இரண்டு கொலைகாரர்கள் கதை
தமிழகத்தில் நடக்கும் அரசியல் விவாதங்கள் எல்லாமே 'இரண்டு கொலைகாரர்கள்' எனும் கதைப் பாணியில் உள்ளன.
அதாவது ஒரு ஆண் ஒரு பெண் சேர்ந்து ஒரு கிழவனைக் கொலை செய்து பிறகு பொதுமக்களிடம் மாட்டிக் கொள்கிறார்கள்.
இருவருமே குற்றத்தை ஒத்துக்கொல்லாமல் ஒருவரை ஒருவர் மாறிமாறி ஒருவரை குற்றம் சாட்டுகிறார்கள்.
அதாவது
"அவன்தான் கிழவனின் கழுத்தை நெறித்தான்"
"இவள் தான் கத்தியால் குத்தினாள்"
"அவன்தான் கழுத்தை அறுத்தான்"
"இவள் தான் வயிற்றை கிழித்துப் போட்டாள்"
"அவன்தான் தலையில் கல்லைப் போட்டான்"
"இவள் தான் மண்வெட்டியால் தலையை வெட்டினாள்"
"அவன்தான் பிணத்தைப் புதைத்தான்"
"இவள் தான் நகைகளை எடுத்துக் கொண்டாள்"
"அவன்தான் பணத்தை எடுத்துக் கொண்டான்"
பொதுமக்களுக்கு இருவருமே குற்றவாளிகள் என்று புரிந்தாலும் அவர்கள் நடத்திய சுவாரஸ்யமான விவாதத்தை வாயைப் பிளந்து கேட்டபடி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த இடைவெளியில் இவர்களின் மற்ற கூட்டாளிகள் ஊரையே சூறையாடிவிட்டு சென்றுவிட்டனராம்.
அதாவது இருவருமே கூட்டாளிகள்.
இருவரும் சேர்ந்து ஒரு கிழவனைப் பிடித்து கழுத்தை நெறித்து கத்தியால் கழுத்தையும் வயிற்றையும் அறுத்து தலையில் கல்லைப் போட்டு அப்படியும் சாகாத போது தலையை வெட்டி கொன்று கொள்ளையடித்து பின் புதைத்துள்ளனர்.
இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதன் மூலம் தண்டனையிலிருந்து தப்பிக்கும் உத்தியைப் பயன்படுத்துகின்றனர் (blame game).
அரசியலில் ஒருவர் மீது இன்னொருவர் குற்றம் சாட்டினால் அதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும்.
ஆனால் கேள்வி கேட்டவரை "நீ மட்டும் யோக்கியமா?" என்று பதில்-குற்றச்சாட்டு வைப்பதே இங்கு நடக்கிறது.
முன்பு நடந்த அதிமுக - திமுக மோதலும் சரி இன்று நடக்கும் பாஜக - திமுக மோதலும் சரி இந்த வகையிலேயே நடக்கிறது.
மத விவாதங்கள் கூட இவ்வாறே!
"நான் கேவலம் என்றால் நீ மகா கேவலம்" என்கிற ரீதியில்தான் பதிலடி கொடுக்கப்படுகிறது.
இது ஒருவனை மற்றொருவன் கேவலப்படுத்துவதை ரசிக்கும் நமது மனப்பான்மையின் விளைவே!
இந்த "இரண்டு கொலைகாரர்கள்" சூழலில் இருந்து அரசியலைத் திருப்புவோம்.
கேள்விக்கு பதில்-கேள்வி அல்ல பதில் கேட்போம்!
No comments:
Post a Comment