Friday 21 August 2015

இவர்களும் முஸ்லீம்தான்

இவர்களும் முஸ்லீம்தான்

தேசியத்தலைவரால் முன்னெடுக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டம், குறிப்பாகத் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி, தமிழ்பேசும் சமூகங்களுள் ஒன்றான முஸ்லீம் மக்களுக்கும் அந்த போராட்டம் பெரும் உவகையும் பெரும் உந்துசக்தியாகவுமே இருந்துவந்துள்ளது.
குறிப்பாகச் சொல்லப்போனால் நான் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்றவகையில் ஒரு காலகட்டம் இருந்தது, சிங்கள பேரினவாதம் திகுவாபி புனிதப்பிரதேசம் என்ற போர்வையில் திகுவாபி பௌத்த ஆலயத்தின் ஆலயமணி ஓசை கேட்கும் தூரம்வரைக்கும் 'திகுவாபி புனித பிரதேசம்' என்று பிரகடனப்படுத்தும் ஒரு சதி திட்டத்தை அமல்படுத்த முன்வந்தது.
ஆனால் இந்தப் பெருமகன் (பிரபாகரனார்) முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு அங்கமாக வெடித்த துப்பாக்கி வேட்டுகள் அந்த பேரினவாத சக்திகளை முடங்கவைத்தது.
குறிப்பாகச் சொல்லப்போனால் திகுவாபி புனிதப்பிரதேசத்திலிருந்து ஆலயமணியோசை கேட்கும் மாட்டுப்பளை வயல்பிரதேசம் வரைக்கும் புனிதப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தும் சிங்களப்பேரினவாதம்
அந்த திகுவாபி பிரதேசத்திற்குள்ளேயே முடங்கச் செய்த இந்த போராட்ட வரலாறு நாங்கள் முஸ்லீம் மக்கள் இன்றும் நினைவில் கொண்டிருக்கும் ஒரு பெரும்பேறு.
_ஜனாப்.சலீம் (பத்திரிக்கையாளர்)

உலகின் ஒரு தென்மூலையில் இந்தியத்துணைக்கண்டத்தின் தெற்கில் தென்திசையைப் பார் என்று பாரதிதாசன் பாடினாரே, அந்த தென்திசையில் ஒரு மாபெரும் எழுச்சி வரலாற்றி நுழைந்தது.
அதுவரையில் ஒடுக்கப்பட்டுக்கிடந்த தமிழ் இனத்துக்கு ஒரு முகவரியைத் தரக்கூடிய ஒரு பெரிய போராட்டத்தை அதன் தென்திசையில் எழுந்த அந்த எழுச்சியானது உலகிற்கு காட்டியது.
அந்த போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் தம்பி பிரபாகரன்.
_இன்குலாப் (தமிழகம்).

இன்று தமிழ்ப்பேசும் மக்கள் நாங்கள் அனைவரும் தலைநிமிர்ந்து தன்மானத்துடன் வாழ்கிறோம் என்றால் அதற்குக்காரணம் எமது தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளைப் பிரகாரன் அவர்களும் அவர்சார்ந்த தமிழீழ விடுதலைப்புலிகளும் ஆகும்.
ஆகவே எமது மேதகு தலைவர் அவர்களும் அவர்சார்ந்த அமைப்பும் என்றும் நிலைத்துநிற்கவேண்டும் என்று கூறுவதுடன் எமது தமிழீழத்தின் தேசியத்தலைவர் என்றும் சிரஞ்சீவியாக பல்லாண்டுகாலம் வாழவேண்டுமென்று நான் வாழ்த்துவதோடு
நான் சார்ந்துள்ள முஸ்லீம் சமூகம் சார்பாகவும் அவருக்கு எங்களுடைய வாழ்த்துகளைக் கூறிக்கொள்கிறேன்.
_அப்துல்சயான் (மன்னார்)

தலைவரின் 50வது பிறந்தநாள் காணொலியில் இருந்து.
___________________________
புலிகள் செய்யாத காத்தான்குடி படுகொலை
https://m.facebook.com/photo.php?fbid=601475226622801&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&__tn__=E

No comments:

Post a Comment