Showing posts with label இம்மானுவேல் சேகரன். Show all posts
Showing posts with label இம்மானுவேல் சேகரன். Show all posts

Monday, 14 March 2016

பள்ளர்-மறவர் மோதல்

பள்ளர்-மறவர் மோதல்

இம்மானுவேல் சேகரனாரும்
முத்துராமலிங்க தேவனாரும்
கலந்துகொண்ட அந்த சமாதான கூட்டத்தில்

முத்துராமலிங்கத் தேவனார் முதலில் மறுத்தாலும் முடிவில்
இம்மானுவேல் சேகரனாரை பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டார்.

மக்களை அமைதியாக இருக்கும்படி விநியோகிக்கப்பட இருந்த
துண்டறிக்கையில்
இருவரும் அருகருகே கையெழுத்தும் போட்டனர்.

இது இன்று வரை மறைக்கப்படுவது ஏன்?

இந்த துண்டறிக்கை இன்றுவரை வெளியிடப்படவே இல்லையே ஏன்?

அப்படி அது மக்களிடம் அளிக்கப்பட்டிருந்தால் அன்றே பிரச்சனை முடிந்திருக்குமே?

இது நடக்காமல் தடுக்கத்தான் இமானுவேலாரைக் கொன்று பழியை தேவனார் மீது போட்டார்களோ?

முதலில் முத்துராமலிங்கனார் மறுத்ததற்கு சாதி காரணம் என்றால்,
அதற்கு முந்தைய தேர்தலில் இரு பள்ளர்களை நிற்கவைத்து அவர் வெற்றிபெற வைத்தாரே?!

அதற்கு என்ன பதில்?

கொலைச் சம்பவம் நடந்த பிறகும்
பள்ளர்களும் வாழும் தொகுதியில் பெரும்பான்மை வாக்குகள் பெற்று வென்றாரே அது எப்படி?

அதுவும் தன்னுடன் ஒரு பள்ளரை நிறுத்தி வெற்றிபெறவைத்தாரே அதற்கென்ன பதில்?

அவர் தன் நிலத்தை பகிர்ந்தளித்தபோது நான்கில் ஒரு பகுதி பள்ளருக்கும் கிடைத்ததே?!

ஆறாண்டுகள் சிறையில் இருந்தும் நல்ல உடல்நலத்துடனும் பொலிவுடனும் இருந்த முத்துராமலிங்கனார்,
கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறைப்பட்டபிறகு  உடல்நலம் மிகவிரைவாகக் குன்றி நடுத்தர வயதிலேயே இறந்தது எதனால்?

வெட்டிக்கொன்ற கூட்டத்திற்கு சிறைக்கு வரச்செய்து (ஸ்லோ பாய்சன்) மெல்லச் சாகடிக்கத் தெரியாதா?

இந்த கேள்விகள் மறவரையும் நோக்கிக் கேட்கப்படுகின்றன.

பள்ளர்களும் மறவர்களும் ஒருதாய்ப் பிள்ளைகள்.
அன்றிலிருந்து இன்றுவரை அப்படித்தான்.

இதை உணராமல் அடித்துக்கொள்வது அந்நியருக்குத்தான் சாதகமாக அமையும்.

தேவனார் நிமிர்ந்து நின்ற இடத்தில்
பன்னீர்செல்வம் குனிந்து நிற்பது
தமிழர்கள் அனைவருக்குமே கேவலம்தான்

Saturday, 31 October 2015

இமானுவேல் சேகரனாருடன் முத்துராமலிங்கனார் பேச மறுத்தது ஏன்?

இமானுவேல் சேகரனாருடன்  பேச மறுத்தது ஏன்?

"சமாதான மாநாட்டில் அரிஜனங்களின் பிரதிநிதியாக பேசவந்திருப்பவர் திரு.இமானுவேல்,

ஆனால் முதுகுளத்தூர் தொகுதிக்குச் சட்டப்பூர்வமாக மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ வேறொருவர் இருக்கிறார்.

அதனால் இத்தொகுதியின் அரிஜனங்களுக்காக பிரதிநிதித்துவம் வகித்துப் பேசுவதற்கு இத்தொகுதி எம்.எல்.ஏ தான் அதிகாரப்பூர்வமானவர் என்று நான் சொன்னேன்.

இதைத்தவிர ஒரு அரிஜன் எனக்கு முன் சரிசமமாகப் பேசுவதால் என் கௌரவம் குறைந்துவிட்டதென்று நான் கூறவேயில்லை.

எனது தொகுதியில் திரு.பெருமாள் என்ற அரிஜன் ஒருவரை என்னோடு சமமாக ரிசர்வ் ஸ்தானத்திற்கு நிறுத்தி ஜெயிக்கவைத்த நான்,
சமாதான மாநாட்டில் ஒரு அரிஜன் எனக்குமுன் பேசியதைக் கருதி, என்னவோ சொன்னேன் என்று குறிப்பிடுவது குழந்தைத்தனமும் மதியீனமும் ஆகும்".

( சென்னை சர்க்கார் நியமித்த அட்வைசரி போர்டு முன்பு
கொலைக் குற்றச்சாட்டை மறுத்து திரு.முத்துராமலிங்கனார் அளித்த விரிவான சாட்சியத்தில் இருந்து )

நன்றி: pasumponayya.blogspot.com.es/2011/07/blog-post.html?m=1

Wednesday, 13 August 2014

பசும்பொன்னே

பசும்பொன்னே
நநநநநநநநநநநநநநத
இது ஒரு அரிய புகைப்படம்.
பலரிடம் சுபாஸ் சந்திர போஸ் அவர்களும்
முத்துராமலிங்கனார் அவர்களும் சேர்ந்து எடுத்த
புகைப்படம் ஒன்று இருக்கும்; அது 1947க்குப்
பிறகு எடுக்கப்பட்டது; அதற்கு பத்தாண்டுகள் முந்தைய
படம் இது ஹிந்திய விடுதலைப் போராளி சுபாஷ்
சந்திர போஸ் 1938 செப்டம்பர் முதல்வாரத்தில்
மதுரை வந்திருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.
---------
முத்துராமலிங்கனார் பற்றி நாம் அறியவேண்டிய சில
தகவல்கள்,
*முத்துராமலிங்கனாரின் தாயார் பிள்ளைப்பேறின்ப
ோது இயற்கை எய்திவிட்டபடியால் பாட்டியின் வீட்டில்
'ஆயிஷா' என்ற இசுலாமிய அம்மையாரிடம் தாய்ப்பால்
குடித்து வளர்ந்தார்.
*1927ல் சீனிவாசன்(ஐயங்கார்)
என்பவரை சொத்துவழக்கு தொடர்பாக சந்திக்க
சென்னை சென்றபோது தற்செயலாக சுபாஷ் சந்திர
போஸை சந்தித்து அவருடன் நெருக்கமானார்;
பிறகு பேராயக் (காங்கிரசு) கட்சியில் இணைந்தார்.
* 1932ல் கள்ளுக்கடை மறியலில் காவல்துறையால்
துன்புறுத்தப்பட்ட தமது பேராயக் (காங்கிரசு)கட்ச
ிக்காரர்களுக்காக குரல் கொடுத்தார்.
*1934 குற்றபரம்பரை சட்டத்துக்கு எதிராக
'ஆப்பநாட்டு மறவர்கள் மாநாடு' நடத்தினார்.
*1937 காமராசர் சொத்துவரி கட்டாததால் தேர்தலில்
போட்டியிட முடியாதநிலையில்
இருந்தபோது நகராட்சியில்
ஒரு வெள்ளாட்டை காமராசர் பெயரில் வாங்கி காமராசர்
பெயரில் வரி செலுத்தி தேர்தலில் நிற்கவைத்தார்;
காமராசரை எதிர்த்த வி.வி.ராமசாமி(நாடார்)
என்பவரை போட்டியிலிருந்து விலகச்
செய்து காமராசரை வெற்றிபெறச் செய்தார்.
*1937 பேராயக் கட்சிக்கு உள்ளேயே சோஷலிஸ்ட்
பிரிவு உண்டாக்கிய 'ஜெயபிரகாஷ் நாராயண்' தமிழகம்
வந்தபோது மற்ற பேராயக்
கட்சியினரை எதிர்த்து அவரை வரவேற்று பசுமலை 'மகாலட்சுமி மில்
தொழிற்சங்கம்','மதுரை பஞ்சாலைத் தொழிலாளர்
சங்கம்','மதுரை நெசவாளர் சங்கம்' ஆகிய
மூன்று தொழிற்சங்கங்களை
உருவாக்கி அவற்றிற்கு தலைவராக ஆனார்.
பசுமலை மகாலட்சுமி ஆலையில் வேலைநிறுத்தம்
செய்யத்தூண்டியதாக சிறைப்படுத்தப்பட்டார்;
பிறகு மதுரை நெசவாளர்கள் வேலைநிறுத்தத்தைத்
தூண்டியதாக வழக்கைச் சந்தித்தார்.
*1939 மதுரை அங்கயற்கண்ணி(மீனாட்சி) கோவிலில்
தாழ்த்தப்பட்டோர் நுழைய முயற்சி செய்த வைத்தியநாதன்
(ஐயர்) என்பவருக்கு கொலைமிரட்டல்
வரவே அவருக்கு தமது ஆதரவைத்
தெரிவித்து துண்டு செய்தியறிக்கை(பிரசுரம்)
மக்களிடம் பரப்பி அவருக்கு உதவினார்.
*1939 பிறமலைக் கள்ளர்களைத் திரட்டி குற்றப்
பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் பேரணி;
அதேயாண்டு மஞ்சுவிரட்டு பார்க்க சிந்துப்பட்டிக்
கு ஆங்கிலேய ஆளுநர் (கவர்னர்) வரவே ஒரு கையகல
துண்டு சீட்டு எழுதி மக்களிடம் பரவச் செய்து ஆளுநர்
வந்திறங்கியபோது அந்த வட்டாரமே வெறிச்சோடிப்
போகச் செய்தார்.
*அபிராமம் என்ற ஊரில் இசுலாமிய இளைஞர்கள்
பெண்களிடம் தவறாக நடந்தபோது அமைதியான முறையில்
இந்துக்களை ஒத்துழையாமை கடைபிடிக்கச்சொல
்லி பிரச்சனையை முடித்துவைத்தார்.
அப்போது வெங்கட்ராமன்(ஐயர்) என்பவருடன் காரில்
வந்துகொண்டிருந்தபோது கொலைமுயற்சியிலி
ருந்து தப்பினார்; ஆனாலும் மதக் கலவரம்
மூளுமேயென்று அதை வெளியே சொல்லவில்லை.
*சுபாஷ் சென்னைக்கு வந்தபோது சீனிவாசன்(ஐயங்கார்)
தலைமையில் கடற்கரையில் 'ஃபார்வர்டு பிளாக்'
கட்சியின் தமிழகக்
கிளை தொடங்கப்பட்டு முத்துராமலிங்கனார் தலைவராக
அறிவிக்கப்பட்டார்.
*சுபாஷ் ஆங்கில அரசுடன் ஜப்பான்
உதவியோடு போர்நடத்திய முழுகாலமும் கிட்டத்தட்ட
ஆறாண்டு சிறையிலடைக்கப்பட்டார்; ஐப்பான் சரணடைந்த
மறுநாள் விடுவிக்கப்பட்டார்.
*1948ல் ஃபார்வர்டு பிளாக் சார்பில் கமுதியில்
குருவன்(செட்டியார்) மற்றும் சாயல்குடியில்
சேதுராமன்(செட்டியார்)
ஆகியோரை நிறுத்தி வெற்றிபெறச் செய்தார்.
*1950 ஓராண்டு தலைமறைவாகிப் பயணம்
செய்து பிறகு தமிழகம் திரும்பினார்;
தமது உருவத்தையே மாற்றிவிட்டிருந்தார்; சீன-
திபெத் எல்லையில் 'சிக்காங்' என்ற ஊரில் சுபாஷைச்
சந்தித்தாக அறிவித்தார்.
*காந்தி கொலைவழக்கில் தொடர்புடைய சவர்க்கார்
மதுரை வந்தபோது அவருடன் மேடையில் தோன்றிய
முத்துராமலிங்கனார் ஆர்.எஸ்.எஸ் வளர்ச்சிக்காக
5000ரூபாய் வழங்கினார்.
*1952 பேராயக்கடசிக்கு எதிராக ஈவேரா-வுடன்
ஒரேமேடையில் பரப்புரை
அருப்புக்கோட்டையில் எம்.டி.ராமசாமி(செட்டியார்)
என்பவரை நிறுத்தி வெற்றிபெறச் செய்தார்
* கேரளப் பொதுவுடைமைவாதிகளான (கம்யூனிஸ்ட்)
ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்,ஏ.கே.கோபாலன் தமிழக
பொதுவுடைமைவாதிகளான பி.ராமமூர்த்தி,ஜீவானந்தம்
ஆகியோருடன் ராஜபாளையத்தில் மாநிலம் தழுவிய
விவசாயிகள் சங்க மாநாட்டை நடத்தினார்;
ஜமீன்தாரி ஒழிப்பு முறை வேண்டி குரல்கொடுத்தார்.
*வடக்கன்குளத்தில் கிறித்துவர் மிரட்டலை சமாளிக்க
ஆறுமுகநாவலர் அழைத்தபோது அங்கே சென்று கோவில்
குடமுழுக்கை அமைதியாக நடத்திவைத்தார்.
*1955ல் இரண்டாம் முறையாக பர்மா சென்றார்;
பர்மா அதிபரைச் சந்தித்தபோது 'திருக்குறள்' நூலைப்
பரிசளித்தார்.
*காமராசர் முதல்வராவதை எதிர்த்தார்; 1957
காமராசரை எதிர்த்து நின்ற ஜெயராம்(ரெட்டியார்)
என்பவருக்கு ஆதரவு தெரிவித்தார்; ஆனாலும்
காமராசர் வெற்றிபெற்றார்.
*1957தேர்தலில் ஃபார்வர்டு பிளாக் சார்பாக
ஏ.வேலு (தேவேந்திரர்/பள்ளர்) என்பவரையும்
ஏ.பெருமாள்(தேவேந்திரர்) என்பவரையும்
நிறுத்தினார்;
*1957ல் பேராயக் கட்சி- ஃபார்வர்டு பிளாக் மோதல்
தேவேந்திரர்-மறவர் சாதிச்சண்டையாக உருப்பெற்றது.
*1957 இம்மானுவேல் சேகரன் (தேவேந்திரர்) கொலை;
முத்துராமலிங்கனார் தளைப்படுத்தப்பட்டார்;
மதுரை,திருமங்கலம்,உசிலம்பட்டி,மேலூர்,திருப்பு
வனம் ஆகிய இடங்களில் முழு அடைப்பு.
*1959 போதிய சான்றுகள் இல்லாததால்
வழக்கிலிருந்து முத்துராமலிங்கனார் விடுதலை
*1962 தேர்தல் பரப்புரைக்கே போகாமல்
அருப்புக்கோட்டையில் வெற்றிபெற்றார்;
அவரது வேட்பாளர்கள் சசுவர்ணம்(தேவர்),
மூக்கையா(தேவர்),ஏ.பெருமாள்(தேவேந்திரன்) ஆகியோர்
வெற்றி.
*1963 அக்டோபர் 29, முத்துராமலிங்கனார் மறைந்தார்;
திரளான தலைவர்கள் அஞ்சலி.
https://m.facebook.com/photo.php?fbid=475209192582739&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739