Saturday 9 April 2016

பரம்பிக்குளம் அணையிலும் தலைவிரித்தாடும் மலையாள இனவெறி

பரம்பிக்குளம் அணையிலும் தலைவிரித்தாடும்
மலையாள இனவெறி
××××××××××××××××××

தமிழகத்தின் கட்டுப்பாட்டில் கேரளாவிற்குள் இருக்கும் பரம்பிக்குளம் அணைக்கு பராமரிப்பு பணிக்காகச் சென்ற தமிழக மின் வாரிய ஊழியர்களை திரும்ப வரவிடாமல் பிடித்துவைத்துக்கொண்டு கேரள வனத்துறை அட்டூழியம்.

கோவை மற்றும் திருப்பூர் மக்களின் குடிநீர் ஆதாரம் மற்றும் பாசனம் பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்தின் (பி.ஆர்.பி) மூலம் வரும் நீரை நம்பியுள்ளது.
இந்த திட்டம் வீணாகக் கடலில் கலக்கும் நீரை தமிழகத்திற்கு திருப்பிவிட 1958ல் போடப்பட்டது.

இத்திட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு ஆகிய அணைகள் கேரளாவுக்குள் உள்ளன.
இவ்வணைகளைக் கட்டியது தமிழக அரசே ஆகும்.
இதனை பராமரிக்கும் பொறுப்பு தமிழக அரசிடம் உள்ளது.
ஆனால் கேரளா இவ்வணைகளைப் பராமரிக்க தமிழகம் சார்பாக போவோரை படுத்தும்பாடு சொல்லிமாளாது.

சமீபகாலமாக அதிகரித்துள்ளது இனவெறிப்போக்கு.
பரம்பிக்குளம் அணைக்குச் செல்லும் தமிழக பொதுப்பணித் துறையினரை மறித்துத் திருப்பியனுப்புவதும்,
அவமானப்படுத்துவதும்,
பணிகளைச் செய்யவிடாமல் இடையூறு செய்வதுமாக கேரள அதிகாரிகள் திமிருடன் நடந்துகொள்கின்றனர்.

கடந்த ஏப்ரல் 2ம் தேதி பரம்பிக்குளம் அணையை பழுதுபார்க்கச் சென்று திரும்பிக்கொண்டிருந்த தமிழக மின்வாரிய ஊழியர்களை, ஆனைப்பாடி சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தி குற்றவாளிகளைப் போல பூட்டிவைத்துள்ளனர்.
தமிழக பொதுப்பணித்துறை கெஞ்சி கூத்தாடி விடுவிக்கவைத்துள்ளனர்.
இவர்களை தமிழகத்தில் இறக்கிவிட்டு பரம்பிக்குளம் சென்ற சரக்குந்தை இரவு முழுவதும் வனப்பகுதியில் காத்திருக்கவைத்தனர்.
தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேரளா வனத்துறை உயர்அதிகாரிகள் அனைவரிடமும் தொலைபேசியில் கெஞ்சியும் பயனில்லை.

ஏற்கனவே அண்மையில் பரம்பிக்குளம் காவல்நிலையத்தை திறந்துவைத்தபோது "தமிழக- கேரளா எல்லையில் உள்ள செமணாம்பதியில் இருந்து தேக்கடி செட்டில்மெண்ட் வழியாக பரம்பிக்குளத்திற்கு வழித்தடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பேசினார்.
செமணாம்பதி வழியாக புதிய வழித்தடம் அமைக்கப்பட்டால் வனப்பகுதியை அழிக்கவேண்டிவரும்.
இதனால் இயற்கை பாதிப்பதுடன்,
வன உயிரினங்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி விடும்.
தமிழகத்தைப் பழிவாங்குவதற்காக எதையும் செய்ய தயாராக உள்ளனர் மலையாள அரசியல்வாதிகள்.

தமிழகத்தின் கட்டுப்பாட்டில் கேரளாவிற்குள் இருக்கும் அணைகளை கேரள அரசிடம் ஒப்படைக்குமாறு 1992 ல் இருந்தே கேரளா கேட்கிறது.
வீணாக கடலில் கலக்கும் நீரை தமிழகத்திற்கு வழங்குவதில் மலையாளிகளுக்கு விருப்பமில்லை.
அவர்கள் இப்படி செய்வது அணைகளை அவர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்றுதான்.
அணைகளை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டால் தமிழகத்திற்கு குடிநீர் வழங்குவதில் பிரச்சனை செய்து தமிழக மக்கள் மீதான இனவெறியைத் தீர்த்துக்கொள்ள இவ்வாறு செய்கிறார்கள் மலையாளிகள்.
------------------
சோற்றுக்கு நம்மை நம்பியிருக்கும் ஒன்றரை கொடி மலையாளி கூட நம் தலையில் ஏறி மிதிக்கும் அவலமெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்குப் பொறுக்கப்போகிறோம்?

No comments:

Post a Comment