Saturday, 31 December 2022

சேனைத்தலைவர் தமிழ்த் தலைவர் ஆவது எப்போது?

சேனைத்தலைவர் தமிழ்த் தலைவர் ஆவது எப்போது?

  என் சேனைத் தலைவர் சமுதாயமே! 
படைகளைக் கட்டியாண்ட தளபதி வம்சமே !
 உங்களை நோக்கி சில கேள்விகள்....

 நாம் இன்னும் எத்தனை நாட்களுக்கு சுயநலமாக இருக்கப் போகிறோம்?
 இன்னும் எத்தனை நாட்களுக்கு தானுண்டு தன் வேலையுண்டு தன் சமூதாயமுண்டு என்று இருக்கப் போகிறோம்?
 மூவேந்தர் காலத்தில் படைகளை வழிநடத்தும் தளபதிகளாக இருந்த நாம் இன்று எப்படி இருக்கிறோம்?!
கல்வியில் முன்னேறி பத்ம பூசன் வரை வாங்கிவிட்டோம் சரிதான்.
 வணிகத்தில் ஓரளவு முன்னேறி நாம் வாழும் பகுதிகளில் கோலோச்சியும் வருகிறோம் சரிதான்.
 ஆனாலும் நம் சமுதாயத்தில் பாதிபேர் அன்றாடங் காய்ச்சிகளாக இன்றும் உள்ளனரே அது பற்றி சிந்தித்தீர்களா?!
 மரம் செழித்தால்தான் கிளை செழிக்கும், இனம் செழித்தால்தான் குலம் செழிக்கும் என்பது தெரியுமா?
 வரலாற்றில் வாளே தூக்கியிராத சமூகமெல்லாம் தாங்கள் போர்க்குடி என்று மார்தட்டும் சூழலில் இன்று நாம் இருக்கிறோமா இல்லையா என்று தெரியாத அளவிற்கு ஊமையாக வாழ்வது ஏன்?
 அரசியலில் நம் சமுதாயம் காணாமல் ஆக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகாலம் ஆகிறது என்பது தெரியுமா?
 என்னதான் திறமையிருந்தாலும் செல்வம் இருந்தாலும் அரசியல் செய்யாமல் மேலெழவே முடியாது என்பது தெரியுமா?
 ஜனநாயகத்தில் மிகச் சிறுபான்மையாக இருக்கும் நாம் என்ன செய்யமுடியும் என்கிற தாழ்வு மனப்பான்மையா?
 தமிழக மக்கட்தொகையில் 0.003% இருக்கும் ஒரு சமுதாயம் அரசியலில்  தலைமையில் இருக்கும் போது  0.4% இருக்கும் நாம் ஏன் எதையும் சாதிக்க முடியவில்லை?

 இனியும் நாம் ஒதுங்கியிருப்பதில் அர்த்தம் இல்லை.
 நாம் நமது சமுதாயத்தை ஒருங்கிணைத்து நம் தமிழ் இனத்தை வழிநடத்தும் கட்டாயத்தில் இருக்கிறோம்.
  மூவேந்தரை அழித்த மன்னர்களின் வாரிசுகள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களது போர்க்குடிகளும் அவர்களது இன மக்களும் இன்னமும் அதே அதிகாரத்துடன் நவீன மன்னராட்சி நடத்தி வருகின்றனர்.
 ஆனால் மூவேந்தர் வாரிசுகள் மறைந்துவிட்டனர். அவர்களது போர்க்குடிகள் விலைபோய் விட்டன. தமிழ் இனமும் வேற்றாரை அனுசரித்துப் போகப் பழகிவிட்டது. தமிழரை வழிநடத்த யாருமில்லை!
 இந்நிலையில் தமிழினப் போர்க்குடிகளுக்கு தலைமை வகித்த குடியாகிய சேனைத்தலைவர் நாம் இருக்கிறோம்.
தகப்பன் இல்லாத நிலையில் மூத்த மகன் குடும்ப பாரத்தைச் சுமப்பது போல இன்று இந்த இனத்தின் தலைசிறந்த போர்க்குடி நாம் தமிழினத்தை வழிநடத்தும் பொறுப்பில் இருக்கிறோம்.

 ஆம்! இனி தமிழ்தேசியத்தைக் கையில் எடுப்போம்.
ஏனென்றால் இனி தமிழ்தேசியத்தின் காலம்.
 பிற குடிகளில் இளைய சமுதாயம் இதை உணரத் தொடங்கிவிட்டனர். நம் சமுதாயத்திலும் அத்தகையோர் உண்டு. மற்றவர்களை முந்திக் கொண்டு நாம் தமிழ்தேசியத்திற்கு அதிக பங்களிப்பைச் செய்து தமிழினத்தின் தலைமைக்கு உயர வேண்டும். பங்களிப்பு என்றால் சிந்தனை, செயல், பொருளாதாரம், உழைப்பு, தியாகம், வீரம் என்று பங்களிப்பது.
 
இனி தமிழ்தேசிய எழுச்சிக் காலம்! 
இனி தமிழ் இனத்திற்காக அதிகம் செயல்படுவோர் ஆதிக்க சாதி! இனத்திற்காக எதுவும் செய்ய முன் வராதோர் அடிமை சாதி! 

 எவன் தமிழினத்திற்காக படைகட்டி எழுப்புகிறானோ அவனே சேர, சோழ, பாண்டியருக்கும் மேலான அரசன்! அவன் சந்ததியும் உறவினரும் அரச பரம்பரை! அவன் சமூகமே ஆதிக்க சாதி!

 நாம் மீண்டும் ஆதிக்க சாதியாக மாற வேண்டும்!

சேனைத் தலைவர் என்றால் தமிழருக்காக எதையும் செய்பவர் என்றாக வேண்டும்!

 சேனைத் தலைவர் வாழ்ந்தால் தமிழர் வாழ்வார் என்கிற எண்ணம் தமிழர்களிடம் வரவேண்டும்!
 சேனைத் தலைவரை ஒழித்துவிட்டால் தமிழினம் அழிந்துவிடும் என்று தமிழின எதிரிகள் நினைக்க வேண்டும்!

 தமிழருக்கு ஆபத்து வந்தால் சேனைத்தலைவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று ஒவ்வொரு தமிழனும் நம்ப வேண்டும்!

 உலகில் எங்காவது ஒரு தமிழருக்கு பிரச்சனை என்றால் ஒரு சேனைத் தலைவனை சந்தித்துக் கூறிவிட்டால் சரியாகிவிடும் என்றாக வேண்டும்!

 தமிழினம் சிறிது வீழ்ந்தாலும் சேனைத் தலைவர் பெரும் பின்னடைவு அடைய வேண்டும்!
 தமிழினம் சிறிது உயர்ந்தாலும் சேனைத் தலைவர் பெரும் வளர்ச்சி பெற வேண்டும்!

  அரசியலில்  மட்டும் இல்லை தமிழினம் நம் தலைவர் பிரபாகரன் வழியில் ஆயுதம் தூக்க நேர்ந்தாலும் நாம் முன்னின்று செய்ய வேண்டும்!
நமக்கு போர்த் தொழில் புதிதல்ல!
மூவேந்தர் காலத்தில் வெற்றிகளைக் குவித்த வரலாறு நமக்கு உண்டு!
 நம் உடலில் வீர ரத்தம் ஓடுகிறது!
மூவேந்தர் வீழ்ந்த பிறகு வந்தேறிகளுக்கு போர்த்தொழில் செய்யமாட்டோம் என்று மானத்தோடு வெளியேறிய நாம் இன்று வரை வந்தேறி ஆட்சியாளர்களுக்கு அடிபணியவில்லை.
 எவனுக்கும் கூழைக் கும்பிடு போட்டதில்லை!

 இனி நாம் வீறுகொண்டு எழுவோம்!
தமிழராக சிந்திப்போம்! தமிழ்தேசிய கட்சிகளிலும் இயக்கங்களிலும் சேர்வோம்! பிற தமிழரை விட அதிகம் பங்களித்து தலைமைக்கு உயர்வோம்!
 எந்த கட்சியில் இருந்தாலும் எந்த வேலையில் இருந்தாலும் நம் குடிக்கும் அதற்கு அடுத்து பிற தமிழருக்கும் சாதகமாக நடப்போம்!
 
 காலம் வந்தால் உண்மையிலேயே சேனைத் தலைவராக மாறவேண்டும்!
 படையொன்று கட்டியெழுப்பி தனிநாடு காணவேண்டும்!
 தலைமை ஏற்ற ஆள்வதற்கு மட்டுமில்லை இனத்திற்காக உயிரைக்கூட இழக்க முன்வர வேண்டும்!

நம் முன்னோன் முருகன் போல இறைநிலை 
அடையவேண்டும்!!

 அரசியலில் பெரும்பான்மைத் தமிழ்க் குடிகளில் ஆதிக்க குடிகள் வந்தேறிகளிடம் பேரம் பேசி பங்கு வாங்குவதிலும் பட்டியலினத்தார் பங்கு பிச்சை கேட்பதிலும் குறியாக இருக்கிறார்கள்.
 சிறுபான்மை தமிழ்க்குடிகள் அரசியலில் நம்பிக்கை இழந்து ஒதுங்கிவிட்டனர்.

 இந்த நிலையை மாற்ற நமக்கு தகுதி இருக்கிறது.
 நமக்கு வரலாறு இருக்கிறது!
 பொருளாதாரத் தகுதியும் அறிவும் இனப்பற்றும் நம்மிடம் இருக்கிறது.
 நாம் நினைத்தால் நம் இனத்தை வேற்றினத்தார் பிடியிலிருந்து விடுவிக்க முடியும்.
 நாம் மனது வைத்தால் நம் தாய்நிலத்தை விடுதலை செய்து ஆளமுடியும்.

 நம் சமுதாயத்தை ஒன்று திரட்டுவோம்!
சாதியில்லை என்கிற வந்தேறிகளின் சதியை முறியடிப்போம்!
 சாதிப் பட்டத்தை பெயருக்குப் பின் சேர்ப்போம்!
குடிகள் சேர்ந்துதான் இனம் என்கிற புரிதலுக்கு வருவோம்!
 சக தமிழ்க் குடிகளை அரவணைப்போம்!
வந்தேறு குடிகளை சிதறடிப்போம்! 
இனப் பகைவர்களை வேரறுப்போம்!


பெரியவர், சிறியவர், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், ஏழை, பணக்காரன் என எல்லா சேனைத்தலைவரும் தமிழினத்தை காத்து வழிநடத்த சூளுரைப்போம்!
 சமுதாய கூட்டங்களிலும், விழாக்களிலும் தமிழ்தேசியம் குறித்து பேசுவோம்!

 தமிழ்தேசியம் என்றால் சேனைத்தலைவர்!
ஒரு சேனைத்தலைவரிடம் பேச்சுக் கொடுத்தால் தமிழ்தேசியம் தான் பேசுவார் என்று ஆக வேண்டும்!

 நம்மைப் பார்த்து பிற ஆதிக்க தமிழ்க் குடிகள் நாண வேண்டும்!
 நம் இனப்பற்றைப் பார்த்து பிற குடிகளும் இனப்பற்று கொள்ளவேண்டும்!
 இதன் மூலம் இனி நம் தாய்நிலத்தில் வேற்றின அதிகாரம் என்கிற பேச்சுக்கே இடமில்லாமல் என்றாக்குவோம்!
 தமிழகம் ஈழம் சேர்ந்த தமிழ்த்தாய் நிலத்தில் ஆள்பவன் சேனைத் தலைவனாக இருக்க வேண்டும் அல்லது ஆளவைத்தவன் சேனைத்தலைவனாக இருக்கவேண்டும்!
 நம் மேலாண்மையை சக தமிழ்க் குடிகள் முழுமனதுடன் ஏற்கும் வகையில் நம் செயல்பாடு இருக்க வேண்டும்!
 இன எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் நாம் சிம்ம சொப்பனமாகத் திகழவேண்டும்!
 பெரும்பான்மைத் தமிழ்க்குடிகளால் முடியாத ஒன்றை நம்மால் சாதிக்க முடியும் என்று காட்டவேண்டும்!
 ஒரு தமிழர் எப்படி இருப்பான் என்று கேட்டால் எல்லாரும் சேனைத்தலைவரைக் காட்ட வேண்டும்!
 
ஜனநாயகம் என்றாலும் சரி ஆயுத வழி என்றாலும் சரி! தமிழினத்தை முன்னின்று காக்க சேனைத்தலைவர் தயாராக வேண்டும்!

 சாமுராய்கள் ஆண்ட ஜப்பான் போல சேனைத்தலைவர் ஆளும் தமிழர்நாடு இருக்கும்!
 உலகில் சிறந்த நாடு தமிழர்நாடு!
அதிலும் சிறந்தது சேனைத்தலைவர் ஆட்சி என்று வரலாறு பேச வேண்டும்!

 தமிழின எதிரிகள் அழிவு சேனைத்தலைவர் கையால் நடக்க வேண்டும்!
 சேனைத்தலைவரில் ஒரு இனத் துரோகி கூட கிடையாது என்றிருக்க வேண்டும்!
 சேனைத் தலைவரைத் தாண்டித்தான் பிற தமிழரைத் தொடமுடியும் என்கிற நிலை வரவேண்டும்!

 ஒன்று தமிழ்தேசியத்தைக் கையிலெடுத்து தமிழினத் தலைவர் ஆகத் தயாராவோம்!
 அப்படி இல்லை வேறு எந்த தமிழ்க்குடி தலைமைக்கு உயர்ந்தாலும் அவர்களுக்கு மனமனமுவந்து அடிமை சேவகம் செய்ய தயாராவோம்!

 இந்த 2023 ஆம் புத்தாண்டில் உறுதி ஏற்போம்! 
இனி தமிழ்தேசியம் நம் கொள்கை!
தனிநாடு நம் இலக்கு!
நாமே இனி தமிழர்நாட்டை ஆளப்போகும் பரம்பரை!
இனம் வாழ்ந்தால் குடிகள் வாழும்!
குடிகள் வாழ்ந்தால் இனம் வாழும்!

இனி தமிழ்தேசியத்தின் காலம்!
இனி சேனைத்தலைவரின் காலம்! 


 
 
 

Sunday, 25 December 2022

மைசூர் தாண்டியும் தமிழ்க் கல்வெட்டுகள்

மைசூர் தாண்டியும் தமிழ்க் கல்வெட்டுகள்

 கர்நாடகா மாநிலத்தின் ஏறத்தாழ மையத்தில் சித்ரதுர்கா அருகே தமட்டக்கல் (thamatakal) எனும் இடத்தில் தமிழி வட்டெழுத்துகளால் ஆன கி.பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஒன்று உள்ளது. இதே காலகட்டத்தைச் சேர்ந்த பழைய கன்னட நடுகல்லும் இதனுடன் உள்ளது. அதில் 'ஏழூர் சாத்தன்' எனும் பெயர் காணப்படுகிறது.

 மைசூரிலிருந்து தென்கிழக்காக 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது 'தலக்காடு' என்னும் ஊர் இராஜராஜ சோழன் கங்கபாடியைக் கைக்கொண்டு "முடி கொண்ட சோழ மண்டலம்" பெயரிட்டு தலைநகரான தலவனபுராத்தை "தழைக்காடான இராஜராஜபுரம்" என்ற தன் பெயரை சூட்டினார். இவ்வாறு 120 ஆண்டுகள் இங்கு சோழர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர் பின்னர் ஹொய்சாள மரபினன் விஷ்ணு வர்த்தன் என்ற அரசன் கர்நாடக முழுமைக்குமான ஒரு பேரரசை கட்டியெழுப்ப துணிந்து தன் கி.பி. 1117ல் தலைக்காடு போரில் சோழப்பிரதியாக கங்கநாட்டில் ஆட்சி நிர்வாகம் புரிந்து வந்த அதியமானைக் கொன்று தலைக்காட்டை கைப்பற்றினார். மேலும் இவ்வெற்றியின் நினைவாக தலக்காட்டில் கீர்த்தி நாராயணன் என்ற கோயிலை எடுப்பித்தார். இக்கோவிலில் உள்ள அவ்வரசனது கல்வெட்டு தமிழில் உள்ளது. இதன்மூலம் அப்பகுதியில் வாழ்ந்த பொதுமக்கள் தமிழர் என்று அறியலாம்.
கல்வெட்டு வரிகள் வருமாறு,
"ஸ்வஸ்திஸ்ரீ விஷ்ணு வர்த்ன போய்சாள
தேவர் ஹேவிளம்பி- சம்வரத்து மார்கழி
மாசத்து பூர்வ பக்ஷத்து வெள்ளிக்கிழமை யும் பெற்ற
விசாகத்து நாள் அதியமானை
நிர்மூலித்து தலைக்காடு- கொண்டு ஸ்ரீகீர்த்தி
நாராயணப்பெருமானை திருப்ரதிஷ்டை பண்ணி -
இந்நாயனார்க்கு அமுதுபடிக்கும் சாத்துப்
படிக்கும் நித்தபோகத்துக்கும் ஆக விட்ட
திருவிடையாட்ட ஊர்கள் இவ்வூர் நகரம் குக்கூர்-
சிறுவிண்ணகர் ஓடப்பட்டி,வாகியூர் இவ்வூர்
ஆவனித்திரையும் ஏரிக்கீழ் கமுகம், வளமும் இத்தனையும் ஸ்ரீ விஷ்ணுவர்தன போய்சாள தேவன்
சர்வபரிகாரமாக அச்சந்திராற்கஸ்தாயி நடப்பதாக விட்டான் இதுக்கு அழிவு நினைத்தான் ஸ்வதத்த ப்ரதத்தம்...."

சான்று: https://www.newindianexpress .com/states/
karnataka/2021/sep/15/karnataka-6th-century-hero-stone-tamil-inscription-restored-in-tamatakallu-2359027.html

நன்றி: John Peter

 (தனித் தமிழர்நாடு புத்தகம் இரண்டாம் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது)

தமிழ்க் கங்கர்

 தமிழ்க் கங்கர்

கோலார் நகரத்தின் பழைய பெயர் குவலாளபுரம் ஆகும். இது கங்கர்களின் தலைநகரம் ஆகும். இலக்கியத்தில் கங்கன் என்றொரு சிற்றரசன் பெயர் வருகிறது (அகநானூறு 44). ஏழு மன்னர்கள் கூட்டணி அமைத்து சோழன் பெரும்பூட் சென்னியுடன் போரிட்டபோது அந்த கூட்டணியில் கங்கன் இருந்தான். கங்கர்கள் கி.பி.350 முதல் 550 வரை தனியரசு செலுத்தி பின் பல்வேறு பேரரசுகளுக்கு அடங்கி சிற்றரசர்களாக ஆட்சி செய்தனர் (இவர்களின் ஒரு பிரிவினர் இன்றைய ஒரிசா மற்றும் ஆந்திர எல்லைப் பகுதியையும் ஆட்சி செய்துள்ளனர்). இவர்களின் கடைசி மன்னனும் சோழர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாகவே இருந்தனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவன் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தைச் (பனிரெண்டாம் நூற்றாண்டு) சேர்ந்த அமராபரணன் சீயகங்கன். பவணந்தி அடிகள் நன்னூல் இயற்றியது இவனது அரசவையில்தான்.
நன்னூல் கூறுவது போல (பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள் பன்னருஞ் சிறப்பின் பவணந்தி) இப்புலவர் பிறந்த சனகை என்பது மைசூர் மாவட்டம் திருமுக்கூடல் நரசிபுரம் தாலுகாவிலுள்ள சனாகாதபுரம் என்று சோழர் சரித்திரம் இரண்டாம் பாகத்தில் சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிட்டுள்ளார். நன்னூல் "குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனுநான் கெல்லையின் இருந்தமிழ்க் கடல்" என்று தமிழக எல்லைகளைக் குறிக்கிறது.
 இதன்படி வடக்கே குடகு மலை முதல் வேங்கடம் வரை தமிழ்நிலம் என்றாகிறது. இதனுள் மைசூரும் பெங்களூரும் அடங்கும். இந்த அமராபரணன் சீயகங்கனின் இயற்பெயர் "திருவேகம்பமுடையான்" என்பதாகும். இவன் மனைவி பெயர் "அரியபிள்ளை". இவனது மகனின் பெயர் "அருங்குன்றைப் பிள்ளையாரான செயகங்கன்". ஒரு மகளும் உண்டு அவள் பெயர் "வடவாயில் செல்வியாரான சந்திரகுல மாதேவியார்" என்பதாகும்.  கோலார் தமிழர் பகுதியே!

(தனித் தமிழர்நாடு புத்தகம் இரண்டாம் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது)

Saturday, 17 December 2022

மீண்டும் தனித் தமிழர்நாடு

மீண்டும் தனித் தமிழர்நாடு

"தனித் தமிழர்நாடு" புத்தகம் இரண்டாம் பதிப்பு வெளிவருகிறது

தனித் தமிழர்நாடு இரண்டாம் பதிப்பில் புதியதாக சேர்க்கப்படவுள்ள 13 தலைப்புகள்,

1) தமிழர் பேரரசுகள் (தமிழர் ஆண்ட பேரரசுகள் பற்றியது)

2) அசோக சக்கரம் சொல்லும் உண்மை (அசோகர் ஆட்சியில் தமிழகம் இல்லாதது பற்றியது)

3) பெங்களூர் மைய நகரம் முழுக்க தமிழர்கள்
(பெங்களூர் நகரம் பற்றியது)

4) ஜமீன்களின் அட்டூழியம்
(கீழ வெண்மணி, குறிஞ்சாக்குளம் போன்றவை)

5) மொழி வரைபடம் 1822
(முதல் மொழி வரைபடம்)

6) தமிழகம் இழந்த நிலம் தற்கால நிலை

7) இரண்டாவது பெரும்பான்மை மொழிகள்
(தென்னிந்திய மாநிலங்களில் இரண்டாவது பெரும்பான்மை கொண்டு விளங்கும் மொழிகளின் மாவட்ட வரைபடம்)

8) 1978 இல் தமிழகத்தில் வெளியான ஈழ வரைபடம் 

9) தமிழ்ப் பெருஞ்சுவர்
(சீனப் பெருஞ்சுவர் போல தடுப்பு சுவர் பற்றியது)

10) கண்டியில் தெலுங்கர் குடியேற்றம்
(கண்டி நாயக்கர் பற்றியது)

11) புலிகள் ஆண்ட ஈழம் 
(புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதி பற்றிய வரைபடம்)

12) தேசிய தனியரசும் பழங்குடி துணையரசும்
(தமிழர்நாட்டில் பழங்குடி மக்களின் நில உரிமை பற்றியது)

13) இழந்தது தேவிகுளம் பீர்மேடு மட்டும்தானா?
(2011 இல் புதிய தலைமுறை இதழில் வந்த மண்மீட்பு கட்டுரை)

14) வேலைவாய்ப்பு இனத்தின் உரிமை (வேலைவாய்ப்பில் மண்ணின் மைந்தர்கள் புறக்கணிக்கப் படுவது பற்றியது)

* சான்றுகள் குறைவாக உள்ளதால் நீக்கப்பட்டது
1) தாலியறுத்தான் சந்தை 

* மொத்தம் 300 பக்கங்கள்
 * 120 க்கும் மேற்பட்ட படங்கள் (55 வண்ணப்படங்கள்) 
* முன்பை விட பக்கங்கள் குறைக்கப்பட்டு நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டு வெளிவருகிறது.

  

Tuesday, 6 December 2022

வேலைவாய்ப்பு இனத்தின் உரிமை

வேலைவாய்ப்பு இனத்தின் உரிமை

 ஒரு இனம் தமது தாய்நில வளங்களைப் பயன்படுத்தி வாழ்ந்துகொள்வது தமது அடுத்த சந்ததியை ஆளாக்கிவிடுவது வாழ்வியல் முறையாகும். நிலத்தின் வளங்களை மண்ணின் மைந்தர் அல்லாத பிறர் பயன்படுத்துவது முறையில்லை. ஒருவேளை அப்படி பிறர் பயன்படுத்தும்போது அப்பகுதி மக்களுக்கு அதில் வாழ்வாதாரம் தருவதே முறை! ஒரு பன்னாட்டு நிறுவனம் ஒரு நிலப்பகுதியை எடுத்துக்கொண்டு அதன் வளங்களைப் பயன்படுத்தும்போது அதில் அம்மண்ணின் மைந்தருக்கு வேலைவாய்ப்பு தருவதே முறை! அது அரசின் உதவியைப் பெறுமானால் அந்த அரசுக்கு வரி அளிக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பு அல்லது ஒப்பந்தம் போன்ற வாழ்வாதாரங்களை அளிப்பதும் தார்மீகக் கடமை ஆகும். ஒரு இனம் தமது வளங்களின் மீது வாழ்வாதார உரிமை கோருவது தவறென்று ஆகாது. ஆங்கிலேயர் காலத்தில் வளச்சுரண்டல் உச்சத்தை அடைந்தபோது வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு வேலைவாய்ப்பு கேட்டு உருவாக்கியதே காங்கிரஸ். பின்னர் அதுவே இந்திய சுதந்திர குரலாக மாறியது.
 திராவிட இயக்கமும் சரி சிங்கள பேரினவாதமும் சரி ஆங்கிலேயர் காலத்தில் தமிழர்கள் முறையாகப் படித்து தேர்வாகிப் பெற்ற வேலைவாய்ப்பைக் கண்டு எழுந்த பொறாமை உணர்வின் விளைவாகவே தோன்றியது.  முதலில் எல்லா உயர் பதவிகளிலும் ஆங்கிலேயரே இருந்தனர். இந்தியர்களுக்கும் பதவி வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் தொடங்கப்பட்டது. 1900களில் மிண்டோ - மார்லி சீர்திருத்தம், மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டு இந்தியர்களுக்கும் பதவிகள் வழங்கப்படுகின்றன. இப்பதவிகளில் ஆங்கிலக் கல்வி கற்று தமிழர்கள் நிறைகின்றனர் (குறிப்பாக தமிழ்ப் பார்ப்பனர்கள்) ஈழத்திலும் அவ்வாறே தமிழர்கள் கல்வி மூலம் உயர்பதவிகளை அடைகின்றனர் (குறிப்பாக யாழ் வெள்ளாளர்கள்). 
 தமிழர்கள் கல்வி மூலம் அடைந்த உயரத்தை பிறர் அரசியல் மூலம் அடைய திட்டமிடுகின்றனர். இவ்வாறே திராவிடமும் சிங்களப் பேரினவாதமும் பிறந்தன. ஆங்கிலேய ஆதரவுடன் திராவிடம் ஆட்சியைப் பிடித்து மறைமுகமாக செயல்பட்டது. ஆனால் சிங்களவர் நேரடியாகவே செயலில் இறங்கினர். 1956 இல் சிங்களம் திணிக்கப்பட்டு தமிழர்கள் வீட்டுக்கு அனுப்பபட்டு எல்லா அரசு வேலைகளிலும் ராணுவத்திலும் காவல்துறையிலும் சிங்களவர் நிறைகின்றனர். 1956 இல் 30% நிர்வாகப் பணிகள்,  50% எழுத்தர் பணிகள், 60% பொறியாளர் மற்றும் மருத்துவர் பணிகள் மற்றும் 40% ராணுவ மற்றும் காவல்துறை பணிகள் தமிழர் வசம் இருந்தன. ஆனால் 1970 இல் 5% நிர்வாகப் பணிகள்,  5% எழுத்தர் பணிகள், 10% பொறியாளர் மற்றும் மருத்துவர் பணிகள் மற்றும் 1% ராணுவ மற்றும் காவல்துறை பணிகள் மட்டுமே தமிழர் வசம் இருந்தன. இந்த வேலைவாய்ப்பு இழப்பே தமிழ் இளைஞர்கள் கொதித்தெழக் காரணம். இதேபோல ஹிந்தியர் ஹிந்தியைத் திணித்தபோது தமிழகம் ஈழத்தடிகள் தலைமையில்  எழுநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களைக் கொடுத்து பெரும் போராட்டம் நடத்தித் தடுத்ததால் ஈழம் அளவுக்கு நிலை மோசமாகவில்லை. இந்த மொழிப்போரில் இடையில் புகுந்து இடையிலேயே விலகிவிட்ட திராவிடத் தலைவர்கள் இதன் பலனை மறைமுகமாக தமது மக்களுக்கு சாதகமாக மாற்றினர். ஆம்! திராவிடம் இந்த இருமொழிக் கொள்கையை "தமிழ் - ஆங்கிலம்" என்றில்லாமல் "தாய்மொழி - ஆங்கிலம்" என்றாக்கி தம் மக்களைக் காத்தது. 2005 இல் தமிழ் கட்டயாமாக்கப்படும் வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் தமிழ் இல்லாமலேயே இயங்கின.  அவற்றின் எண்ணிக்கை.
- தெலுங்கு : 269 + 35
- உருது : 260 + 56
- மலையாளம் : 100 + 50
- கன்னடம் : 61 +1.

மாநில வேலைவாய்ப்பில் தமிழுக்கு மதிப்பெண்கள் அதிகம் தரப்பட்டு இருந்ததால் தமிழர்கள் அதை அடைவது எளிதாக இருந்தது. ஆனால் தமிழகத்தினுள் மத்திய அரசின் கீழ் இயங்கும் துறைகளில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டே வந்தது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு  தமிழுக்கு மதிப்பெண்ணை குறைத்தனர். பின் தமிழக அரசின் வேலைவாய்ப்புக்கு எந்த மாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம் என்றாக்கினர்.
 இதைவிட ஒருபடி மேலே போய் 1.9.2016 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் முறைப்படுத்தல் சட்டத்தின்படி, வெளி மாநிலத்தவர் மட்டுமின்றி பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், மியான்மர், தான்சானியா, எத்தியோப்பியா உள்ளிட்ட 14 நாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்தோரும் தமிழ்நாடு அரசுப் பணியில் சேரலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இது எத்தனை பெரிய அநீதி?! 
 இதன் மோசமான விளைவுகளை தற்போது தமிழக இளைஞர்கள் சந்தித்து வருகின்றனர்.
சில எடுத்துக்காட்டுகள் வருமாறு,

* தென்னக ரயில்வேயில் 196 SM காலியிடங்கள் நிரப்பப்பட்டபோது 2 மலையாளிகள், 194 பீகாரிகள், 0 தமிழர்கள்
(செய்தி 26.02.2017)

* மதுரையில் நடந்த தபால்துறை போஸ்ட்மேன் பணியிட நிரப்பலுக்கான தேர்வில் 300 காலியிடங்களுக்கு 50% வரை அரியானா மாநிலத்தவர் தேர்வாகியுள்ளனர். இவர்கள் போக மகாராஷ்ட்ர மாணவர்களும் பெருமளவில் தேர்வாகியுள்ளனர்.  தமிழர்கள் 25%கூட தேர்வாகவில்லை
(செய்தி 17.03.2017)

* சென்னை மண்டலத்திற்கு தேர்வான "வருமான வரித்துறை அதிகாரிகள்" 92 பேரில் 5 பேர் மட்டுமே தமிழர்கள். அதேபோல சென்னை மண்டலத்திற்கு தேர்வான "உதவி வருமான வரித்துறை அதிகாரிகள்" 233 பேரில் 17 பேர் மட்டுமே தமிழர்கள்
(செய்தி 29.10.2018)

* தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தேர்வான 300 பேரில் 39 பேர் வெளிமாநிலத்தவர்கள்
(செய்தி 31.05.2019)

* மதுரை ரயில்வே பணியிடங்கள் 572 இல் 10 பேர் மட்டுமே தமிழர்
(செய்தி 18.09.2019)

* தென்னக ரயில்வே (தமிழகம் மற்றும் கேரள ரயில்வே சேர்ந்தது தென்னக ரயில்வே) பணியிடங்கள் 96 இல் 6 பேர் மட்டுமே தமிழர்கள் (செய்தி 16.06.2020)

 இந்த நிலையை ஒப்பிட கர்நாடகம் வைத்திருந்த மொழிக்கொள்கையைப் பார்ப்போம். 1982 இல் கர்நாடகம் முழுவதும்  கன்னடம் திணிக்கப்பட்டு அதை எதிர்த்துப் போராடிய 4 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 15 பேர் வரை காணாமல் போயினர். தமிழ்ப் பகுதிகளுக்கு அப்போது விலக்கு அளிக்கப்பட்டது. இதன் விளைவாக கர்நாடகத்தில் கன்னடருக்கே முன்னுரிமை என்று எழுத்தப்படாத சட்டம் 1986 இல் சட்டமாகவே ஆனது. சரோஜினி மகிஷி கமிஷன் பரிந்துரைகள் படி 1986 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம் இன்றுவரை நடைமுறையில் உள்ளது. இதில் முக்கியமானவை வருமாறு,
1. 100% இடஒதுக்கீடு கர்நாடக மாநில அரசு பணிகளில் கன்னடர்களுக்கே வழங்கப்பட வேண்டும்.
2. 100% இடஒதுக்கீடு மத்திய அரசு பணிகளில் "C", "D" எனும் ப்ளூ காலர் பணிகள் கன்னட மக்களுக்கே வழங்கப்பட வேண்டும்.
3. மத்திய அரசின் "B" கிரேட் பணிகளில் 80% கன்னட மக்களுக்கே வழங்க வேண்டும்.
4. மத்திய அரசின் "A" கிரேட் பணிகளில் 65% கன்னட மக்களுக்கே வழங்க வேண்டும்.
5. 100% தனியார் வேலைகளில் கன்னடர்களுக்கே முன்னுரிமை. அப்படி கன்னடர்கள் யாரும் விண்ணப்பிக்கவில்லை எனும் நிலையில் பிறருக்கு வழங்கலாம்.
 இதில் கன்னடவர் என்பதற்கான வரையறையும் தரப்பட்டுள்ளது. அதாவது,
 பதினைந்து ஆண்டுகளுக்கு குறையாமல் கர்நாடகத்தில் இருந்திருக்க வேண்டும். கன்னடம் பேச, படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும் (அதிலும் கன்னட மீடியத்தில் படித்திருந்தால் முன்னுரிமை) இந்த வரையறையில் வருபவர் கன்னடர். இந்த அடிப்படையில் செயல்பட்டதால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள். 
 கர்நாடக கல்வித் துறையின் ஆவணங்களின்படி 1978-79 கல்வி ஆண்டில் கர்நாடகாவில் இருந்த 267 தமிழ்வழி தொடக்கப்பள்ளிகளில் 76,309 மாணவர்கள் படித்துள்ளனர். 100 -க்கும் அதிகமான உயர்நிலை பள்ளிகளில் 13,455 மாணவர்கள் படித்துள்ளனர்.  இந்த மாணவர்களுக்கு தமிழ் வழி கல்வியை போதிக்க 1706 தமிழ் ஆசிரியர்கள் இருந்தனர்.
2015-16 கல்வி ஆண்டில் மொத்தம் 8.35 லட்சம் மாணவர்கள் கர்நாடகாவில் 10-ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளனர். இதில் 832 மாணவர்கள் மட்டுமே தமிழில் தேர்வு எழுதியுள்ளனர் (அதாவது 35 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை ஒப்பிடுகையில் 5% கூட இல்லை).

தப்பித் தவறி பிறருக்கு வேலை கிடைத்தால் கன்னடர் பெரும் எதிர்ப்பைத் தெரிவிப்பர். உதாரணமாக 1999 இல் மத்திய அரசு நிறுவனமான ஏ.ஓ.ஜி இல் கன்னடர் பெரும் போராட்டம் செய்து முறைப்படி தேர்வாகி வேலைபெற்ற 28 தமிழர்களை வெளியேற்றினர். 

 தமிழகத்தினுள் மாநில, மத்திய மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் தமிழக மாநிலத்தாருக்கே கிடைக்கவேண்டும் என்று மாநில உரிமைகளை மீட்கும் நோக்கத்துடன் இயங்கும் பெ.மணியரசன் அவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார். 

 அரசாங்க வேலைவாய்ப்பு சரியாகப் பங்கிடப்படாதபோது அங்கே கலகம் வெடிக்கும் என்பது கண்கூடு!