Thursday, 24 October 2024

வீரப்பனார் கருத்தியல்

வீரப்பனார் கருத்தியல்

 ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு வீரப்பன் தேவை!
எப்படி என்று பார்ப்போம்,!

 வீரப்பனார் பலமுறை காவல் அல்லது வனத்துறை அதிகாரிகளை கடத்திவைத்துக் கொண்டு பல்வேறு நிபந்தனைகள் விதித்தார்.
 ஒவ்வொரு முறையும் கர்நாடகா, தமிழ்நாடு அரசுகள் பொய்யான வாக்குறுதிகள் அளிப்பதும் வீரப்பன் பிணையக் கைதிகளை விடுதலை செய்வதும் தொடர்ந்தது.
 பிறகு அப்படியான நிபந்தனைகள் அனைத்தையும் சேர்த்து ஒரே நிபந்தனையாக ஆக்கினார்.
 அதாவது தம் மீதான அனைத்து வழக்குகளை ஒரே வழக்காக ஆக்கி தமிழகத்திற்கு மாற்றி தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்கவும் அதன் தீர்ப்பு மூலம் குற்றம் செய்தவர்களுக்கு தண்டனையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடும் விரைந்து கிடைக்கச் எ கோரினார்.

 அதாவது தானும் தனது கூட்டாளிகளும் செய்த குற்றங்களுக்கும் கொலைகளுக்கும் தண்டனையும் அதிரடிப் படை செய்த கொலைகளுக்கும் குற்றங்களுக்கும் தண்டனையும் கிடைக்க வேண்டும்.

 அத்துடன் தனது கூட்டாளி என்று கொல்லப்பட்ட அல்லது சிறையில் வாடும் அப்பாவிகள், செய்யாத குற்றத்துக்கு சிறையில் இருக்கும் தனது அண்ணன் மாதையன் மற்றும் அப்பாவிகள், சிறையில் இருந்து சிறை மாற்றும்போது சயனைடு கொடுத்து கொல்லப்பட்ட தனது தம்பி, அதிரடிப் படை வன்புணர்வு செய்த ஆதிவாசி பெண்கள், சுட்டுக்கொல்லப்பட்ட சேத்துக்குளி கோவிந்தன் மனைவி, சட்டவிரோத காவலில் இருக்கும் தனது மனைவி என பெண்கள் பலர், மேலும் அதிகார வர்க்கத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் மற்றும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பது அவரது கோரிக்கை.

 இந்த கோரிக்கை ஏற்கப்பட்டால் தான் தனது கூட்டாளிகளுடன் சரணடைவதாக வீரப்பன் அறிவித்தார்.

 இது ஒரு ஓபன் சேலஞ்ச்!

 யார் பக்கம் நியாயம் என்பது சட்டப்படியே முடிவாகி உலகத்திற்கு தெரியவரும்!

 வீரப்பன் சட்டத்தை மீறியவர் என்பவர்கள் சட்டபடி அவரை சந்திக்க இந்த கொடுங்கோல் அரசுகள் தயாராக இல்லை என்பதை அறியுங்கள்.
 
 இதையடுத்தது 10 கன்னட வன ஊழியர்களை வீரப்பனார் கடத்தி அரசாங்கங்களை இந்த கோரிக்கையை நோக்கி தள்ளினார்.

  [அதுவரை எப்போதுமே காவிரி விடயத்தில் தமிழக முதல்வர் கெஞ்சுவார் கன்னட முதல்வர் மிஞ்சுவார்.
 வீரப்பன் விடயத்திலும் தமிழக அரசை விட அதிக முரண்டு பிடிக்கும் கர்நாடக அரசு.
 
 ஆனால் இப்போது கர்நாடக முதல்வர் நேரில் வந்து தமிழக முதல்வரிடம் கெஞ்சும் நிலை!]

 இறுதியாக 70 கர்நாடக வழக்குகள் தமிழகத்துக்கு மாற்றபட்டு மொத்தம் 106 வழக்குகள் ஒரே வழக்காக ஆக்கப்பட்டு தமிழகத்தில் சிறை வளாகத்திலேயே தனி நீதிமன்றம் அமைக்க முயற்சிகள் தொடங்கின!

  ஒரு வழியாக "வீரப்பன்" பிரச்சனை முடிவுக்கு வருவதாக இருந்தது.

 நீதிமன்றத்தில் அரச பயங்கரவாதம் வெளிச்சத்திற்கு வரும் என்று அனைவரும் எண்ணியிருந்த நிலையில் அலறியடித்துக் கொண்டு ஹிந்தியம் ஓடி வந்தது.

 ஏன்?! வீரப்பன் விடயம் சமாதானம் அடைவதில் மத்திய அரசுக்கு என்ன பிரச்சனை?!

 ஹிந்தியாவுக்கு கன்னடரும் தமிழரும் தமக்குள் அடித்துக்கொண்டு இருக்க வேண்டும்!
 அப்போதுதானே இவ்விரு மாநிலங்களை சுரண்ட வசதியாக இருக்கும்!
 ஹிந்திய அரசு நினைத்தால் இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனையைத் தீர்க்கலாம்! 
 ஆனால் அவர்களது பிரித்தாளும் மூளை அதற்கு விடாது!

 இன்று வீரப்பன் பிரச்சனை தீர்ந்துவிட்டால் இதே போல காவிரி பிரச்சனையும் தீர்க்கப்படுமே?!
 அதன்பிறகு இவ்விரு இனங்களும் தங்களுக்குள் மோதிக் கொள்ளாமல் உண்மையான வில்லன் இந்திய அரசை நோக்கித் திரும்புவார்களே?!

 இதைவிட காவிரித் தண்ணீரை மலையிலே மறித்து ஆலைகளுக்கு எடுத்துக் கொள்ளும் கர்நாடக தொழிற்சாலைகளும்
 தண்ணீர் ஓடாத ஆற்றில் மணலை அள்ளி கொழுக்கும் தமிழக அரசியல்வாதிகளும்
 தண்ணீர் இல்லாமல் விவசாயம் அழிந்த பிறகு அந்த நிலத்தை விழுங்க குறிவைத்துள்ள கார்ப்பரேட் முதலைகளும் இந்த நல்ல காரியத்தை நடக்க விடுவார்களா?!

 இந்த கண்ணுக்கெட்டாத மேல்தட்டு அதிகாரங்கள் தமது பிரதிநிதியாக சுப்பிரமணிய சுவாமி யை அனுப்பியது.

 அவர் வந்து இரு மாநில அரசுகள் வீரப்பனை மன்னித்தாலும் மத்திய அரசு மன்னிக்காது என்று கூறினார்.
 ஏன்? வீரப்பனுக்கும் மத்திய அரசுக்கும் என்ன பிரச்சனை?!

 1993 இல் கர்நாடக அரசு கோரியதன் அடிப்படையில் இந்திய எல்லைக் காவல் படை (BSF) 400 பேர் ஒரு ஆண்டு காலம் வீரப்பனைப் பிடிக்க முயன்றனர்.
 இந்த நடவடிக்கையின் போது இருதரப்புக்கும் சேதம் விளைந்தது. 
 சரியான காரணம் எதுவும் சொல்லாமல் bsf பின்வாங்கியது.
வீரப்பன் நடத்திய தாக்குதலில் ஒரு BSF வீரர் (Bhupender kumar)  இறந்தார் (உண்மையில் இறந்தது 20 இராணுவ வீரர்கள். இதை மறைத்துவிட்டனர்).
 எனவே வீரப்பன் பிரதமரிடமும் பொதுமன்னிப்பு பெறவேண்டும் என்றார் சு.சாமி!

  வீரப்பன் சரணடைந்து வழக்கு நேர்மையாக நடந்துவிட்டால் கர்நாடக, தமிழக அரசுகளின் அட்டூழியங்கள் வெளிச்சதுக்கு வந்துவிடுமே என்று பயந்துபோய் இருந்த இரு மாநில முதலமைச்சர்களும் இந்திய அரசு மீது பழியைப் போட்டுவிட்டு பின்வாங்கினர்!

 இந்த நிலையிலும் அந்த 10 பேரையும் விடுவித்தார் மாவீரன் வீரப்பன்!

 இது நடந்தபோது அதாவது 1990 களில் ஒரு நாளைக்கு 4 லட்சம் செலவு செய்து வீரப்பனை பிடிக்க முயன்றது அதிகார வர்க்கம்!
 ஏறத்தாழ 220 கோடி ரூபாய் வீரப்பனாரைப் பிடிக்க செலவு செய்யப்பட்டுள்ளது! 
 ஆனால் வீரப்பனை சட்ட ரீதியாக சந்தித்து குற்றவாளிகளுக்கு தண்டனையும் பாதிக்கப்படவருக்கு இழப்பீடும் தர அரசுகளுக்கு துப்பு இல்லை! 
 தங்களுக்கு சந்தன கட்டை கடத்துவதில் உதவவில்லை என்று வாச்சாத்தி என்ற ஒரு மலைக் கிராமத்தையே கொழுத்தி அங்கே அத்தனை பெண்களையெல்லாம் வன்புணர்வு செய்த அரச பயங்கரவாதத்தை சட்ட ரீதியாக சந்தித்த இந்த பழங்குடிகள் 30 வருடம் கழித்து அநீதி (தாமதமான நீதி) பெற்றனர்.
 இதுதான் இங்கே நீதி கிடைக்கும் லட்சணம்! 
 
 தனக்கு இனி காடுதான் நிரந்தரம் என்றும் தாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்று உணர்ந்துகொண்ட வீரப்பன் தானே மனுநீதி சோழனாக மாறி தீர்ப்பு தந்தார்.
 அதற்குப் பிறகு அவர் செய்த கடத்தல்களில் தனக்கென யோசிக்காமல் பாதிக்கப்பட்ட தமிழ் இனத்துக்கு பழங்குடிகளுக்கு எதையாவது பெற்றுத்தர முயன்றார்!
 தமிழ்தேசிய ஆயுதக் குழுக்களை ஒன்றுதிரட்டினார்.
 உச்சநீதிமன்றத்தையே மதிக்காத கர்நாடக அரசை ஒரு கேசட் அனுப்பி பணிய வைத்தார்.
 அப்படி கிடைத்த காவிரி நீர் இன்றும் தமிழர்கள் உடலில் ஓடுகிறது.

 இந்திய அரசுக்கு எதிராக உண்மையிலேயே போர் புரிந்துவரும் நக்சலைட்டுகளை புரட்சியாளர்கள் நம்பி கடைசியில் அவர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு வீழ்ந்துபோனார்!
 இந்திய கம்யூனிசம் இன்னொரு ஹிந்தியம்!
அங்கே மார்க்ஸ் கூறிய தேசிய உரிமைக்கெல்லாம் இடமில்லை!

 வீரப்பனாரை வீழ்த்தியதில் அவரது நெருங்கிய உறவினர்கள், அவரது சாதியினர், திராவிட அரசியல், கன்னட இனவெறி, ஹிந்திய சர்வாதிகாரம், இசுலாமிய இயக்கங்கள், கம்யூனிசம் என எல்லா சக்திகளும் ஒன்றிணைந்துள்ளன.

 அவருக்கு கடைசி வரை பக்க பலமாக இருந்தது சில மனசாட்சி உள்ள மனிதர்களும் பழங்குடி மக்களும்தான்!

  தமிழின மக்களும் தமிழின அரசியல்வாதிகளும் தமிழ்தேசிய ஆயுதக் குழுக்களும் ஏன் புலிகளும் கூட  அவரை ஆதரிக்க துப்பு இல்லாமல் கைவிட்டுவிட்டனர்.

 அவர் காலத்தில் அவரது அருமை யாருக்கும் தெரியவில்லை!
 இன்று வீரப்பன் எனும் பெயர் தனிநபரைக் குறிப்பது இல்லை! அது ஒரு சித்தாந்தம்! 
சாமானிய குடிமகன் நினைத்தால் அரச பயங்கரவாதத்தை திருப்பி அடிக்க முடியும் என்பதுதான் அதன் சிந்தனை!

  அப்படி வீரப்பனாரை ஒழித்ததில் பெரிய பங்கு யாருக்கு என்பதை அரசாங்கம் வீரப்பன் இறந்த பிறகு அளித்த வெகுமதிகளை வைத்து தீர்மானிக்கலாம்!

 752 பேர் தமிழக அதிரடிப்படை வீரர்களுக்கு இரட்டை பதவி உயர்வு மற்றும் வீட்டு மனை வழங்கப்பட்டு 3 லட்சம் வரை பணமும் வழங்கப்பட்டது. 
தமிழக காவல்துறை உளவாளிகளுக்கு எதுவும் செய்யவில்லை அல்லது செய்வதாகக் கணக்கு காட்டி அதிகாரிகள் விழுங்கிவிட்டனர்.
 அப்போது வீரப்பன் தலைக்கு விலை 5 கோடி!

 754 பேருக்கு கர்நாடகா பணமாகவே 40 கோடி வரை வாரி வழங்கி இருக்கிறது!
 சிறிய அளவில் உளவு சொன்னவர்களை கூட நினைவு வைத்து 2000 ரூ வரை கூட வெகுமதி அளித்துள்ளது!

 என்றால் அதிக வெகுமதி யார் வாங்கியது!
கர்நாடக அரசு மத்திய எல்லைக் காவல் படைவீரர்களுக்கு வழங்கியதுதான் அந்த வெகுமதி!  

 ஏனென்றால் தோற்று ஓடினாலும் வீரப்பனுக்கு மிக மோசமான சேதத்தை ஏற்படுத்தியது  BSF ராணுவம்தான்!
 என்றால் வீரப்பன் ஒட்டுமொத்த இந்திய கட்டமைப்பின் எதிரி என்றுதானே பொருள்?!

 இன்று கர்நாடகாவின் கொட்டம் அதிகரித்து விட்டது!
ஹிந்தியத்தின் கொட்டம் பல மடங்கு அதிகரித்து விட்டது!
திராவிடம் உச்சக்கட்ட ஆட்டத்தில் இருக்கிறது!

இனியொரு வீரப்பன் பிறந்தால்தான் இதற்கு முடிவா?!


 

No comments:

Post a Comment