Sunday, 16 May 2021

பாலஸ்தீனர் செய்யவேண்டியது

பாலஸ்தீனர் செய்யவேண்டியது

பாலஸ்தீனர்களும் ஈழத்தமிழர்களும் ஒரே தவறைத் தான் செய்துகொண்டிருக்கிறார்கள்.
ஒரு நாட்டின் ஒரு பகுதியை மட்டும் தனிநாடாக ஆக்குவதற்கு போராடினால் அதை போன்ற முட்டாள்தனம் வரலாற்றில் வேறில்லை.

ஒரு இனம் தன் இனத்தின் பெயரிலேயே தன் தாய்நிலத்தை முழுவதுமாக தனிநாடாக கோரினால்தான் அது விடுதலை அடைய அதிக வாய்ப்பிருக்கிறது.
ஈழத்தமிழர்கள் தமிழர்நாட்டின் ஒரு பகுதியான ஈழத்தை மட்டும் தனிநாடக்க முயற்சித்ததால் தோல்வியை சந்தித்தனர்.

அதேபோலத்தான் பாலஸ்தீனர்களின் தமது இனமான அரபு என்கிற பெயரால் அரேபியர்களுடன் ஒன்றிணைந்து முழு அரபு நாட்டை அமைக்கவோ அல்லது குறைந்தபட்சம் அருகிலிருக்கும் ஏதாவது ஒரு அரபு நாட்டின் பகுதியாக தன்னை இணைத்துக் கொள்ளவோ போராடி இருந்தால் இந்நேரம் விடுதலை அடைந்து இருப்பார்கள்.

தனது இனம் அருகிலேயே பலம்வாய்ந்த நிலையில் இருக்கும்பொழுது அவர்களை விட்டுவிட்டு தாம் வாழும் மிக சிறிய பகுதியை மட்டும் தனிநாடாகக் கோருவது சுயநலம் மட்டுமின்றி மிகப்பெரிய இனத்துரோகம் ஆகும் என்பது என் கருத்து.

பாலஸ்தீனம் ஈழம் இரண்டுமே பழமையான பெயர்கள்தான். ஆனால் அவை இடத்தை குறிக்கும் பெயர்கள் இனத்தை குறிப்பவை அல்ல.

எனவே, இனத்தின் பெயரால் ஒரு இனம் மொத்தமாக ஓரணியில் திரண்டு தனது மொத்த தாய்நிலத்தையும் ஒரே நாடாக கோருவதை தமிழ் தேசியம் வலியுறுத்துகிறது.

அந்தவகையில் அரபு நாடுகள் அனைத்துமே ஒன்றிணைந்து ஒரே நாடாக செயல்படுவது தான் சரியாக இருக்கும். அரேபிய இனத்தின் மொத்த மக்கட்தொகை ஏறத்தாழ 30 கோடி என்றாலும் அரேபிய தாய்நிலம் அந்த மக்கட்தொகைக்கு தாராளம் என்று கூறும் வகையில் மிகப் மிகப்பெரியது. ஒரே மொழி என்கிறபோது எத்தனை கோடி என்றாலும் நாட்டு நிர்வாகத்தில் பிரச்சனை வராது (ஏற்கனவே அரபு லீக் இருக்கிறதுதான். அதில் இணைந்திருக்கும் 22 நாடுகளில் பாலஸ்தீனமும் ஒரு உறுப்பினர்தான். ஆனாலும் இந்த அமைப்பு பெயருக்குதான் இருக்கிறது. அதிலும் நியாயமே இல்லாமல் சோமாலியாவும் ஒரு உறுப்பினர்).

தற்போது பாலஸ்தீன பிரச்சனைக்கு என்ன தீர்வு என்றால் பாலஸ்தீனம் வரலாற்றில் சிரியாவுடன் அதிகம் தொடர்பில் இருந்திருக்கிறது என்றாலும் தற்போது ஜோர்டான் நாட்டுக்கு அருகில் இருக்கிறது.
(முற்காலத்தில் இந்த மொத்த நிலப்பரப்பில் வாழ்ந்தவர்கள் அரேபியர்கள் கிடையாது என்றாலும் அரேபியர்களின் முன்னோர்கள் அந்த நிலப்பரப்பில் வாழ்ந்திருக்கிறார்கள். மூதாதை இனம் இன்று இல்லையென்ற நிலையில் அரேபியர் அந்த நிலத்தை சொந்தம் கொண்டாடுவதில் தவறில்லை.
கடவுள் ஏற்கனவே இருந்தவர்களை விரட்டிவிட்டுத்தான் யூதர்களைக் குடிவைத்ததாக அவர்களின் புனிதநூல் கூறுகிறது. நான் ஏற்கனவே கூறியபடி யூதர் ஒரு தனியினம் கிடையாது. யூத மதத்தைத் தழுவிய பல்வேறு இனத்தவர்களே இன்று யூதர்). எனவே ஜோர்டான் நாட்டின் ஒரு பகுதியாக (தற்போதைய இசுரேல் நிலப்பரப்பையும் சேர்த்து) தம்மை சேர்த்துக் கொள்ளுமாறு பாலஸ்தீனர்கள் போராட வேண்டும் (காசா பகுதியை அருகிலிருக்கும் எகிப்துடன் சேர்க்கலாம்). அரபு தேசியத்தை மட்டும் முன்னெடுக்க வேண்டும். முழு அரபுநாடு என்கிற கோட்பாட்டை முன்வைத்து அரேபியர்களை ஓரணியில் திரட்ட வேண்டும். இனத்துடன் மதத்தை அதாவது இசுலாமியர், கிறித்தவர், யூதர் என்று குழப்பிக்கொள்ளக்கூடாது. யூதரில் அராபியர் தவிர்த்து அனைவரையும் விரட்டவேண்டும். அரேபிய நாடுகள் யூனியன் அமைத்துக்கொண்டு ஒற்றை நாடு போல பொதுவான ராணுவம், இறையாண்மை, பணம் மற்றும் அலுவல் மொழி கொண்டு செயல்பட வேண்டும். தமக்குத் தொடர்பில்லாத சோமாலியாவை விட்டுவிடவும் வேண்டும்.

படம்: அரபு மொழி பேசப்படும் நிலப்பரப்பு

No comments:

Post a Comment