Wednesday, 16 October 2024

மகாவம்சம் நூலே இப்படித்தான் கூறுகிறது

மகாவம்சம் நூலே இப்படித்தான் கூறுகிறது

  மகாவம்சம் இரு சம்பவங்களைக் கூறுகிறது!

 முதலாவது.....
வட கிழக்கு இந்தியாவில் (இன்றைய உத்தரபிரதேசம் அருகே) ஒரு தேசம்! அங்கே காட்டுக்கு அரசன் வேட்டைக்கு செல்கிறான்!
 அப்போது சிங்கம் நாட்டுக்குள் வருகிறது!
அந்நாட்டு இளவரசியை தூக்கிக்கொண்டு காட்டுக்கு போகிறது! இருவரும் கூடி சிம்மபாகு எனும் மகன் பிறக்கிறான்! இவன் அந்நாட்டு அரசன் ஆகிறான்! இவனது மகனே விஜயன்! இவன் முரடனாக இருந்தான்! இவன் தொல்லை பொறுக்காமல் அந்நாடே அவனையும் அவனது தோழர்ளையும் கப்பலில் ஏற்றி நாடுகடத்துகின்றனர்.
 இந்த கப்பல் இலங்கை (இன்றைய மன்னார் மாவட்டத்தில் உள்ள) மாதோட்டம் வருகிறது! அங்கே குவைனி எனும் யக்‌ஷ இளவரசி அடைக்கலம் தருகிறாள்! அவளை காதலிப்பது போல நடித்து பிறகு கொலை செய்துவிட்டு விஜயன் அரசனாகிறான்! மக்கள் ஏற்கவில்லை!
 மதுரை வந்து பாண்டிய வம்சத்து பெண்ணை மணந்து வருகிறான்! மக்கள் ஏற்கிறார்கள்! 

 இரண்டாவது....
 எல்லாளன் எனும் மன்னன் அநுராதபுரம் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆள்கிறான்!  ஒருமுறை ஆறு மாதம் அடைமழை பெறுகிறது! நெல்லை குத்தி அரிசியாக்கி பிழைக்கும் ஒரு மூதாட்டி ஆராய்ச்சி மணி அடிக்கிறாள்! குறையைக் கேட்ட மன்னன் நெல்லை காயப்போட சொல்கிறான்! நெல் இருக்கும் இடம் மட்டும் மழை பெய்யவில்லை! அந்த அளவு அவன் நீதி தவறாதவன்!
 இவன் காலத்தில் துட்டகைமுனு 27 முறை எல்லாளனை எதிர்த்து படையெடுத்து தோல்வியடைகிறான்!
 அவன் சோர்வடைந்து படுத்திருக்கும்போது அவன் தாய் விகார மாதேவி எனும் பேரழகி வந்து மீண்டும் போர் தொடுக்க சொல்கிறாள்!
 28வது முறை படை திரட்டி தோல்வியடையும் நிலையில் விகாரமாதேவி எல்லாளனை தனிப்பட்ட மோதலுக்கு அழைக்குமாறு தன் மகனிடம் சொல்கிறாள்! துட்டகைமுனு தான் இளைஞன் எல்லாளன் வயது முதிர்ந்தவன் என்று தயங்க விகாரமாதேவியோ அவனை கட்டாயப்படுத்துகிறாள்!  
 துட்டகைமு அறைகூவல் விடுக்க சவாலை ஏற்று தனியாளாக மோத எல்லாளன் வருகிறான்! அந்த மோதலிலும் எல்லாளன் வெற்றிபெறப் போகும் நேரத்தில் விகாரமாதேவி அங்கே வந்து தன் முக்காடை விலக்கி முகத்தைக் காட்ட அவன் அழகில் ஒரு நொடி சபலப்பட்ட எல்லாளனை ஈட்டியால் குத்தி கொன்று துட்டகைமுனு வெற்றிபெற்று இலங்கைக்கு அரசனாகிறான்!.

  இப்படி சிங்களவர்களின் முதன்மை நூலான மகாவம்சமே இரண்டு முறை சூழ்ச்சி மூலம்தான் சிங்களவர் இலங்கையைக் கைப்பற்றியதாக சொல்கிறது.

 (மேற்கண்ட தகவல்கள் ஐயா.அருகோ அவர்கள் வளரி இணையத்துக்கு அளித்த பேட்டியில் இருந்து பெறப்பட்ட தகவல்கள்.
மகாவம்சத்தில் சிங்களவர், தமிழர் என்று யாரும் இல்லை! அது ஒரு கற்பனையான புராண நூல்! அதில் வரும் ஒரு தரப்பு கதாபாத்திரங்களை தமது இனமாக சிங்களவர்கள் அடையாளப்படுத்தி வைத்துள்ளனர்)





 

No comments:

Post a Comment