Showing posts with label மொஸாட். Show all posts
Showing posts with label மொஸாட். Show all posts

Tuesday, 10 May 2016

பாலஸ்தீனத்தில் புலிகள்

பாலஸ்தீனத்தில் புலிகள்

உங்களுக்கு பாலஸ்தீன விடுதலைத் தலைவர் திரு.யாசர் அராபத் அவர்களைத் தெரிந்திருக்கும்.

பாலஸ்தீன அரபுத் தந்தைக்கும் எகிப்து அரபித் தாய்க்கும் பிறந்தவர்.

எகிப்திலேயே வளர்ந்து கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டுக்குக்கூட போகாமல் நேராக தனது இனத்தை இனவெறி யூதர்களிடமிருந்து காக்க பாய்ந்தோடியவர்.

அங்கீகரிக்கப்படாத ஒரு நாட்டில் ஆயுதவழியில் போராடி அதிபராக உயர்ந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.

அவருக்கும் புலிகளுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா?
இருக்கிறது.

அவர் தலைவராக இருந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் (P.L.O) புலிகள் பயிற்சி எடுத்துள்ளனர்.

இதை ஏற்பாடு செய்தவர் ஈழப் புரட்சிகர மாணவர் அமைப்பை (E.R.O.S) நிறுவிய திரு.இளையதம்பி இரத்தின சபாபதி ஆவார்.

இவர் இலண்டன் வாழ் ஈழத்தமிழர்.

பாலஸ்தீன விடுதலை அமைப்பைச் சேர்ந்த இங்கிலாந்துக்கான பாலஸ்தீனத் தொடர்பாளர் திரு.சையது அமீது அவர்களுடன் நட்பு ஏற்பட்டபோது,
அவருடன் பேசி தமது இயக்கத்திற்காக பயிற்சி தர ஏற்பாடு செய்தார்.

பிறகு 1976 மே மாதம் பெய்ரூட் சென்று பாலசுத்தீனப் போராளி திரு.அபு ஜேஹத் என்பவரை (இசுரேலிய உளவுத்துறையால் கொல்லப்பட்டவர்) சந்தித்துப் பேசி  நேரில் பார்த்து விபரங்களை தெரிந்துகொண்டு
வவுனியாவிலும் சென்னையிலும் இயங்கிக்கொண்டிருந்த தமது இயக்கத்தினரையும்,
வவுனியாவில் ஈரோசுடன் கூட்டாக இயங்கிக் கொண்டிருந்த பிரபாகரனின் குழுவையும்(அப்போது இயக்கத்திற்கு பெயர் இல்லை) லெபனானுக்கு அழைத்துச் சென்று
பாலஸ்தீன விடுதலை இயத்தினரிடம் பயிற்சி பெறச் செய்தார்.

இந்தப்பயிற்சி 1976ன் பிற்பகுதியில் தொடங்கி 1977 முற்பகுதி வரை நடந்தது.
1983லும் புலிகள் மீண்டும் பாலசுத்தீனப் போராளிகளிடம் பயிற்சி பெற்றதாகவும் கூறுவர்.

Saturday, 25 July 2015

இஸ்ரேலை உலுக்கிய யூதன்

இஸ்ரேலை உலுக்கிய யூதன்
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

தமிழர்களில் துரோகிகள் அதிகம் என்பவர்க்கு இந்த பதிவு;

யூதர்கள்; 1900வருடங்கள் உலகம் முழுவதும் துரத்தியடிக்கப்பட்டவர்கள்;

வரிசையாக இனப்படுகொலைகளுக்கு ஆளானவர்கள்; பத்தில் ஒன்பதுபேர் பலியானவர்கள்; இனப்பற்றிலும் ஒற்றுமையிலும் ஈடற்றவர்கள்; வரைபடத்தில் உற்றுப்பார்த்தாலும் தெரியாத இசுரேல் நாட்டை அமைத்து சுற்றி இருக்கும் பெரிய பெரிய வல்லரசு நாடுகளையே பந்தாடுபவர்கள்;

கிறித்துவ வெறியர்கள், அமெரிக்கக் கட்டப் பஞ்சாயத்து அடியாட்கள், இனவெறியர்கள் என்று அடையாளப்படுத்தப்படுபவர்கள்;

அப்பேர்ப்பட்ட யூதர்களில் துரோகிகளே இருந்ததில்லையா என்று கேட்டால் இருந்தார்கள்;

1968ல் பெல்ஜியத்தின் SGM என்ற நிறுவனத்திடம் இருந்து ஜெர்மனியின் அஸ்மாரா என்ற நிறுவனத்தின் பெயரில் யுரேனியம் வாங்கி அதை லைபீரியா நாட்டுக் கப்பல் மூலம் நடுக்கடலுக்குக் கொண்டுவந்து ரகசியமாக இசுரேலுக்குக் கொண்டுசென்றது இசுரேலிய உளவுத்துறை மொஸாட்;

டிமோனோ என்ற இடத்தில் அணுஉலையில் மெர்டெசாய் வனுனு என்ற யூதர் வேலைக்கு சேர்ந்தபிறகு தெரிந்தது அங்கே அணுவுலை என்ற பெயரில் ரகசியமாக அணுஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன என்று; சுற்றியுள்ள நாடுகளெல்லாம் அணுஆயுதம் தயாரிக்கும்போது தன்னாடும் அணுஆயுதம் தயாரிப்பதை அவர் ஏனோ விரும்பவில்லை;

இதை அறிந்த மேலிடம் வேலையைவிட்டு நீக்கிவிட ஆசுத்திரேலியா போய் ஓட்டுநராக பணிபுரிய ஆரம்பித்தார்; ஆனால்,அவர் ரகசியமாக டிமோனா ஆலையில் எடுத்த படங்களை இங்கிலாந்தின் 'சண்டே டைம்ஸ்' ஊடகத்திற்கு கொண்டுசேர்ப்பதன் மூலம் அணுஆயுத உற்பத்தியை தடுக்கலாம் என்று நினைத்தார்;
அவரை செரில் என்ற அழகியை அனுப்பி ரோம் அழைத்துவந்து அங்கேயிருந்து மொசாட் கடத்திவிட்டது; ஆனாலும் டிமோனோவில் நடப்பது அணுஆயுத தயாரிப்புதான் என்பது படங்களுடன் உலகிற்கு 'சண்டே டைம்ஸ்' மூலம் தெரியவந்துவிட்டது;

நாட்டுக்கு இரண்டகம் செய்த வழக்கு போடப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டபோது 'என்னை ரோமிலிருந்து கடத்தினார்கள்'(மேலே படம்) என்று உள்ளங்கையில் எழுதி ஊடகவியலாருக்குக் காட்டிவிட்டார் மெர்டெசாய்; யூதர் என்கிற ஒரே காரணத்தால் மரணதண்டனையிலிருந்து தப்பினார்;

இவர்போல ஐன்ஸ்டீன்(யூதர்) இசுரேல் அதிபராகப் பொறுப்பேற்க மறுத்தார்;
டான் எர்ட், மரியானெ என்ற இரு மொசாட் உளவாளிகள் நார்வேயில் பிடிபட்டபோது இசுரேலைக் காட்டிக்கொடுத்தனர்;
யெஹூதா என்ற உளவாளி தவறான தகவல்கள் கொடுத்து ஊழல் செய்தார்;
லெபனானில் ஜோசஃப் என்ற யூதன் இசுரேல் மீது தாக்குதல் நடத்த அராபியர்களுடன் கூட்டுசேர்ந்தான்(இவனது மனைவி சூலா அதை முறியடித்தார்);

இன்னும் நிறையபேர் உண்டு; ஆக, துரோகிகள் இல்லாத இனமே கிடையாது;
அவர்களைக் கைகாட்டி மற்றவர்கள் கடமையிலிருந்து விலகவும் கூடாது; விலகினால் தானும் துரோகி என்று ஒத்துக்கொள்ளவேண்டும்.