Saturday 24 December 2016

சயாம் - மரணத் தொடரியில் மரித்த தமிழர்கள் (பாகம் 2/2)

சயாம் - மரணத் தொடரியில் மரித்த தமிழர்கள் (பாகம் 2/2)

காலம்: 1942
இடம்: நோங் பிளாடூக்கி, சயாம்.

"அடிமைகளே! இங்கே சயாமில் தொழிலாளர்கள் இல்லாமல் இல்லை. ஆனால் மலாய் தோட்டத் தொழிலாளர்களின் கடுமையாக உழைக்கும் திறனைப் பற்றி கேள்விப்பட்டே உங்களை அள்ளிக்கொண்டு வந்துள்ளோம்.
நீங்கள் போரில் எங்களுடன் தோற்ற வெள்ளைக்கார அடிமைகளுடன் சேர்ந்து வேலை செய்யவேண்டும்.
உங்களுக்கு சம்பளம் என்பது சாப்பாடு மட்டுமே.
உயிரோடு இருக்க நினைப்பவர்கள் ஒழுங்காக உழைக்கவேண்டும்.
தினமும் மூவாயிரம் டன் தோண்டவேண்டும் என்பது இலக்கு.
ஜப்பான் முழு ஆசியாவையும் ஆளும் காலம் வந்துவிட்டது.
ஆக எங்களுக்கு அடங்கியிருப்பதே உங்களுக்கு நல்லது"

"அதிகாரி சொன்னதைப் புரிந்துகொண்டீர்களா?
நீங்கள் வழித்தடத்திலுள்ள மரங்களை வெட்டுவது, மேட்டைப் பள்ளமாக்குவது, பள்ளத்தை மேடாக்குவது, பாறைகளை உடைப்பது, தண்டவாளத்தைப் பொருத்துவது, கட்டைகளை அடிப்பது, ஜல்லி உடைப்பது, அதைக் கொட்டுவது என அனைத்து வேலைகளையும் செய்யவேண்டும்.
சூரியன் உதிக்கும்போது நீங்கள் வேலையை ஆரம்பித்திருக்க வேண்டும்.
அதிகாரிகள் சொல்லும் வரை வேலைசெய்துகொண்டே இருக்கவேண்டும்.
நண்பகலில் அரைமணிநேரம் உணவு இடைவேளை.
இடையில் எங்கும் போகக்கூடாது.
பேசக்கூடாது. மீறினால் கடுமையான தண்டனை கிடைக்கும்"

வேலை தொடங்கியது.
அந்த நாள் முழுவதும் வேலை.
உணவு இடைவேளை வந்தது.
உட்காரக்கூட அனுமதியில்லை.
கையிலே உணவைத் தந்தனர்.
பரங்கிக்காய் சூப்பும் சுண்ணாம்பு அரிசியும் புண்ணாக்கும் புழுக்களும் விரவிக்கிடந்தன.

வாயில் வைத்ததும் வாந்தி எடுத்தனர்.
முதுகில் சவுக்கால் அடி விழுந்தது.
கண்ணை மூடிக்கொண்டு விழுங்கினர்.
மீண்டும் வாந்தி எடுத்தோரை சோப்பு நீரை குடிக்கச்செய்து மேலும் வாந்தியெடுக்க வைத்தனர்.

சிறுநீர் கழிக்குமிடத்தருகே தண்ணீர் குடிக்கும் இடத்தருகே ஒரு ஜப்பானியன் உட்கார்ந்திருப்பான்.

சிறுநீர் கழிக்கவோ தண்ணீர் குடிக்கவோ சென்றவர்கள் அடிவாங்காமல் அதைச் செய்யமுடியாது.
தண்ணீரும் அசுத்தமானதாகவே இருந்தது.
அதனால் நோய்வந்து இறந்தோர் பலர்.

சிறிய தவறு செய்தாலும் கொடூர தண்டனைகள் கொடுக்கப்பட்டன.
கட்டிவைத்து அடிப்பார்கள்.
பிறகு முசிறு எறும்புகளை உடலில் விடுவார்கள்.
கால் சோர்ந்து உட்கார்ந்தால் வாயில் பெட்ரோல் ஊற்றினார்கள்.
ஒரு நொடி அசையாமல் இருந்தாலும் துப்பாக்கிக் கட்டையால் இடித்தனர்.
எதிர்த்து ஒரு பார்வை பார்த்தாலும் பெரிய டின்களில் மண் நிரப்பி தோளில் போட்டவாறு வேலை செய்யச்சொன்னார்கள்.
மண் சுமந்தபடி நிழலில் ஒதுங்கி நடந்தோரை உச்சிவெயிலில் நிற்க வைத்தனர்.
இரண்டு கையாலும் வேலை செய்யாதோரின் ஒரு கையை வெட்டினர்.
தண்டவாளப் பலகைகள் செய்ய தேக்கு மரங்களை வெட்டி வெறும் தோளில் தூக்கிச்செல்ல கட்டாயப்படுத்தினர்.
பலர் பூச்சிக் கடியிலும் அட்டைக்கடியிலும் உடல் ரணமாகி சாய்ந்தனர்

அந்த நாள் பொழுதுசாய்ந்தும் வேலை நடந்தது.
இரவு முழுவதும் வேலை நடந்தது.
ஒரே நாளில் 2 கி.மீ இரயில் பாதை உருவானது.
மறுநாள் விடிந்தும் வேலை நடந்தது.
பலர் மயங்கி விழுந்தனர்.
வேலையை நிறுத்த வேண்டியோர் எலும்பு நொறுக்க அடிவாங்கினர்.

அன்று மதியம் உணவு இடைவேளை வந்தது.
உணவை முழுதாக உண்ணும் முன்பே மீண்டும் வேலைக்குத் துரத்தினர்.

அன்று இரவு வேலை நிறுத்தப்பட்டபோது பலர் ஆங்காங்கே கிடந்தனர்.
அதில் பலர் இறந்திருந்தனர்.
வெட்டவெளியில்தான் படுக்கவேண்டும். எல்லா தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ளவேண்டும்.

அன்றிரவு அங்கே வந்த ஜப்பானியர் இளம்பெண்களை இழுத்துக்கொண்டு சென்றனர்.
பெண்களின் கதறல் இரவு முழுவதும் கேட்டது.
காலையில் அவர்கள் நிர்வாணமாக பிணமாக கிடந்தனர்.
ஓடிப்போக முயற்சி செய்தோரைப் பிடித்து தூணில் கட்டிவைத்திருந்தனர்.
அவர்கள் சாகும் வரை அப்படியே விடப்பட்டனர்.

இரயில் பாதை நீள நீள அருகருகே ஒரு குழியும் தோண்டப்பட்டு  பிணங்கள் போடப்பட்டு கொண்டே இருந்தன.
அக்குழிகள் அங்கே வேலை முடிந்த பிறகே மூடப்பட்டன.

ஆனால் மலேயாவிலிருந்து தமிழர்கள் இறக்குமதி ஆகிக்கொண்டே இருந்தனர்.
போகப்போக பெண்களும் இளம்வயதினரும் கொண்டுவரப் பட்டனர்.

பலருக்கு காலரா மலேரியா போன்ற நோய்கள் வந்தன.
நோய் வந்தவர்களை வேலைசெய்யும் நேரம்போக மீதிநேரம் தனியாக ஒதுக்கி வைத்தனர்.
அங்கே யாரும் போகவோ பேசவோ முடியாது.
நோயாளிகளுக்கு எந்த சிகிச்சையும் அளிக்கப்படவில்லை.
பல முறை சீக்காளிகளை மொத்தமாக எரித்துவிடுவர்.

கண்முன்னே தன் சொந்தங்கள் துடிதுடித்து இறந்துபோனதை பலர் தூரத்தில் இருந்து பார்த்தனர்.
பலருக்கு மனநலம் பாதித்து பைத்தியமாகினர்.
ஆனால் ஜப்பானியர் அனைவரையும் வேலை வாங்கினர்.

வேலை செய்தபோது பிள்ளை பெற்ற பெண்ணை உடனடியாக வேலை செய்யவைத்ததும் நடந்தது.

மெசாலி என்ற இடத்தில் தொழிலாளர் முகாமில் உள்ளே நுழைந்த ஓனோ டெரா என்ற சப்பானிய அதிகாரி பத்தொன்பது வயது தமிழ் பெண்ணை தொழிலாளர்கள் முன்பே வல்லுறவு செய்து சில தொழிலாளர்களையும் அவளை வன்புணரச் செய்தார்.
அன்று இரவு மனம் சிதைந்த அந்த பெண் தானே மாண்டுபோனார்.

ஆம்புலன்ஸ் பிரிவின் தலைவர் மேஜர் குடோ என்பவர் தொழிலாளர்களை மிக கொடூரமாக கொடுமைப்படுத்தியுள்ளார்.
பல தமிழ்ப்பெண்களை சீரழித்தார்.
பெண்களை ஜப்பானியர் முன் நிர்வாண நடனம் ஆடச்செய்தார்.
பிறகு அப்பெண்கள் கூட்டாக வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.

தொழிலாளர்களுக்கு எப்போதாவது சிறிது ஓய்வும் கருவாடோடு வாகரிசிக் கஞ்சியும் கிடைத்துள்ளது.

தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து வேலை வாங்கி 5 ஆண்டுகளில் நடக்கவேண்டிய வேலை வெறும் ஒன்றரை ஆண்டில் முடிக்கப்பட்டது.

சயாம் மரண ரயில் பணியில் இரண்டரை லட்சம் பேர் இறந்தனர்.

இதில் ஒன்றரை லட்சம் பேர் தமிழர்கள்.

அங்கே மரணமடைந்த போர்க் கைதிகளுக்கு அவரவர் நாட்டைச் சேர்ந்தோர் அழுத்தம் கொடுத்து நினைவிடம் எழுப்பியுள்ளனர்.
ஆனால் அங்கே இறந்த தமிழர்களுக்கு என்று நினைவிடம் இல்லை.
எத்தனை பேர் இறந்தனர்.
அவர்களின் அடையாளம் என்ன? எதுவுமே தெரியவில்லை.

கொடுமை இதோடு முடியவில்லை.
1945ல் ஜப்பானை விரட்டிவிட்டு மீண்டும் ஆங்கிலேய ஆட்சி நடந்தது.
அப்போதும் தொழிலாளர்களை நசுக்குவது தொடர்ந்தது.

1949ல் மலாயா எஸ்.ஏ.கணபதி, வீரசேனன் ஆகியோர் தூக்கில் போடப்பட்டு கொல்லப்பட்டனர்.

1967ல் இந்த படுபாதக செயலுக்காக ஜப்பான் மலேசியாவிடம் இரண்டரை கோடி வெள்ளிகள் இழப்பீடு கொடுத்ததாக அறிவித்தது.

அந்த இழப்பீடை தங்களுக்குத் தர சீனரும் மலாயரும் சங்கம் அமைத்து போராடி வருகின்றனர்.
ஆனால் தமிழர்கள் அடைந்த துன்பத்திற்கு முன் அவர்கள் அடைந்த துன்பம் ஒன்றுமேயில்லை.
 
ஆனால் மலேசியத் தமிழர்களுக்கு சரியான தலைமை இல்லாததால் அந்த நட்ட ஈடும் கிடைப்பதற்கான முயற்சிகள் நடக்கவில்லை.

மலேசியாவில் 1940 களில் மிகப்பெரிய அளவில் தொழிலாளர் போராட்டம் நடத்திய தமிழர் மலாயா கணபதிக்கு அன்று இருந்த தமிழ்ச்சங்கமான 'மலாயா மத்திய இந்தியர் சங்கம்' எந்த உதவியும் செய்யவில்லை.

காரணம்  அதில் வந்தேறிகளே பொறுப்புகளில் இருந்தனர்.
அன்று இருந்த தொழிற்சங்கமான 'தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம்' எந்த உதவியும் செய்யவில்லை.
காரணம் அன்று அதன் தலைவர் ஆங்கில அடிருடி மலையாளி பி.பி.நாராயணன்.
இந்த மலையாளி 50 ஆண்டுகள் பதவியில் இருந்தார்.
இவருக்கு பிறகு பதவிக்கு வந்த முகுந்தன் நாயர் என்ற மலையாளி இன்றும் அதிகாரத்தில் உள்ளார்.

மலேசியத் தமிழ்ச் சங்கத்தை அன்று நடத்தி வந்தோரும் தெலுங்கு வந்தேறிகளே.
1940களிலும் 1950களிலும் ஈ.வே.ராவையும் காமராசரையும் மலேசியா அழைத்து தமிழ் மாநாடு நடத்தியது கோவிந்தராஜூலு நாயுடு என்ற தெலுங்கரே.

மலேசியாவின் தமிழர்களுக்கான கட்சியாக இன்று விளங்கும் 'மலேசிய இந்திய காங்கிரஸை' 1946ல் தொடங்கியவர் ஒரு தமிழர்.
அதன்பிறகு  50களில் தலைமையில் இருந்தவர் கே.எல்.தேவாசர் என்ற வடயிந்தியர்.
அதன்பிறகு 1955ல் அது தமிழர்கள் கைக்கு வந்தது.
 
அன்று இன்றும் மலேசிய இந்தியரில் 90% தமிழர்கள்.
இன்றும் 80% மேல் தமிழர்கள்.

தமிழர் கட்சியின் தலைமை ஏற்றபிறகு தமிழர்கள் மத்தியில் ஓரளவு ஒற்றுமையும் முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளன.

ஆனாலும் இந்தியர் என்றே அடையாளப்படுத்தப்பட்டு வேற்றினத்தவர் ஊடுருவ வழிசெய்யப்பட்டுள்ளது.

மலேசியத் தமிழர்கள் இந்தியர் என்ற அடையாளத்தை விட்டுவிட்டு
மலேசிய அரசின் இசுலாமிய ஆட்சிக்கெதிராக இந்து என்ற அடையாளத்தை ஏற்காமல் இன அடையாளத்தை மட்டுமே ஏற்றுக்கொண்டு
தம்மோடு விரவி இருக்கும் தமிழ்பேசும் வேற்றினத்தவரை ஒதுக்கிவிட்டு
தமிழராக ஒன்றிணைந்து தமிழர் பகுதிகளில் தற்போதைய நிலையை விட சிறப்பான ஆட்சியை நடத்தவேண்டும்.

No comments:

Post a Comment