Showing posts with label ராமன். Show all posts
Showing posts with label ராமன். Show all posts

Tuesday, 15 May 2018

சிவனடியாரும் போற்றும் இராமன்!

சிவனடியாரும் போற்றும் இராமன்!

இராவணன் சிறந்த சிவ பக்தன் என்று பலரும் கூறுகிறார்கள்.
ஆனால் சைவ அடியார்களோ இராமனையே போற்றியுள்ளனர்.

சங்க இலக்கியச் சான்றுகளுடன் ஏற்கனவே வெளியிட்ட "இராமனும் தமிழனே" எனும் பதிவினை அனைவரும் படித்திருப்பீர்கள்.

மேலதிக சான்றுகளாக இப்பதிவில் பிற்காலத்து இலக்கியங்களான சைவ மதத்தின் பக்தி இலக்கியங்களைப் பார்ப்போம்.

முதலில் திருநாவுக்கரசர் தேவாரம்,
திருவலம்புறப்பதிகம்....

செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ்
சேதுபந் தனஞ்செய்து சென்று புக்குப்
பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற
போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ

என்று பாடுகிறது.

அதாவது சிவந்த கண்களையுடைய திருமால் வில்லை ஏந்திக் குரங்கு சேனையோடு
சேதுக் கடலில் அணைகட்டி (இலங்கை) சென்றடைந்து
மேம்பட்ட பலபோர்கள் செய்து வென்றழித்த அரக்கனுடைய (இராவணனுடைய) நீண்ட கிரீடங்கள் பொடியாய் விழ்ந்தன.

மேலும் நாவுக்கரசர் இராமேச்சுரப் பதிகத்திலும்....

வன்கண்ணர் வாளரக்கர் வாழ்வினை ஒன்றறியார்
புன்கண்ணர் ஆகிநின்று போர்கள் செய்தாரை மாட்டிச்
செங்கண்மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தைத்
தங்கணால் எய்த வல்லார் தாழ்வராம் தலைவன் பாலே

என்று பாடுகிறார்.

அதாவது, வன்மையை காட்டும் கண்களை உடைய அரக்கர்கள் வாழ்க்கை பற்றி ஒன்றும் அறியாராய்த் துன்புறுத்தும் இயல்பினராய் நின்று போர்களைச் செய்ய,
அவரை அழித்துச் சிவந்த கண்களை உடைய திருமால் அமைத்த இராமேச்சுரக் கோயிலைத் தம் கண்ணால் தரிசிக்க முடிந்தவர்கள் தலைவன் (அதாவது இறைவனாகிய சிவன்) பக்கத்திலிலேயே தங்கும் வாய்ப்பினைப் பெறுவர்.
--------
அடுத்து திருஞானசம்பந்தர் தேவாரம், 3ம் திருமுறை....

தேவியை வவ்விய
தென்னிலங்கை யரையன் திறல் வாட்டி
ஏவியல் வெஞ்சிலை அண்ணல்
நண்ணும் இராமேச் சுரத்தாரை

என்று பாடுகிறது.

அதாவது, சீதையைக் கவர்ந்த தென்னிலங்கை மன்னனின் (இராவணனின்) வலிமையை அழித்து,
அம்பு எய்யும் வில்லேந்திய இராமன் வழிபட்ட திருஇராமமேச்சுரம்

மேலும் ஞானசம்பந்தர் திருமறைக்காட்டுப் பதிகத்திலும்...

அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
இரக்கம் ஒன்றிலீர் எம்பெருமானிரே

என்று (இராவணன் கயிலாய மலையைப் பெயர்க்கையில்) சிவன் தன் கால் விரலால்  அழுத்தியதைக் கூறி 'இரக்கம் இல்லையா எம்பெருமானே' என்று சிவனை செல்லமாகக் கடிந்துகொள்கிறார்.

அதோடு நில்லாது நமது ஞானசம்பந்தர் கோளறு பதிகத்திலும்...

ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தன்னோடும் இடரான வந்து நலியா

என்று ஒரு வரியைக் கூறுகிறார்

அதாவது, ஏழு கடல்களால் சூழப்பட்ட இலங்கை அரசன் (இராவணன்) போன்ற அரக்கர்களால் எந்த இடரும் ஏற்பட்டு நம்மை வருத்தாது என்று பாடுகிறார்.

-------- 
அருணகிரிநாதர் முருகன் மீது பாடிய திருப்புகழ் இராமனைப் புகழ்வதையும் இங்கு கூறலாம்.

சமத்தி னாற்புகழ் சனகியை நலிவுசெய்
திருட்டு ராக்கத னுடலது துணிசெய்து
சயத்த யோத்தியில் வருபவ னரிதிரு மருமகப் பரிவோனே

தன்னுடைய சமத்தினால் (சாமர்த்தியத்தால்) புகழுக்குரிய சானகியை (சீதையை) துன்பத்துக்கு ஆளாக்கி திருடிச்சென்ற அரக்கனுடைய (ராவணனுடைய) உடலைத் துண்டாக்கி,
வெற்றியுடன் (சயத்து) அயோத்தி நகருக்குத் திரும்பி வந்த அரியின் (திருமாலின்) அழகிய மருமகனே!
-------
இராமனை ஆரியன் என்று திரிக்கும் திராவிடவாதிகள் காட்டிய தவறான வழியில் சென்று
தமிழ் இலக்கியங்கள் போற்றும் தமிழனான இராமனை வடவருக்கு தாரைவார்த்துவிட்டு
"நாங்கள் இராவணனின் பிள்ளைகள்" என்று பிதற்றும் இளைய தலைமுறையினர் சற்று உணர்ச்சிவசப்படாமல் உண்மையை அறிய முற்படவேண்டும்.

Thursday, 18 September 2014

இராவணனைப் புகழும் பார்ப்பனர்

இராவணனைப் புகழும் பார்ப்பனர்

பல சாதியாருக்கு பூணூல் போட்டு பார்ப்பனராக்கிய பாரதியர் என்ற தமிழ்ப் பார்ப்பனர், இன்றைய பிராமணர்களைப் போல (வடயிந்தியச் சத்திரியனான) ராமனைப் போற்றவில்லை (தமிழ்ப் பார்ப்பனன்) இராவணனைத் தான் புகழ்ந்துள்ளார்.

அவர் 1935ல் எழுதிய 'குதிரைக் கொம்பு' கதையிலிருந்து சில வரிகள்.

அயோத்தி நகரத்தில் அரசு செலுத்திய தசரதராஜன் பிள்ளையாகிய ராமன் தனக்கு மூத்தவளாகிய பரதனுக்கு பட்டங் கட்டாமல் தனக்கே பட்டங்கட்டிக் கொள்ள விரும்பித் தனது தந்தையை எதிர்த்துக் கலகம் பண்ணினான். பிதாவுக்கு கோபமுண்டாய், ராமனையும் லக்ஷ்மணனையும் ராஜ்யத்தை விட்டு வெளியே துரத்தி விட்டான்.
அங்கிருந்து அவர்கள் மிதிலை.நகரத்துக்கு ஓடிபோய், அந்நகரத்து அரசனாகிய ஜனகனைச் சரணமடைந்தார்கள்.//
ஜனகராஜன் மகளாகிய சீதையின் அழகை கண்டு மோகித்து, அவளை திருட்டாகக் கவர்ந்து கொண்டு தண்டைகாரண்யம் புகுந்தான். அங்கு ராமர், லக்ஷ்மணர் முனிவர்களையெல்லாம் பலவிதங்களிலே ஹிம்சை செய்தனர்//
சூர்ப்பநகை தேவியின் காதில் பட்டது. ராவணனின் தங்கையாகையாலும், பிராமணக் குலமானபடியினாலும், ரிஷிகளுக்கு ராமன் செய்யும் துன்பத்தைப் பொறுக்கமாட்டாதவளாய், அவள் அந்த ராமனையும் அவன் தம்பி லக்ஷ்மணனையும் பிடித்துக் கட்டிக் கொண்டுவரும்படி தனது படையினிடம் உத்தரவு கொடுத்தாள்//
அப்படியே ராமலக்ஷ்மணரைப் பிடித்துத் தாம்பினாலே கட்டிச் சூர்ப்பநகையின் சன்னிதியிலே கொண்டு சேர்த்தனர்//
சீதை சூர்ப்பநகையிடம் தனியாக வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கையில், ராமன் தன்னை வலிமையாலே தூக்கிக் கொண்டு வந்தானென்றும், தனக்கு மறுபடியும் மிதிலைக்குப் போய்த் தனது பிதாவுடன் இருக்கப் பிரியம் என்றும் சொன்னாள்//
ராமன் சூர்ப்பநகையிடம் சீதை எங்கே? என்று கேட்டான்//
அவளை இலங்கைக்கு அண்ணன் ராவணனிடத்தில் அனுப்பியிருக்கிறேன். அவள் அவளை மிதிலைக்கு அனுப்பினாலும் அனுப்பக்கூடும். எது வேண்டுமானாலும் செய்யக் கூடும். மூன்றுலகத்திற்கும் அவன் அரசன்//
சீதையை ராவணனிடமிருந்து மீட்க வேண்டுமென்று நினைத்துக் கிஷ்கிந்தா நகரத்திற்கு வந்து சேர்ந்தான்//
வாலிக்கும் ராவணனுக்கும் மிகுந்த சினேகம். இரண்டு பேருமே ஒரே வகுப்பில் கணக்கு வாசித்தார்கள்//
வாலி தூங்கிக் கொண்டிருக்கையில் தம்பி சுக்கிரீவன் இவன் கழுத்தை மண்வெட்டியால் வெட்டியெறிந்துவிட்டு அவன் மனைவியாகிய தாரையை வலிமையால் மணந்துகொண்டு அனுமான் என்ற மந்திரியின் தந்திரத்தால் ராஜ்யத்தை வசப்படுத்திக் கொண்டான்//
"கிஷ்கிந்தையின் சுக்கிரீவனுக்கு இலங்கேசனாகிய ராவணன் எழுதிக் கொண்டது. நமது சிநேகிதனைக் கொன்றாய். உனது அண்ணனைக் கொன்றாய். அரசைத் திருடினாய். இந்த ஓலையைக் கண்டவுடன் தாரையை இலங்கையிலுள்ள கன்யா ஸ்திரீ மடத்துக்கு அனுப்ப வேண்டும். ராஜ்யத்தை வாலி மகன் அங்கதனிடம் கொடுக்க வேண்டும். நீ ஸந்நியாஸம் பெற்றுக் கொண்டு ராஜ்யத்தை விட்டு வெளியேறிவிடவேண்டும். இந்த உத்தரவுக்கு கீழப்படாத விஷயத்தில் உன்மீது படையெடுத்து வருவோம்."//
சுக்கிரீவன் மேல் படையெடுத்துச் செல்லும்படி சேனாதிபதியிடம் ஆக்கினை செய்தான்//
அனுமான் தன்னுடைய ஜாதி ஒரு விதமான லேசான குரங்கு ஜாதியாகையால் விரைவாகக் குரங்கு படைகளைத் திரட்டிக் கொண்டு இலங்கையை நோக்கிப் புறப்பட்டான். இவனுடைய சேனையிலே ராம லக்ஷ்மணரும் போய்ச் சேர்ந்தனர்//
ராவணன் சேனையிலிருந்து ஒரு பகுதி இவர்களை எதித்துக் கொன்று முடித்துவிட்டன. ராம லக்ஷ்மணர் மாத்திரம் சில சேனைப் பகுதிகளை வைத்துக் கொண்டு ரகசியமாக இலங்கைக்குள்ளே வந்து நுழைந்து விட்டார்கள்.
இந்தச் செய்தி ராவணன் செவியிலே பட்டது.
உடனே ராவணன் "ஹா, ஹா, ஹா, நமது நகரத்திற்குள் மனிதர் சேனையை கொண்டு வருவதா! இதென்ன வேடிக்கை! ஹா, ஹா, ஹா!" எனறு பேரிரைச்சல் போட்டான். அந்த.ஒலியைக் கேட்டு ஆதிசேஷன் செவிடனாய் விட்டான். சூரிய மண்டலம் தரைமேலே விழுந்தது. பிறகு ராவணன் ராமனுடைய சேனைகளை அழித்து, அவனையும் தம்பியையும் பிடித்துக் கொண்டு வரும்படி செய்து, இராஜகுமாரர் என்ற இரக்கத்தினால் கொல்லாமல் விட்டு, அவ்விருவரையும் தனது வேலையாட்களிடம் ஒப்புவித்து ஜனகன் வசம் சேர்க்கும்படி அனுப்பினான். பிறகு சீதையும் மிதிலைக்குப் போய்ச் சேர்ந்தாள். மறுபடி, ஜனகன் கிருபை கொண்டு அந்த ராமனுக்கே சீதையை விவாகம் செய்து கொடுத்துவிட்டான். அப்பால் ராம லக்ஷ்மணர் அயோதிக்குப் போய்ப் பரதனுக்குப் பணிந்து நடந்தார்கள். இதுதான் நிஜமான ராமாயணக் கதை //

முழுதும் படிக்க
http://kichu.cyberbrahma.com/குதிரைக்-கொம்பு/