Thursday 28 December 2017

கிறிஸ்துமஸ் உண்மைகள்

கிறிஸ்துமஸ் உண்மைகள்

ஏசு பிறக்கும் முன்பே Yule என்ற பெயரில் கொண்டாடப்பட்டுவந்த விழா கிறித்துவ மதம் பரவியபிறகு கிறிஸ்துமஸ் என்று ஆக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.
பிறகு அதுவே இயேசு பிறந்தநாள் என்று கதைகட்டப்பட்டது.

ஆனால் ஏசு பிறந்தது கோடைகாலம்.
மரியாளும் யோசேப்பும் ரோமானியப் பேரரசின் கணக்கெடுப்பிற்காக வந்திருந்தபோது ஏசு பிறந்ததாக விவிலியம் (Luke 2: 1-4) கூறுகிறது.
அந்த கணக்கெடுப்பு பனிக்காலத்தில் நடப்பதில்லை.
அப்போது மேய்ப்பர்கள் ஆடு மேய்த்துக்கொண்டு இருந்ததாக பைபிள் (Luck 2: 7-8) கூறுவது மேலும் ஒரு சான்றாகும்.

அதேபோல கிறிஸ்துமஸ் தாத்தா பற்றி விவிலியத்தில் எந்த குறிப்பும் இல்லை.
அந்த கற்பனை கதாபாத்திரம் 300 ஆண்டுகள் முன்பு உருவாக்கப்படுள்ளது.

  கிறிஸ்துமஸ் தாத்தாவின் இன்றைய உருவம் 150 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் வரையப்பட்டு பிறகு 1930களில் cocacola கம்பெனியால் தனது விளம்பரங்களில் பயன்படுத்தப்பட்டு பிரபலமானது.

இன்றைய ஏசுநாதர் உருவமும் கற்பனையே!
ஏசுவின் உருவம் எப்படி இருந்துருக்கும் என்பதை ஆய்வு செய்து Dr.Neave என்பவர் ஒரு உருவத்தை வடிவமைந்துள்ளார்
(பார்க்க படம்).

அவர் பிறந்து வளர்ந்த இடத்தை கருத்தில் கொண்டால் ஏசு பச்சைக் கண்களுடன் செம்பட்டை முடியுடன் கூர்மையான மூக்குடன் வெளுத்த தோலுடன்  ஒரு ஐரோப்பியர் போல இருந்திருக்க வாய்ப்பில்லை.

பைபிளோ ஏசுவின் தலை மற்றும் முடி பஞ்சுபோல வெள்ளையாக இருந்ததாக கூறுகிறது (Revelation 1:14).

ஆனால் ஏசு இறக்கும்போதோ அவருக்கு 35 வயது.

No comments:

Post a Comment