Showing posts with label மீன். Show all posts
Showing posts with label மீன். Show all posts

Sunday, 26 August 2018

தமிழ்தேசியக் கருத்தியல் ஒப்பீடு

தமிழ்தேசியக் கருத்தியல் ஒப்பீடு

கேள்வி: உலகம் அழிய ஒரு மணிநேரம் உள்ளது.
அதை யாராலும் தடுக்கமுடியாது.
நீங்களும் ஒரு அழகான இளம்பெண்ணும் ஒரு தனி அறையில் இருக்கிறீர்கள்.
என்ன செய்வீர்கள்?

சாமானியன்:
அந்த பெண்ணை உடலுறவுக்கு அழைப்பேன்.
மறுத்தால் கட்டாயப் படுத்துவேன்.

காந்தியவாதி:
வலிக்காமல் எப்படி தற்கொலை செய்துகொள்வது என்று சொல்லிகொடுப்பேன்.
நானும் அவளுக்கு இடைஞ்சல் இல்லாமல் சாவேன்.

பெண்ணாதிக்கவாதி:
நான் அந்த பெண்ணாக இருந்தால் உடைகளை விலக்கி உடலுறுப்புகளைத் திறந்துகாட்டி அந்த ஆண் நெருங்கி வரும்போது அவன் பார்வையில் தவறு உள்ளதாக குற்றம்சாட்டுவேன்.
இளைத்தவன் என்றால் அவனை அடித்து உதைப்பேன்.

கிறித்துவவாதி:-
பைபிளில் கூறியபடி உலகம் அழிகிறது எனவே அவளிடம் கிறித்தவத்திற்கு மாறினால் நரகத்தில் இருந்து தப்பிக்கலாம் என்று கூறி மதம் மாறச்செய்வேன்.
இருவரும் பாவ மன்னிப்பு கேட்போம்.

இந்துத்துவவாதி:-
கலியுகம் முடியப் போகிறது.
மனிதர்களின் பாவம் எல்லை கடந்துவிட்டதால் கடவுள் உலகத்தை அழிக்கிறார்.
எனவே அவளுக்கு ஸ்லோகம் சொல்லிக்கொடுத்து பிரார்த்தனையில் ஈடுபடச்சொல்வேன்.

இசுலாமியவாதி:
அவளை மதம் மாறச்சொல்வேன்.
அவளை பர்தாவால் மூடி ஓரமாக அமரவைத்து விட்டு நான் தொழுகையில் ஈடுபடுவேன்.

பௌத்தவாதி:
அவள் உடலுறவுக்கு அழைத்தால் அந்த ஆசையை விடச் சொல்வேன்.
இருவரும் உண்ர்ச்சியின்றி அமர்ந்திருப்போம்.

சமணவாதி:
உடைகளைக் களைந்துவிட்டு அமர்வோம்.
என்னை நானே துன்புறுத்திக் கொள்வேன்.

ஆன்மீகவாதி:-
இருக்கும் நேரத்தை எப்படி சந்தோசமாக கழிப்பது என்று பார்ப்பேன்.
தியானம், யோகா செய்வேன்.
கவலைகளை மறந்து மகிழ்ச்சியான தருணங்கள் பற்றி கலந்துரையாடுவோம்.

நடுநிலைவாதி:
உலகம் அழிந்ததில் எங்கள் இருவர் மீதும் சமமான தவறிருக்கிறது என்று அவளுக்கு புரியவைப்பேன்.
அவள் மறுத்தால் வாக்குவாதத்தில் ஈடுபடுவேன்.

மனிதநேயவாதி:
அவளுக்கு உடலுறவு தேவைப்படுகிறதா என்று கேட்பேன்.
அவளுடைய ஆசை எதையாவது கூறினால் அதை என்னால் நிறைவேற்றமுடியுமா என்று பார்ப்பேன்.

திராவிடவாதி:
உலக அழிவு பார்ப்பனரால் வந்தது என்றும் பெரியார் இருந்திருந்தால் இதை எப்படியெல்லாம் தடுத்திருப்பார் என்றும் பத்து புத்தகம் எழுதுவேன்.

பொதுவுடைமைவாதி:
உலக அழிவு பெருமுதலாளிகளால் வந்தது என்பதையும்
இயற்கையை அழித்து அவர்கள் அடைந்த லாபத்தில் தொழிலாளர்களுக்கு பங்கும் கொடுக்கவில்லை என்பதையும் அவளுக்கு கடினமான வார்த்தைகளால் புரியவைக்க முயற்சிப்பேன்.

தலித்தியவாதி:
உயர்சாதியினர் அழிந்தனர் என்று சந்தோசப்படுவேன்.
அந்த பெண் உயர்சாதி என்றால் காலில் விழுந்து என்னை எதுவும் செய்துவிடவேண்டாம் என்று கேட்டுக் கொள்வேன்.
அவள் உடலுறவுக்கு அழைத்தால் கத்தி கூப்பாடு போடுவேன்.

சோசலிசவாதி:
அவளுடன் நட்பாக பேசி தொட்டு உணர்ச்சிகளைத் தூண்டி உடலுறவுக்கு சம்மதிக்க வைப்பேன்.
மறுத்தால் கோபம் கொள்ளாமல் நட்புடன் பேசுவதைத் தொடர்வேன்.

பழமைவாதி:
அவளை உடலுறுவுக்கு அழைப்பேன்.
வராவிட்டால் அடிப்பேன்.

நவீனத்துவவாதி:
என் கைபேசியிலிருந்து ஆபாச படத்தை அவளுக்கு காட்டி அதுபோலச் செய்யலாம் என்பேன்.
கற்பு, ஒழுக்கம் எல்லாம் மூடநம்பிக்கை என்று கூறுவேன்.

சுற்றுச்சூழல் போராளி:
இயற்கையை நமது பேராசையால் அழித்துவருவதைப் பற்றி நான் எழுதிய புத்தகங்கள், போராட்டங்கள், கோரிக்கைகள் ஆகியன பற்றி கூறுவேன்.
யாருமே கேட்கவில்லையே என்று வருத்தப்படுவேன்.

தமிழ்தேசியவாதி:

குமரிக்கண்டம் மூழ்கிய போது மீன்களைப் பின்தொடர்ந்து பாண்டியர் தப்பித்த வரலாறையும்
கடல் நீரோட்டத்தில் செல்லும் ஆமைகளைப் பின்பற்றி சோழர்கள் உலகமெல்லாம் குடியேறிய வரலாறையும் அந்த பெண்ணிடம் எடுத்துக்கூறுவேன்.
இருவரும் அறையை விட்டு வெளியே வருவோம்.
பிற உயிரினங்கள் என்ன செய்கின்றன என்று கவனித்து பின்பற்றி தப்பிக்க இறுதிவரை முயல்வோம்.