Showing posts with label சூழ்ச்சி. Show all posts
Showing posts with label சூழ்ச்சி. Show all posts

Thursday, 10 July 2014

சிறிலங்கா தனிநாடானது எப்படி?


சிறிலங்கா (இந்திய) மாநிலம்

! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! 

ஒருவேளை தமிழர் நிலம் தமிழ்நாடு மாநிலமாகவும், சிங்களர் நிலம் சிறிலங்கா மாநிலமாகவும் இந்தியாவுக்கு உள்ளேயே இருந்திருந்தால் அதன் வரைபடம் கிட்டத்தட்ட இப்படித்தான் இருந்திருக்கும்.

நியாயமாக அப்படித்தான் நடந்திருக்கவேண்டும்.

மற்ற இனங்கள் தமது நிலத்தை விடவும் தாண்டிப்போய் அண்டை இனத்தின் நிலங்களை ஆக்கிரமித்தபோது தமிழர்கள் தமது நிலத்தைக்கூட காத்துக்கொள்ள முயலவில்லை.
அதனால் 70,000 சகிமீ தமிழக நிலம் அண்டை மாநிலங்களிடம் போனது,
ஈழம் அடியோடு பறிபோனது.

பாகிசுத்தானும் வங்கதேசமும் நூறாயிரக்கணக்கான உயிர்களை ஈந்து தனிநாடானார்கள்.
ஆனால் சிராய்ப்புகூட இல்லாமல் இலங்கை தனிநாடானது எப்படி?

பஞ்சாபியர், வங்காளியர், தமிழர் என்ற இனங்கள் வெள்ளையன் ஆண்ட இந்தியாவிலேயே அதிக எண்ணைக்கையும், அறிவார்ந்த மக்களையும், வீரவரலாற்றையும், வெளிநாட்டுத் தொடர்பும் கொண்டிருந்தன.

இவை கவனமாக இரண்டாக உடைக்கப்பட்டன.

அவர்கள் மதத்தால் பிரிக்கப்பட்டனர்; நாம் கடலால் பிரிக்கப்பட்டோம்.

என்றேனும் ஒருநாள் தமிழர்கள் தனியரசு அமைத்து வல்லரசாக வருவார்கள் என்று வெள்ளைக்காரன் கணக்கு போட்டு, நம்மை பிரிக்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சிறிலங்கா என்ற நாட்டை அவர்கள் கேட்காமலேயே உருவாக்கி 1948ல் ஒரு ஆண்டு கழித்து விடுதலை வழங்கினான்.

ஈழம் எங்கள் மாநிலத்துடன் இணையவேண்டும் என்று தமிழகமோ
நாங்கள் தமிழகத்துடன்தான் இணைவோம் என்று ஈழமோ
குரல் எழுப்பவுமில்லை.

இப்போது விளைவுகளை சந்திக்கிறோம்.

ஈழம் தனிநாடு கோரியபோதுகூட தமிழகத்தின் விடுதலை கோரிக்கையை அது உற்றுநோக்கவில்லை.

இன்னும் இன்னும் அழிவைத்தான் சந்திக்கப்போகிறோம்.

இதற்கெல்லாம் தனித்தமிழ்க்குடியரசு ஒன்றே தீர்வு.


https://www.facebook.com/photo.php?fbid=448275185276140&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739