ஈழம் போற்றும் வாணி ஜெயராம் ஐயங்கார்
துரைச்சாமி ஐயங்கார் - பத்மாவதி தம்பதிக்கு வேலூரில் பிறந்த கலைவாணி எனும் இயற்பெயர் கொண்ட வாணி ஜெயராம் ஈழத்திற்காக பல பாடல்கள் பாடியுள்ளார்.
அப்பாடல்கள் வருமாறு,
1) "நல்லூர் வீதியில் நடந்தது யாகம்
நாலு நாள் ஆனதும் சுருண்டது தேகம்"
2) "வீசும் காற்றே தூது செல்லு
தமிழ் நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு
ஈழத்தில் நாம் படும் வேதனைகள் - அதை
எங்களின் சோதரர் காதில் சொல்லு"
(களத்தில் கேட்கும் கானங்கள் - தொகுப்பு)
3) "பாடும் பறவைகள் வாருங்கள்
புலிவீரன் திலீபனைப் பாடுங்கள்"
(களத்தில் கேட்கும் கானங்கள் - தொகுப்பு)
4) "தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்"
(களத்தில் கேட்கும் கானங்கள் - தொகுப்பு)
5) "பரணி பாடுவோம் புதியதானதோர் பரணி பாடுவோம்"
(பாசறைப் பாடல்கள் - தொகுப்பு)
6) "மேகங்கள் இங்கு வாருங்கள்"
(பாசறைப் பாடல்கள் - தொகுப்பு)
7) "வீரன் மண்ணில் புதையும் போது"
(பாசறைப் பாடல்கள் - தொகுப்பு)
8) "தலை வாரி பூச் சூடினேன்"
9) "செந்தமிழ் வீரனடா
சீறிடும் வேங்கையடா"
10) 2007 இல் கூட காசி ஆனந்தன் எழுதிய "செண்பகமே செண்பகமே சிறகு விரித்து வா" (ஈட்டி முனைகள் - தொகுப்பு) எனும் பாடலையும் பாடியுள்ளார்.
ஈழ மக்கள் இணையம் வாயிலாக அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நன்றி: ஐங்கரன் விக்கினேஸ்வரா
வணக்கம் லண்டன் (இணையம்)
பி.கு: பிரபல தமிழ்ப் பாடகிகளில் இவர் ஒருவர் மட்டுமே தமிழர் ஆவார்.
No comments:
Post a Comment