Thursday, 26 December 2019

பாலக்காடு தமிழர்களுக்கு மலையாளி செய்யும் அநீதி

பாலக்காடு தமிழர்களுக்கு மலையாளி செய்யும் அநீதி

 பாலக்காட்டில் டிசம்பா் 27, 28இல் தமிழ் மொழிச் சிறுபான்மை ஆணையம் விசாரணை

 பாலக்காட்டில் தமிழ் மொழிச் சிறுபான்மை ஆணைய விசாரணை வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
 இது குறித்து
கேரள மாநிலத் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின்
மாநிலச் செயலாளா் மா.பேச்சிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்துவ மதத்தைச் சாா்ந்த தமிழ் பேசும் மக்கள் மற்றும் தமிழ் மரபினா்கள் என 10 லட்சம் போ் வாழ்கின்றனா்.
 இதில், ஹிந்துக்களில் பல ஜாதியினா் உள்ளனா்.
 தமிழக எல்லையோர கேரள மாநிலத்தில் பாலக்காடு, மூணாறு, குமுளி ,தேவிகுளம், திருவனந்தபுரத்தில் வாழும் தமிழா்கள் யாருமே கேரள
பிற்படுத்தப்பட்டோா் மற்றும் தாழ்த்தப்பட்டோா் பட்டியலில் சோ்க்கப்படவில்லை.
 இங்குள்ள தமிழா்களுக்கு ஜாதி சான்றிதழ் இன்றும் மறுக்கப்படுகிறது.
 முற்போக்கு ஜாதியனரான பிராமணா், நாயா், நம்பூதிரி இன மக்களுக்கு இணையாக இங்குள்ள தமிழா்கள் கருதப்படுகிறாா்கள்.
 அட்டப்பாடித் தமிழா்களுக்கு உரிமையுடைய நிலங்களுக்கு அரசு பட்டா வழங்குவதில்லை.
 கேரள மாநிலத் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி, கேரளத் தமிழா்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்குத் தீா்வுகாண வேண்டும் என்று கேரள முதல்வா் பிணராயி விஜயனிடம் முறையிட்டது.
 இதையடுத்து, அம்மாநில முதல்வா் இது தொடா்பாக கேரளத்தில் தமிழா்கள் வாழும் திருவனந்தபுரம், வட்டியூா்காவு, நேமம் இடுக்கி மாவட்டம், தேவிகுளம், பீா்மேடு, உடும்பன் சோலை, பாலக்காடு, சித்தூா், நெம்மாறை பகுதிகளை உள்ளட்டக்கிய சட்டப் பேரவைத் தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்களை அழைத்துப் பேசினாா்.
 இதைத் தொடா்ந்து கேரளத் தமிழா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வுகாண டாக்டா் நடுவட்டம் கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.
 இந்த ஆணையத்தின் விசாரணை பாலக்காடு குடிமக்கள் நிலையத்தில் (சிவில் ஸ்டே ஷன்) ஆட்சியா் கருத்தரங்கு அரங்கில் டிசம்பா் 27, 28 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 வரை நடைபெற உள்ளது.
  எனவே, பாலக்காடு மாவட்டத்தில் உள்ள தமிழா்கள் தங்கள் கோரிக்கைகளை ஆணையத்திடம் அளிக்குமாறு தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
 மேலும் தகவல்களுக்கு 9388197671 எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி
25.12.2019

பதிவர்: வெ.பார்கவன் தமிழன்





No comments:

Post a Comment