Friday, 8 April 2016

பாவாணர் போற்றும் பார்ப்பனர்கள்

பாவாணர் போற்றும் பார்ப்பனர்கள்

பாவாணர் நீலகண்ட சாஸ்திரியை எவ்வளவு கடுமையாக சாடுகிறார் பாருங்கள்

“ ஆரியத்தை யெதிர்த்துத் தமிழைப் பேணிய நக்கீரர், பரிதிமாற் கலைஞர், ஸ்ரீநிவாச ஐயங்கார், கிருட்டிணசாமி ஐயங்கார் முதலிய பிராமணர் பலர் வையாபுரி பிள்ளையினும் தெ.பொ.மீ.யினும் சிறந்த தமிழரே.

ஆதலால் இனிமேல் பிராமணர் அனைவரும் பிணக்கின்றித்
தமிழரோடு பிணைந்து வாழ்ந்து
தமிழ்நாட்டரசிலும் தலைமை தாங்கித்
தமிழையே பேணித் தமிழராகவே விளங்குவாராக”
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் தமது இறுதிக் கட்டுரையில்
(செந்தமிழ்ச் செல்வி, டிசம்பர் 1980)
---------------
பாவாணர் நீலகண்ட சாஸ்திரியை இனவெறியர் மொழிவெறியர் என்கிறார்.
இதனால் அவர் தமிழரல்லாதார் என்று அறியலாம்
-----------------
"தமிழ் வரலாற்றிற்கெட்டாத தொன்முது பழைமையான உலக முதன் மொழியாதலால்,
கிறித்துவிற்குப் பிற்பட்ட காலத்து முக்கழக வரலாற்றிற் பல காலமுரண்பட்ட குழறுபடைகள் குழம்பிக் கிடப்பது இயல்பே.
அச் சிக்கல்களைக் களைந்து உண்மைகளை வடித்தெடுத்தல் வரலாற்றாராய்ச்சியாளன் கடமையாகும்.
அக் கடமையை மேற்கொண்டே,
திரு. (P.T.)சீநிவாசய்யங்காரும் பேரா.(V.R.)இராமச்சந்திர தீட்சிதரும்
தமிழரின் தென்னாட்டுப் பழங்குடிமையைத் தத்தம் நூல்களில் ஐயந்திரிபற நாட்டிச் சென்றனர்.

ஆயினும், எல்லையற்ற இனவெறியும் மொழிவெறியும் பித்தொடு கலந்த பேய்கோள் போல் வருத்துவதால்,
பேரா. (கே) நீலகண்ட சாத்திரியாரும்
அவர் மாணவரான பர். (Dr.) (N.) சுப்பிரமணியனாரும், பிறரும்,
இடைக்காலத்தில் தீத்திறமாகவும் தெற்றுமாற்றாகவும் புகுத்தப்பட்ட சமற்கிருத மேம்பாட்டை என்றும் போற்றிக் காத்தற்பொருட்டு,
தமிழரின் குமரிநாட்டுத் தோற்றத்தை விடாப்பிடியாய் மறைத்து வருகின்றனர்.

பி.தி.சீநிவாசையங்கார் 'இந்தியக் கற்காலம்' (Stone age in India),
'ஆரியர்க்கு முன்னைத் தமிழ்க் கலை நாகரிகம்' (Pre-Aryan Tamil Culture),
'தமிழர் வரலாறு' (History of the Tamils)
முதலிய நூல்களையும்;

வி.ரா. இராமச்சந்திர தீட்சிதர்
'தமிழர் தோற்றமும் பரவலும்' (Origin and Spread of the Tamils),
'வரலாற்றிற்கு முன்னைத் தென்னிந்தியா' (Pre-Historic South India)
முதலிய நூல்களையும், எவரும் மறுக்க முடியாதவாறு திறம்பட எழுதிப் போயினர்.

ஆயின், அவர் மறைந்தபின்,
பேரா. கே. நீலகண்ட சாத்திரியார் அவர் கொள்கைக்குங் கூற்றிற்கும் நேர்மாறாக,
ஆரிய வேதத்தையே அடிப்படையாகக் கொண்டு இந்திய வரலாற்றை வடக்கினின்று தொடங்கி,
உண்மைக்கும் உத்திக்கும் ஒவ்வாவாறு பேரன் பாட்டனைப் பெற்றான் என்பதுபோல்,
தமிழர் வரலாற்றைத் தலைகீழாக வரைந்துள்ளார்.
தமிழன் பிறந்தகம் தெற்கில் முழுகிப் போன குமரிநாடென்னும் அடிப்படையிலேயே,
தமிழின் சிறப்பையும் தமிழன் உயர்வையும்,
உண்மையாக உணர்தலொண்ணும்.

'வரலாற்றிற்கு முன்னைத் தென்னிந்தியா' என்னும் வரலாற்றுப் பொத்தகம் சென்னைப் பல்கலைக்கழக வெளியீடாயிருந்தும்,
அதைப் படியாமையாலோ,
தம் இயற்கையான அடிமைத்தனத்தாலோ,
வையாபுரித் தன்மையாலோ,
தலைமைப் பதவித் தமிழ்ப் பேராசிரியரும் பேராசிரியர் நீலகண்ட சாத்திரியாரை எதிர்க்கத் துணிவதில்லை.

அதனால், தமிழின் தொன்மையும், முன்மையும், தாய்மையும், தலைமையும் தமிழ்நாட்டிலும் ஒப்புக்கொள்ளப்படாமலே யிருக்கின்றன"

(“செந்தமிழ்ச் செல்வி” திசம்பர் 1980)
--------------------------
பி.கு:- நீலகண்ட சாஸ்திரி ஒரு தெலுங்கர் என்று நரசய்யா "தமிழ்நாட்டு வந்தேறியான தெலுங்கு வடுகர் தமிழ்நாட்டுக்குச் செய்தது என்ன?" என்ற (மின்தமிழ்) கூகுள் இழையில் கூறியுள்ளார்.
ந.பிச்சமூர்த்தியும் கு.ப.ரா உம் கூட தெலுங்கர்களாம்.
-----------------------------------
வருவான் தமிழ்ப் பார்ப்பான் தமிழ்த்தேசியம் நோக்கி

No comments:

Post a Comment