Thursday 9 June 2022

மனுதர்மம் என்றால்

மனுதர்மம் என்றால்

 மனுதர்மம் என்பது நால்வர்ண கொள்கை என்று தவறாக பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது.
 பிற்கால சோழர், பாண்டியர் கல்வெட்டுகள் மனுநீதியை மனுதர்மத்தை நிலைநாட்டியதாக கூறுவதைத் திரித்து ஏதோ மூவேந்தர் பிராமண அடிமை போல சித்தரிக்கிறார்கள்.

 மனுதர்மம் என்பது நீதி தவறாத என்கிற பொருள் தருவதாகவும் அதனால் மனுநீதி சோழன் போன்ற அறம் வழுவாத ஆட்சி மனுதர்ம ஆட்சி எனவும் கூறுவோர் உண்டு.

 மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் இதன் வேர்ச்சொல் பற்றி ஆராய்ந்து மன் (மனம்) என்பதில் இருந்து உருவான சொல்தான் மனு என்று வடக்கே திரிந்துவிட்டதாகக் கூறுகிறார்.
 இதுவே மனிதன் என்ற சொல்லுக்கும் வேர் என்று கூறுகிறார்.

 மேலும் தமது திருக்குறள் உரையில் ,
"மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம் 
எல்லாப் புகழும் தரும்"

 மனநலம் என்பதற்கு மனிதநேயம் என்று பொருள் கூறியுள்ளார்.

 தொல்காப்பியர் கூற்றுப்படி,
"ஆறறிவு அதுவே, அவற்றொடு மனனே"
அதாவது தோல் , நாக்கு, மூக்கு, கண், காது ஆகியவற்றுடன் மனம் ஆறாவது அறிவு (உணர்ச்சி) என்கிறார். 

ஆகவே,
 மன் அல்லது மனம் என்பது அறிவைக் குறிக்கும் அறிவில் சிறந்தவன் மனிதன். மனிதத் தன்மையுடன் அதாவது பகுந்தறிவுடன் ஆட்சி நடத்துவது மனுதர்மம்.

 இதனை வடநாட்டு மனுஸ்மிருதி உடன் குழப்புவது ஏற்புடையது அன்று. 

No comments:

Post a Comment