ஈவேரா பரப்பிய சூத்திர அவதூறு
சூத்திரன் என்றால் விபச்சாரி மகன் என்று பொருளாம். தமிழர்களை அவ்வாறு மனுதர்மம் கூறுகிறதாம்.
இது பற்றிய ஈ.வெ.ரா கூறிய (தவறான) விளக்கம் கீழ்க்கண்டவாறு,
சூத்திரன் என்பவன் ஏழு வகைப்படும்.
1) யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்
2) யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன்
3) பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன்
4) விபச்சாரி மகன்
5) விலைக்கு வாங்கப்பட்டவன்
6) ஒருவனால் கொடுக்கப்பட்டவன்
7) தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன்
(மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415)
- ஈ.வெ.ரா (குடிஅரசு 05.09.1926)
இதை வைத்துக் கொண்டு ஈ.வெ.ராமசாமி யைப்போல அவரது பக்தர்களும் இன்று வரை பிராமணர்கள் தமிழர்களை தேவடியாள் மகன் என்று கூறியதாக மூச்சுக்கு முன்னூறு முறை நம்மை இழிவுபடுத்தி வருகிறார்கள்.
ஆனால் எந்த தமிழ்ப் பார்ப்பனரும் நம்மை அப்படி குறிப்பிட்டதாக தெரியவில்லை.
ஈ.வே.ரா கூறிய மேற்கண்ட விளக்கம் எவ்வளவு தவறென்றால் அந்த சுலோகத்தில் 'சூத்திரன்' என்கிற வார்த்தையே வரவில்லை.
'விபச்சாரி' என்ற வார்த்தை கூட இல்லை.
இதில் அடிமைகள் பற்றி மட்டுமே கூறப்பட்டுள்ளது.
அந்த சுலோகம்,
த்வஜாஹ்ருʼதோ பக்ததா³ஸோ க்ருʼஹஜ: க்ரீதத³த்த்ரிமௌ ।
பைத்ரிகோ தண்ட³தாஸஶ்ச ஸப்தைதே தாஸயோநய:
- 8 . 415
இதன் ஆங்கில விளக்கம் வருமாறு,
8.415. There are slaves of seven kinds, (viz.) he who is made a captive under a standard, he who serves for his daily food, he who is born in slave house, he who is bought and he who is given, he who is inherited from ancestors, and he who is enslaved by way of punishment.
இதன் தமிழாக்கம் :
அடிமைகள் ஏழு வகைகளில் வருகிறார்கள் -
போரில் அடிமைப்பட்டவன்,
உணவிற்காக வேலை செய்பவன்,
அடிமை வீட்டில் பிறந்தவன்,
வாங்கியவன்,
கொடுக்கப்பட்டவன்,
மூதாதையரால் தரப்பட்டவன்,
தண்டனையாக அடிமைப்பட்டவன்
மனுஸ்மிருதி யில் சூத்திரன் மீது பல அடக்குமுறைகள் கூறப்பட்டுள்ளன. ஆனால் எங்குமே சூத்திரன் வேசிமகன் என்று சுலோகம் இல்லை.
ஈவேரா வுக்கு சூத்திரன் அடையாளத்தை தமிழர்கள் மீது சுமத்துவது மிக முக்கியமாக இருந்தது.
எந்த அளவுக்கு முக்கியம் என்றால் அவர் முதலில் சூத்திரர் கழகம் என்றுதான் பெயர் வைத்துக்கொள்ள முடிவுசெய்தார்.
அப்போதுதானே சூத்திரன் மீதான அத்தனை இழிவையும் தமிழர் மீது சுமத்த முடியும்.
எதிர்ப்புக்குப் பிறகு திராவிட கழகம் என்று வைத்துக்கொண்டார்.
அவர் அளித்த விளக்கம் வருமாறு,
திராவிடன் என்று கூறிக்கொள்ள வெட்கப்பட்டால், வேறு மாறு பெயர் சூத்திரன் என்று கூறிக் கொள்ளத்தான் வேண்டும். சூத்திரன் என்று கூறிக்கொள்ள வெட்கப்படுவதாலேயே திராவிடன் என்று கூறிக்கொள்கிறோம். திராவிடர் கழகம் என்றால், இன்று சூத்திரர்கள் என்று அழைக்கப்படுபவர்களின் கழகம் என்றுதான் அர்த்தம். ஏன் சூத்திரர்களுக்கும் கழகம் என்று கேட்டால், அந்த இழிவு நீங்குவதற்காகக் கழகம் வைத்துக் கொண்டிருக்கிறோம். சூத்திரர்கள் என்று கூறிக்கொள்ள வெட்கப்படுகிறோம். அதனால் ஏற்படும் இழிவை ஒழிக்க விரும்புகிறோம் என்பதற்காகவே திராவிடர் கழகம் இருக்கிறது.
- ஈ.வெ.ரா (குடி அரசு , 30.05.1947)
கழகம் ஆரம்பித்த பிறகு சூத்திரன் மீது மனுஸ்மிருதியால் என்ன இழிவு சுமத்தப்பட்டு உள்ளதோ அதை தமிழர் மீது சுமத்தினார்.
அப்போதும் அவரது தமிழர் மீதான வெறுப்பும் இனவெறி யும் அடங்கவில்லை.
மனுஸ்மிருதியே சூத்திரன் மீது சுமத்தாத இழிவையும் சேர்த்து தமிழர்கள் மீது சுமத்தினார்.
விபச்சாரி மகன் என்று தவறான விளக்கம் கொடுத்தார்.
சாகும் தருணத்திலும் நம்மை தேவடியா மகன் என்று கூறிவிட்டுத்தான் செத்தார்.
“நான் பிறப்பதற்கு முன்னோலேயே தேவடியா மக்கள் நீங்கள், நான் பிறப்பதற்கு முன்பே சூத்திரர்கள் நீங்கள். நான்காவது சாதி நீங்கள், இப்போது நாளைக்கு நான் சாகப்போகிறேன் – சூத்திரனாய் விட்டுவிட்டுத்தானே சாகிறேன்…
(பெரியார் ஈவெரா சிந்தனைகள் தொ.1:1:3205)”
“சாஸ்த்திரத்திலே தேவடியாள் மகன் என்கிறான், பார்ப்பானுக்கு பிறந்தவன் என்கிறான், சூத்திரனுக்கு பெண்டாட்டியே கிடையாது என்கிறான். சூத்திரச்சி பார்ப்பானுடைய வைப்பாட்டி என்று எழுதி இருக்கிறான். யார் கவனித்தீர்கள்.
(பெரியார் ஈவெரா சிந்தனைகள் தொ.1:1:3234)
“நாம் முதலாவது இப்போது மானத்துக்காகப் போராடுகிறோம், வேறே எதற்காகவும் இல்லை. இழிவு – தேவடியாள் மகன், பார்ப்பானுடைய வைப்பாட்டி மகன், தாசிப் புத்திரன் என்று சட்டத்திலே இருக்கிறது"
(பெரியார் ஈவெரா சிந்தனைகள் தொ.1:1:3249)
தமிழரை பார்ப்பனர் வேசிமகன் என்று கூறுவதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்து செய்தே தமிழர்கள் நெத்தியில் வேசிமகன் எனும் பட்டத்தை ஒட்டி தன் இனவெறுப்பைத் தீர்த்துக்கொண்டார் ஈவேரா.
அவர் சொன்ன 7 அர்த்தங்களில் வேசி மகன் என்பதுதான் தற்காலத்திலும் பொருந்துகிறாம்.
இவ்வாறு ராமசாமியின் அடிப்பொடிகளும் தமிழர் மீதான வெறுப்பை அவர் வழியிலேயே தீர்த்துக்கொண்டு வருகின்றனர்.
Sanghi moron piece of shit
ReplyDelete