புறந்தூய்மை
ஏற்றத்தாழ்வை ஒழிக்க ஒரு புதுமையான வழி சொல்லவா?
தாராளமாக தண்ணீர் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்துவிட்டால் போதும்!
அனைவரும் நன்கு குளித்து துவைத்த ஆடைகள் போட்டுக்கொண்டாலே ஏற்றத்தாழ்வு ஒழிந்துவிடும் என்பது என் கருத்து.
இத்தோடு சோப்பு போடும் பழக்கத்தைக் கைவிட்டாலே வியர்வை துர்நாற்றம் பெருமளவு குறைந்துவிடும்.
சோப்பு இல்லாமல் எப்படி குளிக்க வேண்டும் என்றால் நன்றாக தலை முதல் கால் வரை நனைத்துவிட்டு இரண்டொரு நிமிடம் ஊறவிடுங்கள் (இந்த நேரத்தை பல் துலக்க பயன்படுத்தலாம்) . பிறகு உடல் முழுவதும் கைகளாலால் முடிந்தவரை தேய்த்தபடி தண்ணீர் ஊற்றவேண்டும். பிறகு உடல் முழுவதும் அரை நிமிடம் தொடர்ந்து நனையும்படி தலையில் தண்ணீர் ஊற்ற வேண்டும். பூந்தூரல் (shower) இருப்பது மிகவும் உதவும். இப்போது பாதி வேலை முடிந்தது (வாரம் ஒரு முறை சோப்பு போட்டு குளிக்கலாம்).
பிறகு துவைத்த காய்ந்த துண்டு மூலம் அழுத்தி துவட்டிக் கொண்டால் மீதி வேலை முடிந்தது.
இந்த துண்டை அப்படியே துவைக்கப் போட்டுவிட வேண்டும்.
இப்படி செய்யும்போது சென்ட், பவுடர், மேக்கப் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். தலையில் எண்ணெய் தேய்ப்பது கூட தேவைப்படாது.
தோலும் முடியும் வலுப்படும். அதிகம் வியர்க்காது. அதிகம் குளிராது. முகமும் தலைமுடியும் பொலிவாக இருக்கும்.
இப்போது துவைப்பது எப்படி என்று பார்ப்போம்.
இரண்டு வாளி வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாளியில் தண்ணீரில் துணிகளைப் போட்டு கொஞ்சம் சோப்பு பொடி போட்டு சில மணிநேரம் ஊறவைக்கவும். இன்னொரு வாளியில் நல்ல தண்ணீர் வைத்துக் கொள்ளவும். முதல் வாளித் துணிகளை ஒவ்வொன்றாக எடுத்து ஒரு நிமிடம் தண்ணீரை வடிய விடவும். இப்போது இரண்டாவது வாளியில் போடவும். துணியில் இருக்கும் சோப்பு அழுக்கோடு வெளிவந்து நல்ல தண்ணீரில் கலக்கும் இதற்கு ஒரு 5 நிமிடம் ஆகலாம். இப்போதும் இந்த துணிகளை ஒரு நிமிடம் தண்ணீர் வடியும்படி வைக்கவும். இன்னொரு வாளியில் (நன்கு அலசிவிட்டு) அதில் நல்ல தண்ணீர் பிடித்துக் கொள்ளவும். தண்ணீர் வடிந்த துணிகளை அதில் போட்டு பின் ஒவ்வொன்றாக எடுத்து பிழிந்து காயப்போடவும். வெயில் நேரடியாகப் படாமல் ஆனால் சூரிய வெளிச்சம் படும் இடத்தில் காயப்போடுவது சிறந்தது.
இந்த எளிமையாக முறையில் 3 வாளித் தண்ணீரில் அரை வாளித் துணிகளை துவைக்கலாம்.
தூய்மையாகத் தோற்றம் அளிப்பது தாழ்வு மனப்பான்மை வராமல் செய்யும்.
நாளை எப்படி பல் விளக்கினால் ஏற்றத்தாழ்வு ஒழியும் என்று பார்ப்போம்.
No comments:
Post a Comment