Wednesday, 25 December 2024

குர்திஸ்தான் பாதி நிலம் விடுதலை

 குர்திஸ்தான் பாதி நிலம் விடுதலை 

 ஈரான், ஈராக், சிரியா, துருக்கி என நான்கு நாடுகள் சேரும் இடத்தின் பூர்வ குடிகள் குர்திய மொழி பேசும் குர்து மக்கள்.
 
 நான்கு நாடுகளில் சிக்கிக் கொண்டுள்ள தமது தாய்நிலத்தை மீட்க தொடர்ந்து ஆயுதவழியில் போராடி வரும் குர்து மக்கள் ஏற்கனவே சதாம் உசேன் காலத்தில் இனப்படுகொலைக்கு உள்ளாகி பின்னர் அவரை வீழ்த்த அமெரிக்காவுக்கு உதவி ஈராக்கில் இருக்கும் தனது தாய்நில பகுதியை தன்னாட்சி பிரதேசமாக ஆக்கினர். 
 சிரியாவில் 8 ஆண்டுகளாக நடந்த போரிலும் தமது தாய்நிலத்தை தமது ஆயுத பலத்தாலும் வீரத்தாலும்  தக்கவைத்துக் கொண்டனர்.
 ஐஎஸ்ஐஎஸ், சிரிய அரசாங்கப் படை அதை எதிர்க்கும் 3 கிளர்ச்சிப் படைகள் என அனைவரையும் வென்று தமது நிலத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
 தற்போது சிரிய அரசு வீழ்ந்து ஆயுதக் குழுக்கள் சிரியாவைக் கைப்பற்றிவிட்ட நிலையில் சிரியாவிலுள்ள குர்து மக்களின் பகுதி ஏறத்தாழ விடுதலை அடைந்து நாடாகிவிட்டது.
 அதாவது ஏறத்தாழ பாதி தாய்நிலத்தை மீட்டுவிட்டனர்.
மீதி இரண்டு நாடுகளில் சிக்கியிருக்கு குர்திய நிலத்திலும் ஜனநாயக வழியிலும் ஆயுத வழியிலும் போராடி வருகின்றனர்.
  தொடர்ச்சியாக ஒற்றை ஆட்சியில் இருந்திராத இவர்கள் நான்கு நாடுகளுக்கு இடையே சிக்கி தம் குர்த் மொழியை பேண இயலாத சூழலிலும்
 பல்வேறு மதங்களில் இருந்தாலும் இனம் என்கிற ஒற்றை உணர்ச்சியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு விடுதலையை நோக்கி முன்னேறுகின்றனர்.
 தமிழர்கள் இவர்களிடம் கற்க நிறைய இருக்கிறது.

No comments:

Post a Comment