Saturday, 13 April 2024

கோவில் திருவிழாவிற்கு ஊர்வலத்தை விட்டுக்கொடுத்த இசுலாமியர்

கோவில் திருவிழாவிற்கு ஊர்வலத்தை விட்டுக்கொடுத்த இசுலாமியர்

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே கொடைக்கானல் செல்லும் சாலையில் அமைந்துள்ள கிராமம் கெங்குவார்பட்டி.. இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தி பாடல்கள் தினந்தோறும் காலை, மாலை என இருவேளை ஒளிபரப்பப்படும்.
அதேநேரம் பள்ளிவாசலில் பாங்கு சொல்லப்படும் போது கோவிலில் ஒலிக்கும் பக்தி பாடல்களை நிறுத்தி விடுவார்கள்.
 மேலும் திருவிழாவின் கடைசி நாளில் பள்ளிவாசலுக்கு தனியாக பிரசாதம் கோவில் நிர்வாகத்தால் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கெங்குவார்பட்டி முத்தலாம்மன் கோவில் திருவிழா நேற்று உற்சாகத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டார்கள்.
 வெளியூர்களில் வாழும் கெங்குவார்பட்டி மக்கள் மொத்தமாக சொந்த ஊர் வந்து விழாவினை சிறப்பித்தனர். கிராம மக்கள் பலர் முத்தலாம்மனுக்கு பூச்சட்டி எடு்த்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
வெள்ளிக்கிழமையான இன்று திருவிழா நிறைவு பெற்றது.
இதனிடையே முத்தாலம்மன் கோவிலில் இருந்து சுமார் 50 அடி தொலைவில் பள்ளிவாசல் அமைந்திருக்கிறது. 
நேற்று ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளிவாசலில் முஸ்லிம்கள் ஒன்று கூடி ஊர்வலமாக மஞ்சளாறு கரையோரத்தில் உள்ள தோப்புக்கு செல்வது வழக்கமாகும்.
ஆனால் நேற்று முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்த வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும் என எண்ணி ஊர்வலம் செல்வதை முஸ்லிம்கள் தவிர்த்தார்கள். 
அவர்கள் தனித்தனியாக பள்ளிவாசல் தோப்புக்கு சென்று சிறப்பு தொழுகை நடத்தினர். 
பின்பு அவர்கள் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். 
இந்த சம்பவத்தை பார்த்த கெங்குவார்பட்டி ஊர் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
 மேலும் இ்ந்த சம்பவம் மத ஒற்றுமைக்கு ஒரு எடுத்துகாட்டாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி: oneindia இணையம்

Friday, 5 April 2024

தொடரும் வந்தேறிகளின் தமிழின அடையாள வெறுப்பு

தொடரும் வந்தேறிகளின் தமிழின அடையாள வெறுப்பு

அண்ணாதுரை முதல் ஸ்டாலின் வரை தொடரும்  தமிழர் அடையாள வெறுப்பு 

 1968 இல் அண்ணாதுரை போட்ட இருமொழிக் கொள்கை அரசாணைக்கும்
2021 இல் ஸ்டாலின் போட்ட அயலகத் தமிழர் நலக் கொள்கை அரசாணைக்கும் 
 என்ன ஒற்றுமை?!
 இரண்டிலுமே தமிழர், தமிழ்மொழி என்கிற வார்த்தைகள் இல்லை.

 1968 இல் நீதிக் கட்சி கொண்டுவந்திருந்த மும்மொழிக் கொள்கையைக் கைவிட்டு (இந்தியை கைவிட்டு) அண்ணாதுரை தனது இருமொழிக் கொள்கையைக் கொண்டுவந்த போது
"தமிழ் மற்றும் ஆங்கிலம்" என்று தெளிவாக கூறவில்லை மாறாக  "ஆங்கிலம் மற்றும் தாய்மொழி" என்று கூறி தாய்மொழி என்பற்கு "பிராந்திய மொழி (தமிழாம்!) அல்லது பிராந்திய மொழி அல்லாத இந்திய மொழி" என்று வரையறை செய்தார்.
 அதாவது தமிழ் என்றே அரசாணையில் வரவில்லை!
எப்படி ஆங்கிலம் என்று தெளிவாக கூறி தமிழ் என்பதை உச்சரிக்க அண்ணாவுக்கு நாக்கு கூசியதோ அதேபோல மு.க.ஸ்டாலினுக்கும் கூசுகிறது.

 2021 இல் ஸ்டாலின் தனது மொழிவழிச் சிறுபான்மை நலக் கொள்கையில் தெளிவாக "மொழிவழிச் சிறுபான்மை என்போர் முக்கிய மொழி (principle language! அதாவது தமிழ்!) அல்லாத மொழி பேசுவோர் அவர்களில் தெலுங்கு, கன்னடம், உருது, சௌராஷ்ட்ரா பேசுவோர்  கணிசமானோர்" என்று தமிழரைத் தவிர பிறரை தெளிவாக மொழி அடையாளத்துடன் வரையறுத்துள்ளார். 
இதிலும. தமிழ் என்று வரவில்லை.

 தமிழர் என்பதற்கான ஒரு வரையறையும் வேறொரு ஆவணத்தில் ஸ்டாலின் அரசு வரையறுத்துள்ளது  அதாவது "தமிழ்நாட்டார் யார்" என்ற வரையறை!

 அது அயலகத் தமிழர் நலக் கொள்கை வரையறையில் "தமிழ்நாட்டில் பிறந்த அல்லது 3 ஆண்டுகள் வாழ்ந்த எவரும் தமிழ்நாட்டிற்கு வெளியே இருந்தால்" என்று அயலகத் தமிழருக்கான வரையறையைச் செய்கிறார். 
 அதாவது தமிழகத்தில் எந்தக் குழந்தை பிறந்தாலும் அவர் தமிழர், அல்லது தமிழகத்தில் மூன்றாண்டு வாழ்ந்தாலே அவர் தமிழர்!
 இங்கே மட்டும் மொழி வரவில்லை!

மேற்கண்ட கருத்துகள் fine time media இல் திரு. அறிவன் ஸ்ரீனிவாசன் கொடுத்த பேட்டியில் இருந்து எடுக்கப்பட்டன.

 இதிலிருந்து தெரிவது என்ன?!
இன்றும் தொடர்கிறது வந்தேறிகளின் தமிழின அடையாள வெறுப்பு! 

Wednesday, 3 April 2024

பாமக இசுலாமியரை பயன்படுத்தி கொண்டது

பா.ம.க இசுலாமியரை பயன்படுத்தி கொண்டது 

2013 இல் எழுதப்பட்ட பதிவு 

பாட்டாளி மக்கள் கட்சியின் 'இப்தார்' நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட முஸ்லிம் தலைவர்கள்!
பழனி பாபா அவர்களால் வளர்க்கப்பட்ட பா.ம.க, 1989, 1991 ஆகிய தேர்தல்களில் தனித்து போட்டியிட்ட போது, 50க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் முஸ்லிம்களை வேட்பாளராக்கி முஸ்லிம்களின் பணம் பொருளை வீணாக்கியது.

 திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து அகரம் கான் என்ற முஸ்லிமை தான் களத்தில் இறக்கியது.
ஆனால், 2001ல் அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளைப் பெற்றபோது (20 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர்) ஒரு முஸ்லிமுக்கு கூட வாய்ப்பளிக்கவில்லை.

 2006ல் திமுக கூட்டணியில் 31 இடங்கள் பெற்றபோது (17 எம் எல் ஏக்கள் வெற்றி பெற்றனர்) கூட ஒரு முஸ்லிமும் நிறுத்தப் படவில்லை.

2011 தேர்தலில் திமுக கூட்டணியில் 30 தொகுதிகளில் போட்டியிட்ட போதும் ஒரு முஸ்லிமுக்கும் வாய்ப்புத்தரவில்லை.

குறிப்பாக, ஏற்கனவே முஸ்லிம்கள் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,க்களாக இருந்த தொகுதிகள் உள்ளிட்ட 'நிச்சய வெற்றி' தொகுதிகளில் கூட முஸ்லிம்கள் நிறுத்தப் படவில்லை.
1. புவனகிரி
2.திண்டுக்கல்
3.பூம்புகார்
4.ஆற்காடு
5.ஆலங்குடி
6. திண்டிவனம்
7.நெய்வேலி
8.திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்) போன்ற தொகுதிகளை தன் வசம் வைத்திருந்த பாமக, ஒரு இடத்தில் கூட முஸ்லிம்களை நிறுத்தாமல் 'ஓரவஞ்சனை' செய்தது.

திமுக கூட்டணியில் கணிசமான உள்ளாட்சி இடங்கள் கிடைத்த போதும் முஸ்லிம்களை
புறக்கணித்த கட்சி தான், பாமக.
நாடாளுமன்றத் தேர்தல்களிலும் இதே நிலை தான்.
Maruppu - மறுப்பு
05.08.2013