Showing posts with label ராமசாமி நாயக்கர். Show all posts
Showing posts with label ராமசாமி நாயக்கர். Show all posts

Saturday, 14 October 2017

தமிழ்நாடு தமிழருக்கே எனும் முழக்கம்

தமிழ்நாடு தமிழருக்கே எனும் முழக்கம்

1938ல் இந்தி கட்டாயப்பாடம் எனும் அரசாணை வந்தபிறகு
தமிழறிஞர்கள் ஒன்றுகூடி இந்தியெதிர்ப்பைத் தொடங்க திட்டம் வகுக்க திருச்சியில் ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்தனர்.

  28.05.1938 ல் நடந்த அந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியெதிர்ப்பு குழு அமைக்கப்பட்டு தலைவராக சோமசுந்தர பாரதியார்
மற்றும் செயலாளராக கி.ஆ.பெ.விசுவநாம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்தியை எதிர்க்க ஒரு முழக்கம் தேவைப்பட்டது.  அப்போது முதன்முதலாக "தமிழ்நாடு தமிழருக்கே" எனும் முழக்கம் முன்வைக்கப்பட்டது.

அந்த கூட்டத்தில் ஈ.வே.ரா ஒரு உறுப்பினர் மட்டுமே.
அவர் நடத்திவந்த பத்திரிக்கையில் அந்த முழக்கத்தை அவர் வெளியிட்டார் என்பதற்காக அது அவரது சிந்தனை என்றாகிவிடாது.

1) இந்தி எதிர்ப்பு
2) தமிழ்நாட்டு உரிமை
இந்த இரண்டுக்குமே ஈ.வே.ரா பிற்காலத்தில் துரோகமும் செய்தார்.

[மேலும் அறிய,

தேடுக: ஈ.வே.ரா தனித்தமிழ்நாடு கேட்டாரா? வேட்டொலி

தேடுக: இந்தியை எதிர்த்தாரா ஈ.வே.ரா? வேட்டொலி ]

தமிழர்கள் ஒரு சிந்தனையை உருவாக்கி போராட்டத்தை முன்னெடுப்பதும்
திராவிடம் துரும்பைக் கிள்ளிப் போட்டு அதில் புகுந்து குழப்பி தோல்வியடையச் செய்வதும்
பிற்காலத்தில் திராவிடக் குஞ்சுகள் அந்த துரும்பை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த சிந்தனையையும் போராட்டத்தையும் திராவிடத்தின் பெயரில் மொய்யெழுதி வைப்பதும் தொடர்ந்து நடந்துவருகிறது.

பிராமண எதிர்ப்பு, இடவொதுக்கீடு, சாதிய எதிர்ப்பு, வைக்கம் போராட்டம், ஆலயநுழைவு, பகுத்தறிவு, இந்தி எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு, தனிநாடு கோரிக்கை, பெண்ணுரிமை, தமிழ்நாடு பெயர்மாற்றம், எழுத்து சீர்திருத்தம் என பலவும் தமிழரிடமிருந்து திராவிடம் தட்டிப்பறித்தவை ஆகும்.

Thursday, 14 January 2016

ஈவேரா ஒரு ஆண்-வேசி

ஈவேரா ஒரு ஆண்-வேசி
__________________________________
நிருபர்: தமிழ் தாலுகாக்கள் (1).தேவிகுளம்,
(2).பீர்மேடு, (3).நெய்யாத்தங்கரை, (4). கொச்சின்
சித்தூர் ஆகிய தாலுக்காக்கள் மலையா ளத்துடன்
சேர்ந்து விட்டதே! இது பற்றி உங்கள் கருத் தென்ன?
ஈ.வெ.ரா: இது பற்றி எனக்குக் கவலை இல்லை.
மலையாளத் துடன் அவைகளைச் சேர்க்க வேண்டியது தான்.
நிருபர்: கவலையில்லை என்கிறீர் கள். அவைகள் தமிழ்
தாலுகாக்கள் தானே!
ஈ.வெ.ரா: ஆமாம். சமீபத்தில் சென்னைக்கு சர்தார்
பணிக்கர் (மொழி வாரி மாகாணக் கமிட்டி மெம்பர்)
வந்திருந்தார். அவரை நான் சந்தித்துப் பேசினேன்.
‘தொழிலுக்காக தமிழர்கள் அங்கு வந்தார்களே தவிர
நிலம் மலையாளத்தைத்தான் சேர்ந்தது’ என்று பணிக்கர்
சொன்னார். நானும் ’சரி’ என்று சொல்லிவிட்டேன்.
இவ்வாறு ஈ.வெ.ரா. கூறி முடித்தார்.
திருச்சியிலுள்ள பெரியார் மாளிகையில் இந்தப்
பேட்டி நடந்தது. (தினத்தந்தி 11.10.1955)

நேர்காணலை நடத்தியோர் சாவி மற்றும், மணியன்.
அது வருமாறு:
சாவி: அந்தக் காலத்துலே இந்தியை எதிர்த்துப்
போராட்ட மெல்லாம் நடத்தினீர்களே, இப்ப ஏன்
சும்மா இருக்கீங்க?
பெரியார்: அப்படியா? மன்னிக் கணும்; இப்ப
இந்தி எங்கே இருக்குது? தெரியாமத்தான்
கேக்குறேன். சொல்லுங்கோ?
சாவி: இந்தி தான் ஆட்சி மொழியா வந்துட்டுதே..
பெரியார்: எங்கே வந்துட்டுது? உனக்குத்தான்
இங்கிலிஷ் இருக்குதே.
இந்தியா ஒண்ணா இருக்கணும்னா பொதுவா ஒரு ஆட்சிமொழி வேணும்தானே?
இந்திக்காரன் உங்க
மாதிரி இங்கிலீஷை நினைக்கல்லையே. இங்கிலீஷ்
அவமானம்னு நினைக்கிறானே. தமிழ்நாட்டுக் காரன்
சொல்றபடி இந்தியா நடக்குமா?
அது ஜனநாயகமா?
- ஆனந்தவிகடன் 11.4.1965