Tuesday, 28 June 2022

நெஞ்சுக்கு நஞ்சு

நெஞ்சுக்கு நஞ்சு 

(பதிவில் தலித் என்ற வார்த்தை எளிமையாகப் புரிவதற்காக பயன்படுத்தப் பட்டுள்ளது)

 நேற்று உதயநிதி ஸ்டாலின் (எம்.எல்.ஏ வேலையையெல்லாம் விட்டுவிட்டு) நடித்த நெஞ்சுக்கு நீதி படம் பார்த்தேன்.
 ஒவ்வொரு காட்சியும் நுட்பமாக திராவிட விசம் ஏற்றப்பட்டுள்ளது 

 அதாவது தமிழர்கள் செய்யாத தவறுக்கெல்லாம் அவர்கள் மீது பழி போடுவது.
 தமிழகம் என்றாலே சாதிவெறி பிடித்த பூமி என்று காட்ட முற்படுகிறார்கள்.
 இவர்களைத் திருத்த தமிழகத்திற்கு வெளியே படித்த ஒரு கலப்புத் திருமண வாரிசான ஹீரோ பெரியார் புத்தகத்துடன் வந்து இறங்குகிறார்.

 படம் தொடங்கியதுமே ஒரு பள்ளியில் சத்துணவு ஆயா சாதிக் கொடுமைக்கு ஆளாவது போல் காண்பிக்கப் படுகிறது.
 இது விருதுநகர் மாவட்டம் கம்மாப்பட்டியில் நாயக்கர் சாதி செய்த வன்கொடுமை அப்படியே பொள்ளாச்சி மக்கள் (கவுண்டர்) செய்வது போல் காட்டப்பட்டுள்ளது.

 பொள்ளாச்சியை ஏன் இவ்வாறு சாதிவெறி பிடித்த பகுதியாகக் காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. இந்தி எதிர்ப்பில் மொழிப்பற்று காட்டி பெரும் துப்பாக்கிச்சூடு நடந்த இடம் என்பதால் இருக்கலாம்.

 தலித் என்றாலே பன்றி மேய்த்துக்கொண்டும் குப்பையையும் சாக்கடையையும் அள்ளிக்கொண்டும் இருப்பார்கள் என்று காட்டுகிறார்கள்.
 ஆனால், அரசின் துப்புரவு பணியாளர்களில் bc, mbc, oc, sc, st என எல்லா சாதியினரும் பணிசெய்கிறார்கள் என்பதுதான் புள்ளிவிபரம்.

 வெட்டியான் வேலை பற்றியும் வருகிறது. ஆனால் உண்மையில் ஒரு பார்ப்பன பெண் அரசாங்க மின் எரி மேடையில் வெட்டியான் பணிபுரிந்து வரும் செய்தி பத்திரிக்கைகளில் சமீபத்தில் வந்துள்ளது.

 கவுன்சிலரை தரையில் அமரச்செய்த செய்தி கூறப்படுகிறது. கடலூர் மாவட்டம் திட்டை ஊராட்சியில் இதைச் செய்தது தி.மு.க.  

 இரண்டு சிறுமிகளை சாதிவெறியின் காரணமாக மூன்றுபேர் கற்பழித்து தூக்கில் போட்ட சம்பவம் காட்டப்படுகிறது. 

இத்தகைய சம்பவங்கள் வடக்கே பல நடந்தது. ஆனால் அது தமிழகத்தில் நடந்தது போலவும் அதெல்லாம் இங்கே சர்வ சாதாரணம் போலவும் காட்டப்பட்டுள்ளது.
ஏன்னா அதுவும் இந்தியாவாம் நாமால்லாம் இந்தியராம்.
 காஞ்சிபுரத்தில் ஒரு தலித் சிறுமியை கற்பழித்து எரித்துக் கொன்றதாக கூறப்படுகிறது. இது எந்த சம்பவத்தை என்று தெரியவில்லை. காஞ்சிபுரத்தில் நண்பர்களுடன் மது அருந்திய திருநங்கை அவ்வாறு கொல்லப்பட்டார் அதுவாக இருக்கலாம். அதில் சாதிவெறி எப்படி என்றுதான் தெரியவில்லை.

 பிறகு அச்சிறுமிகள் 30 ரூ கூலி உயர்வு கேட்டதாகவும் வருகிறது. 
 இது சின்னியம்பாளையம் சம்பவத்தை நினைவு படுத்துகிறது. ஆங்கிலேயர் காலத்தில் கூலி உயர்வு கேட்ட ராஜி என்கிற தொழிற்சங்க தலைவியை ஆலை அதிபரின் அடியாட்கள் வன்புணர்வு செய்து கொன்றார்கள். ஆனால் படத்தில் காட்டியதற்கு மாறாக தொழிலாளர்கள் அந்த குற்றத்தைச் செய்த பொன்னான் என்பவனை அடித்தே கொன்றார்கள்.
 இந்த சிறப்பான சம்பவத்தை முன்னின்று செய்த நான்கு தொழிலாளர்களை 1946 இல் தூக்கில் போட்டார்கள். அது அத்தனை சுலபமாக இல்லை. தொழிலாளர்களும் பொதுமக்களும் அந்த நால்வரை லண்டன் வரை மேல்முறையீடு காப்பாற்றப் போராடினார்கள். அத்தகைய கொங்கு மண் மீதா இப்படி ஒரு பழி?!
 கூலி உயர்வு கேட்டதற்காக கொலை என்றதும் கீழ்வெண்மணி யில் விவசாய மக்களைக் கொன்ற கோபாலகிருஷ்ண நாயுடு நினைவுக்கு வருகிறான்.
 
 அதிலும் ஒரு இன்ஸ்பெக்டர் வருகிறார். நாய்க்கு புலி என்று பெயர்வைத்து அழைக்கிறார். அவரை ஐயர் என்று சாதியைச் சொல்லியே அறிமுகப்படுத்தி அவர் பட்டியல் சாதி மக்களை இழிவாக பேசுவது போலவும் நடத்துவது போலவும் காட்டியுள்ளனர். இதுவே வேறு சாதி பெயரைச் சொல்லியிருந்தால் கலவரமே வெடித்திருக்கும். அவர் சிறுமிகளுக்கு நீதி கிடைக்கவிடாமல் தடுப்பது போலவும் காட்டியுள்ளனர்.
 அச்சிறுமியரின் தந்தைகளை மிரட்டி அவர்களே தமது மகள்களை ஆணவக் கொலை செய்ததாக ஒப்புக்கொள்ள வைத்து உடல்களை உடனடியாக எரித்துவிடச் செய்வது போலவும் காட்டியுள்ளனர். இறுதியில் கற்பழித்தவரே அவர்தானாம். தமிழகத்தில் ஒரு போலீஸ்கார ஐயர் தலித் சிறுமியைக் கற்பழித்து கொலை செய்தது எங்கே நடந்தது?!
 தமிழகத்தில் இதுவரை ஒரு பிராமணர் மீது கூட சாதிக் கொடுமை செய்ததாக வன்கொடுமை வழக்கு பதிவாகவில்லை.
 அமைதியான சமுதாயம் என்றால் என்ன பழி வேண்டுமாலும் போடுவீர்களா?!
 சிறுமிகளுக்காகத் தீவிரவாத வழியில் போராடும் ஒருவரைக் காட்டுகிறார்கள். கறுப்பு சட்டை அல்லது கறுப்புத் துண்டுடன் எப்போதும் இருக்கிறார். அவர் சாதிக் கட்சியில் இருப்பதாக காட்டிவிட்டு பிறகு அவரே அந்த கட்சியை குற்றம் சாட்டுவது போலவும் வருகிறது. என்ன சொல்ல வருகிறார்கள் தலித் மக்களில் ஒருவன் அதிகாரத்திற்கு போனாலும் எதுவும் மாறாது என்றா?! 
அந்த போராளியை பொய்வழக்கு போட்டு குற்றவாளி ஆக்கிவிட்டனராம் சரி அவர் படித்த பள்ளி இடிந்துபோய் கிடக்கிறதே அது எதனாலாம்?! தமிழகத்தில் எங்கே தலித்துகள் பகுதியிலுள்ள பள்ளி இடிக்கப்பட்டது ?! 
கடைசியில் அந்த போராளியையும் ஐயர் கொன்றுவிடுகிறார்.

 தமிழகத்தில் தலித் மற்றும் தொழிலாளர்களுக்காகப் போராடியவர்கள் (வெண்மணி சம்பவத்துக்குப் பழிவாங்கியவரைத் தவிர)  பெரும்பாலும் தலித் இல்லை. மலேயா கணபதி, இரணியன், சாம்பவனோடை சிவராமன் முதல்  நீதிபதி சந்துரு, நல்லகண்ணு, சீதையின் மைந்தன் வரை பல தலித் அல்லாத தலைவர்கள் உண்டு. 
 

 பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர் பெயர் அனிதா. திரைப்படத்தில் அனிதாவை டாக்டர் ஆக்கிய திராவிட சாதனையை என்னவென்று சொல்ல! 

 ஈ.வே.ரா மற்றும் அம்பேத்கர் சிலைகள் அருகருகே காட்டப்பட்டு என்னவோ ஈவேரா வும்  சாதிவெறிக்கு எதிராக போராடியது போல வசனம் பேசுகிறார்கள்.
 தொடக்கத்தில் இருந்து சாகும் வயதிலும் முஸ்லிம்களையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் தங்கள் எதிரி என்று தெளிவாகக் கூறியவர் ஈவேரா. 

 கிணற்றில் தண்ணீர் எடுத்ததற்காக தலித் மக்களை ஐயர் இன்ஸ்பெக்டர் அடிக்கும் காட்சி வருகிறது.
 இப்படி சம்பவமும் தமிழகத்தில் எங்கே நடந்தது என்று தெரியவில்லை. தமிழகத்தில் ஏறத்தாழ 50,000 க்கும் மேற்பட்ட கிராமங்கள், நகரங்கள் உள்ளன. இதில் தீண்டாமை கடைபிடிப்பதாக பதிவானவை 450 க்கும் கீழே! நாயக்கர் காலத்தில் கூட பள்ளர்கள் நிலத்தில் மறவர்கள் குளம் வெட்டி இருவரும் பயன்படுத்திய கல்வெட்டுச் சான்று உள்ளது. 

 இன்னொரு காட்சியில் அந்த ஐயர் போலிஸ் தலித் போலீசை நேர்மையாக நடந்துகொண்டதற்காக சட்டையைப் பிடித்து உலுக்கி போலீஸ் வேலை போனால் நான் மணியாட்டவும் நீ குப்பையள்ளவும் போவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறுகிறார். ஏன் வேறு வேலையே கிடைக்காதா?!
 தமிழகத்தில் என்ன விஜயநகர காலத்து மனுதர்ம ஆட்சியா நடக்கிறது?! 

 முப்பாட்டன் முருகன் என்று காவி கும்பல் பேரணி போவது வருகிறது. முப்பாட்டன் முருகன் என்று முழங்கி தைப்பூசத்திற்கு விடுமுறை வாங்கிக் கொடுத்தது சீமான் அவர்கள். என்ன சொல்ல வருகிறார்கள் இதைச் சாதித்தது காவி கும்பல் என்றா இல்லை சீமான் ஒரு காவி என்றா?  

 இரண்டு மூன்று தடவை 2000 ஆண்டுகளாக அடிமையாக இருப்பதாக வருகிறது. இதற்காகவே இந்த படத்தை எடுத்தவனையும் வசனம் எழுதியவனையும் செருப்பால் அடிக்கலாம். எத்தனை ஆண்டுகள்தான் தலித்துகள் பல தலைமுறை கால அடிமை என்று தவறான தகவலைச் சொல்லி அவர்களை மூளைச் சலவை செய்வீர்கள்?

தமிழகத்தில் சோழர்கள் காலத்தில் பறையர்கள் பிராமணர் அளவுக்கு இறையிலி நிலங்கள் பெறும் அளவுக்கு உயர்ந்த இடத்தில் இருந்துள்ள சான்றுகள் உள்ளன. நிலவரி கட்டாத பிராமணர்கள் தண்டிக்கப்பட்ட சான்றுகள் உள்ளன. கோவிலுக்குப் பக்கத்தில் பார்ப்பன சேரி போல பறைச்சேரியும் சோழ அரசாங்க மருத்துவமனை பகுதியில் நோயாளிகள் இருந்த தீண்டாச்சேரியும் இருந்தன. நாயக்கர் ஆட்சி வடக்கே பரவி தெற்கைப் பிடிக்கும் வரை கூட பாண்டிய நாட்டில் பறையர் மன்னரின் மெய்க்காப்பாளராக கோவிலுக்கு நிலதானம் வழங்கிய சான்று உள்ளது. 
நாயக்கர் கால தொடக்கத்தில் கூட பறையர் மறவர் சமாதான ஒப்பந்தம் கல்வெட்டாக உள்ளது.
 நாயக்கருக்கு அடங்கிய பறையர் ஜமீன் கூட உண்டு.
நாயக்கர் ஆட்சிக்கு முன்பு வரை தஞ்சை பெரியகோவிலும் மீனாட்சி அம்மன் கோவிலும் பார்ப்பனர் அல்லாதவர் தலைமையில் இருந்துள்ளன.

 அமெரிக்காவில் இந்தியர்கள் பெருமையோடு வாழ்கிறார்கள் ஆனால் இங்கே எல்லாரும் ஜாதிவெறி பிடித்து அலைகிறோமாம். உத்திர பிரதேசம் பற்றி எடுத்த படத்தை தமிழகத்திற்கு ஏற்றாற்போல மாற்றியதாகக் கூறினார்களே?! இந்த வசனத்தை மாற்ற மறந்துவிட்டார்களோ?! பீகார்க் காரனும் நாமும் ஒன்றா? தமிழகத்துக்கு வரும் இந்தி சிபிஐ அதிகாரியும் கூட அதே அளவு ஜாதிவெறியுடன் காட்டப்படுகிறாரே?! அதற்கும் தமிழகம்தான் பொறுப்பா?!

 இந்தி எதிர்ப்பு வசனம் ஆறுதலாக இருக்கிறது. நல்லவேளை அதையாவது ஒத்துக்கொண்டார்களே!

 ஆதிக்க சாதியினர் "ஆட்சி எங்கள் கையில்" என்று கூறுவதாக வருகிறது. மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா என்று தெரியவில்லை. தமிழர்கள் கையில் ஆட்சியதிகாரம் 800 ஆண்டுகளாக இல்லை.  காமராசர், பழனிச்சாமி தவிர இப்போது வரையும் தமிழகத்தை ஆள்வது வந்தேறிகள். இந்த படுபாகத்தைச் செய்த உயர் சாதிக்கு ஆதரவாக காவல்துறை நடந்துகொள்வது போலவும் காட்டப்பட்டுள்ளது.
 அதாவது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியைக் காட்டுகிறார்கள். 
 ஒரு கவுண்டர் ஆட்சிக்கு வந்தால் அந்த சாதிக்காரர்கள் இப்படி வெறியாட்டம் போடுவார்களாம். 
என்றால் ஆளும் தெலுங்கு சின்னமேள சாதிதான் சாதிய குற்றங்களுக்கு காரணம் என்று ஒத்துக் கொள்கின்றனரா?!

 திரைப்படத்தில் இதற்கும் ஒரு தணிக்கை வேண்டும்!
எங்கேயோ எவரோ செய்த ஒன்றை அதற்கு சம்பந்தமே இல்லாத மக்கள் செய்ததாக காட்டுவதற்கும் தடை போட வேண்டும்!

 இந்த படத்தைப் பார்க்கும் வெளியாள் ஒருவர் தமிழகத்தைப் பற்றி என்ன நினைப்பார்?!

  மீண்டும் ஒருமுறை உறுதியாக்க் கூறுகிறேன்!
நாங்கள் இந்தியர் இல்லை! எங்கள் நாடு இந்தியாவின் பகுதியாக வரலாற்றில் எப்போதும் இருந்ததில்லை! 
 வடக்கே நடந்த, நடக்கின்ற கொடூரங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை!
 இந்தியா என்கிற இழிவிலிருந்து விலகத்தான் தனிநாடு கேட்கிறோம்!
 இங்கே இருக்கின்ற வந்தேறிகள் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் வரை அவ்வந்தேறிகளும் அதிகார வர்க்கமும் செய்யும் அட்டூழியத்திற்கு நாங்கள் பொறுப்பில்லை!
 தவறு செய்த தமிழர்களுக்கு சக சமூகமான நாங்கள் பொறுப்பு என்றாலும் அவை மிகச்சில எடுத்துக்காட்டுகளே! திராவிட மாடல் ஆட்சியின் சாராய சாக்கடை அரசியலின் விளைவே! விதிவிலக்குகளை பொதுக் கலாச்சாரமாக திரிக்க வேண்டாம். 

 தன் சாதிக்காக ஆங்கிலேயரிடம் அடிமையாக இருந்து ராணுவத்தில் மகார் சாதிக்கென்று தனி படைப்பிரிவு ஏற்படுத்திய அம்பேத்கரும்
 ஆங்கிலேயர் காலுக்கு செருப்பாக இருந்து கோயம்புத்தூர் தேர்தலில் தன் நாயக்க சாதிக்காக சீட் கேட்டு கதறிய ஈவேரா வும் சாதி ஒழிப்பு போராளிகள் என்றால் தன் சாதி பற்றி எப்போதுமே பேசாத சிந்திக்காத முத்துராமலிங்கத் தேவர் சாதிவெறியரா?!

 திராவிடவாதிகளுக்கு நாங்கள் சாதிவெறி பிடித்த சமூகமாக அடித்தட்டு மக்களை நசுக்குகின்ற ஆவணம் பிடித்தவர்களாக அதாவது உ.பி, பீகார் போல இருக்கவேண்டும் என்றும் திராவிட சிந்தனையாளர்கள் வந்து எங்களைத் திருத்தவேண்டும் என்று ஏன் தீராத ஆசை?!

 ஏன் அவ்வாறே எப்போதும் பிரச்சாரம் செய்கிறீர்கள்?! ஏன் ஆட்சியதிகாரத்தை வைத்து திரைத்துறையைக் கைப்பற்றி ஆக்கிரமித்து அந்த ஆசையைத் தீர்த்துக்கொள்ளும் விதமாகவே படம் எடுக்கிறீர்கள்? 

 இதற்காகத் தான் பாஜக வை இங்கே வளர்த்து விடுகிறீர்களா?! 

 உறுதியாக இறுதியாக கூறுகிறேன் திராவிட சிந்தனையாளர்கள் தமிழகத்தில் ஒன்றும் கிழித்ததில்லை!

1 comment:

  1. அருமை இதை அப்படியே முகநூலில் பதிவிடுங்கள்... உங்கள் முகநூல் முகவரியும் தெரிவியுங்கள் ஐயா

    ReplyDelete