும்பவேண்டும்.

 தமிழர்நாட்டுக்கு குடிவர இயலாத தமிழர்கள் அனைவரும் (50 ஆண்டுகளுக்குள்) ஒருமுறை தமிழர்நாட்டுக்கு வந்து தாம் தமிழர் என்பதை நிறுவி சான்று பெற்றுக்கொண்டு செல்லவேண்டும்.
 தமக்குப் பிறக்கும் பிள்ளைகளை முடிந்த அளவு தமிழர்நாட்டில் குடியமர்த்த முயற்சிக்க வேண்டும் 

அல்லது தமிழர்நாட்டுக்கு அழைத்துவந்து குழந்தைக்கு இனச்சான்று பெற்றுச் செல்லவேண்டும். 

 அப்பிள்ளையை முடிந்த அளவு தமிழரையே (அதுவும் முடிந்தவரை தாய்நிலத்தில்) திருமணம் செய்ய ஊக்குவிக்கவேண்டும். 

 50 ஆண்டுகளுக்குப் பிறகு தனக்கென இனச்சான்று இல்லாத எவருக்கும் குடியுரிமை கிடைக்காது.

 தமது பெற்றோருக்கான சான்றைக்காட்டி குடியுரிமை பெற இயலாது.
 தாய்நிலத் தமிழர் பிறநாடுகளில் இனச்சான்று பெற்ற ஒரு தமிழரை திருமணம் செய்ய ஊக்குவிக்கப்பட வேண்டும்.
 50 ஆண்டுகளுக்குப் பிறகு முறையாக கடவுச்சீட்டு, நுழைவுச்சீட்டு (பாஸ்போட், விசா) வாங்கி யார் வேண்டுமானாலும் வரலாம், தங்கியிருக்கலாம், வேலை செய்யலாம். தமிழில் பேச மட்டும் கூடாது.

படிக்கலாம், சுற்றிப்பார்க்கலாம்.
 ஆனால் யாருக்கும் நிரந்தரக் குடியுரிமை கிடையாது.

 வெளிநாட்டார் கடவுச்வசீட்டும் அனுமதியும் பெற்று வரலாம். தங்கியிருக்கலாம். 
ஆனால் சுற்றுலா அனுமதிக் காலம் திரும்ப சென்றுவிடவேண்டும். 

 தமிழர்நாட்டிலேயே நீண்ட நாள் இருந்தாலும் குடியுரிமை அற்றவர்களுக்கு இங்கேயே பிள்ளைகள் பிறந்தாலும் குடியுரிமை கிடைக்காது.
 இப்படியான வெளிநாட்டார் 20% மேல் அதிகமானால் விசா வழங்குவதை சிறிது காலம் நிறுத்திவைக்க வேண்டும்.

தேவையில்லாமல் இங்கிருக்கும் வெளிநாட்டாரை அவ்வப்போது கண்காணித்து வெளியேற்றவேண்டும்.

 தமிழர்கள் தமது தாய்நிலத்தில் 80%க்கு எப்போதும் குறையக்கூடாது.

 வெளியாட்கள் தமிழர்நாட்டில் ஒரு தமிழரைத் திருமணம் செய்தால் அவர்களின் பிள்ளைக்கு பாதித்தமிழர் என்ற இனசான்றிதழும் குடியுரிமையும் கிடைக்கும்.
 அந்த பிள்ளை ஒரு தமிழரையே திருமணம் செய்தால் அதன் பிள்ளைக்கு (முழுத்)தமிழர் என்ற சான்று கிடைக்கும்.

 இல்லாவிட்டால் தமிழரல்லாதார் என்றே கருதப்படுவர். இனச்சான்று கிடைக்காது.
ஆனால் குடியுரிமை கிடைக்கும்.

 தமிழர்களின் மக்கட்தொகை தற்போதைய எண்ணிக்கையை விடக் கூடாதவாறும் குறையாதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
 (அதாவது தாய்நிலத் தமிழர்கள் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ளவேண்டும். 
 மக்கட்தொகை குறைவான நாடுகளில் வாழும் தமிழர்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்)

 தமிழர்நாட்டு குடிமக்கள் வேறுநாட்டுக்கு குடிபெயரும்போது அவர்களிடம் தமிழினச்சான்று இருந்தால் வேற்றுநாட்டில் பிறக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் இனச்சான்று (தமிழர்நாட்டுக்கு அழைத்துவந்து) வாங்கிக்கொள்ளலாம்.

அதைவைத்து பிற்காலத்தில் குடியுரிமையும் கிடைக்கும்.
 தமிழினச்சான்று இல்லாத (அதாவது தமிழரல்லாத) தமிழர்நாட்டு குடிமக்கள்  வேற்றுநாட்டுக்கு குடிபெயர்ந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு தமிழர்நாட்டு குடியுரிமையோ இனச்சான்றோ கிடைக்காது.

 தமிழர்களின் தாய்நிலம் சிறியது.

தமிழர் மக்கட்தொகை சற்று அதிகம்.
 எனவே தமிழர்களுக்கு குடியேற்றத்தில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

 மற்ற மக்களை வெளியேற்ற வேண்டியதும் அவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதில் பல கட்டுப்பாடுகள் விதிப்பதும் இதனாலேயே செய்யவேண்டி உள்ளது.

 இது இனவெறி இல்லை.
 இதற்கு முன்பு போட்ட 'வேற்றினத்தாரைக் குடியமர்த்துதல்' பதிவு தாய்நிலத்தில் தமிழர்களின் மக்கட் செறிவை கருத்தில் கொள்ளாமல் போடப்பட்டது. எனவே அது தவறானது!

 தமிழருக்கே அவர்களின் தாய்நிலம் போதாதபோது வேற்றினத்தாரைக் குடிவைக்க வழியில்லை.
எனவே இப்பதிவு.

பெருந்தமிழர் தமிழரசன்

பெருந்தமிழர் தமிழரசன் 

 ஏசு கொல்லப்பட்ட போது அவர் யாருக்காக குரல் எழுப்பினாரோ அவர்களால் கொல்லப்படவில்லை!
 அரசாங்கத்தால் தான் கொல்லப்பட்டார்.
 இயேசு இறந்த பிறகு அவரது தாய் தனது 100 வயது வரை போராட வரவில்லை! 
 அந்த வகையில் அன்று கொல்லப்பட்ட ஏசுவை விட ஒருபடி உயர்ந்த தியாகம் நம் தமிழரசன் புரிந்த தியாகம்! 
 ஏசுவை உயிர்த்தெழுந்த அதிசயம் போல தமிழரசன் ஆவியும் தமிழர் ஒவ்வொருவரது உடலிலும் உயிர்த்தெழ வேண்டும்! 
 போலியான (ஹிந்திய) கம்யூனிச மாயவலையில் இருந்து வெளியேறி உண்மையான கம்யூனிச (மார்க்ஸ்) வழியில் தமிழருக்கென தனிநாடு அமைக்கப் போராடிய அவரது நினைவைப் போற்றுவோம்!
 கசப்பாக இருந்தாலும் 'பெரியவர் தமிழரசன்' என்ற பெயரில் அன்னாரது உண்மை வரலாற்றை வெளிக்கொணர்ந்த சிவசுப்பிரமணியம் ஐயாவுக்கு நன்றி!