Friday, 15 April 2016

தமிழ் இசுலாமியர் அப்பாவை "அத்தா" என்றழைப்பது ஏன்?

தமிழ் இசுலாமியர் அப்பாவை "அத்தா" என்றழைப்பது ஏன்?

ஆற்றின்ப வெள்ளமே "அத்தா" மிக்காய் நின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்....."
--  திருவாசகம்

பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா!
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை
வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
"அத்தா!" உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?
- சுந்தரர்__தேவாரம் .

இங்கே #அத்தா... என்ற சொலாட்சி பழந்தமிழில் தந்தை என்றபொருளுடன் மக்கள்வழக்கில் இருந்துள்ளது.

இறைவனை தந்தைஎன்று அழைப்பது வழக்கு.

மாணிக்கவாசகர் திருவாசகத்தில் தந்தைக்கும் மேலானவனாய் இறைவனைக் கூறுகிறார்

சுந்தரர் தன்னை ஆட்கொண்ட இறைவனை தந்தையே என்று சரணாகதி அடைகின்றார்.

இந்தசொல்லாட்சி வழக்கு இன்றளவும் தமிழர் வழக்கில் தமிழ் இசுலாமியர்கள் கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் தன்களின் தந்தையை #அத்தா என்றே இன்றளவும் அழைக்கின்றனர்.

தமிழ் சொல்லாட்சிகள், வழக்காடல் என்பதெல்லாம் வந்தேறிகளிடம் இல்லை.
அதை அவர்கள் சிறுமையாகவும் நினைத்தார்கள்.

தமிழர் வாழ்வும் வளமும்மொழியில் உள்ளன, நமது பண்பாட்டைக் காப்பதற்கு மொழியே முதன்மை.

நம்மிடம் இருக்கும் சடங்குகள், சொல்லாட்சிகள் இவைகளை நாம் கவனிக்க வேண்டும்.
--- நெற்குப்பை காசிவிசுவநாதன். 15-04-2016.

No comments:

Post a Comment