சக்கிலியர் தெலுங்கரே என்கிறார் பாவாணர்
நாகை வள்ளுவன் (நாகய்யா மகேஷ்) போன்ற சிலர் தொடர்ச்சியாக அருந்ததியர் (சக்கிலியர்) பறம்பர் வழி வந்த தமிழர்கள் என்று பாவாணர் எழுதியுள்ளதாக பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஆனால் பாவாணர் கூற்று கீழே தரப்பட்டுள்ளது,
"தமிழ்நாட்டில் இப்போதுள்ள சக்கிலியர் தெலுங்கராதலின், விசயநகர ஆட்சியில், அல்லது அதற்குச் சற்றுமுன்பு தெலுங்க நாட்டினின்று தமிழ்நாட்டிற்கு வந்தவராவர்.
அவர் வருமுன்பு, அவர் தொழிலைச் செய்து கொண்டிருந்தவர் பறம்பர் (செம்மார்) என்னும் தமிழ வகுப்பார்.
இவர் பாணருள் ஒரு பிரிவார். பாணர் பறையர். பாணரும் சக்கிலியரைப் போல் மாடு தின்பவர். மாட்டுத் தோலைப் பதனிட்டு, அதனாற் செருப்பு, கூனை முதலிய பொருள்களைச் செய்வது, மாடுதின்பார்க்கே மிக இசையும்.
தோல் வேலை செய்பவர் கடைக்கழகக்காலத்திலே தமிழ் நாட்டிலிருந்தமை, தோலின் துன்னர் என்று சிலப்பதிகாரத்தில் கூறியிருப்பதால் அறியப்படும்.
பாணருக்குத் தையல் தொழிலுமுண்டு.
“பாணர்க்குச் சொல்லுவதும்……தை…..” என்று காளமேகப் புலவர் கூறியிருத்தல் காண்க.
தையல் என்னும் பெயர் துணி, தோல் என்னும் இரு பொருள்களை மூட்டுவதற்கும் பொதுவாகும். துன்னம் என்னும் பெயரும் இங்ஙனமே.
சக்கிலியர் பறம்பர் தொழிலை மேற்கொண்டபின், செம்மார் பிறதொழிலை மேற்கொண்டு பெயர் மறைந்தனர். சக்கிலியருக்குச் செம்மான் என்னும் தமிழ்ப் பெயரும் சக்கிலி என்னும் தெலுங்கப் பெயரும் இன்று வழங்கி வருகின்றன."
- பாவாணர் எழுதிய ‘ஒப்பியன் மொழிநூல்’ (பக்.33-44)
நன்றி: valluvarvallalarvattam இணையம்
No comments:
Post a Comment