தமிழ் குயவர்களை இன அழிப்பு செய்யும் தெலுங்கர்
குயவர் குடி பாரம்பரியக் குடி.
குயவர் என்பது காரணப் பெயர், மண்ணைக்கு குயைந்து மட்பாண்டங்கள் முதல் தெய்வச் சிலைகள் வரை செய்கின்ற செயலைக் குறிக்கும்.
நாங்கள் வழிபாட்டுடன் தொடர்புடன் ஒரு குடி.
குயவர் தமிழ்நாட்டின் பூர்வ குடி.
இன்று ஆவணங்களில் 'இந்து குலாலா' என்று குறிக்கின்றனர்.
தமிழர்களான எங்களை வேற்றுமொழிச் சொல்லால் அடையாளப் படுத்துவதை அவமானமாகக் கருதுகிறோம்.
தமிழகத்தில் குயவர் போன்று கன்னடரில் கும்பரா, தெலுங்கரில் குலாலா என்று இருக்கிறார்கள்.
தொழில் ஒன்று என்பதால் நாங்கள் எல்லாரும் ஒன்று என்று ஆகிவிடுமா?
நாயக்கர் ஆட்சியில் 450 ஆண்டுகளுக்கு முன் மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி பகுதிகளில் குலாளா குடியமர்த்தப்பட்டனர்.
பழனியில் தளவாய் ராமப்பய்ய நாயக்கர் குயவர் கையால் திருநீறு பெற மறுத்து எங்களை கோவிலில் இருந்து விரட்டி பிராமணர்களை நிரப்பினார்.
எங்களின் கோவில் பணிக்காக நிவந்தமாக வழங்கப்பட்டிருந்த நிலங்கள் பறிக்கப்பட்டுவிட்டன.
நாங்கள் பெருந்தேவ கோவில்களில் இருந்து விரப்பட்டாலும் ஐயனார், மாரியம்மன், சுடலை மாடன் கோவில்களில் பூசாரிகளாக இருக்கிறோம்.
எங்கள் குலப் பட்டம் வேளார் என்பதாகும்.
பாண்டிய வேளார், சோழ வேளார், சேர வேளார் என்று மூன்று நாட்டுப் பிரிவுகள் உண்டு. சமீப காலம் வரை அந்தந்த நாட்டுக்குள் தான் திருமண உறவு வைத்துக்கொண்டு பாரம்பரியத்தை கடைபிடித்து வந்தோம்.
குலாளர் என்ற பெயர் 40 ஆண்டுகளுக்கு முன் எங்கள் மீது திணிக்கப்பட்டது. MBC பிரிவு கொண்டுவரப்பட்டபோது குலாளர் என்கிற முக்கிய பிரிவின் கீழ் குயவர் என்கிற உட்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
பூர்வகுடி பெயரை முதன்மையாக வைக்காமல் பிழைக்க வந்தவர் பெயரை முதன்மையாக ஆக்கிவிட்டனர்.
இதன்மூலம் குலாளா பெரும்பான்மை என்கிற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டனர்.
இன்று எங்கு பார்த்தாலும் தெலுங்கர் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. தமிழகத்தில் பாதி தெலுங்கர் என்று கூறி அதில் 36 குடிகள் தெலுங்கர் என்று வகைப் படுத்துகின்றனர். எங்களையும் குலாளர் என்று தெலுங்கராக கணக்கு காட்டுகின்றனர்.
குலாலா வீட்டுக்குள் தெலுங்கு பேசினாலும் வெளியில் தம்மை தமிழர் என்று அடையாளப் படுத்திக் கொண்டு பசுத்தோல் போர்த்திய புலியாக வலம் வருகின்றனர்.
சமீபத்தில் கீதா ஜீவன் பங்கேற்ற நிகழ்ச்சியில் மேடையிலேயே தாங்கள் தெலுங்கர் என்பதை ஒத்துக்கொண்டனர். ஆவணம் அல்லாத இடங்களில் 'தெலுங்கு குலாளர்' என்று தம்மை தெளிவாக அடையாளப் படுத்திக் கொள்கின்றனர்.
ஆனால் அவர்கள் எங்களுக்கு பெண்கொடுப்பது இல்லை. பெண்ணெடுக்க மட்டும் செய்கிறார்கள்.
எங்களுக்கு தற்போது குயவர் என்று சாதுச் சான்று தர மறுக்கிறார்கள்.
நாங்கள் வீட்டிலும் வெளியிலும் தமிழ்தான் பேசுகிறோம். அடிப்படையில் நாங்கள் தமிழர்கள். தமிழ் உணர்வு உள்ளவர்கள். பெரியபுராணத்தில் 'திருநீலகண்டத்து குயவனாருக்கு' என்றும் சித்தர் பாடலில் "நாலாறு மாதமாய் குயவனை வேண்டி' என்றும் எங்கள் பெயர் மரியாதையுடன் வருகிறது.
எங்கள் பெயரை மாற்றுவது ஒரு இன அழிப்பு.
போர் செய்துதான் ஒரு குடியை அழிக்கமுடியும் என்றில்லை அடையாளத்தை மாற்றினால் போதும்.
ஆவணங்களில் குலாலா என்றிருந்தால் எங்கள் உண்மையான அடையாளத்தை இழந்துவிடுவோம்.
இந்த மண்ணின் மக்கள் நாங்கள் ஏன் வேறொரு மொழி பெயரை தலையில் சுமக்க வேண்டும்?
தமிழ்நாடு தமிழருக்கே என்கிற புரிதல் எங்கள் மக்களிடம் இல்லை.
அரசிடம் எங்கள் குயவர் சங்கம் வைக்கும் கோரிக்கை தமிழகத்தில் வேளார், வேட்கோவர், மண்ணுடையார், உடையார் ஆகிய பட்டங்கள் கொண்ட தமிழ் பேசும் குயவர்களை 'குயவர்' என்கிற பெயரிலேயே சான்று வேண்டும். MBC இல் கல்வி, வேலைவாய்ப்பு களில் எங்கள் உரிமையை குலாளா, கும்பரா, கும்மாரா போன்றோர் அபகரித்து வருவதைத் தடுக்க வேண்டும். அவர்களுக்கு OBC என்றே இடவொதுக்கீடு கொடுக்கவேண்டும்.
குயவருக்கு MBC தகுதி இருந்தும் இதுவரை 1% கூட பலன் கிடைக்கவில்லை.
இன்றைய நிலை தொடர்ந்தால் ஏற்கனவே வாழ்வாதாரத்தை இழத்த இந்த மண்ணின் மைந்தர்களான குயவர்கள் இடவொதுக்கீடு உரிமையையும் இழந்துவிடுவார்கள். இந்த பிரச்சனையில் தமிழ்க் குடிகள் அனைவரும் ஒன்றிணைய வலியுறுத்துகிறோம்.
மேலும் தொழில் சார்ந்த கோரிக்கைகள்....
அரசு சில சுடுமண் சிற்பிகளுக்கு விருது வழங்கியுள்ளது மகிழ்ச்சி. அது மட்டுமல்லாது எங்களுக்கு மட்பாண்ட பூங்காக்களை அமைக்க வேண்டும்.
அரசின் பொங்கல் தொகுப்பில் பானை இடம்பெற வேண்டும்.
பானை செய்ய மண் எடுக்க பணம் கட்டும் நிலை மாறவேண்டும்.
மட்பாண்டம் மற்றும் சுடுமண் சிற்பக் கலைக்கு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்.
பானைகளை கோவில்களில் பயன்படுத்துவது போல வீடுகளிலும் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்க வேண்டும்.
மண்பாண்ட விற்பனைக்கு வாரியங்கள் அமைத்து தரவேண்டும்.
நலிந்த குடும்பங்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும்.
மானாமதுரை கடம் எனும் மட்பாண்ட இசைக் கருவி பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட வேண்டும். ஐயனார் கோவில் குதிரைகள் பாரம்பரிய அடையாளம் பெறவேண்டும். பீகார் அரசு போல சில ரயில் நிலையங்களில் மண்குவளை மூலம் தேநீர், ஐஸ்கிரீம் வழங்கும் முறை கொண்டுவர வேண்டும். விழாக்களில் அரசும் மக்களும் மண்பானைகளை பயன்படுத்த வேண்டும்.
திரு. பழ.பாஸ்கரன் M.Sc., M.Phil., B.Lit.,
சிவாச்சாரியார், காரைக்குடி.
TN media 24 க்கு 19.08.2022 அன்று அளித்த பேட்டியிலிருந்து
No comments:
Post a Comment