எகிப்துடன் நடுகல் தொடர்பு
கரூர் அருகே கிபி 9 ஆம் நூற்றாண்டின் ஒரு நடுகல் அமராவதி ஆற்றுப் படுகையில் உள்ளது.
இதில் 'வஞ்சி வேளான் மகன் நாகன்' என்பவர் ஆநிரை கவர்தலை தடுத்து உயிர்நீத்தார் எனும் செய்தி காணப்படுகிறது.
இந்த நடுகல்லில் ஒரு ஓவியம் வெட்டப்பட்டுள்ளது இந்த ஓவியம் அப்படியே கிமு.1213 இல் எகிப்து மன்னர் இரண்டாம் ராம்சேஸ் தனது எதிரியை வீழ்த்துவது போன்று வெட்டிவைத்த ஓவியத்துடன் ஒத்துப்போகிறது.
இதே ஆற்றுப் படுகையில் இதிலிருந்து 600 மீட்டர் தொலைவில் மாவடியான் கோவில் அருகே மற்றொரு கல்வெட்டும் ஓவியத்துடன் உள்ளது.
இதுவும் இரண்டாம் ராம்சேஸ் லிபிய மன்னரை வீழ்த்தும் ஓவியத்துடன் அப்படியே ஒத்துப் போகிறது.
இதுவும் 8-9 ஆம் நூற்றாண்டு நடுகல்.
இதில் இருப்பவர் 'கோக் கலியன் மகன்' என்று குறிக்கப்பட்டுள்ளது.
இவைபோக மதுரை அழகர்மலை யில் ஒரு பழமையான ஓவியம் எகிப்து கடவுளான தோத் உடன் ஒத்துப்போகிறது.
நன்றி: Tamil Navigation (youtube channel)
காணொளி: Tamil - Egypt Similarites | unbelievable Coincidences |
தற்போது எகிப்தில் 'சிகை கொற்றன் வர கண்ட' எனும் தமிழி எழுத்து ஒரு வெளிநாட்டவரால் கண்டறியப் பட்டுள்ளது
No comments:
Post a Comment