தீட்சிதர்களுக்கு கண்டனம்
தீட்சிதர்கள் தமிழினம்!
அவர்கள் கனக சபையில் யாரையும் ஏற விடுவதில்லை!
அது அவர்களது நம்பிக்கை அடிப்படையிலானது.
கோவிலில் பணியில் இல்லாத ஒரு தீட்சிதர் கனகசபையில் ஏற முயன்றபோது கூட தாக்கி விரட்டினர் (13.02.2022 செய்தித்தாள்கள் சான்று).
இவர்களை தமிழுக்கும் தமிழருக்கும் எதிரானவர்களாக வந்தேறிகள் சித்தரித்து வந்தனர்.
தினமும் தமிழில்தான் தீட்சிதர்கள் ஓதுகின்றனர்.
தீட்சிதர்கள் கனகசபை (திருச்சிற்றம்பலம்) மீது ஏறி தேவாரம் பாட அனுமதிக்காததை திரித்து அவர்கள் ஏதோ தமிழில் பாட அனுமதிக்க மறுப்பதாக பிரச்சாரம் செய்துவந்தனர் திராவிடவாதிகள்.
இந்த திரிப்புக்குதான் எதிர்ப்பு தெரிவித்து வந்தேன்.
மற்றபடி பெ.மணியரசன் அவர்கள் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட தெய்வத் தமிழ்ப் பேரவையின் போராட்டத்தையும் அதன் விளைவாக காவல்துறை பாதுகாப்புடன் கனகசபை மீது நின்று தேவாரம் பாடியதையும் முழுமையாக வரவேற்கிறேன்.
இதற்குப் பழிவாங்கும் நோக்கில் தீட்சிதர்கள் தற்போது அரசு அதிகாரிகளிடம் நடந்துகொள்வதை ஏற்க முடியாது.
திராவிட ஆட்சியில் இதை வேண்டுமென்றே மென்மையாகக் கையாண்டு மக்களை முட்டாளாக்குகின்றனர்.
தீட்சிதர்கள் சிதம்பரம் நடராசர் கோவில் மீது முழு உரிமை கோருவது ஏற்புடையது அல்ல!
தீட்சிதர்கள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்!
அதே நேரத்தில் தீட்சிதர்களை ஆரியர்கள் என்று முத்திரை குத்தி தமிழுக்கு எதிரானவர்களாக சித்தரிப்பதைக் கண்டு ஏமாறவும் கூடாது.
No comments:
Post a Comment