தமிழரசன் ஏன் தோற்றார்?
2009 க்கு முன் இளைஞர்களுக்கு யார் ஆதிக்க சக்தி என்பது விளங்கவில்லை.
யாரை எதிர்த்து புரட்சி செய்வது என்ற கேள்விக்கு
பார்ப்பனர்கள் என்று சிலர் வரையறுத்தனர், பெருமுதலாளிகள் என்று சிலர் வரையறுத்தனர், அரசியல்வாதிகள் என்று சிலர் வரையறுத்தனர், சாதியவாதிகள் என்று சிலர் வரையறுத்தனர், பண்ணையார்கள் என்று சிலர் வரையறுத்தனர், பெரிய நிறுவனங்கள் என்று சிலர் வரையறுத்தனர்,
ரவுடிகள் என்று சிலர் வரையறுத்தனர்,
இதனால் புரட்சி யாரை எதிரியாகக் கொண்டு செய்யப்படவேண்டும் என்கிற புரிதல் இல்லாமலே இருந்தனர்.
2009 க்குப் பிறகுதான் மேற்கண்ட அத்தனை ஆதிக்க சக்திகளும் பொதுவாக "வந்தேறிகள்" அதாவது தமிழகத்தில் குடியேறியுள்ள பிற மொழியினர் என்றும் அதிலும் குறிப்பாகத் தெலுங்கர் என்றும் இளைய தலைமுறை தெளிந்தது.
முகநூல் இதில் பெரும்பங்கு ஆற்றியது!
அதிலும் ராஜபக்ச வரை தெலுங்கர் என்கிற அதிர்ச்சியான உண்மை வெளிவந்தது.
இந்த தெளிவுதான் திராவிட எதிர்ப்பாக தமிழ்தேசியமாக வளர்ந்து இன்று இளைய தலைமுறை இலக்கு தெரிந்து நகர்கிறது.
இந்த தெளிவு இல்லாததால் வெவ்வேறு கருத்தியல் வழி புரட்சிக்குக் கிளம்பிய இளைஞர்கள் அடுத்தடுத்து வீழ்ந்தனர்.
இதில் முக்கியமானவர் தமிழரசன்!
கம்யூனிச மாயையில் இருந்து வெளிவந்து இனம் என்றால் என்ன தேசம் என்றால் என்ன என்று தெளிந்து தமிழருக்கு தனிநாடு தேவை என்று தொலைநோக்கில் உணர்ந்த அவருக்கு யார் தமிழர் என்ற தெளிவு இல்லை.
தமிழகத்தில் தமிழ்பேசுவோர் எல்லாரும் தமிழர் என்று நினைத்து அதையே வரையறையாகக் கொண்டுவிட்டார்.
அதாவது இன அடிப்படையில் அல்லாது குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழும் அனைத்து மக்கள் என்கிற நில அடிப்படையிலான தேசியத்தைக் கைக்கொண்டார்.
ஆனால் தமிழகத்தில் அதிகாரத்தில் இருப்பவர்களில் இன்னின்ன இனத்தவர் நிறைந்துள்ளனர், அவர்தம் குணநலன்கள் இத்தகையன என்கிற தெளிவு அன்று அவருக்கு வாய்க்கவில்லை.
இன்றைய தெளிவு அன்று அவருக்கு வாய்த்திருந்தால் இன்று நிலை தலைகீழ்!
No comments:
Post a Comment