Monday 3 April 2023

விடுதலை அம்மானை

விடுதலை அம்மானை

 நாயக்கர் ஆட்சியில் ஒரு புலவரைக் கூப்பிட்டு தன்னை புகழ்ந்து எழுதுமாறு படைத் தளபதி ராமப்பையன் கட்டளை இடுகிறான்.
 அவரும் "இராமப்பையன் அம்மானை" எழுதுகிறார்.
 பின்பு எழுதியவர் யார் என்று கூடத் தெரியாதவாறு இருட்டடிப்பு செய்கிறார்கள். 
 இப்போது அந்த நூலைப் படித்தால் அப்படியே வஞ்சப் புகழ்ச்சி!
 கதையில் ஹீரோ ராமப்ப அய்யன் ஒரு டம்மி பீஸ் என்பதையும் அவரை எதிர்த்து நின்ற வில்லன் சடைக்கத் தேவன்தான் உண்மையான வீரன் என்பதையும் மறைமுகமாக எழுதியுள்ளார் அந்த புலவர்.
 தெலுங்கர்களுக்கு இதை உணர்ந்துகொள்ள புலமை இல்லை போலும். 
 வெற்றி மாறன் அவ்வாறானவரே!
 அந்நியர் ஆட்சி அவர்களையும் பகைக்கக் கூடாது அதேநேரத்தில் தமிழ்தேசியத்தையும் பதிவு செய்ய வேண்டும்.
 அதை சரியாகச் செய்திருக்கிறார். 
இலங்கை கடற்படைத் தாக்குதலைக் கூட பக்கத்து நாட்டு தாக்குதல் என்றே பதிவு செய்யும் அளவுக்கு தமிழ் சினிமா வந்தேறிகளின் இரும்புப் பிடிக்குள் உள்ளது.
 வெற்றி மாறன் இந்த அளவுக்கு எப்படி திரையில் கொண்டுவந்தார் என்பதே ஆச்சரியம்!
 இதன் அடுத்த பாகத்தை வெளிவர விடுவார்களா என்பதே சந்தேகம்! 

No comments:

Post a Comment