Wednesday, 13 December 2023

நாயக்கர்களை சேதுபதிகள் துவைத்து காயப்போட்ட வரலாறு

 நாயக்கர்களை சேதுபதிகள் துவைத்து காயப்போட்ட வரலாறு 

 ஒரு மனநலம் பாதித்த மறவர் (?) ஒரு பேட்டியில் 'நாயக்கர்கள் மறவர்களுக்கு பிச்சை போட்ட அரசுரிமையே சேது சீமை' என்றும் 'சேதுபதிகள் மதுரை நாயக்க மன்னர்களை கடவுளாக நினைத்தனர்' என்றும் உளறியுள்ளார்.

 ஆனால் உண்மை வரலாறு வேறாக இருக்கிறது!

 அதாவது ராஜராஜ சோழனின் பேரன் காலத்தில் சோழர்கள் கன்னட சாளுக்கியருடன் கலந்து மக்கள் ஆதரவு இழந்து பலவீனமான பிறகு அவர்களை வீழ்த்தி பாண்டியர் (இன்றைய கேரளா, பாதி கர்நாடகா, பாதி ஆந்திரா,  பாதி இலங்கை வரை கைப்பற்றி) பேரரசாக எழுந்தனர்.

 பிறகு இரண்டு பாண்டிய வாரிசுகளுக்கு இடையே மோதல் வெடித்து உள்நாட்டு போர் நடக்கிறது. இப்படி உள்நாட்டு போர் மற்றும் குழப்பத்தால் சிதைந்து கிடந்த பாண்டிய பேரரசின் மீது டெல்லி சுல்தானிய பேரரசு (துருக்கியர்) படையெடுத்து மதுரை வரை கைப்பற்றுகிறது.
 (இந்த படையெடுப்பில் பாதிக்கப்பட்ட தெலுங்கர்கள் கொங்குநாட்டில் தஞ்சமடைந்து வாழ்கின்றனர்)
  இப்போது டெல்லி அரசின் சார்பாக மதுரையைப் பிடித்த தளபதி (அரேபியர்) டெல்லி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு மதுரையை தனி சுல்தானியமாக (தனிநாடாக) அறிவிக்கிறார். 43 ஆண்டுகள் மதுரை சுல்தான்கள் என்கிற பெயரில் இவர்கள் பாதி தமிழகத்தை ஆள்கின்றனர். 

 தென்தமிழகம் அப்போதும் பாண்டியரின் கீழ் இருக்கிறது. சுல்தான்களும் பாண்டியரும் மோதிக் கொண்டு இருந்த சமயம் கர்நாடக ஆந்திர எல்லையில் (டெல்லி சுல்தானிய முன்னாள் தளபதிகளான) ஹரிஹரன் மற்றும் புக்கர் (கன்னடர்) விஜயநகர பேரரசை நிறுவி மதுரை மீது படையெடுத்து  சுல்தான்களை ஒழித்து மதுரையைப் பிடிக்கின்றனர்.

 இப்போது மதுரையை மீட்க வந்த பாண்டியர்களை அரியநாத முதலியார் எனும் தமிழர் தலைமையில் படைகளை அனுப்பி முறியடிக்கின்றனர்.
 கன்னடர்கள் தமிழகத்தில் தமது நிர்வாகிகளாக (நாயக்கர்களாக) தெலுங்கரை நியமிக்கின்றனர்.
 பிறகு டெல்லி சுல்தானியத்தில் இருந்து பிரிந்த தென்னக சுல்தானிய அரசுகள் கூட்டு சேர்ந்து விஜயநகர பேரரசை வீழ்த்துகின்றன. 

 இதனால் விஜயநகரத்துக்கு அடங்கியிருந்த தமிழக நாயக்கர்கள் (தெலுங்கர்) தனிநாடாக ஆனார்கள்.
 இந்த நேரத்தில் பெரிய அளவில் தெலுங்கர்கள் தமிழகத்தில் குடியேறுகின்றனர். 

 மதுரையை மீட்க முடியவில்லை என்றாலும் தெற்கே பாண்டியர் ஆட்சி தொடர்கிறது.
 ஏற்கனவே தொடர்ச்சியான போர்களால் பலவீனமாக இருந்த பாண்டியர் காலப் போக்கில் வலுகுன்றி நாயக்கர்கள் கை ஓங்குகிறது. சிறிது சிறிதாக பாண்டிய நாடும் நாயக்கர் ஆட்சியின் கீழ் வருகிறது.
 நாயக்க மன்னர் பாண்டிய நாட்டை 72 சிறுசிறு துண்டுகளாக (பாளையங்களாக) பிரித்து அதில் முக்கால்வாசி பாளையங்களில் தெலுங்கரையும்  கால்வாசிப் பாளையங்களில் மறவர்களை நிர்வாகிகளாக நியமிக்கின்றனர். 
 இதுவே பாளையக்கார முறை.
 ஆனால் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் மட்டும் மிக குறுகிய காலத்தில் தனியரசு ஆயினர்.
 அதாவது தமிழகத்தில் நாயக்கர் காலம் விஸ்வநாத நாயக்கர் காலத்தில் கி.பி.1529 இல் தொடங்குகிறது.
 அவரது மகன் காலத்திலேயே சேதுபதிகள் தனியரசு ஆகிவிட்டனர். 
 இந்த சேதுநாட்டிற்கும் மதுரை நாயக்க அரசிற்கும் (ஆங்கிலேயர் ஆட்சியைப் பிடிக்கும் வரை) தொடர்ந்து மோதல் நடந்துகொண்டே இருந்தது.
அதில் 5 பெரிய போர்கள் அடங்கும்.
1) கி.பி 1635
திருமலை நாயக்கர் - இரண்டாம் சடையக்க தேவர்
2) கி.பி 1667
சொக்கநாத நாயக்கர் - ரகுநாத தேவர் (திருமலை ரகுநாத சேதுபதி)
3) கி.பி 1682
சொக்கநாத நயக்கர் - கிழவன் சேதுபதி
4) கி.பி 1686
மூன்றாம் முத்துவீரப்ப நாயக்கர் - கிழவன் சேதுபதி
5) கி.பி 1702
ராணி மங்கம்மாள் ( தளவாய் நரசப்பையா) - கிழவன் சேதுபதி.
இந்த ஐந்து போர்களில் கி.பி 1635 ஆம் ஆண்டு நடந்த முதல் போரில் மட்டும் திருமலை நாயக்கர் தளபதி ராமப்பய்யன் வெற்றி பெறுகிறார். அதுவும் பெருத்த சேதம் அடைந்து கடைசியில் போர்த்துகீசியர் காலில் விழுந்து உடன்படிக்கை செய்து கொண்டு பல நவீன ஆயுதம் கொண்டு கடல் வழி நிலம் வழி என இரண்டு விதமான தாக்குதல் நடத்தி வெற்றி பெறுகிறார்.
 ஆனால் அடுத்து நடந்த நான்கு போர்களிலும் சேதுபதி மன்னர்களே வெற்றி வாகை சூடினர்.
 இது போக முகலாயர், மராத்தியர், மைசூர், ஆற்காடு நவாப், ஆங்கிலேயர் என தொடர்ச்சியான பல போர்களால் நாயக்கர் அரசுகள் வலுகுன்றி கி.பி. 1700 களில் பல சிறிய பாளையங்களாக சிதறியது. அப்போது தென் மாவட்ட மறவர்களும் தனது பாளையங்களை தனியரசாக ஆக்கிக் கொண்டனர். 
 இந்த சிதறிய தமிழ்நாட்டில் தெலுங்கு பாளையங்கள் மொத்தமாக ஆங்கிலேயருக்கு அடிபணிய சேதுபதிகளும் மறவர் பாளையங்களும் எதிர்த்து நின்று போராடி இறுதியில் தோற்றன.
( ஆங்கிலேயர் பாளையக்கார முறையை ஒழித்து இவர்களை ஜமீன்களாக்கி நிலத்தை சொந்தமாக எழுதிக்கொடுத்து ஜமீன்தாரி முறையைக் கொண்டுவருகின்றனர். இப்படித்தான் தமிழக நிலவுடைமை தெலுங்கர் கைக்கு போனது. இந்த தெலுங்கு ஜமீன் வகையறா போட்ட குட்டிதான் திராவிடமும் நீதிக் கட்சியும்)

 நாயக்கர் மறவர் தொடர்ச்சியாக மோதிக்கொண்டு மட்டும் இருக்கவில்லை. மைசூர் படையெடுப்பு மற்றும் ஆங்கிலேயர் படையெடுப்பு போன்ற சில சோதனையான காலகட்டங்களில் நாயக்கர் மறவர் இணைந்து செயல்பட்டுள்ளனர்.
 மற்றபடி ஆண்ட பரம்பரையான நாயக்கர் களுக்கு மறவர்கள்தான் அடியாட்கள் என்பது வந்தேறிகள் தம் சுய இன்பத்திற்காக உருட்டிய திரிப்பு! 
 
 

No comments:

Post a Comment