சாதிவாரி மக்கட்தொகை கணக்கெடுப்பு நமக்குத் தேவை!
ஆம்!
அது மட்டும் நடந்துவிட்டால் அரசியலில் தீண்டப்படாமல் இருக்கின்ற (என்னைப் போன்ற) மிகச்சிறுபான்மையான சாதிகளை ஒருங்கிணைத்து ஒரு கட்சி ஆரம்பிக்க வேண்டும்.
அதாவது தமிழக மக்கட்தொகையில் 3% க்கும் கீழே இருப்பவர்கள்!
அதில் தமிழ்க் குடிகள் மட்டும் சேரவேண்டும்!
ஏனென்றால், திராவிட ஆட்சியில் வந்தேறிகளில் மீமிகச் சிறுபான்மை சாதி வரை அரசியல் பலன் அதிகமாகவே கிடைக்கிறது.
சாதி வாரியாக கணக்கெடுப்பு நடந்துவிட்டால் வந்தேறிகள் எங்கே எவ்வளவு இருக்கிறார்கள் என்பதும் தெரிந்துவிடும்!
வந்தேறிகள் செய்யும் தந்திரம் என்னவென்றால் இரண்டு பெரிய சாதிகளுக்கு மத்தியில் குடியேறி அவர்களுக்குள் சண்டை மூட்டிவிட்டு நடுவில் அமர்ந்து தலைமையைப் பிடிப்பது!
அல்லது எந்த சாதியும் பெரும்பான்மையாக இல்லாத (நகர்ப்புறம் சார்ந்த) தொகுதியில் நின்று வெல்வது!
பெரும்பான்மைச் சாதிகளுக்கு எதிராக இயல்பாகவே சிறுபான்மை சாதிகளின் ஆதரவு வந்தேறிகளுக்குக் கிடைக்கிறது.
இதை மாற்றவேண்டும்!
மிகவும் சிறுபான்மை மக்கள் கவுன்சிலர் ஆவதோடு நிற்காமல் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்!
அவ்வாறு கிடைக்கும் பதவிக்காலத்தை தமக்குள் சதவீத அடிப்படையில் சுழற்சி முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!
No comments:
Post a Comment