Showing posts with label யாழி. Show all posts
Showing posts with label யாழி. Show all posts

Wednesday, 5 April 2017

ஆளி (யாளி) - தமிழர் பழமைக்குச் சான்று

ஆளி (யாளி) 
- தமிழர் பழமைக்குச் சான்று

யாளியின் படத்தை எளிய ஓவியமாக வரைந்துள்ளேன்.
இதை கோவில் தூண்களில் நீங்கள் பார்த்திருக்கலாம்.
எல்லா கோவில் தூண்களிலும் இருக்கும்.
(தமிழகத்தைத் தவிர வேறு எங்கும் இல்லை)

யானையை விட பெரிய உருவம், சிங்கத்தைப் போன்ற முகமும் உடலும்,
அதோடு துதிக்கையும் தந்தமும் இருக்கும் அதிசய விலங்கு யாளி.
இந்த யாளி யானையைக் கொன்ற குறிப்புகள் இலக்கியங்களில் வருகின்றன.

-----------------
ஆளி நன்மான் அணங்குடை யொருத்தல்
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப
ஏந்தல் வெண்கோடு வாங்கிக் குருகு அருந்தும்
அஞ்சுவரத் தகுந ஆங்கண்

ஆளியாகிய நல்ல விலங்கினது வருத்துதலையுடைய ஏறு, வலியுடைய யானையின் தலைவனான களிறு வருந்த,
அதன் நிமிர்ந்த வெள்ளிய கோட்டினைப் (தந்தம்) பறித்து,
குருத்தினைத் தின்னும் அச்சம் தரும் அச்சுரத்திடத்தே.

_ மதுரை இளங்கெளசிகனார் (அகநானூறு 381: 1-4)
-----------------------

மூரித்தாள் ஆளி யானைத் தலை
நிலம் புரள வேண்டுகோடு
உண்டதே போன்று”

யானையின் தலை நிலத்தில் புரள (அதைக் கீழே தள்ளி) அதன் தந்தத்தைப் பறித்து யாளி உண்ணும்
(சீவகசிந்தாமணி 2554 :1-2)
--------------------

மீளி முன்பின் ஆளி போல,
உள்ளம் உள் அவிந்து அடங்காது, வெள்ளென
நோவாதோன்வயின் திரங்கி,
வாயா வன் கனிக்கு உலமருவோரே.

யானையை வேட்டையாட எண்ணிய ஆளி யானை கிடைக்கவில்லை என்று எலியை வேட்டையாடக் குறி பார்க்காது.
நான் பாடிய பாடல் இளவெளிமான் செவியில் ஏறிவிட்டது.
பலன் கிடைக்கப்போகிறது என எண்ணியிருந்தேன்.
ஆனால் சோறு சமைத்த பானை நெருப்பைத் தருவது போல் இவன் தருகிறான்.
ஆறு போல் பாய்ந்து வேறு இடத்தில் பரிசில் பெற்றுக்கொள்ளலாம்.

_ பெருஞ்சித்திரனார்
(புறநானூறு 207 : 8)
-----------------------
வந்து ஆளி
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி வெண்கோடு புய்க்கும்

ஆளியானது (யாளி) பாய்ந்து வந்து உயர்ந்த நெற்றியினையுடைய யானையின் புள்ளி பொருந்திய முகத்தைத் தாக்கி, அதன் வெண்ணிறத் தந்தத்தினைப் பறித்தெடுக்கும்.

– நக்கண்ணையார்,
(அகநானூறு 252 : 1-4)
------------------------
இரத்தச் சேறெழ தேர்பரி யாளிகள்
கெடுத்திட் டேகடல் சூர்கிரி தூள்பட கண்டவேலா

இரத்த சேற்றில் தேர்ப்படை, குதிரைப்படை, யாளிப்படை மூன்றையும் ஒழித்து கடல்சூழ்ந்த சூரமலையை தூளாக்கிய வேலன்

(திருப்புகழ் 477)
----------------
கரிபு ராரி காமாரி திரிபு ராரி தீயாடி
கயிலை யாளி காபாலி கழையோனி

யானையைக் கொன்று அதன் உடுத்திய கயிலை மலை (அதாவது கைலாசமலையின்) யாளி என்று சிவனைக் கூறுகிறது.
(திருப்புகழ் 577)
-----------------
இதே போல யானையையே விழுங்கும் மாசுணம் (அல்லது அசுணமா) என்ற பாம்பு (அல்லது விலங்கு) பற்றியும் குறிப்புகள் உள்ளன.

அனகோன்டா என்ற சொல்லானது 'யானைகொன்றான்' என்ற (ஈழத்)தமிழ்ச் சொல்லை ஆங்கிலேயர் எடுத்துக்கொண்டது.
(ஆனகொன்டான் என்றே உச்சரிப்பர்)
சான்று:
Ophidia Taprobanica or the Snakes of Ceylon, Wall, Frank (1921)

The deriviation of "Anaconda", Ferguson, Donald (1897)

Wednesday, 11 May 2016

யாழி (யாளி)

யாழி(யாளி)
******************
நம்மில் எத்தனைப் பேருக்கு யாழி(யாளி) என்றால் என்னவென்று தெரியும்?

யாழிகள் - தென்னிந்திய கோவில் சிற்பங்களில் மட்டும் காணக் கிடைக்கும் ஒரு விசித்திரமான மிருகம்.
கோயில் கோபுரங்கள், மண்டப தூண்களில் மட்டுமே காணப்படும் ஒரு கற்பனைச் சிலை என்பது தான் பலரது எண்ணம்.

சிங்க உடலும் அதனுடன் யானையின் துதிக்கையும் தந்தமும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள் அமைக்கபெற்றுள்ளது.

சிங்கத்தின் தலை கொண்டதை "சிம்ம யாழி" என்றும்,
ஆட்டுத்தலை கொண்டதை "மகர யாழி" என்றும்,
யானை முகத்தை "யானை யாழி" என்றும் அழைக்கிறார்கள்.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ராட்சச உடல் அமைப்புடன் "டைனோசர்" என்ற மிருகங்கள் வாழ்ந்தது என்று கூறிய போது முதலில் நம்ப மறுத்த உலகம்,
பின்னர் அது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தி அவற்றின் எலும்புகள், முட்டைகள், உருவ அமைப்பு போன்றவற்றை ஆதாரத்துடன் வெளியிட்ட பின்பு தான் நம்பத் தொடங்கினார்கள்.

பின்னர், இது குறித்த திரைப்படங்களை இயக்கியதும் இந்த மிருகங்கள் குறித்த தகவல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சென்றடைந்தது.

அப்படியானால் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பின்னணி கொண்ட இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியில் இப்படி ஒரு பிரமாண்ட விலங்கின் பதிவுகள் ஏராளமாக பரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது.
சில கோவில்களில் இந்த மிருகத்தை குதிரையை போன்று கடிவாளமிட்டு அடக்கி அதன் மீது வீரர்கள் கையில் வாளுடன் அமர்ந்திருக்கிறார்கள்.
அப்படியானால் இவை போருக்கு பயன்படுதப்பட்டிருக்குமா?

இவற்றை எல்லாம் விட்டு ஒரு படி மேலே சென்று பார்த்தோமேயானால்,
இந்த யாழிகளுக்கென்று தமிழர்கள் தனியாகவே ஒரு வரிசையை கோவில் கோபுரத்தில் ஒதுக்கி இருக்கிறார்கள்.

அதை "யாழி வரிசை" என்றே அழைக்கிறோம்.
ராஜ ராஜன் கட்டிய பிரம்மாண்டமான தஞ்சை கோயிலில் கூட இந்த ன யாழிக்கென்று ஒரு முழு தனி வரிசையே ஒதுக்கப்பட்டுள்ளது.

உருட்டும் கண்களோடும், கோரப்பற்களோடும் ஒரு விலங்கின் முகத்தை கோபுரத்தின் நான்கு திசையிலும் எளிதில் பார்க்க முடிகிறது.

மேலும் தஞ்சை பெரியகோவில், மதுரை மினாட்சிஅம்மன் கோவில் போன்ற தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான பழமையான கோவில்களில் எல்லாம் இரண்டு கால்களில் நிற்கும் முழு உயர முப்பரிமான யாழியின் சிலையும்,
அந்த யாழி சிலையின் முழங்காலுக்கு கீழே யானை நிற்கும் சிலையையும் வடித்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட யாழி சிலை தென் இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான கோவில்களில் ஆயிரத்துக்கு மேல் சிலைகள் உள்ளன.
உலகில் எந்த விலங்குகளுக்கும் இந்த எண்ணிக்கையில் முழு உருவ, முப்பரிமான சிலைகள் கிடையாது என்பது உலகம் அறிய தவறிய உண்மை.
குறிப்பாக தமிழர்கள் அறிய தவறிய உண்மை.

நம்மில் பலர் கோவில்களுக்கு சென்றிருந்தாலும்,
இந்த யாழி சிலைகளை முழு மனதோடு இதுவரை கவனித்து இருக்க மாட்டோம்.
அது தான் யாழி என்ற அதிசய விலங்குக்கு இதுவரை நடக்கும் அவலநிலை.

யாழிக்கு எத்தனை கோவில்களில்,
எத்தனை விதமான சிலைகள் உள்ளன?
யாழியில் எத்தனை வகைகள் உள்ளன?
பண்டைய காலத்தில் வாழ்ந்த சிற்பக்கலை நிபுணர்கள் காணாத ஒரு உருவத்தை சிலையாக வடித்திருப்பார்களா?
யாழி உருவம் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது?
நமது சிறிய கோவில்களிலும் யாழியின் உருவம் உள்ளதை நாம் அறிவோமா?
யாழியைப் பற்றி புராணங்கள் என்ன சொல்கின்றன?
யாழி என்ற உயிரினம் கற்பனையா?
இல்லை அறிவியல் பூர்வமாக அது ஒரு உயிரினமா?
யாழி லெமூரிய நாகரீகத்தின் உண்மையான மிருகமா?
வாழாத ஒரு உயிரினத்தை ஆயிரக்கணக்கில் சிற்பங்களாக வடிக்க காரணம் என்ன?
குடிக்கு அடிமையாகிக் கிடக்கும் தமிழ் சமூகத்தில் இவற்றை குறித்து யார் ஆராய்ச்சி செய்யப்போகிறார்?
பதவிக்கு அடித்துக்கொள்ளும் தமிழக அரசியலில் இவற்றின் ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படுமா அல்லது கடைசி வரை அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சாகவே இவை மண்ணோடு மண்ணாகிவிடுமா?
எதற்குமே பதில் இல்லை !!!!

என்னைப்பொருத்தவரை....
யாழிகள் ஒருவேளை கற்பனை விலங்காகவே இருந்தாலும் கூட...

சீனர்களின் புராதன விலங்கு டிராகன் போல...

எகிப்தியரின் புராதன பறவை ஃபீனிக்ஸ் போல...

தமிழரின் புராதன விலங்கு யாழி அவை போற்றப்பட வேண்டும்

நன்றி: பழங்காலத் தமிழர் வரலாறு (முகநூல்)

யானையை விட பலம்வாய்ந்த ஆளி

இடம்படுபு அறியா வலம்படு வேட்டத்து
வாள்வரி நடுங்கப் புகல் வந்து ஆளி
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி
வெண்கோடு புய்க்கும் ….
– நக்கண்ணையார்,
அகநானூறு 252 : 1-4

அடித்து வீழ்த்தும் விலங்குகள் இடப்பக்கத்தே விழுவதை ஒருபோதும் அறியாத வெற்றியை உடைய
வேட்டைக்குச் செல்லும் வாள் போன்ற வரிகளையுடைய புலியானது நடுங்குமாறு,

ஆளியானது (யாளி) பாய்ந்து வந்து உயர்ந்த நெற்றியினையுடைய யானையின் புள்ளி பொருந்திய முகத்தைத் தாக்கி,
அதன் வெண்ணிறத் தந்தத்தினைப் பறித்தெடுக்கும்.