Showing posts with label ஷோபா சக்தி. Show all posts
Showing posts with label ஷோபா சக்தி. Show all posts

Sunday, 6 August 2017

சீரியஸா ஒரு காமெடி கதை

சீரியஸா ஒரு காமெடி கதை

கீற்று இணையத்தில் ஒரு கட்டுரை உள்ளது.
"சோபா சக்தி! உன் அம்மணத்துக்கு அசிங்கம் என்று பேர் வை" என்ற தலைப்பில்.

( தலைப்பே தலைசுத்துமே !
அம்மணமாம் அது அசிங்கமில்லையாம்
அதனால் அதற்கு அசிங்கம் என்று பேர் வைக்கணுமாம்.
கவனிக்க.
'பெயர்' இல்லை 'பேர்' )

இக்கட்டுரை இலக்கியப் பிரிவின் கீழ் உள்ளது.
(இதுல என்ன எலக்கியம்?!
எழவு!)
கீற்று வந்தேறிகளுக்கே வெளிச்சம்.

அதாவது இரண்டு முரட்டு ஈ.வே.ராமசாமி பக்தர்கள் வெளிநாட்டில் அடித்துக்கொண்ட கதை

இந்த ஈ.வே.ராமசாமி யார் தெரியுமா?

"பெண் என்று யாரும் தனியாக இருக்கக்கூடாது,
பெண் ஆண்களைப் போல பெயர் வைத்துக்கொண்டு லுங்கி கட்டிக்கொண்டு ஆண்போலவே முடிவெட்டிக்கொண்டு அலையவேண்டும்.
குழந்தை பெறக்கூடாது அதனால் கருப்பையை அகற்றிவிட்டு இரண்டு மூன்று வைப்பாட்டன்களை வைத்துக்கொள்ள வேண்டும்"
என்று அறிவாளித்தனமான(?) கருத்துக்களை 40 பக்க நோட் அளவுக்கு பெரிய்ய்ய்ய்ய(?) புத்தகம் ஒன்று போட்டவர்.
(புத்தகத்தில் புரட்சி வடை சுட்டதோடு சரி,
தன் வாழ்க்கையில் தன் வீட்டுப்பெண்களிடம் அதையெல்லாம் கடைபிடிக்கச் சொன்னதில்லை.)
இவர் பேச்சை நம்பி தாலி அடிமைத்தனத்தின் சின்னம் என்று அதை மறுத்து மத சடங்குகள் ஏதும் இல்லாமல் சட்டப்படி செல்லாத 'சுயமரியாதை திருமணம்' செய்துகொண்டு பல சட்ட சிக்கல்களை அவரது பக்தர்கள் சந்தித்துக்கொண்டிருக்க,
சாகப்போகிற 72 வயதில் 24 வயது பெண்ணை சட்டப்படி செல்லுமாறு முறைப்படி திருமணம் செய்து பக்தர்களுக்கே கம்பி நீட்டிய புண்ணியவான்தான் இந்த ஈ.வே.ராமசாமி.

  இவர் பெண்ணுரிமைக்காக(?) 40 பக்கத்தில் எப்படியெல்லாம் குட்டிக்கரணம் அடித்தார் என்று 400 பக்க புத்தகம் போட அந்த இரண்டு முரட்டு திராவிட பக்தர்கள் விவாதித்தனர்.

(அதெப்படி நாற்பதை நானூறாக்க முடியும்?
அவர் குளிக்காததை தலித் ஆதரவென்றும்
லுங்கி கட்டியபடியே அலைந்ததை இசுலாமிய ஆதரவென்றும்
பீஃப் பிரியாணி உள்ளே தள்ளியதை இந்துத்துவ எதிர்ப்பென்றும் விரிவாக எழுதி அதை இன்னும் விரிவாக எழுதி என பல நூறு தலகாணி சைஸ் புத்தகங்கள் வந்துள்ளனவே அது போலத்தான்)

மேற்கண்ட கதையில் சம்பந்தப்பட்ட முரட்டு பக்தர்கள் இருவரில் ஒருவர் புலிகளை எதிர்த்து கதைகதையாக எழுதித்தள்ளும் ஆண்,
இன்னொருவர் குழந்தை பெற்றுக்கொண்டு ஈ.வே.ரா கருத்துகளுக்கு துரோகம் செய்துவிட்ட பெண்.

பெண் பக்தர் 'ஈவேரா ஸ்ட்ரெய்ட்டா சம்மர்சால்ட் அடித்தார்' என்று சொல்ல,
ஆண் பக்தர் 'இல்லை அவர் தலைகீழாகத்தான் குதித்தார்' என்று கூற,
அவர்கள் மத்தியில் கருத்து முரண்பாடு.

கடைசியில் ஆண் பக்தர் ஈவேரா காட்டிய வழியில் தண்ணியைப் போட்டுவிட்டு 'வாம்மா படுத்துக்கொண்டே பெண்ணுரிமை பேசுவோம்' என்று திராவிட முற்போக்கு புத்தியைக் காட்டியிருக்கிறார்.

கடுப்பான பெண்பக்தர் ஆண்பக்தரை நடுரோட்டில் போட்டு அடிவெளுக்க,
ஆண்பக்தர் அவளை ஓட்டலுக்கு கூப்பிட்டு துண்டை அவுத்துக்காட்ட,
ஒரே திராவிட புரட்சிதான் போங்கள்.

இந்த காமெடியை எல்லாம் அந்த பெண்மணி மிக மிக சீரியசாக கட்டுரை எழுதியுள்ளார்.

நோய்விட்டுப் போக ஒரு முறை படித்துவிடவும்.