Thursday, 23 February 2023

சக்கிலியர் ஆந்திரா மக்களே

சக்கிலியர் ஆந்திரா மக்களே!

 ஆந்திராவில் இன்றும் 78 லட்சம் பேர் மாதிகா எனும் சாதி இருக்கின்றனர் (இவர்கள் கர்நாடகத்திலும் 10 லட்சம் பேர் உள்ளனர்).
இவர்களே விஜயநகர காலத்தில் தமிழகத்தில் குடிவைக்கப்பட்டு சக்கிலியர் என்றும் மாதாரி என்றும் பெயரை மாற்றிக்கொண்டனர்.
 தற்போது தமிழ்நாட்டில் சக்கிலியர் எனும் சாதியார் 10 லட்சம் பேர் இருக்கின்றனர். மாதிகா என்போர் 3 லட்சம் பேர் வரை உள்ளனர். 

 சக்கிலியர்களின் பிரதான தொழில் தோல்பொருட்கள் தயாரிப்பது. தூய்மைப் பணி அல்ல. மலம் அள்ளும் நடைமுறை ஆங்கிலேயர் காலத்தில் தான் வந்தது. அதையும் தோட்டி என்கிற மிக சிறுபான்மையான சாதியினரே செய்துள்ளனர்.
 அருந்ததியர் என்றாலே மலம் அள்ளுபவர் என்கிற கருத்து மிகவும் தவறானது ( இன்றைய நிலையில் நகராட்சி தூய்மைப் பணிகளில் BC, MBC, SC, ST என அனைவருமே இருக்கின்றனர்).

 தமிழ்ப் பாரம்பரியத்தில் இலக்கியத்திலும் கல்வெட்டிலும் சக்கிலியர்கள் பற்றி எந்த குறிப்பும் இல்லை! 
 விஜய நகர குறிப்புகள் ஆங்கிலேயர் குறிப்புகள் படி சக்கிலியர்கள் மாதிகா சாதியினர் ஆவர்.
 இவர்களின் குல தெய்வம் மதுரை வீரன் உள்ளிட்ட பிற்காலத்து மனிதர்கள்.

மாதிகா என்பதை மாதியர் என்றாக்கி மாஅதியர் என்றாக்கி அதியமான் பரம்பரை என்பதெல்லாம் தமிழை திராவிடம் என்றாக்கியது போல ஒரு எழுத்தை பிடித்து சொல்லையே திரிக்கும் திரிபு வேலை.

 இன்றளவும் வீட்டிற்குள் தெலுங்கு பேசுகின்ற இவர்கள் தங்களைத் தமிழர்கள் என்றும் தங்கள் சாதி தமிழகத்தைத் தவிர தாங்கள் எங்குமில்லை என்றும் கூறி ஏமாற்றி வருகின்றனர் (பறையர்களின் சில பழக்க வழக்கங்களை இவர்கள் கைக்கொண்டுள்ளனர்).

1. ஆதி ஆந்திரர் (எண் 1)
2. அருந்ததியர் (எண் 5)
3. சக்கிலியர் (எண் 12)
4. மாதாரி (எண் 37)
5. மாதிகா (எண் 38)
6. பகடை (எண் 48)
7. தோட்டி (எண் 67)
 போன்ற ஏழு தெலுங்கு சாதிகளை சேர்த்துக் கொண்டு அருந்ததியர் என்று பொதுப்பெயர் மாற்றி அரசியல் செய்து எந்த பெரிய போராட்டமும் செய்யாமல் கருணாநிதி இனப்பாசத்தால் ல் 3% உள் இடவொதுக்கீடு வாங்கியுள்ளனர்.
இது பிற பட்டியல் சாதியினருக்கு இழைத்த பெரும் அநீதி (அப்படியே கொடுத்தாலும் இவர்கள் மக்கட்தொகைப் படி 2% தான் கொடுத்திருக்க வேண்டும்).

 இவர்கள் குடியேற்றத்தால் பாதிப்படைந்தோர் அதற்கு முன் தோல்பொருட்கள் செய்துவந்த பறையர்களே!

 இதனாலேயே இவர்களுக்குள் இன்றுவரை மோதல் நடக்கிறது. பறையர்கள் வலுவாக உள்ள இடத்தில் இவர்களால் காலூன்ற முடியவில்லை ( தற்போது வடவர் குடியேற்றத்தால் வேலையிழந்த தமிழர்களின் கதைதான்!).
 
 பிற ஆதிக்கத் தெலுங்கர்கள் கொங்கு மண்டலத்தில் கவுண்டர்களுக்கு எதிராக இவர்களைப் பயன்படுத்துகின்றனர். ஆதி முதல் இன்று வரை இவர்களைத் தாழ்வாக நடத்துவது சக தெலுங்கரே! மலம் அள்ள வைத்தது ஆங்கிலேயர்கள்! ஆனால் இவர்கள் கோபம் என்னவோ பறையர், கவுண்டர் போன்ற தமிழ்ச் சாதிகள் மீதுதான்.

 தமிழகத்தில் தெலுங்கர் தமது உண்மை அடையாளத்தை மறைத்துக்கொண்டு தமிழ்தேசியத்திற்கு எதிராக செயல்படுவது அனைத்து மட்டங்களிலும் தொடர்ந்து வருகிறது.
 அருந்ததிய இயக்கங்களின் தலைவர்கள் உண்மையான பெயரை மறைத்துக் கொண்டு போலியான தமிழ்ப் பெயரை வைத்துக் கொண்டு தலித்தியம் என்கிற பெயரில் தமிழ்ச் சாதிகளை உசுப்பேற்றும் வேலையைச் செய்துவருகின்றனர்.

 ஏறத்தாழ ஒரு கோடி பேர் இருக்கும் மாதிகா வகையறா தமிழ்தேசியம் கவனத்துடன் இருக்க வேண்டிய எதிர் சக்தி! 

Monday, 20 February 2023

விடுதலையன்றோ அறம்

விடுதலையன்றோ அறம்
------------------------------------

தமிழ் தோன்றியது 
நேற்றே என்க....

தமிழன் இவ்வுலகில் 
ஒருவனே என்க...

தமிழர்த் தாய்நிலம் 
பிடி மண்ணே என்க...

தமிழின விடுதலைக்கு 
இல்லை வாய்ப்பே என்க...

தன்னரசு வாய்த்தால்
அதுவொரு நொடியே என்க..

தனிநாடு வேண்டல்
பல்லுயிர்க் கேடே என்க..

தன்னாட்சி இல்லாமையும்
குறையற்ற வாழ்வே என்க..

தவறில்லை என்று ஏற்பேன் ஆயினும்
தமிழர் விடுதலை அடைவதும்
தனித் தமிழர்நாடு அமைப்பதும்
தவிர்க்காமல் செய்யவேண்டிய 
தன்னிகரில்லா அறமென்றே 
தன்னிலை விளக்கம் கூறுவேன் நான்! 



Sunday, 19 February 2023

ஒரு நொடி சிந்திப்பீர் ஈரோடு மக்களே

 ஒரு நொடி சிந்திப்பீர் ஈரோடு மக்களே!

 நீங்கள் ஒரு நொடி சிந்திப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கையின் பெரும்பான்மையான துன்பங்கள் தீரும் என்பதை அறிவீர்களா?!
 உங்கள் வாழ்வில் பெரும்பாலான துன்பங்கள் தவறான வேட்பாளருக்கு வாக்களித்ததினால் மட்டுமே வந்தடைந்தன என்பது தெரியுமா?
  நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 கடந்த பல ஆண்டுகளாக மக்களை ஆண்டு வரும் கட்சிகள் மாறி மாறி கொள்ளையடித்ததை தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை என்பதை குழந்தை கூட அறியும்!
 ஜனநாயக மணிமகுடம் ஆள்பவர் தலையிலிருந்து தேர்தல் காலத்தில் சில நாட்கள் மட்டும் வாக்காளர் தலைக்கு மாறிவிடுகிறது.
 இப்போது கிரீடம் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் தலையில் அமர்ந்துள்ளது.
 நீங்கள் வாக்களித்த மறுநொடி அதுவும் அதன் சக்தியும் கைமாறிவிடும்.
 பிறகு தலைக்கு வர சில ஆண்டுகள் ஆகும். அதுவரை ஆள்பவன் செருப்பு உங்கள் தலையை அழுத்தியபடி இருக்கும்.

எனவே வாக்களிக்கும் முன் ஒரு நொடி சிந்தியுங்கள்!
உங்களுடைய மற்றும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை அதாவது கல்வி, வருமானம், வாழ்க்கைத் தரம், பிற வசதிகள் என அனைத்தையும் தீர்மானிக்கும் முக்கியமான முடிவு இது!

 அதுவரை நீங்கள் ஜனநாயக குடிமகனாக பல தவறுகள் செய்திருக்கலாம்! லஞ்சம் கொடுத்திருக்கலாம், வரி ஏய்ப்பு செய்திருக்கலாம், சாலை விதிகளை மீறியிருக்கலாம், ஓட்டுக்குப் பணம் வாங்கியிருக்கலாம்! 
பரவாயில்லை! போனது போகட்டும்!

 வேட்பாளர் பட்டியலைப் பாருங்கள்! அதில் நல்லவர் அல்லது குறைந்தபட்ச கெட்டவரைத் தேர்ந்தெடுங்கள்! அவர் கண்டிப்பாக திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக வேட்பாளராக நிச்சயம் இருக்கமாட்டார்! ஒன்று சுயேட்சையாக இருப்பார்! அல்லது நாதக போன்ற சிறிய கட்சி வேட்பாளராக இருப்பார்.
 
 உங்களுக்கு முதல்வன் அர்ஜுன் போன்றோ, சர்கார் விஜய் போன்றோ, ஆய்த எழுத்து சூர்யா மாதிரியோ எவரும் வரப்போவதில்லை. இருப்பதில் சிறந்தவரைத் தேர்ந்தெடுங்கள். அவர் மீது விமர்சனங்கள் இருந்தாலும் பரவாயில்லை.
 100% திருடன் என்று தெரிந்த ஒருவரைத் தேர்ந்தெடுப்பதை விட இவன் திருடனா இல்லையா என்று சந்தேகம் இருக்கும் ஒருவருக்கு வாக்களியுங்கள்.
 ஓட்டு வீணாகும் என்று நினைக்க வேண்டாம். இந்த ஒரு தவறான சிந்தனைதான் நாடே நாசமாக காரணம். எல்லாரும் இப்படி நினைத்துதான் நாட்டை வீணாக்கி வைத்துள்ளாம். நாட்டைக் காப்பாற்றும் முயற்சியில் ஒரு ஓட்டு வீணாவது பெரிய இழப்பில்லை.

 ஒரு உண்மையைக் கூறவா? மக்கள் மாற்று சக்திகளுக்கு வாக்களித்தே வந்துள்ளனர்! ஆனால் அது குறைத்து காட்டப்பட்டு வருகிறது. இந்த நாட்டில் எது நேர்மையாக நடக்கிறது? தேர்தல் முடிவுகள் மட்டும் நேர்மையாக வெளிவருமா? இருந்தாலும் பெரும்பாலான வாக்குகள் கட்சிமாறினால் அதை மறைக்க முடியாது. 

 நான் நா.த.க அடிப்படை உறுப்பினர். நாம் தமிழர் வந்துவிட்டால் பாலாறும் தேனாறும் ஓடும் என்று கூறமாட்டேன். அவர்கள் வந்தால் இந்த அளவுக்கு மோசமாக இருக்கமாட்டார்கள் என்பது என் நம்பிக்கை. நீங்களும் அப்படியே நம்ப வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நான் சீமான் அவர்களுக்கு வாக்களிக்கத் தொடங்கியதில் இருந்து நாட்டில் நடக்கும் அநியாயங்களைக் கண்டால்  'இதற்கு நான் காரணமில்லை' என்கிற ஆறுதல் கிடைத்துவிட்டது. நீங்கள் வாக்களித்தால் குறைந்தபட்சம் குற்றவுணர்ச்சி இல்லாமல் இருக்கலாம் என்று கருதுகிறேன். வேட்பாளர் நல்லவர் ஆனால் கட்சித் தலைமை சரியில்லை என்றாலும் அவரைத் தேர்ந்தெடுக்க  வேண்டாம் என்பது என் தனிப்பட்ட கருத்து. அதனால் நாம் தமிழருக்கு ஒரு வாய்ப்பளித்துப் பார்ப்பது சரியாக இருக்கும் என்பது என் பரிந்துரை. இதை யோசித்துப் பார்ப்பது உங்கள் விருப்பம்.

 வாக்களிக்கும் முன் நீங்கள் மதம், சாதி, இனம், கட்சி, பாலினம், பொருளாதாரம் என எந்த பின்புலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி அந்த நொடி உங்கள் தலையில் ஜனநாயக கிரீடம் இருக்கும் போதே உடனடியாக உங்கள் மனசாட்சியை செயல்பட விடுங்கள்! உங்கள் முடிவு பல லட்சம் பேர் வருங்காலத்தை ஏன் பல ஆயிரம் உயிர்களை பாதிக்கும் முடிவு என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

 கொள்கை, கோட்பாடு என்று கூட சிந்திக்க வேண்டாம். இதுவரை பிரதான கட்சிகள் கடந்து வந்த பாதையை நினைத்துப் பாருங்கள். வேட்பாளர் பட்டியலில் உள்ளவரில் கெட்டவர் என்று நன்கு தெரிந்தவரை விட்டுவிட்டு பிறருக்கு வாக்களியுங்கள்.
 நோட்டாவை அழுத்துவதால் பலன் எதுவும் இல்லை.  எல்லா ஓட்டும் நோட்டாவுக்கு விழுந்து ஒரே ஒரு ஓட்டு ஒருவருக்கு விழுந்தாலும் அதைப் பெற்றவர் வெற்றி பெறுவார். அந்த முட்டாள்த் தனத்துக்கு வாக்களிக்காதீர்கள். அதற்கு பேசாமல் வீட்டிலியே இருக்கலாம்.
 
 வாக்காளர் என்றில்லை வேட்பாளர்களுக்கும் இதைக் கூறுகிறேன். நீங்கள் உங்களுக்கே வாக்களிக்கு முன்  உங்கள் மனசாட்சியை ஒருமுறை கேளுங்கள். உங்களை விட சிறந்த வேட்பாளர் ஒருவர் இருந்தால் அவருக்கு ஓட்டு போடுங்கள்.  

 ஒரு வேட்பாளர் ஏற்கனவே  பதவியில் இருந்தவர் என்றால் செய்த நன்மைகள் தீமைகளைப் பட்டியலிட்டு நன்மைகள் அதிகம் இருப்பவரைத் தேர்ந்தெடுங்கள். தீமைகள் அதிகம் என்றால் அவர் எவ்வளவு நெருக்கமானவர் என்றாலும் விட்டுவிடுங்கள். 

 கெட்டவர்கள் செய்த சில நன்மைகளை நினைத்துப் பார்ப்பது அறிவாளித்தனம் இல்லை. சிலரது ஒப்பீடு மிகவும் தவறு. பீகாரை விட நாம் முன்னேறியிருக்கிறோம் என்றால் சோமாலியாவை விட பீகார் முன்னேறி இருக்கிறது!
 இது எப்படி இருக்கிறது என்றால் "நான் நினைத்தால் உன்னை அதிகம் சீரழித்திருப்பேன். குறைவாக சீரழித்தமைக்காக எனக்கு மறுபடி வாய்ப்பு கொடு" என்று மிரட்டி கேட்பது போல இருக்கிறது.

 வெள்ளைக்காரன் காலத்திலேயே நாம் அதிக வரி கட்டி வந்த முன்னேறிய மாநிலம். நாம் முன்னேறியிருக்க  பொதுமக்களாகிய நாமே காரணம்.
 காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க என இதுவரை ஆண்ட அனைவரும் நாம் உழைத்து முன்னேறுவதைத் தடுத்து கொள்ளையடித்தே வந்துள்ளனர்.
 எல்லா கட்சிகாரர்களும் கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்து விட்டனர். பத்து தலைமுறைக்கு சேர்த்துவிட்டு பதினொராவது தலைமுறைக்கு தற்போது வியாபாரத்தைத் தொடங்கிவிட்டனர். 
 அவர்களிடமிருந்து ஒரு பைசாவை கூட நம்மால் திருப்பி வாங்க முடியாது என்பதே உண்மை.
 எனவே அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை விட்டுவிட்டு மூன்றாவது நபருக்கு வாய்ப்பு கொடுக்கும் தருணத்தில் இருக்கிறோம்.

 இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் ஒருமுறை வாய்ப்பு கேட்டு அமர்ந்தவர்கள்தான். ஒருமுறை பதவியில் அமர்ந்தவர்களை நம்மால் அசைக்க முடியாது. ஒருமுறை தேர்ந்தெடுத்தவர் சரியில்லை என்றால் வேறொருவரை மாற்றுவதே புத்திசாலித்தனம். அப்படிப் பார்த்தால் திமுக, அதிமுக கட்சிகளை நாம் என்றைக்கோ மாற்றியிருக்க வேண்டும். அந்த வகையில் நாம் அடிமுட்டாள்களாக இருந்துள்ளோம். இனியாவது அறிவாளிகளாக புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம்! 

 ஒருவருக்கு வாக்களிப்பதால் உங்களுக்கு தனிப்பட்ட நன்மை கிடைக்கலாம். ஆனால் வாக்களிக்கும் அந்த நொடி சுயநலத்தை விடுத்து மனசாட்சியை தட்டிக் கேளுங்கள்!  
 மேலே சொன்ன எல்லா கணக்குகளையும் மனசாட்சி ஒரு நொடியில் போட்டு விடையைக் கூறிவிடும்.

 ஒரு நொடி உங்கள் மனசாட்சிக்கு அதிகாரம் கொடுங்கள். அது யாரைச் சொல்கிறதோ கண்ணை மூடிக்கொண்டு அழுத்திவிடுங்கள்!  இதுவே புரட்சி! ஒவ்வொருவரும் தத்தமது கடமையை சரியாக செய்துவிட்டால் பெரிய புரட்சியெல்லாம் தேவைப்படாது என்பது தலைவர் பிரபாகரன் கூறியது! தவறான நபர்களைப் பதவியில் அமர்த்தி விட்டு பிறகு அதிகாரத்திற்கு எதிராக திரைப்படங்களில் கதாநாயகர்கள் செய்யும் புரட்சியை ரசிப்பது வேடிக்கையானது!  மாற்றி சிந்திப்பதே புரட்சி! இந்த தைரியமான முடிவு ஆயுதப் புரட்சிக்கு சற்றும் குறைந்தது அல்ல! ஜனநாயக மாற்றம் வராதபோதுதானே ஆயுதப் புரட்சி அவசியம்! அதை முன்னரே அதாவது இப்போதே செய்துவிட்டால்...

முடிவை மாற்றுங்கள்!
மனசாட்சியைக் கேட்போம்!
மாற்றிப் பார்ப்போம்! 
 

Monday, 13 February 2023

ஈரோடு கிழக்கு சாதிகள்

ஈரோடு கிழக்கு சாதிகள்
மொத்தம் 228 k

தமிழ்ச் சாதிகள் :-

வெள்ளாளர் 67k
செங்குந்தர் 45k
இசுலாமியர் 35k
நாடார் 8k
செட்டியார் 5k

தமிழரல்லாதார்
:-

சக்கிலியர் 31k
வடுகர் 20k
மார்வாடி 3k

 அதாவது அத்தொகுதியில் 25% வாக்காளர் தமிழரல்லர்!

Tuesday, 7 February 2023

சிறுகதைகளில் அண்ணாதுரை

சிறுகதைகளில் அண்ணாதுரை 

 சி.என்.அண்ணாதுரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். இதில் ஆரம்பகாலத்தில் எழுதிய முதல் 40 சிறுகதைகளில் 20 சிறுகதைகளின் கதைக்கரு இங்கே சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது. 


* பாமா விஜயம்
ஒரு பணக்கார கிழவன் அழகான பெண்ணை திருமணம் செய்ய ஜோதிடரான ஐயர் மூலம் முயற்சி செய்கிறான். அந்த புத்திசாலி பெண் ஐயரின் விதவை மகள் வேறு ஜாதியில் காதலிப்பதையும் ஐயரின் வேறுஜாதி வைப்பாட்டி பற்றியும் அம்பலப்படுத்துகிறாள்

* தங்கத்தின் காதலன்
 ஒரு பணக்கார வீட்டு பையன் ஒரு அனாதை கிறிஸ்தவப் பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி கைவிட்டு வேறொரு திருமணம் செய்துகொள்கிறான். அந்த பெண் தற்கொலை செய்துகொள்ள அவளது குழந்தை விபச்சாரி ஆகிறது

* சரோஜா ஆறணா
 ஏழைப் பெற்றொர் பணத்துக்காக பிறந்த  பெண்குழந்தையை பணக்கார தம்பதிக்கு விற்பது பற்றியது 

* இவர்கள் குற்றவாளிகளா?
 17 வயது விதவை ஒரு இளைஞனுடன் ஓடிப்போகிறாள். அவளைக் கொல்ல வந்த தந்தை முதலிரவு அறையில் எட்டிப் பார்க்கிறான். அங்கே தன் மகள் மகிழ்ச்சியாக இருப்பது கண்டு மனம் மாறி திருந்திவிடுகிறார்

* சொல்லாதது
 ஏழைப் பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டு பணக்கார மருமகன் ஆன ஒருவன் நொடிந்து மீண்டும் அவளிடமே வந்து சேர்கிறான் 

* ஒரு வசீகர வரலாறு 
 கடை முதலாளியின் விதவை மகளும் கடையில் வேலை செய்யும் இளைஞனும் காதலித்து வீட்டை விட்டு ஓடுகின்றனர்

* காமக் குரங்கு 
 வயதான பெரும் பணக்காரர் இளமையான பணக்காரியை திருமணம் செய்கிறார். ஆனால் அன்றிரவு நடனமான வந்த ஒரு பெண்ணை கெடுக்க நினைக்கிறார். அவள் தப்பித்து மணமகள் அறையில் தஞ்சம் அடைகிறாள். பார்த்தால் அது பெண் வேடத்தில் இருக்கும் நடனக்காரன். பணக்காரி தன் தகப்பன் வீட்டுக்கே சென்றுவிடுகிறாள். அந்த நடனக்காரன் அவளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு ஊரெல்லாம் இந்த சம்பவத்தை நாடகமாக போடுகிறான். 

* அவள் முடிவு
 ஒரு இளம் விதவை எதிர்வீட்டு இளைஞனைக் காதலித்து அவன் ஏமாற்றிவிட தூக்கில் தொங்குகிறாள்

* வாலிப விருந்து 
பணக்கார கிழவனின் மனைவி டாக்டருடன் கள்ள உறவு

* பேரன் பெங்களூரில்
 ஒரு ஐயரின் விதவை மகளை ஒரு இளைஞன் காதலித்து கர்ப்பமாக்கி பின் கல்யாணம் செய்கிறான் (இதற்கு குடி அரசு பத்திரிக்கை கதைகளைப் பயன்படுத்துகிறான்)
 அந்த ஐயருக்கு அதிக பணம் கொடுத்து மந்திரம் ஓதவைத்து பெண் முகத்தை மறைத்து கல்யாணம் நடக்கிறது. பிறகு பணத்தாசையால் சாதிமறுப்பு திருமணம் நடத்திய ஐயர் தன் மகளென்று அறிந்து புலம்புகிறார்

* பிரார்த்தனை
 வாலிப வயதில் ஒருவனால் கர்ப்பமாக்கப்பட்டு கைவிடப்பட்ட விபச்சாரியின் மகள் வேறொரு வாலிபனிடம் கெட்டு கர்ப்பமாகிறாள்

* வள்ளி திருமணம்
 ஒரு புது மாப்பிள்ளை ஒரு பெண்ணை இரவில் எழுப்பி திருட்டுத்தனமாக தோட்டத்துக்கு அழைத்துப் போகிறான். ஆனால் அந்த பெண் மீது ஆசையுள்ள ஒருவன் அங்கே வந்து மிரட்டி தன்னைக் கட்டிக்கொள்ள சத்தியம் வாங்குகிறான்.

* கைக்கு எட்டியது 
 மனைவியின் நகையைத் திருடி விபச்சார விடுதிக்கு போகும் ஒருவன் திருப்பி அனுப்பப்பட்டு கோவிலுக்கு செல்ல அங்கே கொள்ளை நடக்கிறது. அதில் தன் நகையை இழந்து திருட்டு பட்டமும் பெறுகிறான். 
 
* சுடுமூஞ்சி 
 பண்ணக்கார வியாபாரி ஒரு ஐயருக்கு பணம் கொடுத்து ஜாத்தகத்தை மாற்றி ஒரு பெண்ணின் காதல் திருமணத்தைக் கெடுத்து தனக்கு ரெண்டாவது மனைவி ஆக்குகிறார். உண்மை தெரிந்த பின் அந்த காதலனை வரவைத்து கள்ளக் காதல் தொடர்கிறது

* வேலை போச்சு
 பணக்காரன் நோயாளி ஒருவனுக்கு திருமணம் நடக்கிறது. அதற்கு பத்திரிக்கை அடித்தவன் தவறாக அச்சிட அவன் வேலை போகிறது. இரவில் அவன் மண்டபத்தில் படுக்கிறான். அங்கே அந்த திருமணத்துக்கு தலைமை தாங்கிய சாமியாரும் அவருடன் தொடர்புடைய விபச்சாரியும் சந்திக்கின்றனர். அவர்களை மிரட்டி பணம் பிடுங்குகிறான்.

* சொல்வதை எழுதேன்டா
ஒரு ஐயர் கஞ்சப் பேர்வழியான ஒரு பணக்காரரிடம் நிதி கேட்டு ஒரு கடிதம் எழுதி அதை தன் மகனிடம் கொடுக்க அனுப்புகிறார். மகனுக்கு அந்த பணக்காரனிடம் எப்படி பணத்தைக் கறக்க வேண்டும் என்று தனியாக ஒரு கடிதம் எழுதி அனுப்புகிறார். இந்த இரண்டாவது கடிதம் அந்த பணக்காரனிடம் போய்விட பிரச்சனை ஆகிறது. ஐயர் இதை சமாளிக்க தன் கொழுந்தியாளிடம் அந்த பணக்காரர் தவறாக நடந்துகொண்டதாக பத்திரிக்கைகளுக்கு செய்தி அனுப்புகிறார்.

* தேடியது வக்கீலை
சாமியாராக இருந்த ஒருவர் ஒரு மடம் ஆரம்பித்து கல்லா கட்டுகிறார். பின் மடத்தை தன் சிஸ்யனிடம் ஒப்படைத்து விட்டு வெளியூரில் வைர வியாபாரி ஆகிறான். ஆண்டுக்கு இரண்டு மாதம் சாமியாராக மடத்திற்கும் போகிறான். ஒரு கிறிஸ்தவ விதவையை கெடுத்து ஒரு பெண்குழந்தை பெற்று அதை ஒரு பணக்காரனிடம் தத்து கொடுக்கிறான். அந்த பெண்ணை காதலிக்கும் ஒருவன் இந்த உண்மைகளை எல்லாம் அறிந்து நியாயம் கேட்க வரும்போது அவனை அடித்து பைத்தியமாக்கி விடுகிறான்.

* முகம் வெளுத்தது
ஜாதி மாறி திருமணம் செய்துகொண்ட ஒரு பணக்கார விதவையின் மகனுக்கும் அவர்களை ஒதுக்கிவைத்த ஜாதியில் பிறந்த ஒரு பையனுக்கும் பள்ளிப் பருவத்தில் இருந்து மோதல். கலப்பு ஜாதியில் பிறந்தவன் வெல்கிறான். 

* குற்றவாளி யார்?
 அண்ணன் கெடுத்து விபச்சாரி ஆக்கி தம்பி வைத்திருக்கும் ஒரு பெண் தன் காதலுடன் திருமணம் செய்து ஓடத் தயாராகும்போது தம்பியிடம் பிடிபட்டு பஞ்சாயத்து தலைவரான அண்ணன் விசாரிக்கும்போது உண்மையை சொல்ல முனைகிறாள். மறுநாள் தம்பியைக் கொல்கிறாள். அண்ணன் அவளைக் கொன்று பழியை பேய் மீது போடுகிறான்.

* மாடி வீடு
 ஒரு பணக்காரர் வைப்பாட்டி வீட்டில் இருக்கும்போது ஒரு குரங்கு நகை ஒன்றை போட்டுவிட்டுப் போகிறது. அதை திருடியதாக தண்டனை பெற்ற ஒருவன் அந்த நகையை கொள்ளையடிக்க முயன்று மாட்டிக்கொள்கிறான்

அதாவது அண்ணாதுரையின் ஆரம்ப கால சிறுகதைகளில் வில்லன்கள் பெரும்பாலும் முதலியார் வகுப்பு அல்லது செட்டியார், பிள்ளை போன்ற தமிழ்ச் சாதிகள். ஐயர்கள் இவர்களுக்கு தூபம் போடுபவர்களாகவும் சில சமயம் நேரடியாக வில்லன்களாகவும் இருக்கின்றனர்.
 வில்லன்கள் பெரும் பணக்காரர்களாக, பக்திமான்களாக, காமவெறியர்களாக, ஆணாதிக்கவாதிகளாக வருகிறார்கள்.
 
 பெண்கள் ஒன்றுமறியா அப்பிராணி எவனிடமாவது ஏமாந்து கர்ப்பம் தரிப்பதே அவர்கள் தலையெழுத்து.
 இவர்களை இழுத்துக்கொண்டு ஓடவோ அல்லது திருட்டுத்தனமாக உடலுறவு கொள்ளவோ கதாநாயகன் வருகிறான். 

 வில்லன்களின் சாதி, வியாபாரம், உருவம் போன்றவற்றை விபரமாக கூறிகின்ற அதே வேளையில் கதாநாயகர்கள் என்ன சாதி என்று கூறப்படவே இல்லை. 

 வந்தேறி சாதிகள் வரவேயில்லை, அப்படியே நாயுடு, ராவ் என ஓரிருவர் வந்தாலும் நல்லவர்களாக இருக்கின்றனர்.

 அண்ணாதுரை கூற வருவது ஆதிக்க சாதி ஆண்கள் பெண்களை அடிமைப் படுத்தி வைத்துள்ளனர். தன் வீட்டுப் பெண்களை அடக்கியும் பிற அபலைப் பெண்களை சீரழித்தும் வருகின்றனர். அந்த சோரம் போன பெண்களுடன் கள்ள உறவு கொள்வது பெரிய புரட்சி. 
பக்தி, சமூக ஒழுக்கம் எல்லாம் மீறப்பட வேண்டியவை.
 எக்காரணம் கொண்டும் ஒரு பெண்ணின் இளமை மட்டும் வீணாகிவிடக் கூடாது. 

 இதை அண்ணாதுரையின் தனிப்பட்ட மனக்குமுறலாகவே காணமுடிகிறது. அண்ணாதுரை பகலில் நடனமும் இரவில் விபச்சாரமும் செய்யும் சாதியில் பிறந்தவர். அதனால் அவரது பார்வை அவர் வளர்ந்த ஒழுக்கமற்ற விபச்சார சூழல் அடிப்படையிலேயே உள்ளது. கதையில் வரும் பெண்கள் அவர் குடும்பத்துப் பெண்கள்தான். அவரது தாய் பங்காரம்மா ஒரு முதலியாருக்கு சில காலம் வைப்பாட்டியாக இருந்துள்ளார். இதுவே அண்ணாதுரையின் முதலியார் வெறுப்புக்குக் காரணம்.

  ஆனால் அண்ணாதுரை கதைகளில் வந்தேறி பிராமணர்களும் ஆதிக்க சாதிகளும் ஏற்படுத்தி தேவதாசி  முறையை அதனால் ஏற்பட்ட பாதிப்பை தமிழின பார்ப்பனர் மற்றும் தமிழ்ச்சாதிகள் மீது திருப்பிவிடும் முயற்சியும் உள்ளது. 

 ரஷ்ய அரசருக்கு எதிராகவும், ஸ்பெயின் அரசருக்கு எதிராகவும், மைசூர் அரசருக்கு எதிராகவும், கற்பனையான அரசுகளுக்கு எதிராகவும் கூட சிறுகதை எழுதியுள்ளார் ஆனால் ஆங்கில அரசுக்கு எதிராக ஒரு வரி கூட எழுதவில்லை. 

 ஆங்கிலேய ஆட்சியின் அத்தனை சுரண்டலையும் அரசு அதிகாரிகள், வியாபாரிகள், முதலாளிகள், நிலவுடைமையாளர், சாமியார்கள் ஆகியோர் மீது திருப்பிவிட்டுள்ளார். 

 ஜப்பானுக்கு எதிராக பர்மாவில் வீரமரணம் அடைந்த பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்த தமிழரை பாராட்டி எழுதியுள்ளார்.

 1947 க்குப் பிறகு தனது 'சாதிவெறி ஆணாதிக்க காமவெறி எதிர்ப்பு' எனும் பார்வையில் இருந்து மாறுகிறார். மக்கள் கொடிய வறுமையில் வாடுவதாக சித்தரித்து கதைகள் எழுதத் தொடங்கினார்.
  1947 க்கு பிறகும் கூட ஆங்கிலேயரை எதிர்த்து மட்டும் எழுதவேயில்லை!
 

Monday, 6 February 2023

ஈழம் போற்றும் வாணி ஜெயராம் ஐயங்கார்

ஈழம் போற்றும் வாணி ஜெயராம் ஐயங்கார்

துரைச்சாமி ஐயங்கார் - பத்மாவதி தம்பதிக்கு வேலூரில் பிறந்த கலைவாணி எனும் இயற்பெயர் கொண்ட வாணி ஜெயராம் ஈழத்திற்காக பல பாடல்கள் பாடியுள்ளார்.

அப்பாடல்கள் வருமாறு,

1) "நல்லூர் வீதியில் நடந்தது யாகம்
நாலு நாள் ஆனதும் சுருண்டது தேகம்"

2) "வீசும் காற்றே தூது செல்லு
தமிழ் நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு
ஈழத்தில் நாம் படும் வேதனைகள் - அதை
எங்களின் சோதரர் காதில் சொல்லு"
(களத்தில் கேட்கும் கானங்கள் - தொகுப்பு)

3) "பாடும் பறவைகள் வாருங்கள்
புலிவீரன் திலீபனைப் பாடுங்கள்"
(களத்தில் கேட்கும் கானங்கள் - தொகுப்பு)

4) "தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்"
(களத்தில் கேட்கும் கானங்கள் - தொகுப்பு)

5) "பரணி பாடுவோம் புதியதானதோர் பரணி பாடுவோம்"
(பாசறைப் பாடல்கள் - தொகுப்பு)

6) "மேகங்கள் இங்கு வாருங்கள்"
(பாசறைப் பாடல்கள் - தொகுப்பு)

7) "வீரன் மண்ணில் புதையும் போது"
(பாசறைப் பாடல்கள் - தொகுப்பு)

8) "தலை வாரி பூச் சூடினேன்"

9) "செந்தமிழ் வீரனடா 
சீறிடும் வேங்கையடா"

10) 2007 இல் கூட காசி ஆனந்தன் எழுதிய "செண்பகமே செண்பகமே சிறகு விரித்து வா" (ஈட்டி முனைகள் - தொகுப்பு) எனும் பாடலையும் பாடியுள்ளார்.

 ஈழ மக்கள் இணையம் வாயிலாக அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். 

நன்றி: ஐங்கரன் விக்கினேஸ்வரா
வணக்கம் லண்டன் (இணையம்)

பி.கு: பிரபல தமிழ்ப் பாடகிகளில் இவர் ஒருவர் மட்டுமே தமிழர் ஆவார்.

Wednesday, 1 February 2023

இந்த ஆபாச கதையை எழுதியது கருணாநிதி பேனா



இந்த ஆபாச கதையை எழுதியது கருணாநிதி பேனா 

 கண்ணதாசன் எழுதிய வனவாசம் நூலில் கருணாநிதி என்று பெயர் குறிப்பிட்டு அவர் எழுதிய 'வாழமுடியாதவர்கள்' எனும் மோசமான கதை பற்றி குறிப்பிட்டுள்ளார். 
அந்த கதை இன்றும் உள்ளது.
கீழே தரப்பட்டுள்ளது...

 வாழ முடியாதவர்கள்

‘டாண் டாண்’ என்று மணிக்கூண்டு கெடிகாரம் பத்து ஒலிகளை முழங்கிற்று. நட்சத்திர டாக்கீசின் கதவுகள் திறக்கப்பட்டன.  ‘திலோத்தமா’ படம் முடிந்து விடுதலை பெற்ற சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் வர்ணங்கள் திடீரெனச் சிரித்த பாதரச விளக்குகளால் சோபையிழந்தன. அந்தச் சோபையிலும் சொகுசு மின்னிடுவதாகத் தொடர்ந்து வந்த வாலிபப் பட்டாளம் ‘கம்பரசம்’ பாடிற்று.
“பெண்களுக்குச் சுதந்திரம் அளிப்பதாயிருந்தால் முதலில் இந்த ஆண்களை எல்லாம் அரபிக்கடலில் தூக்கி எறியவேண்டும்” என்றால் ஒருத்தி, சிவப்புச் சேலைக்காரி.
“உலகம் அழிந்துபோக உன்னை யோசனை கேட்டால் அப்போது சொல்லடி இந்த அபிப்பிராயத்தை” எனப் பதில் வீசினால் பச்சைச் சேலைக்காரி.
“திலோத்தமா எப்படிடா?” என்றான் ஒரு இருபத்துநாலு வயது.
“படத்தைக் கேட்கிறாயா?…அல்லது” என்று இழுத்தான் ஒரு மைனர். 
“படம் சுமார். டைரக்ஷன் பரவாயில்லை. கதைதான் பிடித்தமில்லை” என்ற விமர்சனத்தை ஒரு மேதை,
பேச்சில் நுழைத்தார்.
“என்ன சார் உங்களுக்குக் கதை பிடிக்கவில்லை!” சினிமாப்பைத்தியம் ஒன்று இடையே குறுக்கிட்டது.
“பிரம்மாவைப் போட்டு கலாட்டா செய்கிறான் சார்” ஒருவர் இப்படி அனுதாப்பட்டார்.
“புராணக் கதையை அப்படியே எடுத்திருக்கான்.”
“பிரம்மா…மும்மூர்த்திகளில் ஒருவர். அவர் சிஷ்டித்தார். திலோத்தமையை! அவளையே அவன் காதலிப்பதென்றால்… தகப்பன் மகளை.. சேச்சே! அபத்தம்!”
“பொறுங்க, வாந்தியெடுத்துவிடாதீர்கள்” கிண்டல்காரன் பேச்சை முடித்தான். 

 இவ்விதமாக திலோத்தமை பட விமர்சனங்களோடு அந்தக் கூட்டம் நகர்ந்தும்  சிதறியும் வர வரக் குறைந்தும் தேய்ந்தும் கொண்டிருந்தது.
 நடக்கும் பொன்வண்டுகள் பறக்கும் பட்டுப் பூச்சிகளாயின. காலேஜ் வேடர்களும் வேறு பக்கம் திரும்பினர்.
அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஓரமாக ஒதுங்கி சின்னச்சாமியும், காந்தாவும் வந்து கொண்டிருந்தார்கள். 

 காந்தாவின் கண்கள் கலங்கரை விளக்கு போலச் சுற்றியபடியிருந்தன. “உம்…பாத்து நட!” சின்ன சாமி அதட்டினான். சின்னச்சாமி போலீஸ்காரன். வயது நாற்பது இருக்கும். வலுவேறிய உடம்பு வாட்டமற்ற நடை. திருண்டு உருண்ட தோள்கள், நிமிர்ந்த நெஞ்சு, கம்பிரமான தோற்றம் கண்களிலே எப்போதும் சிவப்புநிறம், கறுப்புக் குலையாத மீசைகள். காந்தா அவனுடைய வேகமான நடையோடு போட்டி போட முடியாமல் திணறித் திணறிப் பின்தொடர்ந்தாள். நீண்ட சாலையின் ஓரத்தில் நெடுக நிழல் தரும் மரங்கள் நின்றிருந்தன. அங்கே ஒரு பெரிய புளியமரம். மனித நடமாட்டத்தில் அதன் கிளைகளில் இருந்த பறவைகள் அடிக்கடி சிறகையடித்துக் கொண்டன. அந்த மரத்தின் பக்கமாகச் சின்னசாமி சாலையிலிருந்து இறங்கினான். சாலைக்குக் கீழ்ப்புறமாகச் சிறிது தூரம் சென்றால், போலீஸ் லைன். அங்கே 18-வது எண்ணுள்ள வீடுதான் சின்னசாமியுடையது.

 “காந்தா! கீழே பார்த்து வா. பூச்சி, பொட்டு இருக்கும்.” இதைச் சொல்லியபடி கொஞ்சம் மெதுவாக நடந்தான். பின்னால் திரும்பிப் பார்த்தபடி, வீட்டையடைந்ததும் சின்னச்சாமி பூட்டைத் திறந்துவிட்டு நெருப்புக் குச்சியைக் கொளுத்தினான். காந்தா விளக்கை ஏற்றிக்கொண்டு அடுக்களைப் பக்கம் சென்றாள். போலீஸ் லைன் வீடுதான் நமக்குத் தெரியுமே; குருவிக்கூடு! அடுக்களை படுக்கையறை எல்லாம் ஒன்றுதான். சின்னசாமி செருப்புகளைச் சுழற்றிவிட்டு, ஒரு பீடியைப் பற்ற வைத்தபடி வாயிலில் உட்கார்ந்தான். பீடியின் சுருள் புகையோடு அவன் சிந்தனையும் ஒரு சுற்றுச் சுற்றியது. அதற்குள் “அப்பா சோறுபோட்டுட்டேன்” என்ற காந்தாவின் அழைப்பு கிடைத்தபடியால் பாதி பீடியை அனைத்துத் தீப்பெட்டியில் போட்டுக்கொண்டு உள்ளே சென்றான் சின்னச்சாமி. மார்கழி மாதக் குளிருக்கேற்ற நல்ல பழைய சோறு; விறுவிறுப்பாகச் சுண்டக்குழம்பு சாப்பாடு முடிந்தது.
“நீ சாப்பிடம்மா” என்று சொல்லிவிட்டுச் சின்னச்சாமி மீதி பீடியை வாயில் வைத்தபடி வெளிப்பக்கம் வந்தான். வயிற்றின் ஜிலுஜிலுப்பை பீடிப்புகை சிறிது மாற்றிக் கொண்டிருந்தது. காந்தாவின் சாப்பாடு முடிந்ததும் பாத்திரங்களைக் கழுவி விட்டுப் படுக்கிற இடத்தைக் கூட்டினாள். இரண்டு கிழிந்த பாய்களை எடுத்து விரித்து, எண்ணெய் வாசனை வீசுவது மட்டுமின்றி, உறை தேவையில்லை என்கிற அளவுக்கு நிறத்தைக் கருப்பாக மாற்றிக்கொண்ட தலையணைகளை எடுத்துப் போட்டாள். 
“அப்பா நான் படுக்கட்டுமா?”
“ஒரு டம்பளர் வெந்நீர் கொடு. இருக்கா?”
“பச்சத் தண்ணிதான் இருக்கு. வெந்நீர் போட விறகு ஏது?” முணுமுணுத்தபடி ஒரு குவளைத் தண்ணீரைக் கொடுத்துவிட்டுப் படுக்கையில் படுத்தாள்.
தெருப்பக்கம் உட்கார்ந்திருந்த சின்னச்சாமியின் உதட்டில் இன்னொரு பீடி அமர்ந்து கொண்டது; பீடியைப் புகைத்தவாறு நிமிர்த்திய தலையைத் தாழ்த்தாமலே உட்கார்ந்திருந்த அவனிடம், வானவெளியில் மேகத்தைத் தொட்டுத் தொட்டு விளையாடிய சந்திரன் பேசுவது போலிருந்ததோ என்னவோ, அவன் வைத்த விழியை எடுக்காமல், அசைவற்றிருந்தான்.

சந்திரன்! சின்னச்சாமியின் மனைவியின் பெயர்கூடச் சந்திராதான். அவள் மண்ணோடு கலந்து பத்து வருடமாகிறது. சின்னச்சாமியின் முப்பதாவது வயதில் சந்திரா பத்து வயது நிரம்பப் பெறாத காந்தாவைத் தாயில்லாப் பிள்ளையாக்கி விட்டுப் போய்விட்டாள். தகப்பனார் உயிரோடிருந்த காலத்தில் சின்னச்சாமிக்குச் சந்திராவை எப்படியோ கல்யாணம் செய்து வைத்துப் பார்த்துக் கண்ணை மூடினார். இடையே சாவு தன் கொடிய கரங்களை நீட்டிச் சந்திராவின் கழுத்தை நெறித்தது மட்டுமின்றிக் காந்தாவைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பை அந்தப் பரிதாபத்துக்குரிய போலீஸ்காரருக்குக் கொடுத்துச் சொன்றது. மறு கல்யாணம் செய்து கொள்ள எத்தனையோ முறை முயன்று பார்த்தான். முன்னுாறு ரூபாய் கூட இல்லாமல் எப்படி கல்யாணம் பண்ணுவது!
கஷ்டப்படும் போது கண்ணீர் விடும்போது கதியில்லயே எனக் கதறும் போது கைகொடுக்க வராத உறவினர்கள் கல்யாணமென்றால் நாக்கைத் தட்டிக்கொண்டு வருவார்கள். பத்திரிகை தராவிட்டால் பல்லைக் கடிப்பார்கள். இந்த நிலையில் ஏழைக்குக் கல்யாண எழவா?
 அப்போதைய போலீஸ் சம்ளபத்தைத்தான் கேட்க வேண்டியதில்லை. அன்றாடம் சாப்பாட்டுக்கே கஷ்டம். இதில் நோய் நொடிகள் ஏற்பட்டால், டாக்டர் தர்மவானாக மாறவேண்டும். காலில் முள் குத்திவிட்டால், முறிந்துவிட்டால், வண்டிக்காரன் பயந்தவனாக இருக்க வேண்டும். என்னதான் மேல் வரும்படி வந்தாலும் காப்பி, தேத்தண்ணீருக்குத்தான் சரியாக இருக்கும். கல்யாணம் செய்துகொள்கிற அளவுக்குச் சாதாரண போலீஸ்காரருக்குக் ‘கிம்பள சான்ஸ்’ கிடைக்குமா? மனைவி இறந்துபோன துக்கம் மறைந்து, அடுத்த கல்யாணம் கிடையாதா என்ற கேள்வி ஏக்கமாக வளர்ந்து, சின்னச்சாமியின் இருதயத்தைத் துறட்டி போட்டு இழுக்க ஆரம்பித்தது. வைகாசி, ஆவணி, தை இப்படி மாதக்கணக்குகள் புரண்டு இந்த வருடம் அடுத்த வருடம் என்று ஒத்திபோடப்பட்டு அவனுக்காகப் பார்த்த பெண்கள் எல்லாம் கல்யாணம் செய்துகொண்டு பிள்ளையும் பெற்றுவிட்டார்கள். அவன் கதிதான் இப்படி என்றால், பருவமடைந்து ஆறு வருடமாக வீட்டிலிருக்கும் காந்தாவுக்கும் கணவன் வரவில்லை. காந்தா விகாரமில்லை; சுமாரான அழகி, கறுப்புதான். கவின் பெறுமுகமும் எடுப்பான தோற்றமும் வாய்ந்த திராட்சைக் கொடி அவள். பெண் பிடிக்கவில்லை என்று யாரும் சொல்லவில்லை; “சீர்வரிசை என்ன செய்வார்கள்? கல்யாணச் செலவு பெண் வீட்டாருடையதுதானே?” இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமலேயே காந்தா அரும்புப் பருவம் அழியாமலிருந்தாள். சின்னசாமியின் இருதயம் நைந்துவிட்டது. சின்னசாமி வாழ முடியாதவன். காந்தா அவனால் வாழவைக்கப்பட முடியாதவள். மன அலைகளால் மயங்கிப் போயிருந்த அந்தத் துயர உருவம் திடீரென விரலில் சுட்ட பீடியின் நெருப்பால் உணர்ச்சி பெற்றுத் திடுக்கிட்டது. நிலாவும் மேகத்தில் மறைந்து கொள்ளவே சின்னசாமி ஒரு பெருமூச்சோடு எழுந்தான். கதவைத் தாழிட்டுவிட்டு, விளக்கைக் கொஞ்சமாய் அடக்கிவிட்டு, அந்தக் கிழிந்த பாயில் படுத்துக் கொண்டான். அவன் கண்களில் சோகம் படர்ந்திருந்தது.

 காந்தா உடம்பை நெளித்துக் கொண்டு சோம்பல் முறித்ததிலிருந்து அவளுடைய இருதயத்திலும் ஒரு பெரும் போராட்டம் நடந்திருக்கத்தான் வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. வாழ்நாளின் வனப்புமிக்க ஒரு பகுதி வீணே கழிவதென்றால்?கொஞ்சு மொழியும், கோலாகலமும் அனுபவிக்க வேண்டிய பருவத்தில் ஊமையாக முடங்கிக் கிடப்பதென்றால்? காதல் கீதத்திற்கேற்ற இன்பக் கேளிக்கையாட வேண்டிய இளமைநாட்கள், நொண்டியாகி விடுவதென்றால்? எந்தப் பெண்ணால் தான் தாங்கிக் கொள்ள இயலும் அந்த வேதனையை! 

 இந்த இருண்ட உலகில் ஒரு மனித ஜந்துவின் வீடு அங்கே இரண்டு கிழிந்த பாய்கள். பாயைவிட அதிகமாகக் கிழிந்து போன இரண்டு உள்ளங்கள்
தகப்பன்-மகள், தணலில் தவிக்கும் புழு!
தாங்கொணா வேதனைப் புயலில் சிக்கிய தளிர்!
காந்தாவின் நீண்ட பெருமூச்சும், அந்த மூச்சைத் தொடர்ந்து முனகிக் கொண்டே கிளம்பிய சின்னச்சாமியின் அசைவும்! அந்தோ… பரிதாபமான நிலைமை!
“அட பாழாய்ப்போன கடவுளே! அவர்கள் என்ன பங்களாவா கேட்கிறார்கள்? பட்டு மெத்தையும், பவளக் கட்டிலும், பன்னீர் குளியலும், பாதாம்பரும்பும், பசும்பாலுமா அவர்கள் கேட்பது?பணக்காரனின் இருதயப் பசிக்கு எத்தனை இளம்பெண்கள் பலியிடப்படுகிறார்கள்! காசை வீசியெறிந்து நினைத்த இடத்தில் இந்திரனாக மாறும் மனித மகாவிஷ்ணுக்களையும்; வயிற்றையும், நெஞ்சையும் உடலுணர்ச்சிகளையும் உலரப்போட்டு வற்றலாக்கிக் கொண்ட வறுமை உருவங்களையும் “ஆண்டவன் படைப்பு” என்று சொல்ல மனித அறிவு அவ்வளவு மழுங்கியாவிட்டது” அந்தச் சிறிய வீடு இதைத்தான் உரத்த குரலில் அதட்டிப் பேசுவது போலிருந்தது. சின்னசாமியின் மனம் தொடர்ந்து பேசத் துவங்கிற்று...
‘பணமில்லையென்றால் அவனுக்கு வாழ்வு கிடையாதா? உணர்ச்சி கிடையாதா? கடவுளே! ஏழைகளுக்கு வயிற்றையும், நெஞ்சையும் ஏன் உண்டாக்கினாய்? உனக்குப் படைப்புத் தொழில் தேர்ச்சியிருந்தால் ஏழைகளை வெறும் நடமாடும் பொம்மைகளாக அல்லவா சிருஷ்டித்து முதலாளிகளுக்கு வேலை செய்யும் இயந்திரங்களாக ஆக்கியிருக்க வேண்டும்? காட்டில் திரியும் மிருகங்களுக்குக் கூடச் சந்தோஷமுண்டே! ஜோடிப் புறாக்கள், ஓடி விளையாடும் மான்கள், பாடிப்பறக்கும் குயில்கள், அவைகளை விடவா ஏழைகள் குறைந்து விட்டார்கள்! நான் என்ன பாவம் செய்தேன்? உன் பக்தியில் குறைச்சலா? உனக்குப் பயந்து நடக்கவில்லையா? ஏன் இந்தச் சோதனை?” அந்த மாஜி மனிதனின் அழுத்தமா கேள்விகளுக்குப் பதில்சொல்ல எந்த ஆண்டவனும் தயாராயில்லை.
அவன் சோகக் குமுறலை காந்தாவின் உள்ளமும் ஒப்பாரியாக்கி விம்மிக் கொண்டிருந்தது. அவன் கண்களில் நீர் தேங்கி வழிந்து, கன்னத்தின் சூட்டில் காய்ந்துவிட்டது. சின்னச்சாமியின் தொண்டையில் ஒன்றுமே அடைக்கவில்லை; ஆனாலும் லேசாக கனைத்துக் கொண்டான்.
“எம்மாடி!” காந்தாவும் தூக்க அசதியில் அலுத்துக் கொண்டது போல இந்த வார்த்தையோடு உடம்பை வளைத்துப் புரண்டுபடுத்தாள். 

 ஏதோ ஒரு பயங்கரமான முடிவால், அவன் முகத்தில் அசடு வழிவதை மங்கலான விளக்கின் வெளிச்சம் எடுத்துக்காட்டிற்று. சரியாகப் படுத்துக் கொண்டான். முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான். கண்களைக் கொஞ்சமாக முடிக்கொண்டான்.
“சின்னச்சாமி சின்ன புத்திக்காரா!… என்ன காரியமடா… கசடனே!” என்று ஒரு பகங்கரமான குரல் அவன் நெஞ்சுக்குள்ளேயே கிளம்பியது. ஒரு நிமிடம் அமைதி. அய்யோ! அந்த ஒரு நிமிடத்தில் அவன் இரத்த ஓட்டத்தில் எவ்வளவு கொதிப்பு! நரம்புகள் எல்லாம் நடுங்கின. நாவில் நீரில்லை. உதடுகள் வறண்டு விட்டன. 

 கையை மெதுவாக எடுத்தான். உள்ளங்கையில் வியர்வை கொட்டிற்று. வேட்டியில் துடைத்துக் கொண்டு, கையைக் காந்தாவின் மேல் மெதுவாகப் போட்டான். அவள் ஆயாச மூச்சோடு நகர்ந்து படுத்தாள்.

“ஏய் பாதகா! பரம சண்டாளா! மகளடா மகள்! நீ பெற்ற மகள்!,.. மகா பாதகத்தைச் செய்யாதேடா மடையா! மண்டை வெறி பிடித்தவனே!” அவன் தலையில் ஆயிரம் சம்மட்டி அடிகள். ஆங்காரமான குத்துக்கள். கொடூரமான அரிவாள் வெட்டுக்கள். சின்னச்சாமியின் மார்பு படபடவென்று அடித்துக் கொண்டது. ஈரமற்ற நாக்கால் உலர்ந்துபோன உதடுகளை ஒரு முறை நக்கிக்கொண்டு பேசாமல் படுத்திருந்தான். 

சற்று அமைதி. அந்த அமைதியும் மின்னலாய் மறைந்தது. விஷமேறி நடுங்கும் அவன் ஈர விரல்கள் மீண்டும் காந்தாவின் முகத்தில் விழுந்தது. நத்தைகள் ஊர்வது போல நகர்ந்துகொண்டிருந்தன. அந்த விரல்களைக் காந்தாவின் நடுங்கும் கரம், லேசாகப் பற்றியது… பற்றியது மட்டுமா? மெதுவாக அமுக்கியது. இடிகள் பல இடிப்பதுபோல மின்னல்களும் பல மின்னுவது போல திடீரெனப் புயல் கிளம்பிப் பூகம்பம் ஏற்பட்டுக் கடல்கள் குமுறியெழுந்தது போலத் தடதடவென ஆட ஆரம்பித்தன. 

 இரண்டு இரத்த பாசமுள்ள உடல்கள். கால் பக்கமிருந்த விளக்கைச் சின்னச்சாமி உதைத்தான். அது கீழே சாய்ந்து அணைந்து போய், எண்ணெய் தரையில் கொட்டியபடி உருண்டது. கடவுள் அந்தக் கற்பனைப் பெயரால் ஏற்பட்ட தலைவிதி, தலைவிதிக்காளான சமுதாயம், அந்தச் சமுதாயத்திற்கேற்பட்ட சட்டம், அந்தச் சட்டத்தை முறை தெரியாமல் உடைத்தெறிந்த இரு சண்டாளர்கள், வாழ முடியாதவர்கள்!

பொழுது சரியாக விடியவில்லை. மங்கலான வெளிச்சம் வீட்டுக்குள் நுழைந்தது. சின்னச்சாமி விழித்துக்கொண்டு காந்தாவின் முகத்தைப் பார்க்கத் திரும்பினான். அவன் கண்கள் அவனையறியாமல் மூடிக் கொண்டன. காந்தா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். வேகமாக எழுந்து வெளியே வந்த சின்னச்சாமி நிற்கவேயில்லை; பைத்தியக்காரனைப் போல நடந்து கொண்டேயிருந்தான். காலையில் ஒன்பது மணியிருக்கும்; காந்தா கன்னத்தில் கை வைத்துக்கொண்டு வாயிற்படியில் சாய்ந்திருந்தாள். ‘திலோத்தமா’ சினிமாப்பட விளம்பர வண்டி தெருவில் போய்க் கொண்டிருந்தது.

நூல்:- தஞ்சைச் சிறுகதைகள் 
காவ்யா வெளியீடு 
முதற்பதிப்பு: டிசம்பர் 1999
கதையாசிரியர்: மு.கருணாநிதி

கலைஞர் மு. கருணாநிதி பற்றி...
 தமிழ்ச்சூழலில் கலை இலக்கியத்திற்கு கணிசமான பங்களிப்பு செய்துள்ள கலைஞர் மு. கருணாநிதி திருக்குவளையில் பிறந்தவர். உத்தி, உள்ளடக்கம், நடை ஆகிய அம்சங்கள் முழுமையாக அமைந்த பல சிறுகதைகளைப் படைத்த மு. கருணாநிதி, மணிக்கொடிக்கு அடுத்த காலத்தில் இந்தத் துறையை வளர்க்க உதவிய ஆசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர். 
தேர்ந்த நுட்பமான அவர் சார்ந்துள்ள அரசியல் கொள்கைகளை விமர்சிப்பதோடு விட்டுவிடாமல், சிலர் அவரின் ஒட்டுமொத்த இலக்கியச் சாதனைகளையும் கொச்சைப்படுத்துவது காழ்ப்புணர்வு என்று மட்டுப்படும். 
 இன்னும் சொல்லப்போனால் அவரின் தலைமையை ஏற்றுக் கொண்டவர்கள் கூட அவரின் கலை வெளிப்பாட்டின் இலக்கை கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
“திராவிட இயக்கக் கொள்கையிலும், தமிழ்ப்பற்றிலும் அண்ணாதுரையின் அடிச்சுவட்டில் நடக்கும் மு.க., எழுத்துலகில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளார். நீண்ட நாவல்கள், நாடகங்கள் பல எழுதிய இவர் பல சிறுகதைகளையும் எழுதி அந்தத் துறைக்கு வளம் சேர்த்திருக்கிறார்…” என்று சிட்டி சிவபாதசுந்தரம் குறிப்பிடுகிறார்கள்.
“மு.க.வின் கதைகளில் பல சிறுகதை வடிவ அமைதி கொண்டுள்ளன என்பது தனிச்சிறப்பு. இவர் எழுதியுள்ள ‘குப்பைத்தொட்டி’ என்ற கதை மிகவும் வலிமையானது. யார் தமிழில் தடம்பதித்த சிறுகதைகள் என்ற ஒரு தொகுப்பு தொகுத்தாலும் இந்தச் சிறுகதை விடுபடவே முடியாது. இவரின் இலக்கிய பிரவேசக்காலத்திலேயே தரம் தாழ்ந்து போய் வந்த ‘திலோத்தமை’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வந்த தந்தையும், மகளும் சீரழிந்து போன கதையே ‘வாழமுடியாதவர்கள்.’