தாமிரபரணி அன்னையைக் காப்பாற்றுங்கள்
'திருநெல்வேலிக் காரன்டா' என்று வாய்ச்சவடால் விட்டால் மட்டும் போதாது,
கொஞ்சமாவது சூடு சுரணையும் வேண்டும்.
தாமிரபரணி நீர் மக்களுக்கே பத்தாமல் நெல்லை தூத்துக்குடி மாவட்ட கிராமங்கள் தவித்துக் கொண்டிருக்க,
ஆற்றில் அணைகட்டி நீர்தேக்கி குடிநீர் பற்றாக்குறையை போக்க வக்கில்லாத அரசு,
விண்ணப்பம் அனுப்பிய பத்தே நாட்களில் பெப்சி ஆலை அமைக்க அனுமதி வழங்கிவிட்டது.
கங்கைகொண்டானில் வெறும் ரூ.3564 வாங்கிக்கொண்டு 99 ஆண்டுகளுக்கு 36 ஏக்கர் நிலம் கொடுக்கிறது.
இந்த நிலத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ரூ.36 கோடி !!!!!
முப்பத்தியாறு கோடி எங்கே மூவாயிரத்தி ஐநூறு ரூபாய் எங்கே?
அதாவது ஒரு ஆண்டுக்கு வெறும் 36 ரூபாயில் இவ்வளவு பெரிய நிலத்தை பெப்சி வாடகைக்கு எடுத்துவிட்டது.
நிலம் போனதைவிட கொடுமை தாமிரபரணியின் நீர்வளம் விற்கப்பட்ட கொடுமை
ஆயிரம் லிட்டர் வெறும் 37 ரூபாய்.
அதாவது ஒரு லிட்டர் வெறும் 40பைசா.
ஒரு நாளுக்கு ஆயிரம் லிட்டர் இல்லை 15 லட்சம் லிட்டரை பெப்சி ஆலை உறிஞ்சும்.
ஏற்கனவே திருநெல்வேலி தொழிற்பேட்டையில் உள்ள கோ-கோ- கோலா நிறுவனம் தாமிரபரணி ஆற்று நீரை நாள் ஒன்றுக்கு 9 இலட்சம் லிட்டரை, உறிஞ்சி வருகிறது.
இங்கே ஆயிரம் லிட்டருக்கு 47 பைசா வீதம் பெப்சி நிறுவனம் கொடுக்கிறது.
அதாவது கங்கைகொண்டானை விட பத்துமடங்கு மலிவு.
எவனாவது 50 பைசாவுக்கு ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொடுப்பானா?
தமிழக அரசு கொடுக்கிறது.
பெப்சி நிறுவனத்தின் முகவராக இருந்து, திருநெல்வேலியில் குளிர்பான உற்பத்தி செய்யும் பணியைச் செய்யப்போவது 'பிரதிக்ஷா பிஸ்னஸ் சொலியூசன்' என்ற ஐதராபாத்தைத் தலைமையாகக் கொண்ட ஆந்திரா கம்பெனி.
ஏம்ப்பா அங்கேதான் இதை விட பெரிய ஆறு கிருஷ்ணா ஓடுகிறதே அதை உறிஞ்சி பெப்சி ஆக்கி கொள்ளை லாபம் பார்க்கலாமே?!
மற்ற மாநிலத்தான் எதிர்ப்பதெல்லாம் இந்தியாவின் குப்பைத் தொட்டியாகிவிட்ட தமிழகத்தின் தலையில் போடப்படவேண்டுமா?
மிகக்கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஸ்டெர்லைட் ஆலை மராட்டிய மாநிலம் இரத்தனகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டது.
உள்ளாட்சி நிர்வாகம் அந்த பன்னாட்டு ஆலையை எதிர்த்து நின்றது.
அனுமதியும் கொடுக்கவில்லை.
மராத்திய மக்கள் கடுமையாக போராட்டம் நடத்தி ஆலையை விரட்டியத்தார்கள்.
அங்கிருந்து வெளியேறி நேராக தூத்துக்குடிக்கு தமிழக அரசின் அபார வரவேற்போடு வந்து அமர்ந்தது ஸ்டெர்லைட்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் இதுவரை எண்ணற்ற உயிர் பாதிப்புகள், சுற்றுசூழல் பாதிப்புகள் அப்பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.
பலர் உயிரிழந்தும் உள்ளனர்.
தமிழகத்தில் கேள்விகேட்க எவன் இருக்கிறான் என்ற எகத்தாளம்தானே இவர்களுக்கு.
தென்பாண்டி மக்கள் அவ்வளவு கையாலாகாத முண்டங்களாகிப் போனோமா?
ஆமாம் தென்தமிழகத்தில் என்ன அவ்வளவு தண்ணீர் செழிப்பா?
இல்லை.
நெல்லை- தூத்துக்குடி மாவட்டத்தில் 86,000 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது.
பாசன உறுதி சட்டப்படி விளைநிலங்களுக்கு கிடைக்கவேண்டிய நீர்கூட முறையாக கிடைப்பது இல்லை.
நெல்லை-தூத்துக்குடி மாவட்ட கடலோர கிராமங்களில் கடந்த 15ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது.
நல்ல தண்ணீர் லாரி மூலம் மட்டுமே கிடைக்கிறது.
ஒரு குடம் தண்ணீர் ரூ.5.
மக்களின் அத்தியாவசியத் தேவையான குடிநீரை தடுத்து
விவசாயத்தின் மூலம் கிடைக்கும் உணவையும் தடுத்து
அவர்கள் வயிற்றிலடித்து
50 பைசாவுக்கு அதை அமெரிக்கா கம்பெனிக்கு தாரைவார்க்கும் கொள்ளைக்கார அரசுகளை என்னவென்று சொல்வது?
கருணாநிதியும் ஜெயலலிதாவும் வாய்க்கு ருசியாகத் தின்று கொழுக்க திருநெல்வேலிக்காரன் தண்ணீர்குடமேந்தி பிச்சை எடுக்க வேண்டுமா?
இதைத் தடுக்க என்ன வழி?
வழக்கு போடலாமா?
போடலாம்.
ஆனால் தொழிற்சாலை பற்றிய வழக்குகளில் கடந்த 15 ஆண்டுகளாக வந்துள்ள தீர்ப்புகள் ஆலைகளுக்கு சாதகமாகவே இதுவரை வந்துள்ளன என்பதே கசப்பான உண்மையாகும்.
கொள்ளைக்காரக் கூடாரமான தி.மு.க சார்பில் அப்பாவு என்பவர் வழக்குப் போட்டுள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
தீர்ப்பு எப்படியும் கம்பெனிக்குச் சாதகமாகத்தான் வரும் என்று உறுதி செய்துகொள்ள இதுவே போதும்.
பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்.
கேரளாவில் பாலக்காடு மாவட்டம், பெருமாட்டி ஊராட்சியில் பிளாச்சிமடாவில் அமெரிக்காவின் கோக் ஆலை அமைக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரமான குடிநீர், விவசாயம், சுற்றுசூழல் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஐந்து ஆண்டு காலம் மக்களின் தொடர்ந்த போராட்டத்தின் விளைவாக கேரளா உயர்நீதிமன்றம் அந்த கொக்கோ கோலா ஆலைக்கு தடை விதித்தது.
ஆனால் டெல்லி உச்சநீதிமன்றம்
“அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது.
தொழில் வளர்ச்சிக்கு இது போன்ற ஆலைகள் தேவை”
எனக்கூறி கொக்கோ-கோலா ஆலைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது.
சோர்ந்து விடவில்லை கேரள மக்கள்.
இன்று வரை மக்கள் போராட்டம் மூலமே அந்த ஆலை (கொக்கோ கோலா) பிளாச்சிமடாவில் இயங்க முடியாமல் மூடப்பட்டு உள்ளது.
உச்ச நீதிமன்றத்தையே மண்ணைக் கவ்வ வைத்த மலையாள மண்ணின் மக்களைப் பார்த்தாவது சூடு சுரணை வரவேண்டாமா?
அங்கே விரட்டப்பட்டவன் நேராக தமிழகத்திற்கு வந்து பத்தே நாட்களில் அனுமதி பெற்று கட்டிட வேலைகளையும் தொடங்கிவிட்டான் என்றால் இன்றைய ஜெயலலிதா அரசின் பணவெறியை அறிந்துகொள்ளுங்கள்.
இவ்வளவு ஏன்?
ஈரோடு, பெருந்துறை சிப்காட்டில் கொக்கோ-கோலா நிறுவனம் 2015 ல் ஆலைக் கட்டுமான பணிகள் கூட தொடங்க முடியாமல் மக்களின் ஒன்றுபட்டு உறுதியாகத் தொடர்ச்சியாகப் போராடி விரட்டியடித்தார்கள்.
நீதிபதி-சந்துரு அவர்களே கூறிவிட்டார்.
மீத்தேன் பிரச்சனை பற்றி 2015 இல் பேசும் போது
"சட்டப்படி நீதி கிடைக்க நீதிமன்றம் செல்லுங்கள்.
தர்மப்படி நீதி கிடைக்க வேண்டும் என்றால் தெருவிற்கு வந்து போராடுங்கள்" என்று.
திருநெல்வேலிக் காரனெல்லாம் வெறும் வாய்ச்சவடால் விடத்தான் பிறந்தவனா?
உங்கள் உடலில் ஓடும் ரத்தம் தாமிரபரணித் தாய் ஊட்டிய பால் என்பதை மறந்துவிட்டீர்களா?
பெப்சி கோககோலா போன்றவை நம்மிடம் உறிஞ்சப்படும் ரத்தம் என்பதை இனியேனும் உணர்வீர்களா?
முழுக்க முழுக்க தமிழகத்தில் உற்பத்தி ஆகி,
நீராதாரத்திற்கு வேறெதையும் நம்பியிராத,
தமிழகத்தில் கடலில் கலக்கும் ஒரே வற்றாத ஜீவநதி தாமிரவருணி.
பாலாறைத்தான் தெலுங்கனிடமிருந்து காப்பாற்று துப்பில்லை.
காவிரியைக் கன்னடனிடமிருந்து காப்பாற்றத் துப்பில்லை.
தாமிரவருணியையாவது தெலுங்கு கம்பெனியிடமிருந்தும்,
கன்னட அம்மாவிடமிருந்தும் காப்பாற்றுவோம்.
போராடுவோம் திருநெல்வேலிக்காரர்களே!
போராடுவோம் தூத்துக்குடி மக்களே!
போராடுவோம் தமிழ் மக்கள் அனைவரும்.
#ImWithSeeman
Wednesday 13 April 2016
தாமிரபரணி அன்னையைக் காப்பாற்றுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment