Saturday, 27 August 2022

மதராஸ் தமிழ் மாவட்டங்களில் தமிழர் சதவீதம்

மதராஸ் தமிழ் மாவட்டங்களில் தமிழர் சதவீதம்

 1914 இல் வெளிவந்த இந்த ஆவணத்தில் அன்றைய மதராஸ் மாகாண தமிழ் மாவட்டங்களான செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, திருச்சி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், நீலகிரி, சேலம்,  மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகியன மட்டும் கணக்கில் கொள்ளப்பட்டு அதில் முக்கியமான தமிழ்ச் சாதிகள் எத்தனை சதவீதம் என குறிக்கப்பட்டுள்ளன (இதில் இன்றைய கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் அன்றைய புதுக்கோட்டை இடம்பெறவில்லை என்பதையும் என்பதையும் நினைவில் கொள்க).
இதன்படி 82% தமிழர்கள் என்று இருக்கிறது. (சிறுபான்மைத் தமிழ்ச் சாதிகள் கணக்கில் வரவில்லை).
வன்னியர் 17%, வெள்ளாளர் 15 %, பறையர் 14%  என மிகப் பெரும்பான்மை சாதிகள் உள்ளன.
பிராமணர் 3%, வலையர் 3%, பள்ளர் 5%,  சாணார் 4%, இடையர் 5%, மறவர் 2%, அகம்படையார் 2%, கள்ளர் 3%, கைக்கோளர் 2%, கம்மாளர் 3%, அம்பலக்காரர் 2%, குறவர் 2% என குறிக்கப்பட்டுள்ளது.

ஆவணம்: Tamil studies, or essays on the history of the Tamil people, language, religion and literature
by Srinivasa Aiyangar, M.

 தகவலுக்கு நன்றி: ஆ.சி.பழனிமுத்து படையாட்சி

Monday, 22 August 2022

தமிழ் குயவர்களை இன அழிப்பு செய்யும் தெலுங்கர்

தமிழ் குயவர்களை இன அழிப்பு செய்யும் தெலுங்கர்

குயவர் குடி பாரம்பரியக் குடி.
குயவர் என்பது காரணப் பெயர், மண்ணைக்கு குயைந்து மட்பாண்டங்கள் முதல் தெய்வச் சிலைகள் வரை செய்கின்ற செயலைக் குறிக்கும்.
நாங்கள் வழிபாட்டுடன் தொடர்புடன் ஒரு குடி.
குயவர் தமிழ்நாட்டின் பூர்வ குடி.
 இன்று ஆவணங்களில் 'இந்து குலாலா' என்று குறிக்கின்றனர்.
 தமிழர்களான எங்களை வேற்றுமொழிச் சொல்லால் அடையாளப் படுத்துவதை அவமானமாகக் கருதுகிறோம்.
 தமிழகத்தில் குயவர் போன்று கன்னடரில் கும்பரா, தெலுங்கரில் குலாலா என்று இருக்கிறார்கள்.
 தொழில் ஒன்று என்பதால் நாங்கள் எல்லாரும் ஒன்று என்று ஆகிவிடுமா?
நாயக்கர் ஆட்சியில் 450 ஆண்டுகளுக்கு முன் மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி பகுதிகளில் குலாளா குடியமர்த்தப்பட்டனர்.
 பழனியில் தளவாய் ராமப்பய்ய நாயக்கர் குயவர் கையால் திருநீறு பெற மறுத்து எங்களை கோவிலில் இருந்து விரட்டி பிராமணர்களை நிரப்பினார்.
 எங்களின் கோவில் பணிக்காக நிவந்தமாக வழங்கப்பட்டிருந்த நிலங்கள் பறிக்கப்பட்டுவிட்டன.
 நாங்கள் பெருந்தேவ கோவில்களில் இருந்து விரப்பட்டாலும் ஐயனார், மாரியம்மன், சுடலை மாடன் கோவில்களில் பூசாரிகளாக இருக்கிறோம்.
 எங்கள் குலப் பட்டம் வேளார் என்பதாகும்.
பாண்டிய வேளார், சோழ வேளார், சேர வேளார் என்று மூன்று நாட்டுப் பிரிவுகள் உண்டு. சமீப காலம் வரை அந்தந்த நாட்டுக்குள் தான் திருமண உறவு வைத்துக்கொண்டு பாரம்பரியத்தை கடைபிடித்து வந்தோம்.
 குலாளர் என்ற பெயர் 40 ஆண்டுகளுக்கு முன் எங்கள் மீது திணிக்கப்பட்டது. MBC பிரிவு கொண்டுவரப்பட்டபோது குலாளர் என்கிற முக்கிய பிரிவின் கீழ் குயவர் என்கிற உட்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
 பூர்வகுடி பெயரை முதன்மையாக வைக்காமல் பிழைக்க வந்தவர் பெயரை முதன்மையாக ஆக்கிவிட்டனர்.
 இதன்மூலம் குலாளா பெரும்பான்மை என்கிற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டனர்.
இன்று எங்கு பார்த்தாலும் தெலுங்கர் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. தமிழகத்தில் பாதி தெலுங்கர் என்று கூறி அதில் 36 குடிகள் தெலுங்கர் என்று வகைப் படுத்துகின்றனர். எங்களையும் குலாளர் என்று தெலுங்கராக கணக்கு காட்டுகின்றனர்.
 குலாலா வீட்டுக்குள் தெலுங்கு பேசினாலும் வெளியில் தம்மை தமிழர் என்று அடையாளப் படுத்திக் கொண்டு பசுத்தோல் போர்த்திய புலியாக வலம் வருகின்றனர்.
சமீபத்தில் கீதா ஜீவன் பங்கேற்ற நிகழ்ச்சியில் மேடையிலேயே தாங்கள் தெலுங்கர் என்பதை ஒத்துக்கொண்டனர். ஆவணம் அல்லாத இடங்களில் 'தெலுங்கு குலாளர்' என்று தம்மை தெளிவாக அடையாளப் படுத்திக் கொள்கின்றனர்.
 ஆனால் அவர்கள் எங்களுக்கு பெண்கொடுப்பது இல்லை. பெண்ணெடுக்க மட்டும் செய்கிறார்கள்.
 எங்களுக்கு தற்போது குயவர் என்று சாதுச் சான்று தர மறுக்கிறார்கள்.
நாங்கள் வீட்டிலும் வெளியிலும் தமிழ்தான் பேசுகிறோம். அடிப்படையில் நாங்கள் தமிழர்கள். தமிழ் உணர்வு உள்ளவர்கள். பெரியபுராணத்தில் 'திருநீலகண்டத்து குயவனாருக்கு' என்றும் சித்தர் பாடலில் "நாலாறு மாதமாய் குயவனை வேண்டி' என்றும் எங்கள் பெயர் மரியாதையுடன் வருகிறது.
 எங்கள் பெயரை மாற்றுவது ஒரு இன அழிப்பு. 
போர் செய்துதான் ஒரு குடியை அழிக்கமுடியும் என்றில்லை அடையாளத்தை மாற்றினால் போதும்.
 ஆவணங்களில் குலாலா என்றிருந்தால் எங்கள் உண்மையான அடையாளத்தை இழந்துவிடுவோம்.
 இந்த மண்ணின் மக்கள் நாங்கள் ஏன் வேறொரு மொழி பெயரை தலையில் சுமக்க வேண்டும்?
தமிழ்நாடு தமிழருக்கே என்கிற புரிதல் எங்கள் மக்களிடம் இல்லை. 
அரசிடம் எங்கள் குயவர் சங்கம் வைக்கும் கோரிக்கை தமிழகத்தில் வேளார்,  வேட்கோவர், மண்ணுடையார், உடையார் ஆகிய பட்டங்கள் கொண்ட தமிழ் பேசும் குயவர்களை 'குயவர்' என்கிற பெயரிலேயே சான்று வேண்டும். MBC இல் கல்வி, வேலைவாய்ப்பு களில் எங்கள் உரிமையை குலாளா, கும்பரா, கும்மாரா போன்றோர் அபகரித்து வருவதைத் தடுக்க வேண்டும். அவர்களுக்கு OBC என்றே இடவொதுக்கீடு கொடுக்கவேண்டும்.
 குயவருக்கு MBC தகுதி இருந்தும் இதுவரை 1% கூட பலன் கிடைக்கவில்லை. 
 இன்றைய நிலை தொடர்ந்தால் ஏற்கனவே வாழ்வாதாரத்தை இழத்த இந்த மண்ணின் மைந்தர்களான குயவர்கள் இடவொதுக்கீடு உரிமையையும் இழந்துவிடுவார்கள். இந்த பிரச்சனையில் தமிழ்க் குடிகள் அனைவரும் ஒன்றிணைய வலியுறுத்துகிறோம். 

 மேலும் தொழில் சார்ந்த கோரிக்கைகள்....
அரசு சில சுடுமண் சிற்பிகளுக்கு விருது வழங்கியுள்ளது மகிழ்ச்சி. அது மட்டுமல்லாது எங்களுக்கு மட்பாண்ட பூங்காக்களை அமைக்க வேண்டும். 
அரசின் பொங்கல் தொகுப்பில் பானை இடம்பெற வேண்டும். 
பானை செய்ய மண் எடுக்க பணம் கட்டும் நிலை மாறவேண்டும்.
மட்பாண்டம் மற்றும் சுடுமண் சிற்பக் கலைக்கு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். 
பானைகளை கோவில்களில் பயன்படுத்துவது போல வீடுகளிலும் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்க வேண்டும். 
மண்பாண்ட விற்பனைக்கு வாரியங்கள் அமைத்து தரவேண்டும்.
 நலிந்த குடும்பங்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும்.
 மானாமதுரை கடம் எனும் மட்பாண்ட இசைக் கருவி பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட வேண்டும். ஐயனார் கோவில் குதிரைகள் பாரம்பரிய அடையாளம் பெறவேண்டும். பீகார் அரசு போல சில ரயில் நிலையங்களில் மண்குவளை மூலம் தேநீர், ஐஸ்கிரீம்  வழங்கும் முறை கொண்டுவர வேண்டும். விழாக்களில் அரசும் மக்களும் மண்பானைகளை பயன்படுத்த வேண்டும்.
 
 
 திரு. பழ.பாஸ்கரன் M.Sc., M.Phil., B.Lit.,
சிவாச்சாரியார், காரைக்குடி.
TN media 24 க்கு 19.08.2022 அன்று அளித்த பேட்டியிலிருந்து

Monday, 15 August 2022

தலைக்கு எட்டாயிரம் பிடுங்கி மோடி அளித்த சுதந்திரம்

தலைக்கு எட்டாயிரம் பிடுங்கி மோடி அளித்த சுதந்திரம் 

 கடந்த ஐந்து ஆண்டுகளில் பாஜக அரசு தள்ளுபடி செய்த வாராக் கடன் மட்டும் பத்து லட்சங்கோடி!
 கடந்த 2 ஆம் தேதி மத்திய நிதித் துறை இணையமைச்சர் பகவத் கே காரத் இதைத் தெரிவித்தார்.

 அதாவது இந்திய மக்கட்தொகை 125 கோடி என்றால் இந்த 10 லட்சம் கோடி  தலைக்கு 8,000 ரூபாய் வருகிறது.

 2022 இல் ஒரு குடிமகனின் சராசரி மாத வருமானமே 12,000 ரூபாய் தான்.
 
 ஆக உங்கள் ஒரு மாத சம்பளத்தில் முக்கால்வாசியை பிடுங்கி கார்ப்பரேட்டுகளுக்கு கொடுத்துள்ளார் மோடி.
 இதன் மூலம் பெரும் லாபம் அடைந்த முக்கியமான பத்து பேர் (பார்க்க: படம்) குஜராத்தி அல்லது மார்வாடிகள்.
 
 விவசாயக் கடனோ, கல்விக் கடனோ, சிறுதொழில் கடனோ நயா பைசா தள்ளுபடி செய்யப்படவில்லை!

 மேலும் சாமானியனுக்கு பெட்ரோல், பால் பொருட்கள், உள்ளாடை என வரி போட்டு பிடுங்குகிறது பாஜக அரசு!

 ஓடி உழைத்து வரியெல்லாம் கட்டி சிறுக சிறுக சேர்த்து வங்கியில் போட்டால் அதை இப்படி தாரை வார்க்கிறது மத்திய அரசு!

 மோடி இதற்கெல்லாம் தீர்வாக முன்வைப்பது வீட்டில் தேசியக் கொடி ஏற்றி செல்பி போடுவதை மட்டுமே! 
 
 சுதந்திர தினம் முடிந்துவிட்டது!

இனி நீங்கள் அடிமை என்பதை உணருங்கள்! 

யாருக்கு அடிமையாக இருக்கிறோம் என்பதையும் புரித்துகொள்ளுங்கள்!

Sunday, 14 August 2022

அசோக சக்கரம் சொல்லும் உண்மை

அசோக சக்கரம் சொல்லும் உண்மை 

 மூவர்ணக் கொடி கொண்டுள்ள நிறங்களுக்கு வெவ்வேறு விளக்கம் சொன்னாலும் சக்கரம் மட்டும் அசோகர் ஆட்சியைக் குறிக்கும் என்பதை யாரும் மாற்றமுடியாது!
 அந்த அசோகரின் ஆட்சியின் கீழ் தமிழகம் இருக்கவில்லை!

ஏன் இல்லை என்றால் அசோகரின் தந்தை பிந்துசாரர் காலத்திலேயே மூவேந்தரிடம் மோதி படுதோல்வி அடைந்துவிட்டது அசோகரின் பேரரசு!

 தமிழருக்கும் இந்தியாவிற்கும் தொடர்பில்லை என்பதற்கு அசோக சக்கரமே வலுவான சான்று!

 அது மட்டுமல்ல டெல்லி சுல்தானியம் மற்றும் முகாலாயப் பேரரசுகளும் டெல்லியிருந்து புறப்பட்டு தமிழகத்திடம் மோதி தோற்றுள்ளன!

 தமிழர்கள் என்றும் இந்தியரால்  ஆளப்படவில்லை!

இன்று தமிழகத்தின் மீதான இந்தியாவின் ஆளுமை ஆங்கிலேயர் போட்ட பிச்சை!

இந்தியரே!
 முடிந்தால் எங்களைத் தனிநாடு ஆக்கிவிட்டு
பிறகு மோதி வென்று காட்டுங்கள்! 
அதன் பிறகு இப்போது போலவே எப்போதும் அடிமையாக இருக்கிறோம்!

அதற்கு முன் புலிகளிடம் இந்தியப் படை தோற்றதை நினைத்துப் பார்ப்பது உங்களுக்கு நல்லது!

படம்: கி.மு.235 இல் மௌரிய பேரரசு அதன் உச்சநிலையில் 

 

Friday, 12 August 2022

கட்டபொம்மன் வாரிசுகளின் தொடரும் அடாவடி

கட்டபொம்மன் வாரிசுகளின் தொடரும் அடாவடி

 கொள்ளைக்காரன் கெட்டிபொம்மு பற்றி ஏற்கனவே தமிழ்வாணன் அவர்களின் நூல் துணைகொண்டு சான்றுகளுடன் எழுதிவிட்டோம். முடிந்துபோனதை பேசி என்னவாகப் போகிறது என்போருக்கு இன்று வரை கூட பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மு வகையறா அடாவடி தொடர்கிறது என்பது தெரியுமா?!

 பாஞ்சாலங்குறிச்சியின் இப்போதைய நிலையை அலசுவோம்.
திராவிட அரசுகள் தெலுங்கு பாசத்துடன் எப்போதுமே நடந்துகொண்டு வருவது இந்த விடயத்திலும் நிகழ்ந்திருக்கிறது.

 அண்ணாதுரை முதல்வரானதும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை இருந்த இடத்தை தமிழக அரசின் சுற்றுலா (!) தளமாக அறிவித்தார்.
 தெலுங்கர் பந்துலு 1959 இல் சிவாஜிகணேசனை வைத்து கட்டபொம்மன் பற்றி திரைப்படம் எடுத்து (ஆங்கிலேயரிடம் 'கள்ளர் தன்னரசு நாடுகள் கூட்டமைப்பு' பேசிய வீரவசனங்களை பேசவைத்து) தமிழக மக்களை முட்டாளாக்கினார்.
 கருணாநிதி இடிந்த பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை மீண்டும் கட்டிக்கொடுத்து அகழ்வாராய்ச்சி (!) நடத்தும் தளமாக அறிவித்தார்.
 அப்போதைய கட்டபொம்மன் வாரிசுக்கு மாத உதவித் தொகை கொடுத்தார்.
அத்தோடு நில்லாமல் கட்டபொம்மன் வம்சாவளியினர் மற்றும் அவர்களுடன் கடந்த ஆறு தலைமுறைகளாக பெண்கொடுத்து பெண்ணெடுத்த 202 குடும்பங்களை தென் மாவட்டங்கள் அனைத்திலும் தேடி திரட்டி அழைத்துவந்து பாஞ்சாலங்குறிச்சியில் தொகுப்பு வீடு கட்டிக்கொடுத்தார். 
 இது மட்டுமில்லை ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 3 ஏக்கர் என 606 ஏக்கர் நிலத்தையும் தாரைவார்த்துக் கொடுத்தார் (இதுபோக கயத்தாறு பகுதியில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் என்று 47 சென்ட் நிலம் கட்டபொம்மனின் சிலையுடன் அரசு பொறுப்பில் இருக்கிறது).

 இந்தியாவில் எந்த அரசும் எந்த தியாகியின் வாரிசுக்கும் இவ்வளவு சிறப்பு செய்திருப்பார்களா என்பது சந்தேகமே!

 வேறு எந்த சுதந்திரப் போராட்டக்கார வாரிசுகளுக்கும் எதுவும் செய்யவில்லை கருணாநிதி! 
  
 ஒப்பீட்டிற்கு குமரியை மீட்க போராடிய தியாகிகளை சாகும்வரை அலையவிட்டு நயா பைசா பென்சன் கொடுக்கவில்லை கருணாநிதி!

 பிற்பாடு தூத்துக்குடி தனியாக பிரிந்தபோது எம்.ஜி.ஆர் திருநெல்வேலி மாவட்டத்துக்கே கட்டபொம்மன் பெயர் வைத்தார். இத்தனைக்கும் பாஞ்சாலங்குறிச்சி தூத்துக்குடியில் இருக்கிறது.
அது மட்டுமில்லை ஒன்றேகால் கோடியில் 2015 இல் ஜெயலலிதா மணிமண்டபம் கட்டிக் கொடுத்தார்.

 ஆனால் கருணாநிதியின் இனப்பாசத்திற்கு ஈடு இணை இல்லை.
பூலித்தேவர் போன்ற தமிழ் மறவர் பாளையங்களின் வீர வரலாறுகளை மறைக்கவும் கட்டபொம்மன் போன்ற தெலுங்கு பாளையக்காரர்களின் கோழைத்தனமான வரலாறுகள் வெளிப்படாமல் இருக்கவும் எழும்பூர் ஆவணக் காப்பகத்தையே எரித்தவர் அல்லவா கருணாநிதி?!

 அதாவது அரசாங்கத்திடம் உதவித்தொகை கேட்கும் நிலையில் இருந்த கட்டபொம்மன் வாரிசுகள் கருணாநிதியின் கருணையால் ஒரே ஆண்டில் அப்பகுதி ஆதிக்க சக்தியாக உருவெடுத்தனர்.
 சொத்து, நிலவுடைமை, எண்ணிக்கை என எல்லாம் பெருகிவிட்ட பிறகு கம்பளத்தார் பாஞ்சாலங்குறிச்சியை தமது தனி சாதியத் தலைநகரம் போன்று ஆக்கிவிட்டனர்.

 இந்த கூட்டம் பாஞ்சாலங்குறிச்சி பகுதியில் ஜக்கம்மா அல்லது ஜக்கதேவி கோவிலை பெரிதாகக் கட்டி ஆண்டுக்கொரு முறை மொத்தமாகத் திரண்டு அடாவடி செய்துவந்தது.

 இந்த பகுதியில் பள்ளர் பெருமக்கள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர்.
 அவர்களை வம்புக்கு இழுக்கவே அவர்களின் முக்கிய தெய்வமான கோட்டை கருப்பசாமி கோவில் கொடை நடக்கும் நாளிலேயே தங்களது கொடை விழாவையும் மாற்றிக்கொண்டு 1990 களின் தொடக்கத்தில் மோதலைத் தொடங்கினர். 1995 க்குப் பிறகு ஆயுதங்களுடன் ஒன்றுகூடி நேரடியாகவே மோதத் தொடங்கினர். 

 எப்போதும் தமிழர்களுக்கு எதிராகவே இயங்கும் காவல்துறை பள்ளர் பெருமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பதும் தெலுங்கர் மனம்போன போக்கில் விழா நடத்தவிடுவதும் வழக்கமானது.
 கோட்டைக் கருப்பசாமி கோவில் விழா நேரத்தை குறைத்ததுடன் கோவிலை விரிவாக்க விடாமல் சுற்றுப்பகுதி நிலத்தை அகழ்வாராய்ச்சி என்கிற பெயரில் அரசின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

 தேவர் குருபூசை அளவுக்கு ஆர்ப்பாட்டமாக நடக்கும் இவ்விழாவில் கம்பளத்து சாதி வெறியர்கள் பள்ளர்களை வம்புக்கு இழுப்பதும் அது மோதலில் முடிவதும் இறுதியில் பள்ளர் மீதே வழக்கு பாய்வதுமாக நிலைமை தொடர்ந்தது.

 இறுதியில் 2015 க்குப் பிறகு கோட்டைக் கருப்பசாமி கொடை விழா தடை செய்யப்பட்டது.

 ஆம்! பாஞ்சாலங்குறிச்சி இன்னொரு குறிஞ்சாக்குளம் ஆனது.

இந்த பிரச்சனை தொடர்பாக "பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கருப்பசாமி" எனும் நூல் வெளிவந்துள்ளது.

 பாஞ்சாலங்குறிச்சி பகுதியில் பள்ளர்களுக்குத் துணை செய்யாதது மறவர், நாடார் போன்ற சக தமிழர் குடிகள்!

 அது மட்டுமல்ல பள்ளர்கள் மறவர்களுடனோ நாடார்களுடனோ மோதும்போது வரிந்துகட்டிக் கொண்டு வரும் மள்ளர் இயக்கங்களும் கட்சிகளும் கூட இந்த பள்ளர் நாயக்கர் மோதல் விடயத்தில் மௌனம் காக்கின்றன.

 திருச்செந்தூர் முருகன் கோவிலை உரிமை கோருவது, சென்னையிலும் டெல்லியிலும் கட்டபொம்மன் சிலை கோருவது என்று ஆரம்பித்து தற்போது "நாம் தெலுங்கர் கட்சி" என்று தொடங்கி 'தமிழகத்தில் பாதி மக்கட்தொகை தெலுங்கர்' என்று பேசியதும் இந்த கூட்டம்தான். 

 பள்ளர் பெருமக்களுடன் தமிழ்க் குடிகள் ஓரணியில் திரள வேண்டிய நேரம் இது! திரள வேண்டிய இடம் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கருப்பசாமி கோவில்! 

 [பின்குறிப்பு:- பள்ளர் எனும் பெருமைமிகு இயற்பெயர் இருக்க தேவேந்திரர், மள்ளர், வேளாளர் போன்ற மாற்றுப் பெயர்கள் தேவையில்லை என்பது என் கருத்து]

 
 

 

 

Thursday, 4 August 2022

இரண்டு கொலைகாரர்கள் கதை

இரண்டு கொலைகாரர்கள் கதை

 தமிழகத்தில் நடக்கும் அரசியல் விவாதங்கள் எல்லாமே 'இரண்டு கொலைகாரர்கள்' எனும் கதைப் பாணியில் உள்ளன.
 அதாவது ஒரு ஆண் ஒரு பெண் சேர்ந்து ஒரு கிழவனைக் கொலை செய்து பிறகு பொதுமக்களிடம் மாட்டிக் கொள்கிறார்கள்.
 இருவருமே குற்றத்தை ஒத்துக்கொல்லாமல் ஒருவரை ஒருவர் மாறிமாறி ஒருவரை குற்றம் சாட்டுகிறார்கள். 
அதாவது 
"அவன்தான் கிழவனின் கழுத்தை நெறித்தான்"
"இவள் தான் கத்தியால் குத்தினாள்"
"அவன்தான் கழுத்தை அறுத்தான்" 
"இவள் தான் வயிற்றை கிழித்துப் போட்டாள்"
"அவன்தான் தலையில் கல்லைப் போட்டான்"
"இவள் தான் மண்வெட்டியால் தலையை வெட்டினாள்"
"அவன்தான் பிணத்தைப் புதைத்தான்"
"இவள் தான் நகைகளை எடுத்துக் கொண்டாள்"
"அவன்தான் பணத்தை எடுத்துக் கொண்டான்"

 பொதுமக்களுக்கு இருவருமே குற்றவாளிகள் என்று புரிந்தாலும் அவர்கள் நடத்திய சுவாரஸ்யமான விவாதத்தை வாயைப் பிளந்து கேட்டபடி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
 இந்த இடைவெளியில் இவர்களின் மற்ற கூட்டாளிகள் ஊரையே சூறையாடிவிட்டு சென்றுவிட்டனராம்.

 அதாவது இருவருமே கூட்டாளிகள்.
 இருவரும் சேர்ந்து ஒரு கிழவனைப் பிடித்து கழுத்தை நெறித்து கத்தியால் கழுத்தையும் வயிற்றையும் அறுத்து தலையில் கல்லைப் போட்டு அப்படியும் சாகாத போது தலையை வெட்டி கொன்று கொள்ளையடித்து பின் புதைத்துள்ளனர். 

 இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதன் மூலம் தண்டனையிலிருந்து தப்பிக்கும் உத்தியைப் பயன்படுத்துகின்றனர் (blame game).

 அரசியலில் ஒருவர் மீது இன்னொருவர் குற்றம் சாட்டினால் அதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும்.
 ஆனால் கேள்வி கேட்டவரை "நீ மட்டும் யோக்கியமா?" என்று பதில்-குற்றச்சாட்டு வைப்பதே இங்கு நடக்கிறது.

 முன்பு நடந்த அதிமுக - திமுக மோதலும் சரி இன்று நடக்கும் பாஜக - திமுக மோதலும் சரி இந்த வகையிலேயே நடக்கிறது.
 மத விவாதங்கள் கூட இவ்வாறே!
"நான் கேவலம் என்றால் நீ மகா கேவலம்" என்கிற ரீதியில்தான் பதிலடி கொடுக்கப்படுகிறது.

 இது ஒருவனை மற்றொருவன் கேவலப்படுத்துவதை ரசிக்கும் நமது மனப்பான்மையின் விளைவே!

 இந்த "இரண்டு கொலைகாரர்கள்" சூழலில் இருந்து அரசியலைத் திருப்புவோம்.

கேள்விக்கு பதில்-கேள்வி அல்ல பதில் கேட்போம்!

Tuesday, 2 August 2022

சாதிவெறியில் முதலிடம் திமுக

ஜாதிவெறியில் முதலிடம் திமுக!

 இடவொதுக்கீட்டால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய பலனடைந்தது (திமுக முதல்வரின் சமூகமான) மேளக்கார சமூகமாகும். 

 1981 கணக்கெடுப்பில் (தமது மக்கட்தொகைப்படி) OBC இல் மேளக்காரருக்கு 100 இருக்கைகள் கிடைக்க வேண்டுமெனில் 525 இருக்கைகளை பெற்றுள்ளனர்!

 அதாவது மற்ற எவரையும் விட அதிக பயன்களை அனுபவித்தது மேளக்காரர் தான். 

 ஆனால் (வன்னியர் போராட்டத்தின் விளைவாக MBC கொண்டு வரப்பட்டபோது) மேளக்காரரையும்  MBC க்கு வஞ்சமாக கொண்டு சென்றது திமுக அரசு.

 இதேபோல மேளக்காரருக்கு பிறகு சௌராட்டிரர் அதிகளவில் 100 க்கு 380 பேர் இருக்கைகள் பெற்றிருந்தனர்.
நல்லவேளை அவர்கள் MBC க்கு கொண்டு செல்லப்படவில்லை.

 (தமிழ்க்குடிகளான) CSI கிறுத்துவர் (பெரும்பாலும் கிறுத்துவ நாடார், சில கிறுத்துவ வேளாளர், சில கிறுத்துவ உடையார், கொங்கு வேளாளர், நாங்குடி வேளாளர் ஆகியோர்) நூறுக்கு முறையே 88, 87, 75 இருக்கைகளையே பெற்றுள்ளனர். 
 முறைப்படி பார்த்தால் இந்த 3 குடிகளையும்  MBC பட்டியலுக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும். 
 ஆனால் இவர்கள் தமிழ்க்குடிகள் என்பதால் மேளக்கார ஜாதிவெறி பிடித்த திமுக அரசால் வஞ்சிக்கப்பட்டனர்.

இதை ஊடகங்களை பேசச்சொல்லி 2014 தொட்டு கேட்டிருக்கிறேன்.

- Sundaram Muthiah Rajasubramanian
(தென்காசி சுப்பிரமணியன்)

சான்று ஆவணம்:  Reort of Tamil nadu second backward classes commission  (volume 1-3)

 காணொளி விளக்கம்: https://youtu.be/XQqpT2Inu2M