Monday, 23 January 2023

திருப்பதியில் தமிழைக் கண்டேன்

திருப்பதியில் தமிழைக் கண்டேன்

 திருப்பதி கருவறை சுற்றுச் சுவர்களில் முழுக்க தமிழ் வட்டெழுத்து மட்டுமே நிறைந்துள்ளது.
 அழிக்க முடியாத அளவுக்கு அழுத்தமாக பாமரனுக்கும் அது தமிழ் என்று புரியும் வகையில் வெட்டப்பட்டுள்ளது. 
 கல் சுமந்து மலையேறி கோவில் கட்டியது தமிழர்கள்!
 தமிழின ஆழ்வார்கள் உயிரைக் கொடுத்து வைணவம் வளர்த்தனர்!
 எல்லாம் எதற்கு தெலுங்கர் வளம்பெறவா?!
 வாசலில் பெரிதாக கிருஷ்ணதேவராயன் சிலையும் வைத்துள்ளனர். அடுத்தவன் பெற்ற பிள்ளைக்கு தன் பெயரை வைத்துக்கொள்ள கூச்சமே இல்லை! 
 
 எங்கும் ஒரே தெலுங்கு மயம்!

 மிகச் சமீபத்தில் தென்கலை நாமத்தை ஸ்டைலக வடகலை நாமமாக மாற்றியுள்ளனர்!
 
 உலகப் புகழ் பெற்ற திருப்பதி கோவிலை தமிழகத்திடம் ஒப்படைக்க வழக்கு தொடர்ந்தால் ஆந்திரா ஒப்படைத்துதான் ஆக வேண்டும்.

 ஆனால் அதற்கு நம்மிடம் வலுவான மாநில அரசும் நியாயமான நீதிமன்றங்களும் வேண்டுமே?! 

 அவையும் திராவிடத்திடமும் இந்தியத்திடமும் உள்ளனவே!

Sunday, 15 January 2023

எது சமத்துவ பொங்கல்

எது சமத்துவ பொங்கல்? 

சமத்துவ ரம்ஜான் கிடையாதாம்!
 சமத்துவ கிறிஸ்துமஸ் கிடையாதாம்!
 அவையெல்லாம் மதத்தின் விழா!  அதை அந்தந்த மதத்தினர்தான் கொண்டாட வேண்டும்!
 இனத்திற்கான விழா வேறு! அதை அந்த இனத்தினர் எவராயிருந்தாலும் கொண்டாடலாம்.
 நாட்டுக்கான விழாக்கள் உண்டு! அதை அந்நாட்டினர் அனைவரும் கொண்டாட வேண்டும்!

 பொங்கல் தமிழ் இனத்தின் விழா அதை எந்த மதத்தை சேர்ந்த தமிழரும் கொண்டாடலாம்.
 அப்படி பல மதத் தமிழர்கள் சேர்ந்து கொண்டாடினால் கூட அது சமத்துவ பொங்கல் ஆகாது!
 மலையாளி, கன்னடர், தெலுங்கர், சிங்களவர் என்று யாராவது தமிழர்களுடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடினால் அதுதான் சமத்துவ பொங்கல்!

நம் தேசிய விழாவாகிய பொங்கல் உணவை இறைவனுக்கு படைக்கும் வழக்கம் கொண்டது இல்லை! சூரியனுக்குதான் படைக்கிறோம்! நாள், நட்சத்திரம், நேரம் பாத்து கொண்டாடுறது இல்லை!  எனவே இது இந்து பண்டிகை ஆகாது! 

 இந்தியா முழுவதும் இதே மாதத்தில் அறுவடை விழா கொண்டாடப்படுவதை வைத்து சிலர் இதற்கு இந்துத்துவ சாயம் பூசப் பார்க்கிறார்கள். 
இந்தியா முழுவதும் காலநிலை ஓரளவு ஒத்துப் போகிறது. விளைச்சல், அறுவடை போன்றவை ஒத்துப் போகிறது. அதனால் பழைய நாட்காட்டிப்படி மாதத்தின் முதல் நாள் விழா கொண்டாடப்படுகிறது.

 இந்தியா என்றில்லை உலகம் முழுக்க அறுவடை திருவிழா கொண்டாடப்படுகிறது! 
 உலகத்தில் அந்த அந்த மண், உணவு, காலநிலை பொறுத்து அவரவர் அறுவடை திருவிழா கொண்டாடப்படுகிறது!
 உலகப்பந்தில் அமெரிக்கா முதல் ஜப்பான் வரை தமக்கென அறுவடை திருநாள் வைத்துள்ளன.
 அந்தந்த இனத்தின் அறுவடை விழாவை அந்த அந்த இனத்தார் கொண்டாட வேண்டும்!

 பைபிள் கூட அறுவடை விழா பற்றி கூறுகிறது [ “Celebrate the Festival of Harvest with the firstfruits of the crops you sow in your field.
Exodus 23:16].

இசுலாத் பாலைவனத்தில் தோன்றியது! இருந்தாலும் மரங்கள் பழங்களைத் தரும் காலம் வரும்போது அதை அறுவடை செய்யும் முதல்நாளில் இறைவனுக்கான பங்கை படைக்கச் சொல்கிறது
 [Eat of their fruits when they come to fruition and pay His due on the day of harvesting
Quran 6:141].

 ஒரு இனத்தின் விழாவை மதத்தின் பெயரால் குழப்புவதையும் மத்ததின் காரணமாக வெறுப்பதையும் இனத்திற்கு செய்யும் துரோகமாகவே பார்க்க வேண்டும்.

 தமிழின கிறித்துவர் பரவாயில்லை ஆனால் இசுலாமியர் சிலரின் பார்வை இதில் தவறாக உள்ளது. பொங்கல் பானையை அலங்கரிப்பது மற்றும் கதிரவனுக்கு நன்றி செலுத்துவது ஆகியவற்றை இறைவனுக்கு இணை வைப்பது என்று கூறுகிறார்கள்.

 ஆசிரியர் வரும்போது எழுந்து நிற்கும் இசுலாமிய மாணவன், தாய் தந்தையிடம் ஆசீர்வாதம் வாங்கும் இசுலாமியர், உயரதிகாரிக்கு சல்யூட் வைக்கும் இசுலாமிய போலீஸ்காரர் இவர்களெல்லாம் என்ன மத துரோகியா?

 இறைவனை வழிபடுவது வேறு! மரியாதை கொடுப்பது அல்லது நன்றி தெரிவிப்பது வேறு! 

 பொங்கல் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விழா! இது எந்த மதத்திற்கும் எதிரானது இல்லை!
 அப்படி சந்தேகம் இருந்தால் பொங்கல் அன்று பிற தமிழர் போல பொங்கலிட்டு குரான் கூறுவது போல ஒரு பங்கை இறைவனுக்கே நன்றி கூறிப் படைக்கலாம். 

 தமிழர்கள் சாதி, மத, நாடு பேதங்களைக் கடந்து பொங்கல் கொண்டாடுவது இனக் கடமை!
 
 இதை இந்து மதப் பண்டிகை ஆக்குவதோ, இசுலாமிய மதத்திற்கு எதிராக சித்தரிப்பதோ, அல்லது புத்தாண்டு என்று குழப்புவதோ இனத் துரோகம் ஆகும்!

 தமிழர் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்து! 

 
 
 

Sunday, 8 January 2023

வடவரை விரட்டுவதே முறை

வடவரை விரட்டுவதே முறை

 இதுவே உ.பி, பீகாரி, ஒரிசா வில் பூகம்பம், பஞ்சம், போர் என ஏதாவது நடந்து அப்போது அவர்கள் (கதியில்லாமல்) அகதிகளாக வந்தால் நாம் முழுமனதுடன் ஏற்றுக்கொள்வோம் (அப்படித்தான் வங்காளிகளிடம் அந்தமானை இழந்தோம் என்பது வேறுவிடயம்).
 ஆனால் இங்கே வருபவர்கள் தம் மாநிலத்தை நாசமாக்கிவிட்டு அல்லது நாசமாக்குபவரை எதிர்க்காமல் விட்டுவிட்டு வெள்ளம் தலைக்குமேல் போன பிறகு அதே நாசக்கார சக்திகளாலேயே திட்டமிடப்பட்டு இங்கே குடியேற்றப் படுகின்றனர்.
 இத்தனைக்கும் வடயிந்தியாவில் மேற்கை விட கிழக்குதான் வளமான பகுதி.
 பொன்விளையும் பூமியில் கடல் போன்ற கங்கை பாய்ந்தும் இவர்களால் பிழைக்க முடியவில்லை என்பதை நம்பவே முடியவில்லை.
 இங்குள்ள தொழிலாளர் வயிற்றில் அடித்து தானும் வாழாமல் பிறரையும் கெடுக்கின்றனர்.
 அப்போதும் தன் இனத்தானின் கட்சிக்கே வாக்களித்து அவர்களை ஆதாயமடையச் செய்யவே எண்ணுகின்றனர்.
 இந்த மாநிலத்தையும் தம் மாநிலம் போல நாசமாக வழி செய்கின்றனர்.
 பழைய வடுக வந்தேறிகள் இந்த புதிய வடயிந்திய வந்தேறிகளுக்கு துணைசெய்கின்றனர்.
 இவர்களை இவர்களது தாய்நிலத்துக்கே விரட்டியடிப்பது இவர்களுக்கு நாம் செய்யும் நன்மையாக இருக்கும்.
 எல்லா கதவுகளையும் அடைத்துவிட்டால் கூட பூனையை எதிர்த்து தாக்கும்.
  வயலில் புல் வளர்ந்தால் அது களை என்றே ஆகும்.

Tuesday, 3 January 2023

கயவாளி கட்டபொம்மன் தொடர் தொகுப்பு

கயவாளி கட்டபொம்மன் தொடர்

வரலாற்று நகைச்சுவைத் தொகுப்பு
படித்து சிரித்து மகிழுங்கள்

கயவாளி கட்டபொம்மன் - 1
(தெலுங்கர் நுழைவு)
http://vaettoli.blogspot.com/2018/09/1.html

கயவாளி கட்டபொம்மன் - 2
(காட்ர கட்டபிரமையா)
http://vaettoli.blogspot.com/2018/09/blog-post_11.html


கயவாளி கட்டபொம்மன் - 3
(கட்டபிரமையா என்கிற ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்)
http://vaettoli.blogspot.com/2018/09/3.html

கயவாளி கட்டபொம்மன் - 4
(பொல்லாப் பாண்டிய கட்டபொம்மன்)
http://vaettoli.blogspot.com/2018/09/4.html

கயவாளி கட்டபொம்மன் - 5
(இரண்டாம் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்)
http://vaettoli.blogspot.com/2018/09/blog-post_14.html

கயவாளி கட்டபொம்மன் - 6
(கடைசி கட்டபொம்மன்)
http://vaettoli.blogspot.com/2018/09/6.html

கயவாளி கட்டபொம்மன் - 7
(ஜாக்சன் துரை)
http://vaettoli.blogspot.com/2018/09/7.html

கயவாளி கட்டபொம்மன் - 8
(பாஞ்சாலங்குறிச்சி வீழ்ந்தது)
http://vaettoli.blogspot.com/2018/10/8_1.html

கயவாளி கட்டபொம்மன் - 9
(கட்டபொம்மனின் முடிவு)
http://vaettoli.blogspot.com/2018/10/9.html






Sunday, 1 January 2023

காவிரிக்காக புதுச்சேரி தமிழகத்துடன் இணைதல்

காவிரிக்காக புதுச்சேரி தமிழகத்துடன் இணைதல் 

 புதுச்சேரிக்கு மாநில அதிகாரம் கோருவது ஏற்புடையது இல்லை!
 புதுச்சேரி தனது சிறப்பு அந்தஸ்தை கைவிட்டு தமிழகத்துடன் இணைதல் வேண்டும்!
 அதுவும் துண்டு துண்டான அதன் பகுதிகள் அந்த அந்த மாவட்டத்திற்குள் இணைக்கப்பட வேண்டும்.
 புதுச்சேரிக்குச் சொந்தமான மாஹே கேரளாவிலும் ஏனாம் ஆந்திராவிலும் உள்ளது. அவற்றை அந்த அந்த மாநிலங்களுக்கே வழங்கவும் வேண்டும். இதை காரணமில்லாமல் செய்யக்கூடாது. 

 காவிரி உற்பத்தியாகும் குடகு பகுதி மக்கள் புதுச்சேரி போன்ற சிறப்பு சி- அந்தஸ்து கோரி வருகின்றனர். தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கன்னடர் அட்டூழியத்தை எடுத்துக்கூறி தமக்கு அதிகாரம் கிடைத்தால் தமிழகத்திற்கு தண்ணீர் தருவதாக வாக்களித்துள்ளனர்.

 கன்னடர் காவிரியை மறித்து செய்யும் மனிதத்தன்மை இல்லாத அரசியலுக்கு தகுந்த பதிலடியாக நமது புதுச்சேரி அந்தஸ்தை குடகுக்கு விட்டுக்கொடுக்க தமிழகம் மற்றும் புதுச்சேரி முதல்வர்கள் முன்வர வேண்டும்.
 புதுச்சேரி மக்கள் குடகு நோக்கியும் குடகு மக்கள் புதுச்சேரி நோக்கியும் ஒரே நேரத்தில் பேரணி சென்று வீரமிகு போராட்டங்கள் நடத்த வேண்டும்.

 கன்னடர் ஏற்கனவே மராத்தியர்களுடன் எல்லைச் சிக்கலில் மோதல் வெடிக்கும் நிலையில் உள்ளனர்.
 இந்த நேரத்தில் இந்த நகர்வு இந்திய அரசியலையே புரட்டிப்போடும்.

 நமது இந்த நகர்வுக்கு மாஹே, ஏனாம் பகுதிகளை விட்டுக் கொடுப்பதாக பேரம் பேசி கேரளா மற்றும் ஆந்திரா மக்களை இப்போராட்டத்திற்கு ஆதரவு தரக் கோரவேண்டும். மராத்தியர் ஆதரவும் கிடைக்கும்.
 கர்நாடகா நான்கு புறமும் எழும் எதிர்ப்பினாலும் எல்லைதாண்டும் புதுச்சேரி பேரணியாலும் குடகு எழுச்சியாலும் நிலைகுலைந்து போகும்.
 
 புதுச்சேரி மக்களே! 
 உங்கள் பகுதி புதுக்கோட்டை சமஸ்தானம் போல சொந்தமாக நீங்கள் உருவாக்கியது இல்லை! எவனோ ஒரு வெள்ளைக்காரன் விட்டுச் சென்ற பகுதி மீது அமர்ந்து கொண்டு நீங்கள் அதிகாரம் செலுத்துவது அதிலும் பிற மாநில பகுதிகளை ஆக்கிரமித்து அதிகாரம் செலுத்துவது நியாயம் இல்லை. நீங்கள் நினைத்தால் தமிழகத்திற்கு காவிரியைக் கொண்டுவர முடியும். தமிழகத்துக்கு சாராயம் ஊற்றிக்கொடுக்கும் மக்களாகவே இருக்கப் போகிறீர்களா? அல்லது குடிநீர் கொணர்ந்த மக்களாக இருக்கப் போகிறீர்களா? கஷ்டமோ நஷ்டமோ சக தமிழர்களுடன் இணைந்து ஒற்றை ஆட்சியில் வாழ்வதே முறை! 

 இந்த துணிச்சலான அரசியலை புதுச்சேரி முதல்வர் முதலில் முன்னெடுக்க வேண்டும்.
 ஏனெனில் தமிழக முதலமைச்சர் தமிழரல்லர்! கேரள அரசு தமிழக எல்லைப் பகுதிகளை தமது எல்லைக்குள் கணக்கெடுத்து பதிவு செய்துவருவதைக் கூட கண்டுகொள்ளாத கையாலாகாத இன வன்மம் கொண்ட முதல்வர்தான் ஆட்சியில் இருக்கிறார். 
 
 புதுச்சேரி முதல்வர் இந்த போராட்டத்தை அறிவித்தால் தமிழக மக்களையும் தன்னெழுச்சியாக  இதில் கலந்துகொள்வர். தமிழக முதல்வர் வேறு வழியின்றி இணைவார்! இந்த போராட்டத்தை நடத்திவிட்டால் அடுத்த தமிழக முதல்வராக்கூட ஆகலாம்!

 இதற்கு முதலில் புதுச்சேரி மக்கள் போராட்டங்கள் செய்ய வேண்டும்! தமது முதல்வருக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்!

 இந்த போராட்டம் வெற்றி பெற்று குடகு அதிகாரம் பெற்றதும் காவிரிக்கான ஒப்பந்தம் போட்டுக்கொள்ளவும் வேண்டும்.

 கன்னடர் கொட்டம் அடக்க காலம் கனிந்துள்ளது!
இதைச் செய்ய தமிழர்கள் முன்வந்தால் தலைமுறைகள் தாண்டியும் நன்மை அடையலாம்!