சிறுகதைகளில் அண்ணாதுரை
சி.என்.அண்ணாதுரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். இதில் ஆரம்பகாலத்தில் எழுதிய முதல் 40 சிறுகதைகளில் 20 சிறுகதைகளின் கதைக்கரு இங்கே சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது.
* பாமா விஜயம்
ஒரு பணக்கார கிழவன் அழகான பெண்ணை திருமணம் செய்ய ஜோதிடரான ஐயர் மூலம் முயற்சி செய்கிறான். அந்த புத்திசாலி பெண் ஐயரின் விதவை மகள் வேறு ஜாதியில் காதலிப்பதையும் ஐயரின் வேறுஜாதி வைப்பாட்டி பற்றியும் அம்பலப்படுத்துகிறாள்
* தங்கத்தின் காதலன்
ஒரு பணக்கார வீட்டு பையன் ஒரு அனாதை கிறிஸ்தவப் பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி கைவிட்டு வேறொரு திருமணம் செய்துகொள்கிறான். அந்த பெண் தற்கொலை செய்துகொள்ள அவளது குழந்தை விபச்சாரி ஆகிறது
* சரோஜா ஆறணா
ஏழைப் பெற்றொர் பணத்துக்காக பிறந்த பெண்குழந்தையை பணக்கார தம்பதிக்கு விற்பது பற்றியது
* இவர்கள் குற்றவாளிகளா?
17 வயது விதவை ஒரு இளைஞனுடன் ஓடிப்போகிறாள். அவளைக் கொல்ல வந்த தந்தை முதலிரவு அறையில் எட்டிப் பார்க்கிறான். அங்கே தன் மகள் மகிழ்ச்சியாக இருப்பது கண்டு மனம் மாறி திருந்திவிடுகிறார்
* சொல்லாதது
ஏழைப் பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டு பணக்கார மருமகன் ஆன ஒருவன் நொடிந்து மீண்டும் அவளிடமே வந்து சேர்கிறான்
* ஒரு வசீகர வரலாறு
கடை முதலாளியின் விதவை மகளும் கடையில் வேலை செய்யும் இளைஞனும் காதலித்து வீட்டை விட்டு ஓடுகின்றனர்
* காமக் குரங்கு
வயதான பெரும் பணக்காரர் இளமையான பணக்காரியை திருமணம் செய்கிறார். ஆனால் அன்றிரவு நடனமான வந்த ஒரு பெண்ணை கெடுக்க நினைக்கிறார். அவள் தப்பித்து மணமகள் அறையில் தஞ்சம் அடைகிறாள். பார்த்தால் அது பெண் வேடத்தில் இருக்கும் நடனக்காரன். பணக்காரி தன் தகப்பன் வீட்டுக்கே சென்றுவிடுகிறாள். அந்த நடனக்காரன் அவளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு ஊரெல்லாம் இந்த சம்பவத்தை நாடகமாக போடுகிறான்.
* அவள் முடிவு
ஒரு இளம் விதவை எதிர்வீட்டு இளைஞனைக் காதலித்து அவன் ஏமாற்றிவிட தூக்கில் தொங்குகிறாள்
* வாலிப விருந்து
பணக்கார கிழவனின் மனைவி டாக்டருடன் கள்ள உறவு
* பேரன் பெங்களூரில்
ஒரு ஐயரின் விதவை மகளை ஒரு இளைஞன் காதலித்து கர்ப்பமாக்கி பின் கல்யாணம் செய்கிறான் (இதற்கு குடி அரசு பத்திரிக்கை கதைகளைப் பயன்படுத்துகிறான்)
அந்த ஐயருக்கு அதிக பணம் கொடுத்து மந்திரம் ஓதவைத்து பெண் முகத்தை மறைத்து கல்யாணம் நடக்கிறது. பிறகு பணத்தாசையால் சாதிமறுப்பு திருமணம் நடத்திய ஐயர் தன் மகளென்று அறிந்து புலம்புகிறார்
* பிரார்த்தனை
வாலிப வயதில் ஒருவனால் கர்ப்பமாக்கப்பட்டு கைவிடப்பட்ட விபச்சாரியின் மகள் வேறொரு வாலிபனிடம் கெட்டு கர்ப்பமாகிறாள்
* வள்ளி திருமணம்
ஒரு புது மாப்பிள்ளை ஒரு பெண்ணை இரவில் எழுப்பி திருட்டுத்தனமாக தோட்டத்துக்கு அழைத்துப் போகிறான். ஆனால் அந்த பெண் மீது ஆசையுள்ள ஒருவன் அங்கே வந்து மிரட்டி தன்னைக் கட்டிக்கொள்ள சத்தியம் வாங்குகிறான்.
* கைக்கு எட்டியது
மனைவியின் நகையைத் திருடி விபச்சார விடுதிக்கு போகும் ஒருவன் திருப்பி அனுப்பப்பட்டு கோவிலுக்கு செல்ல அங்கே கொள்ளை நடக்கிறது. அதில் தன் நகையை இழந்து திருட்டு பட்டமும் பெறுகிறான்.
* சுடுமூஞ்சி
பண்ணக்கார வியாபாரி ஒரு ஐயருக்கு பணம் கொடுத்து ஜாத்தகத்தை மாற்றி ஒரு பெண்ணின் காதல் திருமணத்தைக் கெடுத்து தனக்கு ரெண்டாவது மனைவி ஆக்குகிறார். உண்மை தெரிந்த பின் அந்த காதலனை வரவைத்து கள்ளக் காதல் தொடர்கிறது
* வேலை போச்சு
பணக்காரன் நோயாளி ஒருவனுக்கு திருமணம் நடக்கிறது. அதற்கு பத்திரிக்கை அடித்தவன் தவறாக அச்சிட அவன் வேலை போகிறது. இரவில் அவன் மண்டபத்தில் படுக்கிறான். அங்கே அந்த திருமணத்துக்கு தலைமை தாங்கிய சாமியாரும் அவருடன் தொடர்புடைய விபச்சாரியும் சந்திக்கின்றனர். அவர்களை மிரட்டி பணம் பிடுங்குகிறான்.
* சொல்வதை எழுதேன்டா
ஒரு ஐயர் கஞ்சப் பேர்வழியான ஒரு பணக்காரரிடம் நிதி கேட்டு ஒரு கடிதம் எழுதி அதை தன் மகனிடம் கொடுக்க அனுப்புகிறார். மகனுக்கு அந்த பணக்காரனிடம் எப்படி பணத்தைக் கறக்க வேண்டும் என்று தனியாக ஒரு கடிதம் எழுதி அனுப்புகிறார். இந்த இரண்டாவது கடிதம் அந்த பணக்காரனிடம் போய்விட பிரச்சனை ஆகிறது. ஐயர் இதை சமாளிக்க தன் கொழுந்தியாளிடம் அந்த பணக்காரர் தவறாக நடந்துகொண்டதாக பத்திரிக்கைகளுக்கு செய்தி அனுப்புகிறார்.
* தேடியது வக்கீலை
சாமியாராக இருந்த ஒருவர் ஒரு மடம் ஆரம்பித்து கல்லா கட்டுகிறார். பின் மடத்தை தன் சிஸ்யனிடம் ஒப்படைத்து விட்டு வெளியூரில் வைர வியாபாரி ஆகிறான். ஆண்டுக்கு இரண்டு மாதம் சாமியாராக மடத்திற்கும் போகிறான். ஒரு கிறிஸ்தவ விதவையை கெடுத்து ஒரு பெண்குழந்தை பெற்று அதை ஒரு பணக்காரனிடம் தத்து கொடுக்கிறான். அந்த பெண்ணை காதலிக்கும் ஒருவன் இந்த உண்மைகளை எல்லாம் அறிந்து நியாயம் கேட்க வரும்போது அவனை அடித்து பைத்தியமாக்கி விடுகிறான்.
* முகம் வெளுத்தது
ஜாதி மாறி திருமணம் செய்துகொண்ட ஒரு பணக்கார விதவையின் மகனுக்கும் அவர்களை ஒதுக்கிவைத்த ஜாதியில் பிறந்த ஒரு பையனுக்கும் பள்ளிப் பருவத்தில் இருந்து மோதல். கலப்பு ஜாதியில் பிறந்தவன் வெல்கிறான்.
* குற்றவாளி யார்?
அண்ணன் கெடுத்து விபச்சாரி ஆக்கி தம்பி வைத்திருக்கும் ஒரு பெண் தன் காதலுடன் திருமணம் செய்து ஓடத் தயாராகும்போது தம்பியிடம் பிடிபட்டு பஞ்சாயத்து தலைவரான அண்ணன் விசாரிக்கும்போது உண்மையை சொல்ல முனைகிறாள். மறுநாள் தம்பியைக் கொல்கிறாள். அண்ணன் அவளைக் கொன்று பழியை பேய் மீது போடுகிறான்.
* மாடி வீடு
ஒரு பணக்காரர் வைப்பாட்டி வீட்டில் இருக்கும்போது ஒரு குரங்கு நகை ஒன்றை போட்டுவிட்டுப் போகிறது. அதை திருடியதாக தண்டனை பெற்ற ஒருவன் அந்த நகையை கொள்ளையடிக்க முயன்று மாட்டிக்கொள்கிறான்
அதாவது அண்ணாதுரையின் ஆரம்ப கால சிறுகதைகளில் வில்லன்கள் பெரும்பாலும் முதலியார் வகுப்பு அல்லது செட்டியார், பிள்ளை போன்ற தமிழ்ச் சாதிகள். ஐயர்கள் இவர்களுக்கு தூபம் போடுபவர்களாகவும் சில சமயம் நேரடியாக வில்லன்களாகவும் இருக்கின்றனர்.
வில்லன்கள் பெரும் பணக்காரர்களாக, பக்திமான்களாக, காமவெறியர்களாக, ஆணாதிக்கவாதிகளாக வருகிறார்கள்.
பெண்கள் ஒன்றுமறியா அப்பிராணி எவனிடமாவது ஏமாந்து கர்ப்பம் தரிப்பதே அவர்கள் தலையெழுத்து.
இவர்களை இழுத்துக்கொண்டு ஓடவோ அல்லது திருட்டுத்தனமாக உடலுறவு கொள்ளவோ கதாநாயகன் வருகிறான்.
வில்லன்களின் சாதி, வியாபாரம், உருவம் போன்றவற்றை விபரமாக கூறிகின்ற அதே வேளையில் கதாநாயகர்கள் என்ன சாதி என்று கூறப்படவே இல்லை.
வந்தேறி சாதிகள் வரவேயில்லை, அப்படியே நாயுடு, ராவ் என ஓரிருவர் வந்தாலும் நல்லவர்களாக இருக்கின்றனர்.
அண்ணாதுரை கூற வருவது ஆதிக்க சாதி ஆண்கள் பெண்களை அடிமைப் படுத்தி வைத்துள்ளனர். தன் வீட்டுப் பெண்களை அடக்கியும் பிற அபலைப் பெண்களை சீரழித்தும் வருகின்றனர். அந்த சோரம் போன பெண்களுடன் கள்ள உறவு கொள்வது பெரிய புரட்சி.
பக்தி, சமூக ஒழுக்கம் எல்லாம் மீறப்பட வேண்டியவை.
எக்காரணம் கொண்டும் ஒரு பெண்ணின் இளமை மட்டும் வீணாகிவிடக் கூடாது.
இதை அண்ணாதுரையின் தனிப்பட்ட மனக்குமுறலாகவே காணமுடிகிறது. அண்ணாதுரை பகலில் நடனமும் இரவில் விபச்சாரமும் செய்யும் சாதியில் பிறந்தவர். அதனால் அவரது பார்வை அவர் வளர்ந்த ஒழுக்கமற்ற விபச்சார சூழல் அடிப்படையிலேயே உள்ளது. கதையில் வரும் பெண்கள் அவர் குடும்பத்துப் பெண்கள்தான். அவரது தாய் பங்காரம்மா ஒரு முதலியாருக்கு சில காலம் வைப்பாட்டியாக இருந்துள்ளார். இதுவே அண்ணாதுரையின் முதலியார் வெறுப்புக்குக் காரணம்.
ஆனால் அண்ணாதுரை கதைகளில் வந்தேறி பிராமணர்களும் ஆதிக்க சாதிகளும் ஏற்படுத்தி தேவதாசி முறையை அதனால் ஏற்பட்ட பாதிப்பை தமிழின பார்ப்பனர் மற்றும் தமிழ்ச்சாதிகள் மீது திருப்பிவிடும் முயற்சியும் உள்ளது.
ரஷ்ய அரசருக்கு எதிராகவும், ஸ்பெயின் அரசருக்கு எதிராகவும், மைசூர் அரசருக்கு எதிராகவும், கற்பனையான அரசுகளுக்கு எதிராகவும் கூட சிறுகதை எழுதியுள்ளார் ஆனால் ஆங்கில அரசுக்கு எதிராக ஒரு வரி கூட எழுதவில்லை.
ஆங்கிலேய ஆட்சியின் அத்தனை சுரண்டலையும் அரசு அதிகாரிகள், வியாபாரிகள், முதலாளிகள், நிலவுடைமையாளர், சாமியார்கள் ஆகியோர் மீது திருப்பிவிட்டுள்ளார்.
ஜப்பானுக்கு எதிராக பர்மாவில் வீரமரணம் அடைந்த பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்த தமிழரை பாராட்டி எழுதியுள்ளார்.
1947 க்குப் பிறகு தனது 'சாதிவெறி ஆணாதிக்க காமவெறி எதிர்ப்பு' எனும் பார்வையில் இருந்து மாறுகிறார். மக்கள் கொடிய வறுமையில் வாடுவதாக சித்தரித்து கதைகள் எழுதத் தொடங்கினார்.
1947 க்கு பிறகும் கூட ஆங்கிலேயரை எதிர்த்து மட்டும் எழுதவேயில்லை!
No comments:
Post a Comment