ஒரிசா பாண்டியன்
ஒரிசா மாநிலத்திற்கு ஐஏஎஸ் பணிக்காக சென்ற வி.கே.பாண்டியன் எனும் மதுரைத் தமிழர் அங்கே சிறப்பாக செயல்படுகிறார். ஒடியர் ஒருவரை மணந்துகொண்டு அங்கேயே குடியேறிவிடுகிறார்.
அவரது திறமையைப் பார்த்த ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் அவரை தனது ஆலோகராக செயலாளராக அமர்த்திக் கொண்டார். வி.கே.பி ஆளும் கட்சியான பிஜூ ஜனதா தளத்தில் இணைந்துகொண்டார். கடைசியில் 'வி.கே.பாண்டியன் தன் அரசியல் வாரிசு' என்று அறிவிக்கும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டார் அந்த தமிழர்.
இப்போது பாஜக இந்த தமிழரை எதிர்த்து இனவெறியைக் கக்கி வருகிறது.
மோடி "உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகன்னாதர் கோவில் சாவி" தமிழ்நாட்டிற்கு போய்விட்டது" என்று பேசினார்.
அமித் சா "ஒரு தமிழரையா நீங்கள் ஒரிசாவை அதிகாரம் செலுத்த அனுமதிக்கப் போகிறீர்கள்?" என்று நேரடியாக இனத்தைக் குறிப்பிட்டு பேசுகிறார்.
ஆனால் வி.கே.பாண்டியன் மீது வேறு எந்த குற்றச்சாட்டையும் வைக்க முடியவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.
சரி இத்துடன் ஒரு மாநிலத்தில் இன்னொரு இனத்தவர் முதலமைச்சராக வந்த நிகழ்வுகளை ஒப்பிட்டுப் பார்ப்போம்.
ஹரியானா வை வென்ற மோடி பாஜக அதன் முதலமைச்சராக பஞ்சாபியர் மனோகர் லால் கட்டர் என்பவரை நியமித்தது.
அவர் ஹரியானாவில் பிறந்தவர் என்று சமாதானம் சொல்லலாமா?!
டெல்லியை அரவிந்த் கேஜரிவால் கைப்பற்றிய போது ஹரியானாவில் பிறந்த கேஜ்ரிவால் டெல்லியில் எப்படி முதல்வராகலாம் என்று பாஜக பேசவில்லை. ஹரியான்வி மொழி பேசும் பகுதியில்தான் டெல்லி அமைந்து இருக்கிறது என்று சமாதானம் சொல்வார்களா?!
மும்பையில் பிறந்த வசுந்தரா ராஜே வை ராஜஸ்தான் முதல்வராக பாஜக ஆக்கியதே?! அப்போது எப்படி அது நியாயம்?!
இதே போல காங்கிரஸ் காலத்திலும் நடந்தபோது பாஜக இனத்தைக் குறிப்பிட்டு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லையே?!
'ஒரிசா முதல்வர் ஒரு ஒடியராகத்தான் இருப்பார்' என்று பாண்டியன் வாக்குறுதி அறிவித்த பிறகும் பாஜக இனவெறி பிரச்சாரத்தைக் கைவிடவில்லை.
தற்போது வி.கே.பாண்டியன் ஒரிசா பாணியில் இருக்கும் உணவை தமிழர் பாணியில் வாழையிலையில் கொட்டி சாப்பிடத் தெரியாமல் விழிப்பது போல சித்தரித்து விளம்பரம் வெளிவந்துள்ளது.
தமிழர் என்று வரும்போது மட்டும் அவரை இந்துவாகவோ இந்தியராகவோ இவர்களால் பார்க்க முடியவில்லை.
இதற்கு முன் சோனியாவை மட்டும்தான் இத்தாலிக்காரி என்று குறிப்பிட்டு பேசியுள்ளனர்.
என்றால் நாம் தமிழர்நாடும் இத்தாலி போன்று தனிநாடு என்று புரிகிறதா?!
இந்து என்றும் இந்தியர் என்றும் ஒருதலைக் காதலுடன் அலையும் சில தமிழர்கள் சிந்திப்பார்களா?!
No comments:
Post a Comment