தீட்சிதர்கள் தேவார சுவடிகளை பூட்டிவைத்தனரா?!
இராஜராஜ சோழனின் காலம் 10 ஆம் நூற்றாண்டின் இறுதி என்பது நமக்குத் தெரியும்.
ஆனால் ராஜராஜ சோழன் சிதம்பரம் கோவிலில் இருந்து தேவார சுவடிகளை மீட்டதாக கிபி 14 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் 'திருத்தொண்டர் புராணம்' எனும் நூல் முதன்முதலில் கூறுகிறது.
அதாவது இராசரான் காலத்திற்கு ஏறத்தாழ 300 ஆண்டுகள் கழித்து!
இந்நூலை எழுதியதும் இன்னார் என்று உறுதியாகத் தெரியவில்லை. அதன் ஆசிரியராகக் கருதப்படுபவர் உமாபதி சிவாச்சாரியார் கூட ஒரு தீட்சிதர்தான்.
சரி நூலின் வரிகளாவது தெளிவாக இருக்கிறதா என்றால் இல்லை.
அதில் திருமுறைகண்ட சோழனாக ‘அபயகுல சேகரன் இராசராசன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் ‘அபயகுல சேகரன்’ எனும் பட்டம் இராஜராஜன் கொண்ட பல பட்டங்களின் பட்டியலிலேயே இல்லை. பிற்பாடு சேர்க்கப்பட்டுள்ளது. முதலாம் குலோத்துங்கன் கூட அபயன் என்ற பட்டமே கொண்டுள்ளான்.
தகவல்களுக்கு நன்றி:- VICKY KANNAN
No comments:
Post a Comment