Sunday 25 December 2022

மைசூர் தாண்டியும் தமிழ்க் கல்வெட்டுகள்

மைசூர் தாண்டியும் தமிழ்க் கல்வெட்டுகள்

 கர்நாடகா மாநிலத்தின் ஏறத்தாழ மையத்தில் சித்ரதுர்கா அருகே தமட்டக்கல் (thamatakal) எனும் இடத்தில் தமிழி வட்டெழுத்துகளால் ஆன கி.பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஒன்று உள்ளது. இதே காலகட்டத்தைச் சேர்ந்த பழைய கன்னட நடுகல்லும் இதனுடன் உள்ளது. அதில் 'ஏழூர் சாத்தன்' எனும் பெயர் காணப்படுகிறது.

 மைசூரிலிருந்து தென்கிழக்காக 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது 'தலக்காடு' என்னும் ஊர் இராஜராஜ சோழன் கங்கபாடியைக் கைக்கொண்டு "முடி கொண்ட சோழ மண்டலம்" பெயரிட்டு தலைநகரான தலவனபுராத்தை "தழைக்காடான இராஜராஜபுரம்" என்ற தன் பெயரை சூட்டினார். இவ்வாறு 120 ஆண்டுகள் இங்கு சோழர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர் பின்னர் ஹொய்சாள மரபினன் விஷ்ணு வர்த்தன் என்ற அரசன் கர்நாடக முழுமைக்குமான ஒரு பேரரசை கட்டியெழுப்ப துணிந்து தன் கி.பி. 1117ல் தலைக்காடு போரில் சோழப்பிரதியாக கங்கநாட்டில் ஆட்சி நிர்வாகம் புரிந்து வந்த அதியமானைக் கொன்று தலைக்காட்டை கைப்பற்றினார். மேலும் இவ்வெற்றியின் நினைவாக தலக்காட்டில் கீர்த்தி நாராயணன் என்ற கோயிலை எடுப்பித்தார். இக்கோவிலில் உள்ள அவ்வரசனது கல்வெட்டு தமிழில் உள்ளது. இதன்மூலம் அப்பகுதியில் வாழ்ந்த பொதுமக்கள் தமிழர் என்று அறியலாம்.
கல்வெட்டு வரிகள் வருமாறு,
"ஸ்வஸ்திஸ்ரீ விஷ்ணு வர்த்ன போய்சாள
தேவர் ஹேவிளம்பி- சம்வரத்து மார்கழி
மாசத்து பூர்வ பக்ஷத்து வெள்ளிக்கிழமை யும் பெற்ற
விசாகத்து நாள் அதியமானை
நிர்மூலித்து தலைக்காடு- கொண்டு ஸ்ரீகீர்த்தி
நாராயணப்பெருமானை திருப்ரதிஷ்டை பண்ணி -
இந்நாயனார்க்கு அமுதுபடிக்கும் சாத்துப்
படிக்கும் நித்தபோகத்துக்கும் ஆக விட்ட
திருவிடையாட்ட ஊர்கள் இவ்வூர் நகரம் குக்கூர்-
சிறுவிண்ணகர் ஓடப்பட்டி,வாகியூர் இவ்வூர்
ஆவனித்திரையும் ஏரிக்கீழ் கமுகம், வளமும் இத்தனையும் ஸ்ரீ விஷ்ணுவர்தன போய்சாள தேவன்
சர்வபரிகாரமாக அச்சந்திராற்கஸ்தாயி நடப்பதாக விட்டான் இதுக்கு அழிவு நினைத்தான் ஸ்வதத்த ப்ரதத்தம்...."

சான்று: https://www.newindianexpress .com/states/
karnataka/2021/sep/15/karnataka-6th-century-hero-stone-tamil-inscription-restored-in-tamatakallu-2359027.html

நன்றி: John Peter

 (தனித் தமிழர்நாடு புத்தகம் இரண்டாம் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது)

No comments:

Post a Comment