Saturday, 19 October 2024
தனித் தமிழர்நாடு பேராசையா
எனது தனித் தமிழர்நாடு வரைபடத்தை பார்த்துவிட்டு அது பேராசை என்பவர்கள் சிலர்.
ஏறத்தாழ 100 மொழி பேசும் மக்களை இந்தியா என்கிற பெயரில் தற்போது போல சர்வாதிகாரத்தால் இணைத்தே வைத்திருக்க முடியும் என்று நம்பும் ஹிந்திய தேசியவாதிகள் இதைக் கூறினால் பரவாயில்லை!
ஆனால்...
இனத்தில் 15 ல் ஒரு பங்கு மக்களைத் திரட்டி தனிநாடு அடைய முற்பட்டு தோல்வியைத் தழுவிய ஈழ தேசியவாதிகளும்....
திராவிடம் என்கிற பெயரில் 5,6 மொழி பேசும் இனங்களை ஒன்றாக இணைத்துவிடலாம் என்கிற திராவிட தேசியவாதிகளும்....
இந்து மதத்தை அடிப்படையாக வைத்து ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தோனேசியா வரை ஒன்றிணைத்துவிட முடியும் என்று நம்பும் இந்துத்துவ வாதிகளும்...
அல்லது ஒரு சாதி தனிப் பெரும்பான்மையாக 2 மாவட்டங்களில் கூட இல்லாத தமிழ்நாட்டில் ஒரு சாதியினரை ஒன்றிணைத்து தனி மாநிலம் ஆக்கிவிடலாம் என்று நம்பும் சாதியவாதிகளும்..
என்னைப் பார்த்து மொழியை அடிப்படையாகக் கொண்டு தமிழினத்தையே திரட்டி தமிழகமும் ஈழமும் இணைந்து இழந்த பகுதிகளை மீட்டு தனிநாடு அடையமுடியும் என்று நான் கூறுவது பேராசை என்கின்றனர்.
இதுகூடப் பரவாயில்லை...
தாம்தான் சோழ, பாண்டிய வாரிசு என்று நிறுவிவிட்டால் ஏதோ தமக்கு சோழப் பேரரசும் பாண்டியப் பேரரசும் திரும்பக் கிடைத்துவிடுவது போல பேசும் சிலரும்..
தமிழ்தான் உலகின் முதல்மொழி என்று நிறுவிவிட்டால் ஏதோ சிந்துசமவெளி வரை நமக்கு பட்டா எழுதித் தரப்படுவது போலப் பேசும் மொழி வெறியர்களும்...
குமரிக்கண்டத்தை நிறுவிவிட்டால் ஏதோ அந்த கண்டமே மேலே எழுந்துவருவது போல பேசுபவர்களும்...
இது பேராசை என்பது வேடிக்கை!
ஒரு மொழி பேசும் மக்கள் ஒன்று திரண்டு தம் தாய் நிலத்தை மீட்ட வரலாறு ஆதிகாலம் முதல் தற்காலம் வரை பலமுறை வெற்றிகரமாக நடந்துள்ளது என்பதை அறியாமல்
சங்க காலத்தில் இருந்த தற்காலம் வரை தமிழர் எப்போதும் இனப்பற்றும் தனிநாட்டு சிந்தனையும் கொண்டிருப்பதைப் புரியாமல்
தற்போதைய தமிழகத்தில் இழிநிலையையும் தற்போதைய ஈழத்தின் அவல நிலையையும்
ஏற்றுக்கொண்டு இதற்குள் என்ன அரசியல்செய்ய முடியுமோ அதை மட்டும் செய்வதுதான் ஒரே வழி என்கின்றனர்.
நீங்கள் இந்த "நடைமுறை சாத்தியத்தை" செய்யுங்கள்!
ஆனால் அதையே தீர்வென்று நினைக்காதீர்கள்!
இனம் ஒன்றிணையாவிட்டால் நிலத்தை மீட்காவிட்டால் தனிநாடு அடையாவிட்டால் தமிழினம் அழிவது நிச்சயம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment