பிறர்க்குடையார் குடும்பரும் பூலித்தேவரும்
நெற்கட்டுஞ் செவ்வல் அருகே உள்ள குளம் ராமகோவிந்தப்பேரி.
சிதிலமடைந்த இதை மீண்டும் கட்டிப் பாசனம் செய்து பயிரிட புலித்தேவன் கேட்டுக் கொண்டதனால், நெற்கட்டுஞ் செவ்வலைச் சேர்ந்த பிறக்குடையாக் குடும்பன் என்பவர், தன் செலவில் ராமகோவிந்தப்பேரிக் குளத்தைப் புதுக்குளமாக அமைத்தார்.
இதனால் புலித்தேவன், பிறக்குடையாக் குடும்பனுக்கு நன்செய் நிலம் வழங்கியதோடு அவர் நிலங்களுக்குச் சில ஆண்டுகள் வரிச் சலுகையும் அளித்துள்ளார்.
இதற்கு 2008 ஜூலை இல் கிடைத்த கி.பி.1748 ஆம் ஆண்டைச் சேர்ந்த (திருச்செங்கோடு) செப்புப் பட்டயம் சான்று.
இதே குளத்தில் உள்ள மதகில் ஒரு கல்வெட்டும் (எண் 79/2005, கி.பி.1802) உள்ளது. இதில் பூலிராணி கோமதி முத்து தலைவச்சி என்பவர் (இவர் பூலித் தேவர் மகளாக இருக்கலாம்) தெற்கு மடைக்கு தோரணக்கல் செய்து தந்த செய்தி வெட்டபட்டுள்ளது. இதிலும் பிறர்க் குடையார் மகன் சிவணு குடும்பன் என்பவருக்கு இந்த குளம் சொந்தம் என்று குறிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் திருச்செந்தூர் முருகன் கோவில் நிலத்தை கி.பி.1738 இல் கைலாச குடும்பர் உள்ளிட்ட 12 தேவேந்திரருக்கு விலைக்கு விற்ற செப்புப் பட்டயம் கண்டறியப்பட்டுள்ளது.
இதில் நிலம் வாங்கிய 12 குடும்பர்கள் பெயருடன் கிரயம் செய்து கொடுத்த கோவில் நிர்வாகிகள் 11 பேர் மற்றும் சாட்சிகள் 3 பேர் என பல்வேறு சாதிகளை சேர்ந்தவர்களின் பெயர்கள் உள்ளன.
அதாவது பள்ளு இலக்கியங்கள் நாயக்கர் ஆட்சி பகுதியில் தேவேந்திரர்கள் (அப்போது பள்ளர்) மிகக் கொடுமையான சுரண்டலுக்கு ஆளானதைப் பதிவு செய்துள்ளன.
அதே காலத்தில் நாயக்கர் ஆட்சி வேரூன்ற முடியாத மறவர் பாளையங்களில் தேவேந்திரர் நிலவுடைமை சமூகமாக செல்வாக்குடன் இருந்துள்ளனர் என்பதை இந்த ஆவணங்கள் மூலம் அறியலாம்.
No comments:
Post a Comment