அண்ணாதுரை to கருணாநிதி
அண்ணாதுரை பட்டப் படிப்பு முடித்து நீதிக் கட்சியில் 1935 இல் சேர்ந்தார். அதன் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக இருந்தார். 1937 இல் ஈ.வே.ரா வுடன் இணைந்து செயல்பட்டு அவரது குடியரசு இதழின் ஆசிரியர் ஆனார். பின் ஈ.வே.ரா வுக்கு போட்டியாக 1942 இல் திராவிட நாடு என்ற பத்திரிக்கை தொடங்கினார். 1944 இல் தி.க உருவானபோதும் ஈ.வே.ரா வுடன் இருந்தார்.
1949 இல் ஈ.வே.ரா தனது வளர்ப்பு மகள் மணியம்மை யை திருமணம் செய்து தி.க இயக்கத்தையும் அதன் ஐந்து லட்ச ரூபாய் பெறுமான சொத்தையும் அவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.
ஈ.வே.ரா வுக்கு பிறகு தலைமைக்கு வர அடுத்த நிலையில் காத்திருருந்த அண்ணாதுரை இதை எதிர்த்தார் ( தனது 14 ஆண்டு உழைப்பை இரண்டு ஆண்டுகளில் குறுக்கு வழியில் ஒரு பெண் பறிப்பதை அவர் எதிர்த்தது நியாயமே).
தன் ஆதரவாளர்களுடன் வேலைநிறுத்தம் போன்று செய்தார்.
அப்போது அவரோடு நின்ற 32 பேரில் கருணாநிதி இல்லை.
சான்று :-
"தமது திருமண விஷயமாயும் இயக்க விஷயமாயும் கொண்டுள்ள ஏற்பாட்டை ரத்து செய்யாதவரை ஒத்துழைக்க முடியா தென்பதையும் தெரிவித்து விடவேண்டுமெனத் தீர்மானிக்கப் பட்டது.
கூட்டத்திற் கலந்து கையொப்பமிட்டவர்கள்..
அரசு,
காஞ்சி மணிமொழியார்,
மா. இளஞ்செழியன்
வேணு
மணி
தங்கராசு
பாலசுந்தரம்
வி. சங்கரநாராயணன்
பா. கோவிந்தராசன்
பாண்டியன்
முத்துசாமி
திராவிடமணி
கோவிந்தசாமி
தேவசகாயம்
பெரியசாமி
அங்கமுத்து
ஜெயராமன்
கன்னியப்பன்
தருமன்,
மதுரை ராசன்
பெருமாள்
சுப்பராயலு
பக்தவச்சலம்
எஸ். ராமன்
கா. சொக்கலிங்கம்
கண்ணபிரான்
பால்ராஜ்
சங்கரன்
கணேசன்
சுந்தரமூர்த்தி
நடராசன்,
ம.சு. முத்து,
– அண்ணாதுரை
(திராவிட நாடு – 03.07.1949)
பிறகு அண்ணா தனது ஆதரவாளர்களுடன் வெளியேறுகிறார். அப்போது வேலைநிறுத்தம் செய்த 32 பேரில் 4 பேர் மட்டுமே (அரசு, மணிமொழியார், நடராசன், முத்து) அவருடன் வெளியே வருகின்றனர்.
பாரதிதாசன் ஆதரவுடன் புதிய ஆதரவாளர்களைத் திரட்டி பொத்தாம்பாளையம் பழனிச்சாமி என்பவர் செலவில் 28 பேருடன் முதல் கட்சிக் கூட்டம் நடத்துகிறார்.
கடைசியாகச் சேர்ந்த 28 ஆவது நபர் கருணாநிதி.
27 ஆவதாக சேர்ந்த அன்பழகனுடன் சேர்ந்து இவர்களுக்குப் பின்னால்1953 இல் திமுக வுக்கு வந்த எம்ஜிஆர் ஆதரவுடன் கட்சியைக் கைப்பற்றுகிறார்.
சான்று படம் காண்க:-
தி.மு.க முதல்கூட்ட சுவரொட்டி (18.09.1949)
அதாவது 32 ஆண்டுகள் உழைத்து 1967 இல் அண்ணாதுரை ஆட்சியைப் பிடிக்கிறார். அவர் 1969 இல் இறந்தவுடன் அவரோடு தி.க வில் இருந்து வெளியே வந்த 4 பேர் சேர்த்து தி.மு.க தொடங்கிய 27 பேரை ஓரங்கட்டி வெறும் பத்து ஆண்டு உழைப்பில் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றியுள்ளார் கருணாநிதி.
ஈ.வே.ரா போல பண வசதியோ, காமராசர், தேவர் போல தியாக வாழ்க்கையோ, அண்ணாதுரை போன்ற கல்வியறிவோ பேச்சாற்றலோ, எம்ஜிஆர் போன்று வசீகரத் தோற்றமோ அல்லது பெரும்பான்மை ஜாதி அடையாளமோ இல்லாமல் இதைச் சாதித்தது மிகப் பெரும் வியப்பு!
இன்று தி.மு.க கருணாநிதி யின் குடும்ப சொத்து ஆகிவிட்டது!
No comments:
Post a Comment